அஹ்லுல்பைத் Headline Animator

Wednesday, June 20, 2012

சூரிய மண்டல கைதிகள்.........தூக்கம் கெடுக்கும் நிஜங்கள்..........???!!!!



வழக்கம் போல நண்பர் அன்புராஜின் ஒரு பின்னூட்டத்தின் கேள்வி அஹ்லுல்பைத் தளத்தின் இன்னொரு பதிவுக்கு களம் அமைத்தது.

நன்றி அன்புராஜ்.

அவரது கேள்வி இப்படி பதிந்தது.

It has become urgent to prove that the parents of Mr.Mohammed are pious.

I wonder why that question has assumed so much importance.

May be it is a internal matter of Islamic society.

Noble and otherwise parents begets good /evil sons and daughter.

History is full of evidance for th

"....................கௌரவமான உயரிய குடும்பத்து பெற்றோருக்கு இழி குணமுள்ள பிள்ளைகள் கிடைக்கிறார்கள்.அதே போல, தாழ்ந்தவர்கள் என்று ஒதுக்கி வைக்கப் படும் பெற்றோருக்கு உயரிய நன் நடத்தையுள்ள குழந்தைகள் கிடைக்கும் பாக்கியம் கிடைக்கிறது.வரலாறு இதற்கு சான்று பகர்கிறது.வரலாற்று நிஜங்கள் இப்படி இருக்க முஹம்மது சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களது பெற்றோர் உத்தமர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லையே......" என்கின்ற  கருத்தை உள் வாங்கிய நிலையில் அவரது பின்னூட்டம் அமைந்து இருந்தது.

நண்பர் அன்புராஜின் பதட்டமான கேள்வி ஒரு முஸ்லிம் இணைவைப்பாளராக ஒரு போதும் மாற மாட்டார் என்பது போலவும் இணைவைப்பாளர் ஒருவரின் குழந்தை அல்லது ஒரு இணை வைப்பாளர் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளும் முஸ்லிமாக மாறுவதற்கு வாய்ப்பில்லை  என்ற கருத்தை சொல்லாமல் சொல்லுவது போலவும் நாம் சொல்லும் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களது அருமைப் பெற்றோர் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காத முஸ்லிம்கள் என்ற கருத்து மயக்கமான இன்னுமொரு கருத்தை உள் வாங்கி
இருப்பது போல நமக்கு ஒரு பிரமையை ஏற்படுத்தியது.


உண்மைதான்.

நபி நூஹ் (அலை) அவர்களின் மகன் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளாமல்  இறை நிராகரிப்பாளராகவே இறுதி வரை இருந்து அப்பொழுது ஏற்பட்ட பயங்கரமான நீர்ப் பிரளயத்தில் மூழ்கி ஜல சமாதி கொண்டதாக அல் குர்ஆன் சாட்சி பகர்கிறது.

நபி லூத் (அலை) அவர்களின் மனைவியும் இறை நிராகரிப்பாளராகவே  இறுதிவரை இருந்ததாகவும் அல் குர்ஆன் சாட்சி சொல்கிறது.

அது மட்டுமன்றி, நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களது பெரிய தந்தை அபூ லஹப் இறைவனை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அது சொல்கிறது.

ஆதலால் குடும்ப பாராம்பரியம் ஒரு மனிதனை அவன் சார்ந்த நம்பிக்கை அல்லது கொள்கை அல்லது மதத்தின் பால் ஈர்க்கப் போவதில்லை என்பது தெளிவு.

ஆகவே நண்பர் அன்புராஜின் கேள்வி நியாயமானது.ஆழமானது.

அவரது அபாரமான கேள்விக்கு நமது பாராட்டுக்கள்.

அர்த்தமுள்ள  இந்தக் கேள்விக்கு அஹ்லுல்பைத் தளத்தின் பதில் என்ன?

Tuesday, June 12, 2012

அனுராதபுர சியாரம்......தம்புள்ளை மஸ்ஜித் ...... தெஹிவளை மஸ்ஜித்.......நிபந்தனையற்ற நமது சரணாகதிக்கு என்ன காரணம் ......?







( 25 /9 / 2011 ஆம் திகதிய நமது பதிவொன்று ஆச்சரியமாக இலங்கையின் நிகழ் கால அரசியல் நிலவரத்துடன் உடன் படுவதால் அதனை மீளப் பதிவு செய்கிறோம்.)


காலையில் மனைவி சொன்னாள் "தெருக் கோடியில் இருந்த மாடி வீட்டு மனிதனை இரவில் இனந்தெரியாத யாரோ வந்து கண்ணைக் கட்டி அழைத்து சென்றார்களாம்...."

'ஓஹ் ..அந்த கம்யூனிசவாதியா?....' நான் நினைத்தேன். 'இறைவனே இல்லை என்று சொன்ன அவனுக்கு அது வேண்டும்!'

அந்தக் கடத்தல் என்னைப் பாதிக்காததால் நான் மெளனமாக இருந்தேன்.

ஒரு வாரத்தில் காலையில் மனைவி மீண்டும் சொன்னாள்."இம்முறை மூன்று வீடுகள் தங்கியிருந்த எதிர்க் கட்சி அரசியல் வாதியை இரவில் வந்த இனந்தெரியாத நபர்கள் கடத்திச் சென்றார்களாம் ..."

'ஓஹ்..அந்த எதிர்க் கட்சி அரசியல்வாதியா.......' நான் நினைத்தேன்.'தேவை இல்லாமல் ஆளும் கட்சியை எதிர்க்கும் அவனுக்கும் அது வேண்டும்.'

அந்தக் கடத்தலும் என்னைப் பாதிக்காத காரணத்தால் நான் மௌனித்து ஒதுங்கிப் போனேன்.

சில நாள்களுக்கு பின்னர் ஒரு நாள் காலையில்   மனைவி சொன்னாள்"எங்களது எதிர் வீட்டில் குடியிருக்கும் எப்பொழுதும் பொதுநலத்தையே பேசுகின்ற மனிதரை நேற்றிரவு வந்த சிலர் கடத்திப் போனார்களாம்..."

"ஓஹ்... அந்தப் பொதுநலவாதியையா' நான் நினைத்தேன்.'அவருக்கு அது வேண்டும்.எப்பொழுதும் தேவை   இல்லாமல் மற்றவர்களின் விடயத்தில் தலையிட்டுக் கொண்டே இருந்ததற்கு இது வேண்டும்'

மற்றவர்களின் விடயத்தில் தலையிடாத நான் பேசாமல் இருந்தேன்.

சூழ் நிலைகள் இவ்வாறு மோசமாக இருந்தாலும் எங்கள் வீட்டில் நாம் நிம்மதியுடன் இருந்தோம்.

ஒரு நாள் நடு நிசி.

என் வீட்டு கதவு தட்டப் பட்டது.

கதவைத் திறந்தால்..........

Thursday, June 7, 2012

சொல்லப் படாத உண்மைகள் ............சொல்லப் பட்ட விதம்....??????.

அண்ணல் நபியின் அருமைப் பெற்றோர் அப்துல்லாஹ் ஆமினா - சொல்லப் படாத உண்மைகள் ............சொல்லப் பட்ட விதம்....??????.


அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே...!அல்ஹம்து லில்லாஹ்.

நண்பர் அன்புராஜை நன்றியுடன் நினைத்துப் பார்க்கும் நேரம் இது.

நண்பர் அரபுத் தமிழன் அலட்சியமாக கீறி அனுப்பிய ஒரு பின்னூட்டத்தின் இன்னொரு  வெற்றிப் பதிவு இது.

நண்பர் அன்புராஜ் சுட்டிக் காட்டிய இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்களை தாங்கி நின்ற இணையப் பதிவுகளின் கோரத் தாண்டவத்தைக் கண்டு அஹ்லுல்பைத் ஆதரவாள நண்பர்களான முனவ்வர், ஹசன், மௌலவி ஜிப்ரி , ரிஸ்வான் ஆகியோரது பதை பதைத்த பறி தவிப்புகளின் வெளிப் பாடு  நமது ஏனைய நண்பர்களைத் தொற்றிக் கொள்ள மெது மெதுவாக ரூமி, இம்ராஸ்,ரியாஸ், Faique, நவுசர், ரிஸ்வி, மஹ்தி,ஹைதர் அலி, ஹுசைன் பாரூக் , தினேஷ் , டைடஸ் ஆகியோரை ஒரு நேர் கோட்டில் கொண்டு வந்து நிறுத்தியது.

பல்வேறு தளங்களில் முக்கியப் பொறுப்புக்களில் இருந்த இந்த நண்பர்களின் அதிசயமான ஒன்றிணைப்பில் ஆச்சரியப் பட்டு மகிழ்வு கொண்ட மௌலவி யஹ்யாவும், மௌலவி மபாஹிமும், இவர்களுடன் இணைந்துக் கொள்ள விடயம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

"அண்ணல்  நபியின் அருமைப் பெற்றோர் அப்துல்லாஹ் ஆமினா நரகவாதிகளா?" நூல்  மெலிதாக நூலுருப் பெறத் துவங்கியது.

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad