Sunday, September 25, 2011

இடித்து தரை மட்டமாக்கப் படும் மஸ்ஜிதுகளின் அழிவுகளுக்கு காரணமான முஸ்லிம்கள்................??????



இடித்து தரை மட்டமாக்கப் படும் மஸ்ஜிதுகளின் அழிவுகளுக்கு காரணமான முஸ்லிம்கள்................??????



காலையில் மனைவி சொன்னாள் "தெருக் கோடியில் இருந்த மாடி வீட்டு மனிதனை இரவில் இனந்தெரியாத யாரோ வந்து கண்ணைக் கட்டி அழைத்து சென்றார்களாம்...."

'ஓஹ் ..அந்த கம்யூனிசவாதியா?....' நான் நினைத்தேன். 'இறைவனே இல்லை என்று சொன்ன அவனுக்கு அது வேண்டும்!'

அந்தக் கடத்தல் என்னைப் பாதிக்காததால் நான் மெளனமாக இருந்தேன்.

ஒரு வாரத்தில் காலையில் மனைவி மீண்டும் சொன்னாள்."இம்முறை மூன்று வீடுகள் தங்கியிருந்த எதிர்க் கட்சி அரசியல் வாதியை இரவில் வந்த இனந்தெரியாத நபர்கள் கடத்திச் சென்றார்களாம் ..."


'ஓஹ்..அந்த எதிர்க் கட்சி அரசியல்வாதியா.......' நான் நினைத்தேன்.'தேவை இல்லாமல் ஆளும் கட்சியை எதிர்க்கும் அவனுக்கும் அது வேண்டும்.'

அந்தக் கடத்தலும் என்னைப் பாதிக்காத காரணத்தால் நான் மௌனித்து ஒதுங்கிப் போனேன்.

சில நாள்களுக்கு பின்னர் ஒரு நாள் காலையில்   மனைவி சொன்னாள்"எங்களது எதிர் வீட்டில் குடியிருக்கும் எப்பொழுதும் பொதுநலத்தையே பேசுகின்ற மனிதரை நேற்றிரவு வந்த சிலர் கடத்திப் போனார்களாம்..."


"ஓஹ்... அந்தப் பொதுநலவாதியையா' நான் நினைத்தேன்.'அவருக்கு அது வேண்டும்.எப்பொழுதும் தேவை   இல்லாமல் மற்றவர்களின் விடயத்தில் தலையிட்டுக் கொண்டே இருந்ததற்கு இது வேண்டும்'

மற்றவர்களின் விடயத்தில் தலையிடாத நான் பேசாமல் இருந்தேன்.

சூழ் நிலைகள் இவ்வாறு மோசமாக இருந்தாலும் எங்கள் வீட்டில் நாம் நிம்மதியுடன் இருந்தோம்.

ஒரு நாள் நடு நிசி.

என் வீட்டு கதவு தட்டப் பட்டது.

கதவைத் திறந்தால்..........

Thursday, September 15, 2011

வெளிநாட்டு நன்கொடை பேரீத்தம் பழங்களும் நாமும்??

வெளிநாட்டு நன்கொடை பேரீத்தம் பழங்களும் நாமும்??


ரமழான் மாதம் எம்மை விட்டும் விடை பெற்று விட்டது.

ரமளானுக்கு முந்திய ஒரு நாளில் எங்கள் பகுதி ஜும்மாஹ் பள்ளிவாசலில் எங்கள் ஊர் தனவந்தர்கள் ஒன்று கூடி ஒரு பிரச்சினைக்கு முடிவு கட்டுவதற்காக ஒன்று திரண்டிருந்தார்கள்.

என்ன பிரச்சினை என்று மூக்கை நுழைத்துப் பார்த்ததில், நன்கொடையாக வந்திருக்கின்ற பேரீத்தம் பழங்களை ஊர் ஜமாத்தினர் மத்தியில் எவ்வாறு பங்கிடுவது எனபது சம்பந்தமாக அவர்கள் கூட்டம் கூடி இருந்தார்கள்.

சில இளமையான இளைஞர்கள் மிக உற்சாகமாக பேரீத்தம் பழங்களை பங்கு வைப்பதில் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

பணக்கார தனவந்தர்கள், ஜமாஅத் இளைஞர்கள், காய்ந்துபோன பேரீத்தம் பழங்கள் என பள்ளிவாசல் அல்லோலகல்லோலமானது.