அஹ்லுல்பைத் Headline Animator

Monday, February 27, 2012

ஆற்றாமையுடன் ஒரு பணிவான வேண்டுகோள்...!!!!! உதவுவீர்களா...??????






முஸ்லிம் நாடுகள் அனைத்தையும் ஏதோ ஒரு பெயரில் ஆக்கிரமித்து கபளீகரம் செய்துக் கொண்டிருக்கிறார்கள் அமெரிக்காவின் தலைமையில் நேட்டோ படையினர்.

அமெரிக்க தலைமைத்துவ நேட்டோ படையினரின் அக்கிரமங்கள் எம்மை அணுகாத காரணத்தினால் அந்த ஆக்கிரமிப்பின் வலிகளை நாம் உணரவில்லை.

Friday, February 24, 2012

உன் வாழ்க்கை உன் கையில்...........?புரிந்துக் கொள்ள மறுக்கும் உண்மைகள்!!!!



எமது நண்பர் டாக்டர் அன்புராஜ் சுவனத்து ஹூருல் ஈன்களைப்பற்றி தனது பின்னூட்டம் ஒன்றில் சில சந்தேகங்களைக் கேட்டிருந்தார்.

அவர் தனது பின்னூட்டத்தில்......... "சுவனம் செல்லும் பாக்கியம் கிட்டும் ஒரு ஆண் மகனுக்கு சுவனத்தில் எழுபத்து இரண்டு ஹூருல் ஈன்கள் மனைவிமார்களாக கிடைப்பார்கள் என்று அலிஸீனா என்பவரின் இணையத் தளத்தில் கண்டேன்.அப்படி என்றால் சுவனம் செல்லும் பாக்கியம் பெற்ற பெண்களுக்கு சுவனத்தில் யார் கிடைப்பார்கள்........?"

இதுதான் அவர் கேட்ட  கேள்வி.

கேள்வி நமக்கு புதிது.

நமக்கு மட்டுமல்ல எமது இந்த ஆய்வில் நாம் சந்தித்த முஸ்லிம்கள் அனைவருக்கும் இந்தக் கேள்வி புதிது.

ஏனெனில், நம்மை படைத்த இறைவனை விசுவாசித்து ,மரணத்தின் பின்னால் உள்ள வாழ்க்கையை அதாவது மறுமையை விசுவாசித்து , மறுமை வாழ்க்கையை விபரித்த நபிமார்களை விசுவாசித்து ,அந்த நபிமார்களுக்கு தூது கொண்டு வந்த வானவர்களை விசுவாசித்து இருக்கின்ற மக்கள் அனைவருக்கும் சுவனத்தைப் பற்றியோ , அதில் இருக்கின்ற   ஹூருல் ஈன்களைப் பற்றியோ எதுவித கனவுகளோ அல்லது குழப்பங்களோ இருக்க வில்லை.

அவர்கள் அனைவரின் மனத்திலும் தாங்கள் அனைவரும் மரணத்தின் பின்னால் இறைவனின் சந்நிதியில் ,அவனது ஆதரவில் தங்கி ...தப்பி பிழைத்து இருப்போம் என்கிற ஆறுதல் இருந்தது.

ஆனால், இறைவனின் ஆதரவில் நம்பிக்கை வைக்க தவறிய உலகத்துக்கும் உலகத்து மக்களுக்கும் ஹூருல் ஈன்களைப்   பற்றிய இந்தக் கேள்வி புதிதல்ல என்பதை நாம் நமது ஆய்வில் அறிந்துக் கொண்டோம்.

ஆச்சரியமாக அவர்களும் ஏதோ ஒரு விதத்தில் மறுமை வாழ்க்கையை விசுவாசித்து இருந்தார்கள்.

மறு பிறப்பு என்று சிலர் மரணத்தின் பின்னால் உள்ள வாழ்க்கையை நம்பிக் கொண்டிருந்தார்கள்.

அனைத்து ஆசா பாசங்களையும்   துறந்து நிர்வான் நிலையை அடைந்துக் கொள்வதில் விமோசனம் இருக்கிறது என்று இன்னும் சிலர் நம்பிக் கொண்டிருந்தார்கள்.

தான் செய்யும் செய்வினைக்கு தக்க பல பிறவிகள் எடுத்து இறுதியில் ஒன்றுமே இல்லாமல் இறைவனுடன் சங்கமமாகி விடுவதாக சிலர் நம்பிக் கொண்டிருந்தார்கள்.

நல்லறங்கள் செய்வதன் காரணமாக இறைவனை தன்னுள்ளேயே கண்டு தனது செய்கைகளை இறைவனின் செயல்களாக கருதி இறைவனுடன் இரண்டறக் கலந்து விடுவதாக இன்னும் சிலர் நம்பிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களது விசுவாசத்தில் ஒரு குழப்பம்.

அதன் காரணமாக அவர்கள் முஸ்லிம்களின் மறுமை விசுவாசத்தில் குறை கண்டு தங்களது விசுவாசத்தை சரி காணும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார்கள்.


எது எப்படி போனாலும் இவ்வாறான அனைத்து நம்பிக்கைகளிலும் மரணத்தின் பின்னால் ஏதோ இருக்கிறது என்று மனித மனம் நம்பிக் கொண்டிருந்தது பேராச்சரியம்.

அத்தகைய நம்பிக்கையில் வாழ்கின்ற அனைவரும் மரணத்தின் பின்னர் இருக்கின்ற வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்கிற நப்பாசையில் தீமை செய்யப் பயந்து தங்களால் முடிந்த வரை நன்மைகளையே செய்து கொண்டிருந்தனர்.

மக்களின் மறுமை வாழ்வு சம்பந்தமான  அந்த நம்பிக்கையின் செயல் விளைவு உலகத்துக்கு நன்மையாகவே இருப்பதும் புரிந்தது. 

இனி, இணையத்தில் இறைவன் வாக்களித்த மறுமை வாழ்வில் மனிதனுக்கு வழங்கும் சொகுசான , நிம்மதியான வாழ்க்கை சம்பந்தமாக பெரும் வாதப் பிரதி வாதமே நடந்துக் கொண்டிருப்பதை நண்பரின் கேள்விக்கு விடை தேடும் பொழுது புரிந்தது.

எம்மை கொஞ்சம் ஆசுவாசப்படித்துக் கொள்ளவும்,எங்கள் பெண்களின் மன நிலையைப் பற்றி புரிந்துக் கொள்ளவும், எமது அறிஞர் நண்பர்களை சுவனத்து ஹூருல் ஈன் களைப் பற்றி சில நிமிடங்கள் சிந்திக்கவும் வைத்த நண்பர் அன்புராஜுக்கு நன்றிகள்.

நமது நண்பர் அன்புராஜ் இணையத்தில் நடந்துக் கொண்டிருக்கும் சுவையான வாதப் பிரதிவாதங்களை (நிச்சயமாக) பார்த்திருப்பார் என்று நம்புகிறோம்.

ஹூருல் ஈன் களைப் பற்றி நமது நண்பர்   நம்மிடம் கேள்வி கேட்டதும் நாம் வழமைப் போல அந்தக் கேள்வியை நமது அறிஞர்களிடம் ஒப்புவித்தோம்.

நமது அறிஞர்களுக்கு உடனே பதில் சொல்லத் தெரிய வில்லை.

ஏனெனில், மக்களில் சிலரைக் குழப்பி தடுமாற வைத்திருக்கும் அழகிய சுவனத்து மங்கையர்கள் பற்றிய கதைகள் அந்த  அறிஞர்கள் மனத்தில் நிறைந்து இருக்கவில்லை. அதனால் அந்தக் காரிகைகளைப் பற்றி அவர்கள் அவ்வளவாக அலட்டிக் கொண்டிருக்கவில்லை.

அதே போல , அந்த அறிஞர்கள் சுவனத்துக்கு ஆசை வைத்து நரகத்துக்கு பயந்து இருக்கவும் இல்லை.

அவர்களின் நோக்கமெல்லாம் படைத்த இறைவனின் திருப்தியை எப்படி அடைந்துக் கொள்வது என்பதில்தான் தங்கி இருந்தது என்கின்ற உண்மை  எமது கேள்விக்கு அவர்கள் அளித்த பதில்களில் புரிந்துப் போனது.

அவர்களைப் பொறுத்தவரை ஏக வல்ல இறைவனின் திருப்திதான் முதன்மையில் இருந்தது.

வல்ல இறைவனின் திருப்தி எதனை செய்தால் கிட்டும் என்ற ஆராய்ச்சியிலும்,அதன் வழி பிறந்த செய்கைகளிலும் அவர்கள் முழுமூச்சாக ஈடுபாடு கொண்டிருப்பதும் புரிந்தது.  

அதனால், அவர்களின் கண்ணோட்டத்தில் சுவனத்தின் சுகங்களும், நரகத்தின் அவலங்களும் இரண்டாம் பட்சத்தில் இருந்தன.

எனவே அவர்களுக்கு இந்தக் கேள்விக்கு பொருத்தமான பதில் சொல்லவும்,  இது சம்பந்தமாக ஆய்வு செய்யவும் எம்மைப் போலவே நேரம் அவசியப் பட்டது.

இரவில் எனது மனைவியுடன் இருக்கையில் நான் கேட்டேன்"சுவனத்துக்கு செல்லும்  ஆண்களுக்கு சுவனத்தின் ஹூருல் ஈன்களில் எழுபத்து இரண்டு பேர்களை மனைவிமார்களாக அல்லாஹ் கொடுப்பானாம்...நீங்கள் என்றாவது சுவனத்தில் பெண்களுக்கு அல்லாஹ் யாரை மணாளனாக கொடுப்பான் என்று சிந்தித்து இருக்கிறீர்களா?"

Thursday, February 9, 2012

இலங்கையில் இருக்கும் அஹ்ளுல்பைத்களின் நிஜமான எதிரிகள்............???தொடரும் நாடகங்களின் வெற்றிகரமான இயக்குநர்களை இனம் காண்போம்!


ஆசுரா, தாசுரா, அராபியீன், கதீர், சஹ்பான் மாத பிறை பதின் மூன்று அல்லது     பதின் நான்கு - மிட் சஹ்பான், சஹாரா டே, ஹஜ் செமினார், இமாம் கொமைனியின் கொண்டாட்டங்கள், குத்ஸ் தினம் ஆகிய வார்த்தைப் பிரயோகங்கள் இலங்கையின் பாமர முஸ்லிமுக்கு புதிதானவை.

ஆனால், இந்த தினங்களின் அனைத்து நினைவு தினங்களும் இலங்கையின் அஹ்லுல் பைத்களின் ஆதரவாளர்களுக்கு நன்கு பரிச்சயமானது.

இந்த தினங்களை இலங்கையில் இருக்கும் ஈரானிய கலாசாரப் பிரிவு பல இலட்சங்களை செலவு செய்து  நினைவு மறக்காமல் கொண்டாடுவது விசேஷம்.

அதற்கான அனைத்து செலவுகளையும் ஈரானின் இஸ்லாமிய குடியரசு பொறுப்பேற்கும். 

ஆதலினால், அஹ்லுல் பைத்களின் ஆதரவாளர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த தினங்களில் ஈரானின் கலாசாரப் பிரிவில் ஒன்று கூடுவார்கள்.

அங்கே நடை பெறுகின்ற சிறப்புப் பேச்சுக்களில் பங்கேற்பார்கள்.

அஹ்ளுல்பைத்களின் முக்கியத்துவத்தை இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் எப்படி கொண்டு சேர்ப்பது என்று வாதிடுவார்கள்.

எதுவித சங்கோஜமும் இல்லாமல் அந்த வைபவங்களில் பரிமாறப் படும் உணவு வகைகளை சுவைப்பார்கள்.ஏனெனில், அந்த செலவினங்களுக்கு அஹ்ளுல்பைத்களின் கொள்கையில் இருக்கின்ற ஒரு நாடு பொறுப்பாக இருக்கிறது என்று அவர்களுக்கு தெரியும்.

இந்த நிலையில் இவ்வருட நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களின் ஜனன விழா இலங்கையில் இருக்கின்ற அஹ்லுல் பைத் ஆதரவாளர்களினால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப் பட்டது.

இலங்கையில் இருக்கின்ற முஸ்லிம்களில் வஹ்ஹாபிகளைத் தவிர ஏனையவர்கள் நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களின் ஜனன விழாவை தங்களின் சக்திக்கு ஏற்ப கொண்டாடத் தொடங்கினார்கள்.

அஹ்ளுல்பைதகளின் ஆதரவாளர்கள் ஈரான் கலாசார நிலையம் ஏற்பாடு செய்யும் மீலாத் விழாவை எதிர் பார்த்து எதுவும் செய்யாமல் "ங்கே" என்று காத்திருந்தார்கள்.

நாள்கள் ஓடின.

Tuesday, February 7, 2012

அன்னை கதீஜா (அலை) அவர்களின் திருமண வயது...........குழப்பத்துக்கு ஒரு தீர்வு....?????!!!!!!





எமக்குக் கிடைத்த தகவல்களின்  படியும் அநேக இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்களின் கருத்துப் படியும் அன்னை கதீஜா (அலை) அவர்களை நபி சல்லலல்லாஹு அலைஹி   வஆலிஹி   வசல்லம் அவர்கள் திருமணம் புரியும் பொழுது அன்னை கதீஜா (அலை) அவர்களின் வயது நாற்பது.

நபி சல்லலல்லாஹு அலைஹி   வஆலிஹி   வசல்லம் அவர்கள் இருபத்து ஐந்து வயது இளைஞராக இருந்து இருக்கிறார்கள்.

அன்னை கதீஜா (அலை) நாற்பது வயது நிறைந்த மூதாட்டியாக இருந்து இருக்கிறார்கள்.

என்னுடைய கல்லூரி வாழ்க்கையில் ஒரு முறை இந்தியாவைச் சேர்ந்த ஒரு மார்க்க அறிஞர் தனது பகிரங்க பிரசங்கம் ஒன்றில் இந்த வயது வித்தியாசத்தை இப்படி நியாயப் படுத்துவதைக் கேட்டு நானும் அப்படியே பலரிடம் காவிக் கொண்டு சொல்லியிருக்கிறேன்.

"தன்னை விட வயதில் மூத்த, நாற்பது வயதுப் பெண்ணை எங்கள் நபி நாயகம் சல்லலல்லாஹு அலைஹி   வஆலிஹி   வசல்லம் அவர்கள் திருமணம் புரிந்ததில் ஒரு இரகசியம் பொதிந்து இருக்கிறது.அன்னை கதீஜா அவர்கள் வயதில் மூத்த தன்னை நபி சல்லலல்லாஹு அலைஹி   வஆலிஹி   வசல்லம் அவர்கள் திருமணம் புரிந்துக் கொண்டதற்கு நன்றிக் கடனாக ஒரு தாயாரைப் போல அவரைக் கவனித்துக் கொண்டார்கள்.அதனால் தான் அவர்கள் தினமும் ஹிரா குகைக்கு நபிசல்லலல்லாஹு அலைஹி   வஆலிஹி   வசல்லம் அவர்களுக்கு தேவையான  உணவை ஒரு தாயின் ஸ்தானத்தில் இருந்து எடுத்துக் கொண்டு போய் கொடுத்து  இருக்கிறார்கள்.ஒரு இளம் பெண்ணிடம் எங்களால் இவ்வாறான தியாகத்தை எதிர்பார்க்க முடியாது...."

இந்தக் கருத்தின் தரம் தாழ்ந்த பொருள் வடிவம்  இப்பொழுதுதான் எனக்கும் புரிகிறது.

Sunday, February 5, 2012

இஸ்லாமிய வரலாற்றை வேரறுத்த உமையாக்கள்..........?




நாம் எதிர்பார்த்த மாதிரியே நண்பர்களின்  தொடர் தொலைபேசி அழைப்புகள். 

பெரிய தந்தை சொல்வதில் பொதிந்திருக்கும் நிஜங்கள் யாவை?

ஒரு நண்பர் டாக்டர் அன்புராஜின் பதிவுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னார்.

காரணம் கேட்டோம்.

டாக்டர்  அன்புராஜ் என்பவர் அஹ்லுல்பைத் தளத்தின் போக்கை திசை திருப்ப இந்துப் பெயரில் ஒளிந்துக் கொண்டிருக்கும் ஒரு அனாமேதயப் பேர்வழி என்றும் அவரது பின்னூட்டங்கள் அனைத்தும் அந்தந்தப் பதிவுகளுக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாமல் ஒலிப்பதாகவும் கூறி அவற்றுக்கு அவமே நேரத்தை விரயம் செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொண்டார்.(இத்தகைய குற்றச்சாட்டுக்கு நியாயமான பதிலை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் டாக்டர் அன்புராஜ் இருக்கிறார் என்பதை அன்புராஜ் அன்புடன் புரிந்துக் கொள்வார் என்று நம்புகிறோம்.)

இனி,

எனது பெரிய தந்தை அன்னை கதீஜா (அலை) அவர்களைப் பற்றி சொன்ன செய்திகள் எனக்குப் புதிதாக இருந்தன.

அத்தகைய செய்திகளுக்கு ஏதாவது ஆதாரம் அவரிடம் இருக்கிறதா என்று கேட்டேன்.

Wednesday, February 1, 2012

அஹ்லுல்பைத் அபிமானிகளின் ஆய்வுக்கு ஒரு பதிவு....?



சில தினங்களுக்கு முன்னர் கடுமையாக மழை பொழியும் நாள் ஒன்றில் என்னுடைய பெரிய தந்தை ஒருவரை வைத்தியசாலையில் சந்தித்தேன்.

வைத்திய சாலையில் சிகிச்சைக்காக நிறுத்தியிருந்த என்னுடைய சிறிய தந்தையை என்னைப் போலவே அவரும் நலம் விசாரிக்க வந்திருந்தார்.

என்னுடைய பெரிய தந்தை கொஞ்சம் வித்தியாசமானவர்.

வித்தியாசமான கருத்துக்களை சொல்பவர்.

அதனாலோ என்னவோ சில உலமாக்களுக்கு அவரைக் கண்டால் பிடிக்காது.

அந்த சில உலமாக்களின் அல் குர்ஆன் உச்சரிப்புக்களில் உள்ள குறைகளை எனது பெரிய தந்தை சட்டென்று அடையாளம் சொல்லுவார்.

பெரிய தந்தையின் அல் குர் ஆன் ஓதலில் அழகான இராகம் இருக்கும்.

வாயை அசைத்து அசைத்து தொண்டையினாலும்,  உதட்டின் ஓரத்தினாலும்,  நடு நாவினாலும் இராகம் இசைத்து , இசைத்து அவர் ஓதும் அழகே அலாதியானது.

அஹ்ளுல்பைத்களைப் பற்றிய எனது தேடலுக்கு காரணமான சிலரில் எனது பெரிய தந்தையும் ஒருவர்.

அவர் அவ்லியாக்களில் அதிக நேசம் கொண்டவர்.

எங்காவது  ஓரிடத்தில் யாராவது அவ்லியாவின் அடக்கஸ்த்தளம் இருப்பதை அறிந்துக் கொண்டால் இவர் நிச்சயம் அந்த இடத்தை தரிசிப்பார். 

அதே நேரம் அவ்லியாக்களிடம்  உதவி நாடி அவர்களிடம் பிரார்த்திக்கும்  செய்கைக்கு கடும் விரோதமானவர்.

அத்தகைய செயல்பாடுகளை இறைவனுக்கு இணை வைக்கும் ஷிர்க்கான     செய்கை என்று பெரிய தந்தை சொல்லுவார்.

அதனால், அவ்லியாக்களில் நேசம் கொண்டு அவர்களிடம் உதவி தேடுவதில் ஒரு தவறும் இல்லை என்று வாதிடும் ஹுப்புல் அவ்லியா உலமாக்களுக்கும் அவரைப் பிடிக்காது.

ஆச்சரியமாக தவ்ஹீத் ஜமாத்தினர் சொல்லும் அதேவிதமான ஏகத்துவ  கருத்துக்களை கொஞ்சமும் வித்தியாசப் படாமல் எனது பெரிய தந்தையும் சொல்லுவார்.

அதனால் அவர் தவ்ஹீத் ஜமாத்தினரின் ஆதரவாளரா என்றால்...ஊஹும் .....அதுதான் இல்லை.

தவ்ஹீத் ஜமாத்தினர் அஹ்ளுல்பைத்களுக்கு உரிய கௌரவத்தைக் கொடுப்பது இல்லை என்ற கருத்தில் எனது பெரிய தந்தை இருந்ததால் அவர் தவ்ஹீத் ஜமாத்துக்கும் எதிரானவர்.

அதே போல தப்லீக் ஜமாத்தினரின் மறுமையை மட்டும் கருத்தில் கொண்டு இம்மையை அலட்சியப் படுத்தும் ஆன்மீகத்துக்கும் இவர் எதிரானவர்.

அவரிடம் ஒரு நாள் நான் கேட்டேன்."பெரியப்பா........நீங்கள் யார்?"

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad