அஹ்லுல்பைத் Headline Animator

Saturday, March 26, 2011

Peace TV - பிளவுகளின் பிறப்பிடம்
ஒற்றுமையான இந்தியாவை வேற்றுமையாக்க  துடிக்கும் தலைவர்கள்   
(கருத்து - அஹ்லுல்பைத்)அல் குரானின் உண்மையான கருத்துக்களுக்கு முரணாக மிகவும் தப்பான விதத்தில் அர்த்தம் கற்பிக்கின்ற வகையில் அதன் கருத்துக்கள் எங்களது முல்லாக்களால் சிதைத்து வேறு அர்த்தத்தில் திசை திருப்பப் பட்டு சிதைக்கப் பட்டிருக்கின்றன.

இப்படி திசை திருப்பப் பட்ட நிகழ்வுகள் எப்பொழுது தொடக்கி வைக்கப் பட்டன என்பதை எம்மால் சரியாக அனுமானிக்க முடியாமல் இருக்கின்றன.

எங்களது இஸ்லாமிய வரலாறு மிகவும் நுணுக்கமான முறையில் திட்டமிட்டு அற்புதமாக சிதைக்கப் பட்டதுதான் இதற்கு காரணம்.

இவ்வாறு திசை தப்பிய கருத்துக்களை காவிக் கொண்டு எமது நிகழ் கால முல்லாக்கள் அத்தகைய துரோகிகளுக்கு இன்னமும் துணை  போவதுதான்   எங்களது சமூகத்தின் எழுச்சிக்கு எதிரான பெரிய சாபக் கேடு.

"காபிர்களை கண்ட இடத்தில் கொல்லுங்கள்.........."இப்படிஒரு மனித உரிமை மீறலை சூரா தௌபா    ஐந்தாம் ஆயத்தில் அல் குரான் சொல்கிறதாம்......?  

இது ஒரு இராணுவக் கட்டளை..! இதில் என்ன தவறு இருக்கிறது...???" டாக்டர்   சாகீர் நாயக் இது சரி என்கிற ரீதியில் சிரிப்புடன் சூளுரைக்கிறார்.

சூரா தௌபாவிலுள்ள ஐந்தாம் ஆயத்துக்கு இப்படியான தவறான ஒரு புது விளக்கத்தை சாகீர் நாயக்கின் இணையதளத்திலும், யூ டியூபிலும் எங்களால் பரவலாக காணமுடியும்.

அல் குரான் எல்லா காலத்துக்கும் பொருத்தமானது , அது எக்காலத்துடனும் முரண் படாதது என்று பெருமை பேசும் எங்களது உலமாக்கள் இந்த ஆயத்துக்கு சாகீர் நாயக் சொல்லும் கருத்து சரி என்று கண்டால் வகையாக மாட்டிக் கொண்டு விழி பிதுங்க வேண்டி வரும்.

சூரா தௌபா ஐந்தாம் ஆயத் அப்படி  என்னதான் சொல்கிறது?

Tuesday, March 22, 2011

முஸ்லிம் சமூகம் நிர்வாணப்பட்டு , சிதைந்து போக காரணமாக இருந்த தப்புகள்.......?

முஸ்லிம் சமூகம் நிர்வாணப்பட்டு , சிதைந்து போக காரணமாக இருந்த தப்புகள்.......?

நபி (ஸல்)  அவர்களது மறைவுடன் முதலாவது கலீபா அபூபக்கர் (ரலி)  உமர்
(ரலி) அவர்களால் தெரிவு செய்யப் படுகிறார்.

இதனால் உமர் (ரலி) அவர்கள் தான் இஸ்லாமிய அரசியல் அமைப்பின் அரசாங்கத்தின் முதலாவது நிர்மானகர்த்தா   என இன்றும் மரியாதையுடன் நினைவு கூறப்படுகிறார்.
மிகவும் அவசர அவசரமாக அதே சமயம் வெற்றிகரமாக நடந்த இந்த தெரிவின் பின்னால், பின்னாளில் பல இழப்புகளை கொண்டுவந்த குற்றங்களுக்கு தளம் அமைத்த ஒரு குற்றம் ஒளிந்து இருந்தது.

அராபியரின் படு தோல்விகளுக்கு களம் அமைத்த மேட்டுக் குடி எண்ணங்களின் ஆதிக்கம் இங்கிருந்துதான் ஆரம்பமாகியது.

Saturday, March 12, 2011

அமீர் முஆவியாவின் வழிகேடு ; நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு

முஆவியாவின் திரு உருவம் பொறிக்கப் பட்ட 'பனூ உமையாக்'களின் நாணயம்.

இக்ரிமா  கூறியதாவது ;

இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடமும் அவர் மகன் அலியிடமும் "நீங்கள் இருவரும் அபூ ஸயீத் (ரலி) அவர்களிடம் சென்று அவர் அறிவிக்கும் செய்தியை செவி மடுத்து வாருங்கள்" எனக் கூறினார்கள்.

நாங்கள் சென்றோம்.

அபூ ஸயீத் (ரலி) தனது தோட்டத்தை சரி செய்துக் கொண்டு இருந்தாரகள்.

அவர் எங்களைக் கண்டதும், தனது மேலாடையை போர்த்திக் கொண்டு எங்களுக்குக் கூறலானார்கள்.

பள்ளி வாசல் கட்டப் பட்ட செய்தியைக் கூறும்போது "நாங்கள் ஒவ்வொரு செங்கலாக சுமப்பவர்களாக இருந்தோம்.அம்மார் (ரலி) இரண்டிரண்டு சென்கட்களாக சுமக்கலானார்கள்.

அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் அவரது மேனியில் படிந்த மண்ணை தட்டி விட்டு " பாவம் அம்மார்.! இவரை அக்கிரமக்காரக் கூட்டம் கொலை செய்யும். இவர் அவர்களை சுவர்க்கத்திட்கு அழைப்பார். அவர்களோ  இவரை நரகத்திற்கு அழைப்பார்கள்" என்று கூறினார்கள்.

அதற்கு அம்மார் (ரலி) "அந்தக் குழப்பங்களை விட்டும் அல்லாஹ்விடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்" என்று கூறினார்கள். என அபூ ஸயீத் (ரலி) குறிப்பிட்டார்கள்.
(ஆதாரம்- புகாரி ; முதலாம் பாகம் 447  வது ஹதீத்.)        

நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின்னால், பிளவு பட்டு பிரிந்து போன கூட்டத்தார்களில், நரகத்துக்கு அழைக்கும் வழி தவறிய கூட்டத்தாரைப் பற்றியும் அதே சமயம், சுவனத்துக்கு அழைத்து சுவனம் செல்லும் நேர் வழி நிற்கும் கூட்டத்தாரைப் பற்றியும் பிரித்து அறிந்து கொள்ள அம்மார் (ரலி) அவர்களின் கொலை ஒரு சாட்சியாக உலகம் அழியும் வரை இருக்கப் போகிறது.

Friday, March 11, 2011

"அராஜகமான முறையில் மக்கள் மத்தியில் கருத்துக்களை திணிப்பவர்கள் யார்?"

சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர், இலங்கையின் ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அஸ் ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்கள் கொள்ளுப்பிட்டி ஜும்மாஹ்   மஸ்ஜிதில் செய்த ஒரு ஜும்மாஹ் பிரசங்கம் 'இலங்கை வானொலியில்' நேரலையாக அஞ்சல் செய்யப் பட்டது.

அதில் அவர் ஹசரத் அபூதாலிப் நாயகம் அவர்களை நரகவாதி என்றும், நரகத்தில் அவருக்கு மிகவும் குறைவான தண்டனை வழங்கப் படும் என்றும் தீர்ப்பு சொன்னார்.

அவரது இந்த பிரசங்கத்தை சுமார் ஐந்து   இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். அதில், அதிகமானவர்கள் பெண்கள்.

ஒரு தவறான மிகவும் பிழையான கருத்தை பிரமாண்டமான மக்கள் மத்தியில்  இப்படி  திணித்தது அராஜகமான செய்கை இல்லையா?

உடனே நாம் அபூதாலிப் நாயகம் சம்பந்தமாக எங்கள் பக்கத்து நியாயங்களை சொல்லி , அபூதாலிப் நாயகத்தின் இஸ்லாத்தையும் விளக்கி, அஸ் ஷெய்க் ரிஸ்வி முப்திக்கும், வானொலி கட்டுப் பாட்டாளருக்கும் ஒரு மறுப்புக் கடிதம் அனுப்பினோம்.

கடிதம் குப்பைத் தொட்டியில்  வீசி எறியப்பட்டது.

விளைவு?

Wednesday, March 9, 2011

"அந்தப் பாமரனை நாம் கேள்விக்கு உட்படுத்துகின்றோம்"


எனது நெருங்கிய நண்பர்'இம்ராஸ்' வீதியில் என்னைக் கண்டவுடன்
 'பொரிந்து' தள்ளத்   தொடங்கி விட்டார்.

"என்னப்பா! நீங்கள் ஜாமியாஹ் நளீமிய்யாஹ் பேராசிரியர்களை தாக்கி
எழுதியது 
போதாது என்று '......................................."
என்றும்,அவர்களுக்கு "........................................"
இருக்கிறது என்றும் எழுதி இருக்கிறீர்கள்?"

அதற்கு நான் " நாம் அப்படி சொல்லவில்லை. அந்த அறிஞர்களின் நிலை அறிந்த 
ஒரு பாமரன் அப்படித்தான் சொல்வான் என்றுதான் எழுதினோம்" என்றேன்.
   
"அதெப்படி நீங்கள் அப்படி சொல்வீர்கள்?....." என்ற அவர் "அவர்களில் யாராவது  நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் நரகவாதிகள் என்று சொன்னார்களா?" என்று கேட்டார்.

"உஸ்தாத் பளீல் சொன்னார்" என்றோம்.

Saturday, March 5, 2011

சவூதி சொன்ன இஸ்லாமும், 'ஆப்பிழுத்த குரங்குகளும்'


"தாருல் இஸ்லாம்" என்கிற ஒரு அற்புதமான கோட்பாடு நபி (ஸல்) அவர்களது காலத்தில் அமுலில் இருந்தது.

அதென்ன நாம் அறியாத 'தாருல் இஸ்லாம்?'

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த 'தாருல் இஸ்லாம்' கோட்பாட்டின் படி, இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒருவர் எந்த வித 'விசா' அனுமதி பத்திரமும் இல்லாமல் இஸ்லாமிய அரசு கோலோச்சுகின்ற அனைத்து நிலப் பரப்பினுள்ளும் நுழைவதற்கு பூரண அனுமதியைப் பெறுகின்றார்.

அதாவது, ஒரு முஸ்லிமுக்கு 'ஹிஜாசினுள்' அதாவது ,தற்போதைய சவூதி அராபியாவினுள்   நுழைவதற்கு 'விசா' அனுமதி தேவைப் படவில்லை.

அவர் அந்த தேசத்தை சார்ந்தவராக இருக்க வேண்டிய அவசியம் இருக்க வில்லை. இஸ்லாத்தை தழுவிய முஸ்லிமாக இருந்தால் போதும்..

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒருவர் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளுடன் இதுவும் ஒரு முஸ்லிமின் சாதாரண உரிமையாக கணிக்கப் பட்டது.

தாருல் இஸ்லாமிய நிலப்பரப்பில் சுதந்திரமாக வாழும் உரிமை அவருக்கு அனுமதிக்கப் பட்டது.

முஸ்லிமுக்கு 'ரெசிடென்ட்' 'விசா'- தங்கி வாழும் அனுமதி பத்திரம் தேவைப் படவில்லை.

தாருல் இஸ்லாத்தினுள் நுழைந்த ஒரு முஸ்லிமுக்கு தனது வாழ்வுக்கு தேவையான தொழில் அல்லது வேலை வாய்ப்புகளை தேடித் பெற்றுக் கொள்வதற்கு பூரண சுதந்திரம் இருந்தது.

முஸ்லிமுக்கு 'வேர்க் பெர்மிட்- வேலை செய்வதற்கான அனுமதி பத்திரம் தேவைப் படவில்லை.

இஸ்லாத்தை ஏற்ற ஒரு முஸ்லிமுக்கு அந்த நாட்டின் இஸ்லாமிய அரசியலில் பங்கு பற்றும் உரிமை அவன் முஸ்லிம் என்ற காரணத்தால் சுயமாகவே கிடைத்து விடுகிறது.

சவூதி என்று ஒரு தேசம் உருவாகும் வரை இந்த தாருல் இஸ்லாம் வழங்கிய உரிமைகளை ஒரு முஸ்லிம் பூரண சுதந்திரத்துடன் அனுபவித்து வந்தான்.

சவூதியின் மலர்வுடன் இந்த தாருல் இஸ்லாம் இல்லாது ஒழிக்கப் பட்டது.

கூடவே காலணித்துவ  பெயரில் எங்களது இஸ்லாமிய தேசங்கள் பல துண்டுகளாக கூறு போடப் பட்டு பிரிக்கப் பட்டன.

சவூதி அராபியாவின் பிரமாண்டமான எண்ணெய்  வயல்கள் முஸ்லிம் உம்மத்தின் பொது சொத்து.

என்றாலும், பல பிரிவுகளில் பிரிந்து நின்ற முஸ்லிம் உம்மத்தினால் அவர்கள் இழந்த பொது இழப்புகளைப் பற்றி புரிந்து கொள்ள முடியாமல் போனது.

பாலஸ்தீனம் ஆக்கிரமிக்கப் பட்டது.

முஸ்லிம் சமூகத்தின் கல்வி, கலாச்சாரங்கள் திட்டமிட்ட முறையில் நசுக்கப் பட்டன.

ஒரு தலைமையில் ஒன்று பட்டிருந்த முஸ்லிம் சமூகம் , ஒருமித்த தலைமையை தேடும் பணியில் பல தலைமைகளில் பிரிந்து போயின.

உலகத்திலேயே அதிகமான தலைவர்கள் இருப்பது எங்களது சுன்னத் வல் ஜமாத்தில்.

உலகத்திலேயே அதிகமான மக்கள் வறுமையில் வாடுவது எங்களது சுன்னத் வல்  ஜமாத்தில்.

கல்வி அறிவில் உலக மக்களுடன் எம்மை ஒப்பிடும் பொழுது நாம் நூற்றுக்கு இருபது சத விகிதம் கூட இல்லை.

உலகிலேயே மக்கள் அதிகமான அளவில் அகதிகளாக பரிதவிப்பது எங்கள் சுன்னத் வல் ஜமாத்தில்.

நூற்றுக்கு சுமார் நான்கு சத விகிதமானவர்கள் தான் எங்களது சுன்னத் வல் ஜமாத்தில் பெரும் பணக்காரர்களாக இருக்கிறார்கள்.

சுமார் பதின் நான்கு சத விகிதமானவர்கள் மத்திய தரத்திலே இருக்க மீதமான 
என்பது சத விகித மக்கள் கடுமையான வறுமையில் வாடுகிறார்கள்.

அரேபியா ஏகாதிபத்தியத்திற்கு மீண்டும் ஒருமுறை வித்திட்ட சவூதி அரேபியா முஸ்லிம் உம்மத்திற்கு சொந்தமான அனைத்து வளங்களையும் சூறையாடியது.

அதன் பின்னர் , ஹிஜாஸின் முழு எண்ணெய் வளத்தையும் மிகும் பவ்வியமாக  தனது அரசாட்சியின் பாதுகாப்புக்கான உத்திரவாதம் என்கிற பெயரில் அமெரிக்காவுடன் பண்ட மாற்று செய்துக் கொண்டது.

ஹிஜாஸ் தேசத்துடன் உயிர்ப்புடன் இருந்த முஸ்லிம்களின் ஒன்றிணைப்பை, சவூதி தேசம் என்று 'மறை முக சக்திகள்' மிகவும் இலாவமாக துண்டித்தன.

எங்களது பிறப்புக்கு முன்னாலேயே 'தாருல் இஸ்லாம்'  என்கிற அற்புதமான இஸ்லாமிய கோட்பாடு சிதைந்து போயிருந்தது.

அதன் காரணமாக அதன் அருமையையும், பெறுமதியையும் எங்களால் உணர முடியாமல் போனது.


நாங்கள் எல்லோரும் பிறந்த பொழுது ஹிஜாஸ் தேசம் இருந்த இடத்தில் சவூதி என்ற இராட்சத சைத்தான் பிறந்து விட்டிருந்தது.


சவூதி உருவாக்கிய இஸ்லாமிய பல்கலைக் கழகங்கள் மூலம் , அவர்களது ஆட்சிக்கு எது வித பாதிப்பும் ஏற்படாதவாறு மூளை சலவை செய்யப்பட உலமாகளை கொண்டு எங்களது மூளையை சலவை செய்வதில் சவூதியை முன்னிலைப் படுத்தி இந்த மறைமுக சக்திகள் பெரும் வெற்றி கண்டன.

இது தவிர, ராபிதா என்கிற நிதி நிறுவனத்தை உருவாக்கி உலகத்தில் உள்ள அநேகமான மதரஸாக்களின் நிதியியல் தேவைகளை நிவர்த்தி செய்து அந்த மதரசாக்களில் சவூதியைப் பற்றிய நல்லெண்ணத்தை வளரச் செய்வதிலும் இவர்கள் பெறு வெற்றி கண்டார்கள்.

நாவன்மை கொண்ட உலமாக்களையும், எழுத்தாற்றல் கொண்ட உலமாக்களையும் மிகவும் நுணுக்கமாக அணுகிய 'ராபிதா' அவர்களை எங்களது தலைவர்களாக உருவகித்து எம்மை கருத்துக் குழப்பங்களில் பிளவு பட்டு மோத வைப்பதிலும் பெறு வெற்றி கண்டது.

இந்த உலமாக்களின் தலைமையில் நாங்கள் எங்களுக்கு எதிராகவே எமக்குள் போர்க் கோடி தூக்கிக் கொண்டோம்.

சவூதியின் மறைமுக தயவில் செழுமையாக வளர்ந்து கொழுப்பு வைத்த எங்களது உலமா தலைவர்கள் 'நபி (ஸல்) அவர்களின் சுன்னாவை அமுல் படுத்துகிறோம் என்று சொல்லி இரண்டு, இரண்டு கல்யாணங்கள் செய்து கொண்டு 'ஆப்பிழுத்த குரங்கு'   போல விழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

எங்களது உலமா தலைவர்கள் என்றாவது எமக்கு இழந்து போன எங்களது இழப்புகளைப் பற்றி ஏதாவது சொல்லி இருக்கிறார்களா?

இல்லையே?

விளைவு?

சைத்தான் சவூதியை நம்பிய எங்களது உலமாக்கள் இஸ்லாத்தை விற்று ஏமாந்து போனார்கள்.

அத்தகைய உலமாக்களை நம்பிய நாங்களும்தான்.

"அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள் காபிர்கள் ஆவார்கள்"


"அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்"

"அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள் பாவிகள் ஆவார்கள்"


(அல் மாயிதா -  44  , 45 ,  46 )

"அரபுலகின் அதிசயமான எழுச்சிகளின் பின்னால்......????"

"அரபுலகின் அதிசயமான எழுச்சிகளின் பின்னால்......????"


"டுனீசியாவில்" இனம் தெரியாதா ஒரு இளைஞன் தீ மூட்டி கொல்லப் படுகின்றான்.அதற்கு அழகான, உள்ளத்தை தொடும் ஒரு கதையைப் பின்னி முகப்பு அட்டை போட்டு உலகளாவிய மக்களது உளவியலையும் வென்றாகி விட்டது.

திடீரென "டுனீசியாவில்" ஒரு மக்கள் புரட்சி.

எது வித இலக்கும் இல்லாத ஒரு ஓட்டம்.

நாட்டுத் தலைவன் நாட்டின் பணத்துடன் ஓடிவிட , அவனது சகா நாட்டை ஆளுகின்றான்.

அடுத்த சில நாள்களில் எகிப்தில் ஒரு புரட்சி.

'டுனீசியாவின்' பின் விளைவு என்று அதற்கு ஒரு பெயர்.

ஒரு அழகிய இளம் பெண் தனது "பேஸ் புக்கில்" எகிப்து மக்களை 'தஹ்ரீர்' சதுக்கத்துக்கு வந்து எகிப்தின் தலைவருக்கு எதிராக மக்களை அணி திரளுமாறு உருக்கமாக ஒரு வேண்டு கோளை விடுக்கிறார்.

ஆச்சரியமான ஒரு செயல்.

ஹுஸ்னி முபாரக் அரசின் உளவாளிகள் மக்களோடு மக்களாக பின்னிப் பிணைந்து ஒன்றுடன் ஒன்றாக இரண்டறக் கலந்து  இருக்க, அந்த இளம் பெண்ணின் இந்த   செயல்  எங்களை விழி பிதுங்க வைக்கிறது.

இருக்காதா பின்னே?

'அல் அஷ்கர்' இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் கல்வி கற்கும் ஒரு மாணவன் இஸ்லாமிய அரசைப் பற்றி பேசிய அடுத்த கணம் கைது செய்யப் படுவான்.

இஸ்லாமிய கல்வி கற்கும் மாணவர்களுக்கு 'தாடி' வளர்க்க முடியாது.

அந்த நாட்டின் இராணுவம் அரச சார்பானது.

Tuesday, March 1, 2011

"அல் குரானுக்கு முரண் படும் 'அஹ்லுல் பைத் தமிழ் தளம்'????????"


காலையில் ஒரு தொலைபேசி அழைப்பு.

மறுமுனையில்  எமது நண்பர் ஒருவர்.

"இப்ராகிம் (அலை) அவர்களின் தந்தை இறைவனின் பகைவன்.ஸுரா மர்யம் 41 வது ஆயத்தில் இருந்து 47 வது ஆயத் வரை அல் குரானில் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது" என்றார்.

நாம் "அப்படியா?" என்றோம்.

அவர் குறும்பான சிரிப்புடன் "அஹ்லுல் பைத் தமிழ் தளமும் அல் குரானுக்கு முரண் படுகின்ற மாதிரி தெரிகிறதே?" என்றார்.  

நாம் "இல்லையே!" என்றோம்.

அவர் சத்தமாக சிரித்தபடி " அஹ்லுல் பைத் தமிழ் தளத்துக்கு பதில் சொல்லாமல் ஓடுகின்ற ஜாமியா நளீமிய்யாவின் உஸ்தாது மார் போல இனி, நீங்களும் ஓட வேண்டியதுதான் பாக்கி" என்றார்

உண்மைதான்.

அஹ்லுல் பைத் தமிழ் தளம் அவர் சொல்வது போல சிக்கலில் மாட்டிக் கொண்டதா?

அல்லது இந்த கேள்விக்கு விடை சொல்ல தயாராக இருக்கிறதா?

நாம் எமது விடையை சொல்லுவதற்கு முன், வழமை போல எங்களது உலமாக்களின் சமூகத்தில் இந்த கேள்வியை கேட்டுப் பார்ப்போம்.

நீங்களும் , உங்களுக்கு அறிமுகமான உலமாக்களிடம் இந்த கேள்வியை கேளுங்கள்.

"இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தை நாம் சொல்லுவது போல 'முஸ்லிமா?' அல்லது, எங்களது சில உலமாக்கள் சொல்லுவது போல 'அல்லாஹ்வின் எதிரியா?' "

நல்லதொரு ஆய்வுக்கு களம் அமைத்து தந்த நண்பருக்கு எமது உளப்பூர்வமான        நன்றிகள்.

எமது இனைய நண்பர் 'அரபுத் தமிழனே! இந்த ஆய்வில் உங்களது காத்திரமான பங்களிப்பையும் எதிர்பார்க்கிறோம்.

வாருங்கள். 

இன்ஷா அல்லாஹ் , நாம் ஒன்றாக விடை தேடுவோம்.

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad