அஹ்லுல்பைத் Headline Animator

Friday, April 29, 2011

தலையுதிர் காலம் .......................?


  தலையுதிர் காலம் .......................?

  இஸ்லாமிய வரலாற்றில் சத்தியத்திற்கும்      அசத்தியத்துக்குமான போர், சிப்பீன் என்கிற பெயரில்  வெடித்த கதை நாம் அறிவோம்.

ஆனால், அதனுடன் துயர்ந்த எதிரிகளின் தலைகளைக் கொய்யும் கலாச்சாரம் பற்றிய செய்திகள் எமக்கு புதிது.

ஏனெனில், உத்தம சஹாபாக்களின் நல்ல பெயரில், இத்தகைய கொடூரங்களை செய்த அநீதமான சஹாபாக்கள் மறைந்துக் கொண்டதன் விளைவாக , இந்த செய்திகள் திட்டமிடப் பட்ட முறையில் எமக்கு மறைக்கப் பட்டன. 

அக்காலை, சஹாபாக்களில் முக்கியமான பெருந்தகைகளில் அநேகர், இரண்டு தலைமையில் இரண்டு துருவங்களாக பிளவுபட்டு பிரிந்து நின்றார்கள்.

அப்பிரிவில் இஸ்லாத்தின் எழுச்சியை மட்டும் கருத்தில் கொண்ட கூட்டமும் இருந்தது.

அதே போல, சிலர் தமது தனிப் பட்ட சுய இலாபங்களைக் கருத்தில் கொண்டும், சத்தியத்துக்கு துணை போகாமல் பிரிந்து முரண் பட்டு நின்றார்கள். 

ஒரு புறம் இமாம் அலி இருந்தார்.

அவரது ஆதரவாளர்கள் 'ஷியாவே  ' அலி என அழைக்கப் பட்டார்கள்.
மறு புறம் அமீர் முஆவியா இருந்தார்.

அவரது ஆதரவாளர்கள்  'ஷியாவே  ' முஆவியா என அழைக்கப் பட்டார்கள்.

'ஷியா' என்றாலே ஆதரவாளர்கள் என்று பொருள் படும்.

Saturday, April 23, 2011

"அநீதத்தின் மறு பெயர் உமையாக்கள் ..... ... நபிகளாரின் தீர்க்க தரிசன அறிவிப்பு........."
"அநீதத்தின் மறு பெயர் உமையாக்கள் ..... ... நபிகளாரின் தீர்க்க தரிசன அறிவிப்பு........."


உமையாக்களின் அநீதமான ஆட்சிகளின் ஆரம்பத்தையும், அதனை பிரித்து அறிந்து கொள்ளும் முறைகளையும் நபி (ஸல்) அவர்கள் எமாக்கு கோடிட்டு காட்டித்தந்து இருக்கிறார்கள்.

புஹாரி ஹதீத் கிரந்தத்தில் பதிவாகி இருக்கும் இந்த ஹதீதைக் கவனியுங்கள்.

இக்ரிமா  கூறியதாவது ;

இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடமும் அவர் மகன் அலியிடமும் "நீங்கள் இருவரும் அபூ ஸயீத் (ரலி) அவர்களிடம் சென்று அவர் அறிவிக்கும் செய்தியை செவி மடுத்து வாருங்கள்" எனக் கூறினார்கள்.

நாங்கள் சென்றோம்.

அபூ ஸயீத் (ரலி) தனது தோட்டத்தை சரி செய்துக் கொண்டு இருந்தாரகள்.

அவர் எங்களைக் கண்டதும், தனது மேலாடையை போர்த்திக் கொண்டு எங்களுக்குக் கூறலானார்கள்.

பள்ளி வாசல் கட்டப் பட்ட செய்தியைக் கூறும்போது "நாங்கள் ஒவ்வொரு செங்கலாக சுமப்பவர்களாக இருந்தோம்.அம்மார் (ரலி) இரண்டிரண்டு செங்கட்கலாக சுமக்கலானார்கள்.

அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் அவரது மேனியில் படிந்த மண்ணை தட்டி விட்டு " பாவம் அம்மார்.! இவரை அக்கிரமக்காரக் கூட்டம் கொலை செய்யும். இவர் அவர்களை சுவர்க்கத்திட்கு அழைப்பார். அவர்களோ  இவரை நரகத்திற்கு அழைப்பார்கள்" என்று கூறினார்கள்.

அதற்கு அம்மார் (ரலி) "அந்தக் குழப்பங்களை விட்டும் அல்லாஹ்விடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்" என்று கூறினார்கள். என அபூ ஸயீத் (ரலி) குறிப்பிட்டார்கள்.
(ஆதாரம்- புகாரி ; முதலாம் பாகம் 447  வது ஹதீத்.)        


இஸ்லாமிய வரலாற்றில் முதன் முதலாக கொடூரமான முறையில் வெட்டி எடுக்கப் பட்டு வெறித்தனமாக உலாவந்த தலை ஹசரத் அம்மார் பின் யாசர் அவர்களுடையது ஆகும்.

Thursday, April 21, 2011

"நல்ல உலமாக்களின் தீய தவறுகள்"

"நல்ல உலமாக்களின் தீய தவறுகள்"அண்மையில் கொள்ளுபிடியில் நடந்த ஒரு ஜும்மாவின் தொடக்கத்தில் அதன் இமாம் அல்லாஹ்வைப் புகழ்ந்ததன் பின்னர் "அஸ்ஸலாத்து வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா மன் லா நபிய்ய பஹதா" என்று நபி (ஸல்) அவர்களின் பெயரைக் குறித்து சலவாத் சொல்ல வேண்டிய கட்டத்தில் இவ்வாறு சலவாத் சொன்னார்.

அவர் சொன்ன சலவாத்தின் அர்த்தம் "சலவாத்தும் ஸலாமும் எவருக்குப் பின்னர் வேறு ஒரு நபி இல்லையோ அவர் மீது உண்டாகட்டும்." என்று தமிழ் வடிவம் பெரும்.

இன்னொரு முறை கிழக்கிலங்கை மௌலவி ஒருவர் ஜும்மாவை தலைமை தாங்கி நடாத்தும் பொழுது , சலவாத் சொல்லப் பட வேண்டிய தருணத்தில் "வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா இபாதி ஹில்லதி நஷ்தபா " என்று சலவாத் சொன்னார். 

"சலவாத்தும் ஸலாமும் தேர்ந்து எடுத்துக் கொண்ட அடியார்கள் மீது உண்டாவதாக" எனபது இதன் பொருளாகும். 


இந்த இரண்டு செயல் முறைகளும் தவறானதாகும்.

Wednesday, April 20, 2011

அமீர் முஆவியா செய்தது சரி.......யசீதின் தலைமைத்துவ நியமனம் நியாயமானது.... அஹ்லுல் பைத் தளத்துக்கு அமீர் முஆவியாவுடன் ஏன் இவ்வளவு கோபம்....???????


அமீர் முஆவியா செய்தது சரி.......யசீதின் தலைமைத்துவ  நியமனம் நியாயமானது.... அஹ்லுல் பைத் தளத்துக்கு அமீர் முஆவியாவுடன் ஏன் இவ்வளவு கோபம்....???????

எமது  குடும்ப நண்பர் மௌலவி ஜிப்ரி காலையில் எம்மைக் கண்டவுடன் சிரிப்புடன் எம்மிடம் கேட்ட கேள்விகள் இவை.

இவைகள் ஒரு மௌலவியின் கேள்விகள் என்பதால் நாம் கட்டாயம் சரியான விடை காண வேண்டிய வினாக்களாக இவை மாறின.

Sunday, April 17, 2011

இஸ்லாமிய "மாபியாக்கள்" .. .......கோட் பாதர்- வேறு யார்?.....நம்ம அமீர் முஆவியாதான்....?

முகைரா இப்னு சுபாவினதும் , அமீர் முஆவியாவினதும் இரகசிய   நடவடிக்கைகள் யசீதின் தலைமைத்துவத்துக்கு வழியமைத்து  கொடுத்தது.  

இராக், சிரியா உட்பட வேறு பல இடங்களில் மக்கள் யசீதுக்கு ஆதரவாக பைஆத் செய்தனர்.

இப்பொழுது 'ஹிஜாஸ்' மாத்திரம் தான் பாக்கி.

ஹிஜாஸில் யசீதை துணிகரமாக எதிர்க்கக் கூடிய பலர் இருந்தனர்.

அவர்களை எதிர்கொள்ள அமீர் முஆவியா ஹிஜாஸ் நோக்கி கிளம்பினார்.

Friday, April 15, 2011

'சலசலப்பை' கையில் எடுத்து 'பணியாரத்தை' கோட்டை விட்ட -இலங்கை வானொலி முஸ்லிம் சேவை. ..............................???


'சலசலப்பை' கையில் எடுத்து 'பணியாரத்தை' கோட்டை விட்ட -இலங்கை வானொலி முஸ்லிம் சேவை. ..............................???  கிழக்கிலங்கையில் பொது சனம் அடிகடி உபயோகிக்கும் ஒரு 'பழ மொழி' இது.

அவர்கள் சொல்லுவார்கள்"எமக்கு சலல்சலப்பு தேவை இல்லை. பணியாரம்தான் வேண்டும்" என்று.

பணியாரம் எனபது எண்ணையில் பொறிக்கப் படும் ஒரு வகையான இனிப்பு பண்டம்.

கொதிக்கின்ற எண்ணையில் இதனை ஊற்றும் பொழுது 'சல சல வென' சல சலப்புகள் தோன்றும்.

இந்த சலசலப்புகள் கொஞ்சம் சத்தமாக சத்தமிடும்.

ஆனால், பணியாரம் அமைதியாக இந்த சல சலப்புகளின்  பின்னால் ஒளிந்து இருந்து வெளிவரும்.

சலசலப்பு வெறும் எண்ணைதான். 

அதனால் ஒரு பிரயோசனமும் இல்லை. அதனை கையில் எடுத்தால் கைதான் வெந்து போகும்.

ஆனால், பணியாரம் முக்கியமான பணியாரம் அப்படியல்ல. .


இன்று இலங்கை வானொலி முஸ்லிம் சேவை இந்த சல சலப்பை கையில் எடுத்துக் கொண்டு பணியாரத்தை கோட்டை விட்டு விட்டது.

எப்படி என்கிறீர்களா?

Wednesday, April 13, 2011

நடு நிசியில் ஒரு கொலை........


 நடு நிசியில் ஒரு கொலை........


"லிபியாவில் பெண்கள் இராணுவத்தினரால்  கற்பழிப்பு....??? "

இரவு அல் ஜெசீராவில் ஒரு செய்தி.

லிபியாவின் இராணுவத்தினர் தாம் கைப் பற்றிய பகுதியில்  இருந்த பெண்களை இழுத்துச் சென்று கதறக் கதற கற்பழித்து கொடூரம் புரிந்து இருக்கிறார்கள் எனபது தான் அந்த செய்தி.

இதன் மூலம் கலகக் காரர்களை எச்சரிப்பதும், பயமுறுத்துவதும் அவர்களது நோக்கமாக இருக்கலாம்.

இதே விதமான அபாக்கியமான சூழல் லிபியாவின் இராணுவத்தினர் பக்கம் இருக்கும் பெண்களுக்கும் நாளை இஸ்லாமிய விடுதலை வீரர்களினால் ஏற்படலாம்.

விடுதலை வீரர்கள் அந்தப் பகுதியை கைப் பற்றியவுடன் 'கனீமத்' என்கிற இஸ்லாமிய  சட்டப்  பிரிவில் இஸ்லாத்தின் பெயரில் பெண் வெறியாட்டம் ஆடும் கொடூரம் இஸ்லாத்தில் அனுமதிக்கப் பட்ட சட்டரீதியான செயலாக  ஏற்றுக்கொள்ளப் படும் அநியாயம் அரங்கேறும்.

பாவம் அபலைப் பெண்கள். பெண் குழந்தைகள்.

அவர்கள் தான்  எல்லா சூழ்நிலைகளிலும், ஒரு மனித சமூகம் பிறிதொரு மனித  சமூகத்தின் மீது தொடுக்கப் படும் ஆக்கிரமிப்புக்கும், அத்துமீறல்களுக்கும் பலி கடாவாக ஆளாக்கப் படும் அபலைகள்.

நாம் அறிந்த இஸ்லாத்தில் பெண்ணாசை   அனுமதிக்கப் பட்ட அழகிய அத்துமீறலாக எங்களது விடுதலை வீரர்களினால் இன்று வரை செயல் படுத்தப் பட்டு வந்துள்ளது.

சுன்னத் வல் ஜமாத்தை சேர்ந்த எந்த மத குருமார்களும் அதனை தடுத்து இருப்பதாக தெரியவில்லை.

மத குருமார்கள் என்ன? கலீபாக்கள் கூட அந்த தவறை தமது தளபதிகளுக்கும், விடுதலை வீரர்களுக்கும் மௌனித்து அனுமதி வழங்கி இருப்பது எம்மை ஒரு கணம் துணுக்குற வைக்கும் நிஜங்களாகும்.

Sunday, April 10, 2011

உம்மத்தே முஹம்மதியாவை அதால பாதாளத்தில் தள்ளிய "சஹாபாக்களில்" இருவர்.உம்மத்தே முஹம்மதியாவை அதால பாதாளத்தில் தள்ளிய "சஹாபாக்களில்" இருவர். 


அமீர் முஆவியா உடைய மன்னராட்சி காலத்தில் கூபாவின் ஆளுநராக முகீரா பின் ஸுபா இருந்தார்.

முகீரா பின் ஸுபாவை பதவி நீக்கம் செய்ய அமீர் முஆவியா எண்ணியிருந்தார்.

விடயம் ஒற்றர்கள் மூலமாக முகீரா பின் ஸுபாவுக்கு  எட்டியது. 

தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள  என்ன செய்யலாம் என்று முகீரா யோசித்தார்.

Monday, April 4, 2011

தொடரும் சாபம்....மீண்டும் பலி கடா அன்னை ஆயிஷா (ரலி) .......?


தொடரும் சாபம்....மீண்டும் பலி கடா  அன்னை ஆயிஷா (ரலி) .......?மார்ச் மாத இருபத்து ஐந்தாம்  திகதி வெள்ளிக்கிழமை , வழமைப் போல அஹ்ளுல்பைத்களுக்கு எதிரான ஆக்ரோசமான ஒரு ஜும்மாஹ் பிரசங்கம் கொள்ளுப்பிட்டி ஜும்மாஹ் மஸ்ஜிதில் இருந்து வானலையில் அஞ்சல் செய்யப் பட்டது. 

பிரசங்கம் நிகழ்த்திய கதா நாயகன் வேறு யாருமில்லை, நாம் பெரு மதிப்பு வைத்து இருந்த காத்தான் குடி யஹ்யா மௌலவி தான் அன்றைய தினம் அஹ்ளுல்பைத்களின் 'வில்லனாக ' புதிய அவதாரம் எடுத்தார்.

அன்றைய தினம் அவரது பிரசங்கத்தை கேட்ட பொது மக்களுக்கு ஒன்றுமே புரிய வில்லை.

லிபியாவிலும் மத்திய கிழக்கிலும் கடுமையான யுத்தம் நடைபெறுகின்ற ஒரு அல்லோல கல்லோல நிலையில் , செய்வது அறியாது இலங்கை மக்கள் தடுமாறிப் போய் தவித்துக் கொண்டு இருந்த தருணம் அது.

அன்றைய தினம், கொள்ளுபிட்டி ஜும்மாஹ் மஸ்ஜிதில் அமெரிக்காவினதும், மேற்கினதும் இந்த அநியாயத்துக்கு எதிராக ஒரு பேரணி நடாத்த கொழும்பு மக்கள் ஆயத்தமாகிக் கொண்டு இருந்தார்கள்.

Sunday, April 3, 2011

வட்டக் கடை அரசியலும், 'பீடி புகை' அரசியல் ஞானங்களும்?


வட்டக் கடை அரசியலும், 'பீடி புகை' அரசியல் ஞானங்களும்?கிழக்கிலங்கை மக்களுக்கு இந்தத் தலைப்பு ஒன்றும் அவர்கள் அறியாதது  அல்ல.

மற்றவர்கள் கொஞ்சம் புருவத்தை சுளிப்பார்கள்.

கிழக்கிலங்கையில் நெல் அறுவடை செய்யும் காலங்களில் நெற் கதிர்களை குவித்து , நெல்லை வேறாகவும், வைகோலை வேறாகவும் பிரித்து எடுக்கும் வயல் வெளியை சுற்றியுள்ள  இடங்களில் சின்ன சின்னதாக சில பெட்டிக் கடைகள் அறுவடை காலங்களில் முளைத்து இருக்கும்.

மக்கள் அந்தக் கடைகளை சுற்றி வட்டமாக அமர்ந்திருந்து 'பிளேன் டீ' குடித்துக் கொண்டு பீடியை புகைத்துக் கொண்டு இருப்பார்கள்.

அந்த மக்களின் பேச்சுக்களை கேட்டால் நீங்கள் அதிர்ந்து போவீர்கள்.

அவர்களின் பேச்சில் அமெரிக்காவின் அதிபர் 'பரக் ஒபாமா' வந்து புதிய உலக நீதியை சொல்லுவார்.

'சச்சின் டெண்டுல்கர்' வந்து சதம்களை விளாசித் தள்ளுவார்.

'மஹிந்த ராஜபக்ச' இவர்களிடம் கேட்டுக்  கொண்டு தான் 'கருணாவை' தனது கட்சியில் சேர்த்துக் கொண்டதாக புதிய செய்திகள் வரும்.

'அப்ரிடி' எவ்வளவு 'பணம்' பெற்றுக் கொண்டு இந்தியாவிடம் தோற்றார் என்கிற இரகசியங்களும் , அப்படி பணம் கொடுத்தவர்கள் பற்றிய புள்ளி விபரங்களும் கேப்டன் விஜயகாந்தை விட இவர்களுக்கு அத்துப் படி.

விஜயின் அடுத்த படம் என்ன என்று விஜய்க்கே தெரியாது. ஆனால், இவர்களுக்கு அதுவும் தெரிந்து இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களே.

'பாலா' மட்டும் இவர்களிடம் ஒரு முறை வந்தால், 'நான் கடவுள்' என்கிற திரை படத்தைப் போல 'கடவுளின் ஞானிகள்' என்று இவர்களை வைத்தே ஒரு திரை படத்தை எடுத்திருப்பார்.

இதே வட்டக் கடை ஞான தளங்களாக எங்களது ஜும்மா மேடைகள் இப்பொழுது  மாறி  விட்டன.
  
இந்த வட்டக் கடை 'பீடி புகை ஞானங்கள்' போல இப்பொழுது அடிக்கடி கொள்ளுப்பிட்டி ஜும்மா மஸ்ஜிதில் சில கிழக்கிலங்கை உலமாக்களாலும் , தலைமைத்துவ உலமாக்களாலும் மக்களுக்கு அந்நியமான, அதுவும் நம்ப முடியாத சில கதையளப்புகள் பிரச்சாரம் செய்யப் படுகின்றன.

பீடியை ஆழமாக உள்ளிழுத்து அந்தப் புகையை கொஞ்ச நேரம் நெஞ்சுக்  கூட்டில் தக்க வைத்து , கண்களை மூடி ஒரு கணம் அந்த சுகத்தை அனுபவித்து,பின்னர் புகையை வெளியே ஊதிவிட்டு வாயை சப்புக் கொட்டிக் கொண்டு பேசுவது போல 'அபூதாலிப் நரகவாதி....'என்று அந்த மகானைப் பற்றி அநியாயமாக ,அல்லாஹ்வின் பக்கத்தில் இவர்கள் இருந்து பார்த்தது போல இவர்கள் ஞானத் தீர்ப்பு சொல்லி விடுகிறார்கள்.

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad