Monday, April 30, 2012

தம்புள்ளை மஸ்ஜித் விவகாரம்........ஆண்டிகள் அவித்த பாயாசம்....!!!!!



ஒரு ஊரிலே ஏழு ஆண்டிகள் பிச்சை எடுத்து தமது வாழ்க்கையை ஓட்டிக்  கொண்டிருந்தார்கள்.

அந்த ஏழு ஆண்டிகளும் இரவிலே ஒற்றுமையாக ஊர் சத்திரத்தில் ஒன்றாக இரவைக் களிப்பார்கள்.

படுக்கைக்கு போகு முன் தமது தொழிலை விருத்தி செய்யும் முறை பற்றி விலாவாரியாக விவாதிப்பார்கள்.

பின்னர், நிம்மதியாக தூங்குவார்கள்.

காலையில் தமது திட்டங்களை எல்லாம் மறந்து எழுந்து தொழிலுக்கு செல்வது போல பிச்சை எடுக்க அனைவரும் வெளியே பிரிந்து செல்வார்கள்.

இரவாகியவுடன் தாம் அன்று சம்பாதித்த பிச்சையுடன் சத்திரத்துக்கு திரும்புவார்கள்.

மீண்டும் விவாதிப்பார்கள் 

நிம்மதியாக படுத்து உறங்குவார்கள்.

அடுத்த நாள் தாம்  தீர்மானித்த திட்டங்களை அம்போ என்று மறந்து எழுந்து பிச்சை எடுக்கும் தொழிலுக்கு போவார்கள்.

இப்படியே நாள்கள் ஓடின.

ஒரு நாள் இரவு அந்த ஆண்டிகளில் ஒருவன் பாயாசம் சமைப்போம் என்று புதியதொரு திட்டத்தை முன் வைத்தான்.

Wednesday, April 25, 2012

செவிடன் காதில் ஊதிய சங்கு போல...........குருடர்களுக்கு வழிக் காட்டும் குருடர்கள்............



ஒரு கிராமத்தில் சில அப்பாவி மக்கள் ஒரு இளம் தலைவரை கண் மூடித்தனமாக நம்பி பின்பற்றிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு நாள் அந்த இளம் தலைவர் அந்த ஊர் மக்களை இன்னுமொரு ஊருக்கு வழி நடாத்தி அழைத்துச் சென்றார்.

தலைவர் முன்னால் கம்பீரமாக நடந்து சென்றார்.

அப்பாவி ஊர் மக்கள் இளம் தலைவரை பின் துயர்ந்தார்கள்.

அவர்களது நிம்மதியான பயணத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

திடீரென அவர்களது பயண வழியில் ஒரு அடர்ந்த ஒரு காடு குறுக்கிட்டது.

அடர்ந்த அந்தக் காட்டைக் கடந்து அடுத்த ஊருக்கு போகவேண்டிய நிலையில் அந்த இளம் தலைவரும் அவரைப் பின் பற்றும் அப்பாவி ஜனங்களும் இருந்தார்கள்.

திடீரென, அந்தக் காட்டினுள்ளிருந்து ஒரு விறகு வெட்டி அந்தக் கூட்டத்தாரின் முன்னால் வந்தான்.

காட்டினுள் நுழைய முயலும் கூட்டத்தாரைக் கண்டதும் அவன் கலவரமுற்றான்.