அஹ்லுல்பைத் Headline Animator

Monday, July 25, 2011

பராத் இரவும் அதில் உள்ள அஹ்லுல்பைத் அரசியலும்.............????


பராத் இரவும் அதில் உள்ள அஹ்லுல்பைத் அரசியலும்.............????


வருடம் தோறும் சஹ்பான் பிறை பதின் ஐந்தில் பராத் இரவு ஒரு சிறு சல சலப்பை முஸ்லிம்கள் மத்தியில் சலசலக்க வைக்கும்.

பராத் இரவு சம்பந்தமாக பல கதைகள்.

அன்றைய இரவில் மனித சமூகத்தில் ஒரு வருடத்தில் நடை பெற இருக்கின்ற அனைத்து விடயங்களையும் அல்லாஹ் பதிவதாகவும், மூன்று நோன்புகளை நாம் தொடராக நோற்றிவிட்டு அன்றிரவில் மூன்று யாசீன் சூராக்களை ஓதி சில விடயங்களை அல்லாஹ்விடம் கேட்டால் அவைகளை அல்லாஹ் நிறைவேற்றி வைப்பதாகவும் ஒரு நம்பிக்கை தொன்று தொட்டு நிலவி வருகிறது.


அதன் படி முதலாவது யாசீன் சூராவை ஓதிவிட்டு நமது நீண்ட ஆயுளுக்கும், இரண்டாவது யாசீனை ஓதி விட்டு உணவு விஷ்தீரனத்துக்கும், மூன்றாவது யாசீனை ஓதிவிட்டு நாம் அந்த வருடத்தில் செய்யப் போகின்ற பிழைகளையும்,  அத்துடன் கூடவே மரணித்து மண்ணறைகளில் இருக்கும் நமது உறவினர்களின் பிழைகளையும் மன்னித்து நமக்கு நல்லருளை அருளுமாரும் பிரார்த்திக்க நமக்கு நமது உலமாக்கள் சொல்லித் தந்து இருக்கிறார்கள்.

நாமும் மிகவும் பக்தி சிரத்தையுடன் அதனை செய்துக் கொண்டு வருகிறோம்.

பராத் தினத்தில் நோன்பு நோற்று நாம் அல்லாஹ்விடம் கேட்கும் பிரார்த்தனையில் எதுவித உயிர்ப்பும் இல்லை என்பதை நாம் அல்லாஹ்விடம் முன் வைக்கும் வேண்டுதல்களே நமக்கு பறை சாட்டுவதை மிகக் கவனமாக கவனித்தால் புரிந்து போகும்.

நாம் நீண்ட ஆயுளைக் கேட்கிறோம்.

அந்த ஆயுள் முழுதும் உண்பதற்கு உணவைக் கேட்கிறோம்.

உணவு உண்ட கொழுப்பில் நாம் செய்யும் பாவங்களையும் மன்னிக்குமாறு கேட்கிறோம்.

நாம் கேட்கும் இத்தகைய பிரார்த்தனையில் பொதிந்திருக்கும் ஆன்மீக இரகசியங்கள் என்ன?

எதுவுமே இல்லை.

அல்லாஹ்வை அறியும் ஞான இரகசியங்கள் எதாவது இருக்கிறதா?

அதுவும் இல்லை.

சரி, எதாவது சமூக சீர் திருத்தங்கள்?

ஒன்றும் இல்லை.

இத்தகைய இல்லாமைகளைக் கவனித்த நமது சீர்திருத்த தௌஹீத் தலைவர்களும், அவர்களுடன் ஒன்றிணைந்த ஜமாத்தே இஸ்லாமி  தலைவர்களும் இந்த பராத் நோன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் எதிராக கிளர்ந்து எழுந்தார்கள்.

இந்த முற்போக்கு தலைவர்களுக்கு எதிராக நோன்பு நோற்று பராத் இரவில் பிரார்த்தனை செய்யும் அடுத்த கூட்டமும் கிளர்ந்து எழுந்தது.

ஒவ்வொரு வருடமும் இந்த இரண்டு கூட்டத்தார்களும் வரிந்துக் கட்டிக் கொண்டு தமது பக்க நியாயங்களை தத்தமது ஆதரவாளர்களுக்கு சொல்ல, வருடா வருடம் இந்தத் தலைவர்களுக்கு ஒரு முக்கிய பொறுப்பு அவர்களின் மேல் சுமத்தப் பட்டு விட்டது.

முஸ்லிம் மக்களின் கவனத்தை பராத் இரவில் இருந்து திசை மாற்றிய கூட்டத்தாரின் இலக்கு இதன் காரணமாக செவ்வனே நிறை வேற்றப் பட்டாகி விட்டது.

முஸ்லிம்களின் கவனத்தை பராத் இரவில் இருந்து திசை திருப்பும் அளவுக்கு அதில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்று நீங்கள் கேட்பது நமக்கு புரிகிறது.

Wednesday, July 6, 2011

நாம் அறியாத ஷரியா..........மறுமையில் 'ரிசானாவின்' முன் முழங்கால்களில் எங்களது முப்திகள்...????


நாம் அறியாத ஷரியா..........மறுமையில் 'ரிசானாவின்' முன் முழங்கால்களில் எங்களது முப்திகள்...????


ஒரு நாள் இமாம் அலியிடம் ஒரு வழக்கு வந்தது.

ஒருவன் ஒரு மனிதனைக் கொலை செய்து விட்டான்.கொலை செய்தவனை கொலை செய்தவனின் தம்பி கட்டி இழுத்துக் கொண்டு , அவன் செய்த கொலைக்கு நீதி கேட்டு இமாம் அலியிடம் வந்தான்.

இமாம் நடந்தது என்ன என்று விசாரித்தார்.

"இவன் எனது சகோதரனைக் கொலை செய்து விட்டான்" கொல்லப் பட்டவனின் தம்பி சொன்னான்."இஸ்லாமிய ஷரியாவின் முறைப் படி எனக்கு நீதி தாருங்கள்?"

"இவன் சொல்வது உண்மையா?" என்று இமாம் குற்றம் சுமத்தப் பட்டவனிடம் கேட்டார்.

"நான் வேண்டுமென்றே அவனைக் கொல்லவில்லை" குற்றம் சுமத்தப் பட்டவன் நடுங்கியபடி சொன்னான்."நான் மரத்தில் ஏறியிருந்தேன். அவன் மரத்துக்கு அடியில் இருந்தான். நான் ஏறியிருந்த மரத்தின் கிளை உடைந்ததால் நான் அவனின் மேலே விழுந்தேன்.அதன் காரணமாக அவன் கழுத்து உடைந்து இறந்து போனான்"

இமாம் கொல்லப் பட்டவனின் தம்பியின் பக்கம் தனது பார்வையைத் திருப்பினார்.

"இவன் சொல்வது சரி " அவன் சொன்னான். "இவன் மரத்தில் இருந்து எனது சகோதரன் மேலே விழுந்ததன் காரணமாகத்தான் அவன் இறந்தான்."

."நீ இவனை மன்னித்து விடு."இமாம் தீர்ப்பு சொன்னார்"அல்லது கொலைக்குப் பகரமாக நட்டஈட்டைப் பெற்றுக் கொண்டு அவனை விட்டு விடு"

"என்னால் முடியாது" கொலைசெய்யப் பட்டவனின் தம்பி கோபத்தில் அலறினான்."இஸ்லாமிய ஷரியாவின் படி கொலைக்கு கொலை.ஆகவே என்னுடைய சகோதரனின் கொலைக்குப் பகரமாக அவன் கொல்லப் படுத்தல் வேண்டும்."

Monday, July 4, 2011

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் பெயரைக் கெடுத்த 'ஜமல்' யுத்தம்!... 'ஜமல்' யுத்தத்தின் மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்??????????


அன்னை ஆயிஷா  (ரலி) அவர்களின் பெயரைக் கெடுத்த 'ஜமல்' யுத்தம்!...
'ஜமல்' யுத்தத்தின் மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்??????????


நபி (ஸல்) அவர்களின் அருமைத் தோழர்கள் 'சஹாபாக்கள்' என எம்மால் மரியாதையுடன்  நினைவு கூறப் படுகிறார்கள்.

அந்த சஹாபாக்களில் நபி (ஸல்) அவர்களின் தூதை உள்ளத்தில் உண்மையாக ஏற்றுக் கொள்ளாமல், நயவஞ்சகத் தனத்தை நெஞ்சில் நிறைத்து  இருந்த முனாபிகான சஹாபாக்கள் நிறையவே இருந்து இருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மறைவுடன் இந்த முனாபிகான சஹாபாக்கள் முஸ்லிம் சமூகத்தில் தமது ஆளுமையை, திரை மறைவில் தீட்டும் சதிகளின் மூலமும், அந்தச் சதிகளை 'வாளின்' துணை கொண்டும்    நிலை நிறுத்திக் கொண்டார்கள்.

முஸ்லிம் உம்மாவின் ஆட்சியாளர்களாக இந்த நயவஞ்சக சஹாபாக்கள் அரசேறிய காரணத்தினால், இவர்கள் இஸ்லாமிய வரலாறை தமக்கு தோதாக மாற்றி எழுதிக் கொண்டார்கள்.

இந்த ஊடகவியலின் வலிமையால் நாம் இன்று வரை பொய்களினால் பின்னப் பட்ட ஒரு மாயையில் எம்மையே ஏமாற்றிக் கொண்டு வாழ்ந்து வருகிறோம்.

Saturday, July 2, 2011

"ஹவ்லுல் கவ்தரில் தண்ணீர் அருந்துவதட்குரிய அனுமதிப் பத்திரம்.........?"


"ஹவ்லுல் கவ்தரில் தண்ணீர் அருந்துவதட்குரிய அனுமதிப் பத்திரம்.........?"


நேற்றைய தினம் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் ஜூம்மா பிரசங்கத்தை மதிப்புக்குரிய அப்துல் ஹமீத் பஹ்ஜி அவர்கள் நிகழ்த்தி இருக்கிறார்கள்.

சஹ்பான் மாதத்தை நாம் எதிர் கொள்வதால் அந்த மாதத்தின் மகத்துவத்தைப் 
பற்றியதாக  அவரின் உரை அமைந்து இருக்கிறது.

சஹ்பான் மாதத்தில் நாம் செய்ய வேண்டிய நல் அமல்களில் அதிகம் , அதிகமாக சலவாத் சொல்லுமாறு வேண்டி, சலவாத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும், நாம் சலவாத் சொல்லவேண்டிய அவசியத்தைப் பற்றியும், சஹ்பான் மாதத்தில் நாம் எதற்காக அதிகம் சலவாத் சொல்ல வேண்டும் என்கிற காரணங்களைப் பற்றியும் அவர் விலாவாரியாக மிகவும் சிறந்த முறையில் பிரசங்கம் நிகழ்த்தி இருக்கிறார்.

ஹவ்லுல் கவ்தரில் தண்ணீர் அருந்துவதட்குரிய அனுமதிப் பத்திரத்தை  ஒருவர் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அவர் அஹ்ளுல்பைத்களின் மேல் நேசம் கொள்ள வேண்டும்.

அஹ்ளுல்பைத்களின் மேல் நேசம் கொள்வது என்பதன் அடையாளம் அவர்களின் மேல் அதிகம் அதிகம் சலவாத் சொல்வதில் இருக்கிறது என்று அவர் கூறி இருக்கிறார்.

அவரது கூற்று அப்பழுக்கு இல்லாத நிஜமாகும்.

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad