அஹ்லுல்பைத் Headline Animator

Saturday, December 29, 2012

இலங்கை முஸ்லிம்களின் தன்னிருப்புக்கு அச்சுறுத்தலாக முஸ்லிம் தலைமை தீர்மானித்த தீர்மானங்கள்..........




இந்த இணைப்பில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஹலால் பிரிவினருக்கு ........ஹலால் அனுமதிக்கு எதிராக தமது அமைப்பு செயல் படுவதற்கான காரணத்தை சொல்லும் பௌத்த பிக்கு............இதனை பார்த்து விட்டு நமது பதிவைப் பாருங்கள்...........நாம் சொல்லும் விடயம் என்னதென்று புரிந்துப் போகும்.

ஜம்மியத்துல் உலமாவின் ஹலால் சான்றிதழ்  அங்கீகாரப் பகுதியினரின் செயல் விளைவுகள்   சொல்லும் முன்னறிவிப்பு அபாயகரமானது.

எப்படி என்கிறீர்களா?

முதலில் இந்தக் கதையைக் கவனியுங்கள்.

நகரத்துப்  பணக்காரன் ஒருவன் கிராமத்தில் தனது நண்பனைக் காண வந்தான்.

கிராமத்தில், அவனது நண்பனுடன் ஒரு ஆடு மூன்று கால்களுடன் தத்தி....தத்தி வந்துக் கொண்டிருந்தது.

நண்பன் டி .வி. ப்ரிட்ஜ்,கம்பியூட்டர்  எதுவுமின்றி ஒரு பரப்பு நிலத்தில் சில தென்னைகளுடன் திருப்தி கொண்டிருந்தான்.

இவை எதுவும் நகரத்தானைக் கவரவில்லை.

அவனை சங்கடப் படுத்தியது கிராமத்தானுடன் இருந்த காலிழந்த ஆடு.

Thursday, December 27, 2012

முஸ்லிம் சமூகம் மீதான நேட்டோ உலகின் மனோவியல் யுத்த நகர்வுகள்................கண் கெட்ட பிறகுதான் சூரிய நமஸ்காரமா...?????????


(ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூறாம் வருடம் என்னுடைய நண்பன் ஸைபுல் இஸ்லாம் தான் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும் அவளைத் திருமணம் செய்யப் போவதாகவும் என்னிடம் சொன்னான்.)

தொன்னூறுகளில் ஈராக்கின் அதிபர் சதாம் ஹுசைனை அராபியரின் கதாநாயகனாக வடிவமைத்து குவைத் நாட்டை அவரைக் கொண்டு ஆக்கிரமிக்கச் செய்து அதன் மூலம் ஏனைய அராபிய நாடுகளை அச்சுறுத்தும்  நாடகம் நேட்டோ குழுவினரால் வடிவமைக்கப் படுகிறது.

நெறியாளர்களின் இலக்கை கணித்து அளவிடும் அறிவு அந்த அராபிய சிங்கத்துக்கு ??? இருக்கவில்லை.

விளைவு..........

Sunday, December 23, 2012

பார்த்துக் கேட்டதில் பிடித்தது..............

பார்த்துக் கேட்டதில் பிடித்தது..............


அவிசுவாசிகளுக்கான COCA COLA வின் செய்தி.....................................




நேற்றிரவு நமது நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்றிருந்தேன்.

அவரது பருவ வயது மகள் அஹ்ளுல்பைத்களுடன் நெருக்கமான பற்று கொண்டவர்.

என்னைக் கண்டதும் அவர் "அங்கிள்.......இவ்வருட கோகா கோலா கிரிஸ்ட்மஸ் விளம்பரத்தைக் கவனித்தீர்களா?" என்றுக் கேட்டார்.

நான் ஒரு நிமிடம் யோசித்து அந்த விளம்பரத்தை நினைவுக்கு கொண்டுவர முயன்றேன்.

நினைவுக்கு வந்தது.

அதில் புதிதான வித்தியாசங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

"ஆம்....பார்த்தேன்...." என்றேன்.

"அதில் இருக்கும் செய்திகளைக் கவனித்தீர்களா?" என்று அவர் என்னிடம் திருப்பிக் கேட்டார்.

"இல்லை.......அதில் என்ன செய்தி இருக்கிறது?" இது நான்.

Thursday, December 20, 2012

மருமகனின் பேத்தியைத் திருமணம் செய்த மாமனார்.....?????இஸ்லாமிய நாகரீகத்துக்குள் (அ)நாகரீகம் புகுத்திய விஷமிகள் .....??? -


திருப்பதிக்கு  அல்வா கொடுத்து ........கடலுக்கு உப்பு  காட்டிய .....காட்டிக் கொண்டிருக்கும் நமது அறிஞர்கள்...?

குழப்பமாக இருக்கிறதா?

சில தினங்களாக இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் சமூக ஒற்றுமையைக் கருத்திட் கொண்டு பரவலான பிரச்சாரங்கள்.

அத்தகைய பிரச்சாரங்களின் சாராம்சம் இப்படி ஒலித்துக்கொண்டிருந்த கதை நமக்கு எட்டியது.

"அஹ்ளுல்பைத்களை நேசிப்பதாக கூறும் மக்களை நம்பாதீர்கள்.அவர்கள் இஸ்லாத்தில் பிரிவினையை உண்டு பண்ணும் நோக்கத்தில் செயல் படுகின்றார்கள்.

"அவர்கள் இஸ்லாத்தை விட்டும் பிரிந்துப் போன வழிக்கெட்ட பிரிவினர்கள்.

"அவர்கள் இஸ்லாத்தை ஆராய்வது இஸ்லாத்தில் இருக்கும் பிழைகளை தேடி அவற்றைப் பகிரங்கப் படுத்துவதற்கேயன்றி வேறில்லை.

"சஹாபாக்கள்தான் நபிகளாருக்குப் பிறகு நமக்கு இஸ்லாத்தைக் கற்றுத் தந்தவர்கள்.சஹாபாக்கள் எதனை செய்தார்களோ அவை நபிகளாரின் சுன்னாக்களாகும்.

"சஹாபாக்களைப் பின்பற்றித்தான் நாம் நமது கடமைகளை செய்ய வேண்டும்..அஹ்ளுல்பைத்களை நேசிப்பதாக கூறும் மக்கள் சொல்லுவது போல அஹ்ளுல்பைத்கள் எனப் படுவோர் நமது சஹாபாக்களை விடவும் உயர்ந்தவர்கள் அல்ல.

அஹ்ளுல்பைத்களுக்கு எதிரான சஹாபாக்களின் செயல்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் சுன்னாவுக்கு முரணானதல்ல.

'இஜ்திகாத்' செய்து சஹாபாக்கள் எடுத்த முடிவுகளினால் ஏதாவது தீமை இந்த சமூகத்துக்கு ஏற்பட்டிருந்தாலும் அதற்குக் காரணமான சஹாபாக்களுக்கு  அதற்கு ஒரு நன்மை கிடைக்கும்.ஆகவே,சஹாபாக்களின் செயல் விளைவுகள் நன்மையோ தீமையோ அதனைப் பற்றி நாம் ஆய்வுகள் செய்யக் கூடாது..........."

இவ்வாறு.....அல்லது இதனை விடவும் கொஞ்சம் அபத்தமாக இலங்கை வானொலி சத்தமிட்டதாம்.

பிரச்சாரம் செய்த பிரசங்கிகள் அனைவரும் இலங்கையில் மிகவும் பிரபலமான இஸ்லாமிய பிரசங்க பீரங்கிகள்.

பாமர முஸ்லிம்கள் அஹ்ளுல்பைத்களின் மீது வைக்கின்ற நேசத்தின் பின் விளைவுகளின் வெளிப்பாடு   அஹ்ளுல்பைத்களின் மீது கொடுமை புரிந்த எதிரிகள் மீதான அவர்களது கோபத்தை வெளிக் கொணரும் அபாயத்தை இந்த பிரச்சாகரர்கள் நன்கு புரிந்து வைத்திருந்தார்கள்.

அத்தகைய தவறான புரிந்துணர்வுடன் இவர்கள் சமூக ஒற்றுமை சம்பந்தமாக பேசியதனால் அந்தப் பேச்சுகளின் ஒலி  விளைவுகள் சமூகத்தைப் பிளவுப் படுத்தும் பயங்கரத்தை உள் வாங்கி ஒலித்தன.

சமூக ஒற்றுமையின் ஒழிப்புக்காக இந்நிமிடமும் இணையங்களில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

சமூக ஒற்றுமையைப் பிரதி பலிக்கும் நோக்கில் அவர்களது பிரசங்கத்தில் வழக்கம் போல  அபூர்வமான சில கதைகளை 'ஹதீஸ்கள்'என்ற பெயரில்  கட்டவிழ்த்தும்  விட்டார்கள்.

வாழ்த்துக்கள்.

அதில் ஒன்று இமாம் அலி அவர்களின் நான்கு அல்லது ஐந்து வயதுக் குழந்தை அன்னை உம்மு குல்தூம் -ஸலாமுன் அலைஹா- அவர்களை ஹசரத் உமர் (ரலி) யவர்கள்  திருமணம் செய்தார்களாம்.( என்று  சொல்லிவிட்டு....)



அஹ்ளுல்பைத்களின் எதிரியாக ஹசரத் உமர் (ரலி) யவர்கள் இருந்திருந்தால் இமாம் அலி தனது நான்கு அல்லது ஐந்து வயதுக் குழந்தையை ஹசரத் உமர் (ரலி) யவர்களுக்கு திருமணம் செய்விப்பார்களா?(என்று  திருப்பிக் கேட்டார்கள்....)

நாம் அதிர்ந்துப் போனோம்.

இருக்காதா பின்னே?

Thursday, December 6, 2012

'புனைவு நிஜமாகும் வரை'.




ஒருவர் காட்டுப் பகுதியில் ஒரு வீட்டை அமைத்தார். சிலரோடு 
செல்லப் பிராணிகளையும் அவ்வீட்டில் குடியிருக்க வைத்து ஏதோ 
ஒரு நோக்கத்திற்காக தான் மட்டும் தனியாக தூரத்திலிருந்து கொண்டு 
அவ்வீட்டைக் கண்காணிக்கலானார். அவ்வப்போது அறிவுரை மற்றும் 
அறவுரை தாங்கிய கடிதங்களைத் தூதுவர் மூலம் அனுப்பி வைத்தார். 
அவற்றில் சில‌ ஆங்காங்கு எழுதி வைக்கப் பட்டன.

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad