அஹ்லுல்பைத் Headline Animator

Wednesday, August 22, 2012

மூமின்களால் தூக்கி எறியப்பட்ட - பனூ உமையாக்களின் -இலங்கை- வதிவிடப் பிரதிநிதி..........அடையாளம் காணுங்கள்........

                                 மூமின்களின் ஜென்ம விரோதி அபூ சுபியான்.........

நமது எழுத்தாள நண்பர் ஒருவர் ஒருமுறை நம்மிடம் இப்படி கேட்டார்.

"கெட்டவனுக்கும் கேவலமானவனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?"

"என்ன?" என்று நாம் திருப்பிக் கேட்டோம்.

"ஒருவன் குடித்துவிட்டு வந்து அவனது மனைவி மக்களுக்கு தொல்லைக் கொடுக்கிறான்." என்ற அவர் தொடர்ந்து "அவனால் அண்டை அயலவர்களுக்கு எதுவித தொல்லையும் இல்லை.அப்படி இருக்கின்றவன் கெட்டவன்"

நாம் கேட்டோம் "அப்படியென்றால் கேவலமானவன் என்றால்................"

"ஒருவன் குடித்து விட்டு வந்து தனது வீட்டாருக்கு எதுவித தொல்லையும் கொடுக்காமல் தனது அண்டை அயலாருக்கு தொல்லைக் கொடுக்கிறானே அப்படிப் பட்டவன் கேவலமானவன்" என்றவர் தொடர்ந்து "கெட்டவனால் மற்றவர்களுக்குத் தொல்லை இல்லை.கேவலமானவனால் எல்லோருக்கும் தொல்லை" என்றார்.

கெட்டவன்..........கேவலமானவன் சம்பந்தமாக குடிகாரனை முன்னிறுத்தி அவர் சொன்ன உதாரணத்தை விஞ்சும் விதமாக வித்தியாசமான அனுபவமொன்றை அண்மையில்  சந்தித்தேன்.

அதனை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

கெட்டவனுக்கும் கேவலமானவனுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் உங்களுக்கும் புரிந்துப் போகும்.

இவ்வருட நோன்பு மாதத்தில் சில தினங்களுக்கு முன்னர் நடு நிசி பன்னிரெண்டு மணி.........

வீடு மெலிதான இரவு விளக்கு ஒளியில் அமைதியில் நிசப்தித்து இருக்க...............

வீட்டில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் சஹர் நேர விழிப்பைக் கருத்தில் கொண்டு தம்மை மறந்து ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருக்க.............

அமைதியைக் கிழித்துக் கொண்டு என்னுடைய கையடக்க செல் போன் அலறி  எனது மனைவியை பதறிக் கொண்டு விழிக்க வைத்திருக்கிறது.

தட்டுத் தடுமாறி அவர் செல் போனை எடுத்து "ஹலோ" சொல்ல.............

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad