Wednesday, January 25, 2012

பாவம் டீச்சர்....?


நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களைப் பற்றிய சிறப்புப் பேச்சொன்றுக்கு பாடசாலை கனிஷ்டப் பிரிவில் கல்வி கற்கும் நமது நண்பர் ஒருவரின் மகன் தெரிவு செய்யப் பட்டிருந்தார்.

நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களைப் பற்றி பேச்சொன்றை எழுதித் தருமாறு அவர் நமது நண்பரை கேட்டிருக்கிறார்.

நமது நண்பர் அவரது மகனிடம் அவருக்கு சுயமாகவே நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களைப் பற்றி தெரிந்திருக்கும் விடயங்களை எழுதிக் கொண்டு வருமாறு வேண்டியிருக்கிறார்.

அந்தச் சிறுவரும் நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களைப் பற்றி அவர் அறிந்த விடயங்களை   அவருக்கு தெரிந்த விதத்தில் எழுதிக் கொண்டு வந்திருக்கிறார்.

அவ்வாறு கொண்டு வந்த பேச்சை சின்ன சின்ன திருத்தங்களை செய்து அந்த பேச்சையே செப்பனிடுவதன் மூலம் சிறுவருக்கு அந்தப் பேச்சை மனனம் செய்யும் சிரமம் இருக்காது எனபது நண்பரின் கணிப்பு.

அதன்படி நமது நண்பரும் சிறுவர் கொண்டு வந்த பேச்சை திருத்திக் கொடுத்திருக்கிறார்.

சிறுவர் அவரது உரையினை தயாரிக்கும் பொழுது நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களின் தந்தையின் பெயர் அப்துல்லாஹ் என்றும் தாயாரின் பெயர் ஆமினா என்றும் எழுதிக் கொண்டு வந்திருக்கிறார்.

தவறு இல்லையே?

Thursday, January 12, 2012

பூட்டப் படாமல் பூட்டிய மனங்கள்...????



பாணத்துறைக்கு மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய நண்பர் ஒருவரைக் காண நண்பர்கள் சிலர் சென்றிருந்தோம்.

விபத்துக்குள்ளான நண்பர் படுத்த படுக்கையில் இருப்பார் என்ற பதட்டமான எதிர்பார்ப்பு , மீண்டும் மோட்டார் சைக்கிளில் சுற்றிக் கொண்டிருந்த நண்பரைக் கண்டவுடன் அதிர்ச்சியைக் கொண்டு வந்தது.

இது எப்படி சாத்தியம் என்ற ஆய்வில், விபத்து நடந்து இரண்டு வாரங்களின் பிறகுதான் நமக்கு செய்தி கிட்டியது என்று புரிந்துப் போனது.

நல்ல நிலையில் அவரைக் கண்ட மகிழ்ச்சியில் சூழ் நிலையில் எவ்வித இறுக்கமும் இன்றி நாம் எல்லோரும் மிக உற்சாகமாக உரையாடிக் கொண்டிருந்தோம்.

நண்பர் சலபி கருத்துக்களால் கவரப் பட்ட தீவிர சலபி.

இன்னும் கொஞ்சம் இலகு வார்த்தையில் சொன்னால், அஹ்லுல் பைத்களின் மீது தீவிர நேசம் கொண்டுள்ள சலபி.(சலபிகள் அஹ்ளுல்பைத்கள் மீது நேசம் கொள்வதில்லை என்று யார் சொன்னது?)

சலபிகளின் நுனிப்புல் மேயும் கருத்தியலின்படி நாம் 'பிதுஅத்'காரர்கள்.

எங்களுடன் ஒன்றாக அமர்ந்திருப்பது கூட தவறு என்ற கருத்தியலில் அவரது நண்பர்கள் இருக்கிறார்களாம்.

ஆனால், எங்களது நண்பரால் அது முடியாது.

Tuesday, January 10, 2012

டாக்டர் அன்புராஜின் ஆய்வுக்கு ஒரு சிறு கதை...?


இணையத்திற்கு சில நாட்களாக வர முடிய வில்லை.

இன்று திறக்கும் பொழுது டாக்டர் அன்புராஜின் தொடர் பின்னூட்டங்கள்.

அவரது பின்னூட்டங்களுக்கு சுருக்கமாக பதில் சொல்லும் விதத்தில் எமது இன்றைய பதிவை பதிவேற்றுகிறோம்.

டாக்டர் அன்புராஜ் எம்மை மன்னித்துக் கொள்ள வேண்டும்.

டாக்டர் அன்புராஜின் பின்னூட்டங்களின் கருத்துக்கள் அபூ சுபியானின் குடும்பத்தினர் சொல்லித் தந்த இஸ்லாத்தில் இருந்த அறிஞர்கள் சொன்ன இஸ்லாமிய கருத்துக்களுக்கு கொஞ்சமும் வித்தியாசப் படாமல் இருப்பதை தயவு செய்து டாக்டர் அன்புராஜ் புரிந்துக் கொள்ள வேண்டும்.

துரதிர்ஷ்ட வசமாக அபூசுபியானின் குடும்பத்தினரின் இஸ்லாம்தான் இன்று அநேகமாக அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் பின்பற்றப் படுகின்றது.

அந்த இஸ்லாத்தில் நீதி இல்லை.

நியாயம் இல்லை.

உண்மை இல்லை.

இனி மனிதத்துவம் எங்கே இருக்கப் போகிறது.

அபூசுபியானின் குடும்பத்தினரின் இஸ்லாத்தில் இருந்து அஹ்ளுல்பைத்களின் - நபி குடும்பத்தினர் சொல்லித் தந்த இஸ்லாத்தின் பக்கம்தான் நாம் எங்களது சகோதரர்களை அழைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்   கொண்டிருக்கிறோம்.

நீங்கள் சொன்ன அனைத்து அராஜகங்களும் நபி பெயரால் , அல்லாஹ்வின் பெயரால், இஸ்லாத்தின் பெயரால் அபூசுபியானின் குடும்பத்தினர் அறிமுகப் படுத்திய இஸ்லாமாகும்.

இனி, சிறிய சிறிய சிறு கதைகள் மூலம் இஸ்லாமிய வரலாற்றை உங்களுக்கு சொல்ல முயல்கிறோம்.



முதல் சிறு கதை :

நபி (ஸல்) அவர்களின் மறைவு நாள்.

உருவிய வாளுடன் ஹசரத் உமர் (ரலி).

வெற்றிக் களிப்பில் ஷைத்தான்.




Monday, January 2, 2012

அஹ்லுல்பைத் ஆதரவாளர்களின் பிரதானமான நம்பிக்கைகள்........????


அஹ்லுல்பைத் ஆதரவாளர்களின் பிரதானமான நம்பிக்கைகள்........????

1.ஏகத்துவம்

அல்லாஹ்ஒருவன்அவன் தனித்தவன்எவ்வித தேவையுமற்றவன்
அனைத்துப் படைப்பினங்களையும் படைத்தவனும் அவனே. அவைகளை பரிபாலிப்பவனும் அவனே. வணக்கவழிவாடுபிரார்த்தனைஅழைத்தல் மற்றும் 
கேட்டல் ஆகிய அனைத்திற்கும் தகுதியானவன் அல்லாஹ் மாத்திரமே. 
அவனையன்றி பிறரிடம் துஆ கேட்பதும்பிரார்த்திப்பதும் அதேபோன்று 
அவர்களை தனது தேவைகளை நிறைவேற்றும் தனியாற்றல் 
கொண்டவர்களாக கருதுவதும் ஷிர்க் எனும் மன்னிக்கப்படமுடியாத 
பெரும்பாவமாகும்.
2.நீதி
இவ்வுலகம் நீதியாலேயே அமைக்கப்பட்டுள்ளது. இறைவனின் 
செயற்கள் அனைத்தும் நீதியானவையே. அவன் எவருக்கும் 
நீதிக்குப்புறம்பாக அநீதியை நாடுவதில்லை. எனவே நன்மைதீமை 
இவ்விரண்டையும் மனிதனே தெரிவுசெய்கிறான்.
إنّ اللهَ لا يَظْلِمُ مِثْقالَ ذَرّةٍ
நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) அணுவளவுங்கூட அநியாயம் 
செய்யமாட்டான்.
(4:40)
إنّ اللهَ لا يَظْلِمُ النّاسَ شَيْئاًوَلَـكِنَّ النَّاسَ أَنفُسَهُمْ يَظْلِمُونَ
நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு எவ்வித அநியாயமும் 
செய்வதில்லை. எனினும் மனிதர்கள்தான் தமக்குத்தாமே அநியாயம் செய்துகொள்கின்றனர் (10:44)