Tuesday, October 25, 2011

பௌத்த விகாரையின் எளிமையான ஆன்மீக பலமும் ..........'காக்கா'... பிடிக்கும் ஆன்மிகம் தொலைத்த மிடுக்கான பள்ளிவாசல்களும்....????

பௌத்த விகாரையின் எளிமையான ஆன்மீக பலமும் ..........'காக்கா'... பிடிக்கும் ஆன்மிகம் தொலைத்த மிடுக்கான பள்ளிவாசல்களும்....????


கொழும்பில் தெமட்டகொட என்றொரு பிரதேசம் இஸ்லாமிய இயக்கங்களுக்கு பிரசித்தமானது.

அந்த வீதியில் இருக்கின்ற எங்களது இஸ்லாமிய இயக்கங்களின் தொலைந்து போன ஆன்மீக பலம் ஆச்சரியமாக அங்கே இருக்கின்ற ஒரு பௌத்த விகாரையில் பளீரிட்டு தன்னை இனம் காட்டியது.

அந்த பௌத்த விகாரையை மக்கள்   'அலி தென்னா பன்சல' என்று அழைப்பார்கள்.

இரண்டு யானைகளின் சிலைகள் அந்த விகாரையின் நுழை வாயிலில் இருப்பதால் அதற்கு அப்படியொரு பெயர்.

 'இரண்டு யானைகளின் விகாரை' என்று அதன் அர்த்தம் தமிழ் வடிவம் பெறும்.

Tuesday, October 18, 2011

ஹஜ் கிரிகைகளில் மறக்கடிக்கப் பட்ட அஹ்ளுல்பைத்களின் நினைவுத் தடயங்கள்....???

ஹஜ் கிரிகைகளில் மறக்கடிக்கப் பட்ட அஹ்ளுல்பைத்களின் நினைவுத் தடயங்கள்....???


இதென்ன புதுக் கோஷம் என்று நீங்கள் விழி பிதுங்குவது புரிகிறது.

ஆனாலும் உண்மை அதுதான்.

சம்  சம்   கிணற்றின் நீரின் சுவையில் நபி இஸ்மாயில் (அலை) அவர்களின் தாகத்தின் வேதனை புரிந்து போகும்.

சபாவுக்கும்  மர்வாவுக்கும் இடையேயான  ஓட்டத்தின் தடுமாற்றத்தில் அன்னை ஹாஜாராவின் தனிமையான பரிதவிப்பு பட படக்கும்.

சம் சம் கிணற்றின் தீரமான கதைகளில் பரிதாபமாக நாம் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தின் கதையை சுத்தமாக மறக்கடிக்கப் பட்டுப் போனோம்.

அதென்ன மறந்த கதை?

தூர்ந்து போன சம் சம் கிணற்றை மீண்டும் தோண்டி உயிர்ப்பித்த நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் வாலிப அப்துல் முத்தலிபின் தீரமிக்க தீர்மானங்களில் ஒன்றாக அந்தக் கதை இருக்கிறது.


மறைந்துப் போய் கதைகளிலே மட்டும் உயிர்த்துக்   கொண்டிருக்கின்ற சம் சம் கிணறு இருக்கும் இடத்தை தனக்குக் காட்டித் தந்தால் தனது முதாதையர் நபி இப்ராஹீம் (அலை) அவர்களைப் போல தனது மகன்களில் ஒருவரை அல்லாஹ்வுக்காக பலியிடுவதாக வாலிபர் அப்துல் முத்தலிப் அல்லாஹ்விடம் நேர்ச்சை வைக்கின்றார்.

கிணறு இருக்கும் இடம் பற்றி அவருக்கு கனவில் காண்பிக்கப் படுகிறது.

குறைஷி அராபியரின் எதிர்ப்பையும் மீறி அவர் துணிந்து கிணறு இருக்கும் இடத்தை தன்னந் தனியாக தோண்டுகிறார்.

அவர் தோண்டிய இடத்தில் இருந்து நீர் மீண்டும் பீரிட்டு கிளம்புகிறது.

அதன் பின்னர் அவர் தான் அல்லாஹ்விடம் நேர்ந்துக் கொண்டவிதமாக தனது மகன்களில் ஒருவரை அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிட முனைகிறார்.

அவ்வாறு அறுத்துப் பலியிட அழைத்துச் செல்லப் பட்டவர் வேறு யாரும் இல்லை.

அவர்தாம், நபி (ஸல்) அவர்களின் தந்தை அப்துல்லாஹ் (அலை).

அப்துல்லாஹ் (அலை) அவர்களின் மாமன்மார்களின் தலையீட்டால் அவருக்குப் பகரமாக நூறு ஒட்டகைகள் அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடப் பட்ட கதை வரலாறு.

நமது இன்றைய ஹஜ் தின பிரசங்கங்களில் சம் சமக் கிணற்றின் பெருமையைப் பேசும் கட்டங்களில் கூட இந்த விடயங்களை யாரும் மருந்துக்குக் கூட நினைவு படுத்துவது இல்லை.

சரி! அதை விடுங்கள்.

Thursday, October 6, 2011

யமாமா கொலைக் கள நாடகங்கள்....?????? ஹதீக்கத்துள் மவ்த்தின் -மரணப் பூங்காவின்-மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்.....?????

யமாமா கொலைக் கள நாடகங்கள்....?????? ஹதீக்கத்துள் மவ்த்தின் -மரணப் பூங்காவின்-மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்.....?????

முதலாம் கலீபாவின் இரண்டு வருடமும் மூன்று மாதங்களும் மட்டுமே நீடித்த மிகக் குறுகிய இஸ்லாமிய ஆட்சியில் இஸ்லாமிய வரலாற்றில் ஜீரணிக்க முடியாத பல கசப்பான நிகழ்ச்சிகள் அவசர அவசரமாக நடைபெற்று முடிந்துள்ளன.

அவற்றில் சகாத் கொடுக்க மறுத்தவர்களுடனான போராட்டம்,  இஸ்லாத்தை விட்டும் வேறு மதங்களுக்கு மாறிவிட்டவர்களுடனான போராட்டம், பொய் நபிமார்களுடனான போராட்டம் என்பன முக்கியமான பிரச்சினைகளாக எமக்கு சொல்லித் தரப் பட்டன.

ஆனால், முதலாம் கலீபா சந்தித்த இதே பிரச்சினைகளை நபி சல்லல்லாஹு அலைஹி  வஆலிஹி வசல்லம் அவர்களும் சந்தித்திருக்கிறார்கள் என்கிற உண்மை மிகவும் சூசகமாக எங்கள் கவனத்தை விட்டும் மறைக்கப் பட்டன.

அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை.

நபி  சல்லல்லாஹு அலைஹி  வஆலிஹி வசல்லம் அவர்களின் சுன்னாவுக்கு முரணாகவே முதலாம் கலீபா நடந்துக் கொண்டார் என்கிற விடயம் வெளியே தெரிந்து போகும் அபாயம் இந்த விடயங்களை பகிரங்கமாக தெரியப் படுத்துவதில் தொக்கியிருந்தது.

அந்த முரண்பாடுகளை இன்னொருமுறை விரிவாகக் கவனிப்போம்.

எமது இன்றைய ஆய்வில் யமாமா கொலைக் களத்தில் முஸைலமா என்ற பொய் நபியுடன் நடந்த யுத்தத்தில் 'மங்காத்தா' பாணியில் நடந்த சில சந்தேகமான விடயங்களை உங்களது  கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.

Monday, October 3, 2011

"சுன்னத் வல் ஜமாத்தினரின் அகீதாவின் படி அபூதாலிப் காபிர்................?" இலங்கையின் தலைமைத்துவ உலமாவின் தீர்ப்பு!


"சுன்னத் வல் ஜமாத்தினரின் அகீதாவின் படி திரு .அபூதாலிப் காபிர்................?" இலங்கையின் தலைமைத்துவ உலமாவின் தீர்ப்பு!.......அஹ்லுல்பைத் தமிழ் தளத்தின் பதில் என்ன?


அண்மையில்  BMICH இல் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பொழுது நரகத்தில் மிகக் குறைந்த வேதனை அளிக்கப் படுகின்ற திரு.அபூதாலிபின் இணை வைப்பு சம்பந்தமாகவும் அவரது இஸ்லாம் சம்பந்தமாகவும் ஒரு சர்ச்சை எழுந்தது.

அப்பொழுது அங்கே பிரசன்னமாகியிருந்த இலங்கையின் உலமா சபை ஒன்றின் தலைவரிடம் இது பற்றிய தீர்ப்பு கேட்கப் பட்டது.

அந்தத் தலைவர் தனக்கு அருகே அமர்ந்திருந்த ஜாமியா நளீமியாவின் மூத்த பணிப்பாளர் ஒருவருடன் கலந்தாலோசித்து விட்டு "சுன்னத் வல் ஜமாத்தினரின் அகீதாவின் படி திரு. அபூதாலிப் காபிர்" என்று தீர்ப்பு வழங்கினார்.

திரு.அபூதாலிப் முஸ்லிம், மன்னிக்கவும் ..மூமின் என்கிற அஹ்லுல்பைத்  தமிழ்  தளத்தின் வாதம் இலங்கையின் மூத்த இஸ்லாமிய அறிஞர்களின் கூற்றுடன் முரண்படுகிறதே?