Sunday, July 29, 2012

அல் குர்ஆன் அனுமதிக்கும் அடிமைப் பெண் விபச்சாரம்.........ஒளிக்கப் பட்ட உண்மைகள்...????






இஸ்லாத்தில் அடிமைப் பெண்கள் சம்பந்தமாக, அவர்களின் உரிமைகள் சம்பந்தமாக மறைந்து இருக்கின்ற உண்மைகளின் பக்கம் நமது கவனத்தை கொண்டு சென்ற பெருமை நண்பர்    அன்புராஜுக்கே சேரும்.


நண்பர் அன்புராஜின் பின்னூட்டமொன்று முஸ்லிம்களைப் பார்த்து இப்படி சவால் விட்டது.


குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள் அடிமைப் பெண்களின் அடிமைத்தன வாழ்க்கை முழுவதும் அவர்களோடு தன்னுடைய மனிதர்களை செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதித்து, இந்தச் செயலை அவர்களுடைய புனித புத்தகத்தில் தொகுத்து வழங்கியிருக்கும் ஒரு மதத்தை நீங்கள் தழுவ விரும்புவீர்களா? , ஒரு உண்மையான இறைவன் பின்வரும் வசனங்களை குர்‍ஆனில் இறக்கியிருப்பாரா? . சூரா 23:5-6 ல் குர்‍ஆன் சொல்லுகிறது: இந்த வசனமானது ஒருவன் தன் மனைவியினிடத்தில் செக்ஸ் வைத்துக் கொள்வது போல தன் அடிமைப் பெண்ணிடமும் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், அதற்கு அடிப்படை திருமணம் அல்ல தனக்கு சொந்தமான அடிமை என்பதாகும். யுத்தத்தில் பிடிக்கப்பட்ட பெண் கைதிகளை அடிமைகளாக்கி அவர்களோடு தன்னுடைய வீரர்களை செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதித்தார். 
உண்மையில் பெண் சிறை கைதிகளுக்கும் அவர்களுடைய ஆண் எஜமான்களுக்கும் இடையில் எந்த சூழ்நிலையிலும் செக்ஸ் உறவு இருக்கக் கூடாது .இந்த பாலியல் பலாத்காரம் அநீதியானது மற்றும் கண்டிக்கத்தக்கது, குர்‍ஆன் ஒழுங்கீனமானதை வெளிப்பாடாக அளித்திருக்கிறது ...............



நாம் வழமைப் போல நாம் தினமும் சந்திக்கின்ற சில உலமாக்களிடம் இந்தக் குற்றச்சாட்டு சம்பந்தமாகவும், அடிமைப் பெண்கள் சம்பந்தமாக அல் குர்ஆன் சொல்லும் ஆயத்துக்கள் சம்பந்தமாகவும் கேள்விக் கணைகளை தொடுத்தோம்.

Saturday, July 28, 2012

அன்புராஜுக்கு பதில் சொல்லிவிட்ட இமாம் அலி........


....

மறுமை நாளின் அவசியம் சம்பந்தமாக அல் குர்ஆன் ஆதாரங்களையும், மனித செயல் விளைவுகளின் எதிர் விளைவுகளையும் முன்நிறுத்தி நாம் சொன்ன பதிலில் நமது நண்பர் அன்புராஜ் திருப்திக் கொள்ளவில்லை என்பதை அவரது பின்னூட்டம் நமக்கு தெளிவு படுத்தியது.

அவர் சொல்லுவது சரி.

அல் குர்ஆன் ஆதாரங்கள் அவருக்கு அவசியம் இல்லை.

அது அல் குர்ஆனை இறைவனின் திரு வேதம் என்று நம்புபவர்களின் பிரச்சினை.

ஒரு இந்து சகோதரருக்கு அல்லது பௌத்த சகோதரருக்கு அல் குர்ஆனின்  ஆதாரங்கள் அவசியம் இல்லை.

இந் நிலையில் அதென்ன மறுமை நாள் என்றொரு நாளின் அவசியம் சம்பந்தமாக நாம் நம்பிக்கை வைக்க மறுக்கும் அல் குர்ஆன் சொல்லும் ஆயத்துக்களை எடுத்து சொல்லி நழுவுகிறீர்கள் .......என்ற தோரணையில் அல்லது அது போன்றதொரு கருத்தை அவரது பின்னூட்டம் முன்வைத்தது.

தர்க்கவியலாக மறுமையின் அவசியத்தை அல்லது அந்த நம்பிக்கையின் அழகான செயல் விளைவுகளை நமது பதிலில் அவர் எதிர்பார்த்திருக்கிறார்.

அவருக்கு என்ன பதில் சொல்லுவது என்ற சிந்தனையில் இமாம் அலியின் ஒரு கதை ஞாபகத்துக்கு வந்தது.

அந்தக் கதை இதுதான்.

இமாம் அலியுடைய காலத்தில் பிரபலமான ஒரு நாத்திகன் வாழ்ந்திருக்கிறான்.

அவன் இறைவனை நம்பவில்லை.

இறைவனை விசுவாசிக்கும் மக்களைக் கண்டால் அவனது வாதத் திறமையால் அவன் அவர்களின் இறை விசுவாசத்தைக் கேள்விக் குறியாககி விடுவான்.

இறைவனை விசுவாசிக்கும் பாமரர்கள் அவனைக் கண்டால் 'நமக்கெதற்கு வீண் வம்பு' என்று ஒளிந்து விடுவார்கள்.


அந்த நாத்திகனுடன் இறைவனின் உள்ளமை குறித்து விவாதம் செய்ய ஒருவரும் முன் வரவில்லை.


ஒரு நாள், அவன் தற்செயலாக இமாம் அலியை பாதையில் சந்தித்தான்.


இமாம் அலியுடைய இறை விசுவாசத்தின் உறுதியைப் பற்றி அவன் அறிந்திருந்தான்.


அவன் இமாம் அலியை வம்புக்கிழுக்கும் நோக்குடன் மனிதன் மரணித்து மண்ணுடன் மண்ணாக உக்கிப் போனதன் பின்னர் மீண்டும் உயிர்க் கொடுத்து நியாயத் தீர்ப்பு நாளில் எழுப்பப் படுவதைப் பற்றியும், அதன் பின்னர் அவனது செயல்களை விசாரித்து அந்த மனிதனை நரகத்துக்கு அல்லது சுவர்க்கத்துக்கு அனுப்பப் படுவது எவ் விதத்திலும் சாத்தியம் இல்லை என்று நமது அலி ஷீனா வைப் போல அல்லது அலி ஷீனாவை நம்பும் நமது நண்பர் அன்புராஜைப் போல நியாயங்கள் சொல்லத் தொடங்கினான்.


இமாம் அலி அமைதியாக அவன் சொல்லும் நியாயங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.


அந்த நாத்திகன் அவன் பக்க நியாயங்களை சொல்லி முடித்ததன் பின்னர் இமாம் அலி அவனுக்கு பதில் சொல்லத் தொடங்கினார்.


அவர் அந்த நாத்திகனிடம்..."நண்பரே! நீங்கள் சொல்லுவதே உண்மை என்று ஒரு வாதத்துக்கு நினைத்துக் கொள்வோம்.


"அதன் படி நாம் இருவரும் மரணித்ததன் பின்னர் உக்கி மண்ணுடன் மண்ணாக கலந்து போனதன் பின்னர் நாம் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப் படாது போனால் இறைவனை விசுவாசித்து அவன் சொல்லிய பிரகாரம் வாழ்ந்து  மரணித்துப் போன எனக்கு ஒரு நட்டமும் இல்லை.அதே போல இறைவனை விசுவாசிக்காது மனம் போன போக்கில் வாழ்ந்து மரணித்துப் போன உங்களுக்கும் ஒரு நட்டமும் இல்லை.


"ஆனால்,தப்பித் தவறி நாம் நம்புவது போல மறுமை நாள் என்றொரு நாள் இருந்து நாம் இருவரும் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப் பட்டு  நமது செயல்களுக்கு நியாயம் சொல்லவேண்டிய சூழல் உருவாகினால் நான் தப்பி விடுவேன்.நீங்கள் இறைவனிடம் மாட்டிக் கொள்வீர்கள்.


"நம் இருவரின் நம்பிக்கைகளிலும் எது சிறந்தது என்று இப்பொழுதாவது புரிந்ததா?" என்றார்.


நாத்திகன் மௌனித்துப் போனான்.

மறுமை நாளின் அவசியம்........

மறுமை நாளின் அவசியம்



மனம் பேதலித்த அலி ஷீனாவின் நொண்டிச் சாட்டுக்கான பதில் பதிவு.....!

யாரோ சொன்னதாக யாரோ சொன்னார்கள்...........


"தப்பு என்பது தவறுதலாக செய்வது.........தவறு என்பது தெரிந்து செய்வது........"


அலி ஷீனாவின் கருத்துகளால் கவரப் பட்டு தனக்குத் தாமே தாம் செய்யும் தவறுகளுக்கு தவறான நியாயம் கற்பித்துக் கொண்டிருப்பவர்களிடம் நமது கேள்வி......


"நாம் தப்பு செய்கிறோமா?.....தவறு செய்கிறோமா?"

நாத்திகனாக இருந்து ஆத்திகனான ஒரு கவிஞனின் அறிவுப் புலம்பல் இறைவனின் மகிமையை, அவனது எல்லையில்லா ஆற்றலைப் புரிந்த நிலையில் யாத்த ஒரு கவி வரி மிக அற்புதமாக இப்படி இந் நிமிடமும் ஒலித்துக்  கொண்டிருக்கிறது..........






"பூஜ்ஜியத்துக்குள்ளே -ஒரு 
இராச்சியத்தை ஆண்டுகொண்டு 
புரியாமலே இருப்பான் ஒருவன்........
அவனைப் புரிந்துக் கொண்டால் 
அவன்தான் இறைவன்...."

இறைவனின் உள்ளமையிலும் இருப்பிலும் நமக்கு எதுவித சந்தேகமும் இல்லை.

நண்பர் அன்புராஜின் நிலையும் நமது நிலையும் இறைவனின் இருப்பிலும் உள்ளமையிலும் ஒன்றுதான்.

எனினும்,  அலி  ஷீனாவின் மனம் பேதலித்த உளறலினால் மறுமை நாள் என்றொரு நாள் இருப்பது சாத்தியமா என்று புள்ளியாக அன்புராஜின் உள்ளத்தில்  ஒரு தடுமாற்றம்.


இனி,மறுமை நாள் என்றொரு நாள் சாத்தியம் என்ற நமது விடயத்துக்கு வருவோம்.