அஹ்லுல்பைத் Headline Animator

Wednesday, February 27, 2013

இலங்கை முஸ்லிம்களின் தொலைந்துப் போன தலைமைத்துவம்..................


நம்மை வழிநடாத்தும் தலைமைத்துவம் எங்கிருக்கிறது........

தெரிந்தால் சொல்லித் தாருங்கள்!


http://youtu.be/-Q23B8gPQpc

Friday, February 22, 2013

சவூதி சிறையில் மரண தண்டனைக்கு காத்திருக்கும் ஹம்ஸா அலி........

சவூதி சிறையில் மரண தண்டனைக்கு காத்திருக்கும் ஹம்ஸா கஸ்கர் அலி........

http://youtu.be/_I2Yhi-UC08

அல் குர் ஆன் ஆதாரத்தை முன்வைத்து இளம் கவிஞன் ஹம்ஸா கஸ்கர் அலிக்கு மரண தண்டனையை பரிந்துரைக்கும் சப்பரை சவூதி முல்லா முப்தி.........

ஹம்ஸா அலியின் தலையை வாளின் வீச்சுக்கு கொண்டு நிறுத்திய  வார்த்தை இதுதான் ..

"அல்லாஹ் மறுமையில் சவூதி அராபியப் பெண்களை நரகத்துக்கு அனுப்பி வேதனை செய்யப் போவதில்லை. ஏனெனில்,ஒருவரை இரண்டுமுறை அல்லாஹ் நரகத்தில் தண்டிப்பதில்லை."

Thursday, February 21, 2013

முஸ்லிம் சமூகத்தின் விமோசனத்துக்கு வித்திட்டு தீர்ப்பளிக்கப் பட்ட 'ஹலால்' விவகாரம்...........ACJU புரிந்துக் கொள்ளத் தவறிய உண்மைகள்.........?


இன்றைய தமிழ் Mirror அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஹலால் தரச் சான்றிதழ் சம்பந்தமான  முடிவை இவ்வாறு வெளியிட்டிருந்தது......

//.....பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவுடனான சந்திப்பினை அடுத்து ஹலால் சான்றிதழ் பொறிக்கப் பட்ட பொருட்களை முஸ்லிம்களுக்கு மாத்திரமே வழங்குவது என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தீர்மானித்துள்ளது.//

jaffna muslim இணையம் அதனை இப்படி சொல்லியது.

// ........இங்கு உலமா சபையின் செயலாளர் எம்.எம்.ஏ .முபாரக் கருத்து வெளியிடுகையில் 

//....இதற்கமைய அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தனது ஹலால் சான்றிதழை பெறும்  வர்த்தக நிறுவனங்கள் தமது ஹலால் உற்பத்திப் பொருட்களை முஸ்லிம்களுக்கு மாத்திரம் வழங்கும் வகையில் ஒரு பொறிமுறையை வகுக்க ஆவண செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்வது என முடிவு செய்யப் பட்டுள்ளது என்றார்.....//

இற்றைக்கு ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஹுதைபியா இணக்கப் பாட்டை முன்வைத்து தனது செயல்களுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டிருந்த ACJU வினர் திடீரென அந்த ஹுதைபியா சொல்லிக் கொடுத்த பாடத்தை மறந்து போன நிலையை இந்த ஊடக செய்திகள் நிரூபிக்கின்றன.

Tuesday, February 19, 2013

பாகிஸ்தானில் என்ன நடக்கிறது....?


தகவல்: அன்புராஜ்.


பெக்ரெயின் நாட்டிலும் ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் கலவரம் ஆரம்பித்து விட்டது.

பாக்கிஸ்தானில் நிலைமையைப் படிப்போமே!http://youtu.be/UxprkrL7RCw
http://youtu.be/fPRpgakV2CA
பாகிஸ்தானின் குவெட்டா நகரை ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் வரை, குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய மாட்டோம் என்று, ஷியா பிரிவு முஸ்லிம்கள் மறுத்துள்ளனர்.

Wednesday, February 13, 2013

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மௌனம் காப்பது ஏன்?

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மௌனம் காப்பது ஏன்?


http://youtu.be/JH13_zrZWf8

தவறான தீர்ப்பு கொள்வதற்கு காரணமான உலமாக்கள்.......

இஸ்லாத்தின் பெயரால் சிரியாவில் நடந்துக் கொண்டிருக்கும் கொடூரம்......
சிரியாவில் கொல்லப்பட்டவர்களின் தொகை 70,000 ஆக அதிகரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்பு..........

http://youtu.be/wdNWYTO7hqg
ரிசானாவின் நீதி தொலைத்த நீதி நெறிப்படுத்தியிருக்கும் சவூதி நீதி,........... ரிசானா நபீக்குக்கு  நன்றி!


சவூதி அரேபியாவில் தனது பாதுகாவலில் இருந்த மூன்று மாதக் குழந்தையை நஞ்சூட்டிக்  கொலை செய்தார் என்று குற்றம் சுமத்தப் பட்ட ஒரு இந்தோனேசிய பணிப்பெண் மரண தண்டனையை எதிர் நோக்கி தம்மாம் சிறையில் அடைக்கப் பட்டிருந்தார்.

ஆனால்,நேற்று முன்தினம் தம்மாம் நீதி மன்றம் குழந்தையின் மருத்துவ அறிக்கையைக் கருத்தில் கொண்டு அந்தப் பணிப்பெண் நிரபராதி என்று தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்திருக்கிறது.

Tuesday, February 12, 2013

இஸ்லாத்தின் பெயரால் மாலியில் தொடருகின்ற துயரங்கள்............

இஸ்லாத்தின் பெயரால் மாலியில் தொடருகின்ற துயரங்கள்............


Monday, February 11, 2013

பயங்கரவாதத்தால் பாதிக்கப் பட்டவர்கள் சொல்லட்டும்!!!!

பயங்கரவாதி யார்?............அமெரிக்க CIA ..........ஆப்கானிஸ்தானின் தலிபான்??      


பெஷாவாரில் அமெரிக்க ஆளில்லாத உளவூர்தி உளவு விமானம் சுட்டுத் தள்ளிய பொது மக்கள்?http://youtu.be/E2e0YjNxdkM

Saturday, February 9, 2013

இஸ்லாத்தின் எதிரிகளின் இலக்கில் இஸ்லாமிய ஷரியா சட்டம்........ஏன்?...எதற்கு?...எப்படி?.


இஸ்லாத்தின் எதிரிகளின் இலக்கில் இஸ்லாமிய ஷரியா சட்டம்........ஏன்?...எதற்கு?...எப்படி?

ஆக்கம்: ஜே .எஸ்.அப்துல் ரசாக்

செய்தி ஒன்று: திகதி-------09ஆம் திகதி புதன்கிழமை  ஜனவரி 2013.

தனது பாதுகாப்பில் இருந்த குழந்தைக்கு பால் பருக்கும் பொழுது புரையேறி மரணித்த குழந்தையின் மரணம் கொலை எனத் தீர்மானிக்கப் பட்டு சவூதி அரேபியாவில் இஸ்லாமிய ஷரியா சட்டப் பிரகாரம் மரண தண்டனை விதிக்கப் பட்டு இலங்கை மூதூரைச் சேர்ந்த பதினேழு வயது நிரம்பிய ரிசானா நபீக் சிரச்சேதம் செய்து கொலை செய்யப் பட்டார்.

இஸ்லாமிய ஷரியா சட்டப் பிரகாரம் இத் தண்டனை  சரியென்று ஒரு குழுவினரும் இல்லை என்று இன்னொரு குழுவினரும் வாதிடுகிறார்கள்.

இதில் எது சரி?

செய்தி இரண்டு:02 ஆம் திகதி சனிக்கிழமை பெப்ரவரி 2013.

தனது ஐந்து வயதுக் குழந்தையை பாலியல் வல்லுறவுக்குற்படுத்தி  சித்திரவதை செய்துக் கொலை செய்த தந்தைக்கு குழந்தையின் தாய்க்கு 'குருதிப் பணம் 'செலுத்துமாறு பணித்து சவூதி அரசு விடுதலை செய்திருக்கிறது.

இஸ்லாமிய ஷரியா சட்டப் பிரகாரம் சவூதி அரசு செய்த இச் செயல் சரியானது என்று ஒரு சாராரும் ...இல்லை......இல்லை.....இது தவறான தீர்ப்பு என்று ஒரு சாராரும் வாதிடுகிறார்கள்.

இதில் எது சரி?

இந்த இரண்டு குற்றங்களுக்கு விதித்த வித்தியாசமானத் தீர்ப்பில் இஸ்லாமிய ஷரியா நீதியை கேள்விக்குரிய  நிலையில் நடுச் சந்தியில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் துரோகத்தை சவூதியின் நீதிமன்றங்கள்  தீர்ப்பளித்த தீர்ப்புக்கள் செய்திருக்கின்றன.

சவூதி அரசின் அநீதமான நீதிக்கு ஆதரவாக  நியாயம் கற்பித்துக் கொண்டிருக்கின்ற இஸ்லாமிய அறிஞர்களின் செயல்களினால் இஸ்லாமிய ஷரியா இன்னும் களங்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது.

அவ்வாறான தவறான கருத்தியலைப் போதித்துக் கொண்டிருக்கின்ற அறிஞர்களின் கருத்துக்களால் கவரப் பட்ட புத்தி ஜீவிகளின் உயரிய ஆய்வுக்காக இந்தப் பதிவு பதிவேற்றம் செய்யப் படுகின்றது என்பதை தயை கூர்ந்து கருத்திற்கொள்ளவும் 

Thursday, February 7, 2013

என் கேள்விக்கு என்ன பதில்?.........கேட்பது நண்பர் முஹம்மத் அலி.........


அன்பு நண்பர் முஹம்மத் அலியின் கேள்வியொன்று இப்படி ஒலித்தது...........

Salaam Alaikum Brother,
I think your wrote this Article in " Vancha Pugazhchi Ani". I am not understand what you mean by இந்த இணைப்பில் ஈரானின் PRESS TV சவூதி அரசாங்கத்தின் மாற்றத்தின் நிஜமான பரிமாணத்தைப் புரிந்துக் கொள்ளாமல் அல்லது புரிந்துக் கொள்ளும் மன நிலையில் இல்லாமல் தவிப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. What is the changes happened in Saudi and Bahrain????????


சவூதி அராபியாவில் இஸ்லாமிய ஆட்சி முறையோ அல்லது இஸ்லாமிய ஷரியா சட்ட அமைப்போ கிஞ்சித்தும் இல்லை.

அதில் எமக்கு அணுவளவேனும் சந்தேகம் இல்லை.

இஸ்லாமிய வாழ்க்கை செயல் முறையை உலகுக்கு அறிமுகப் படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு ஐரோப்பிய முஸ்லிம்களுக்கும்,தமிழ் மொழி பேசுகின்ற முஸ்லிம்களுக்கும்,பாகிஸ்தானின் பஞ்சாபிய முஸ்லிம்களுக்கும் கடமையான தார்மீகப் பொறுப்பாக நாம் கருதுகிறோம்.

ஏனெனில்..........

Wednesday, February 6, 2013

நம்பிக்கைக் கீற்று........மாற்றத்தின் ஒலி .......இளவரசர் வலீத் இப்னு தலால் !


நம்பிக்கைக் கீற்று........மாற்றத்தின் ஒலி .......இளவரசர் வலீத் இப்னு தலால் !

கொஞ்சம் பொறுமையாக பின்வரும் இணைப்புக்களைக்  கவனியுங்கள்......அதன் பின்னர் மேலே உள்ள தலைப்பின் முழு வடிவம் உங்களுக்குப் புரிந்துப் போகும்.


http://youtu.be/LhkD9oSiQ2w


http://youtu.be/6LxRAweU7Fs

Sunday, February 3, 2013

படம் பார்க்காதவர்கள் படம் பார்த்து படம் பார்ப்பவர்களுக்கு பார்க்கக் கூடாத படம் என்று சொன்ன படம் .......விஸ்வரூபம்......விஸ்வரூபம் வெளி வருவதற்கு முன்னரேயே விஸ்வரூபம் எடுத்த பிரச்சினை முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் படம் விஸ்வரூபம் என்பதாகும்.

நாமறிந்த நமது ஊடகவியல் நண்பர்கள் சிலருக்கு விஸ்வரூபம் படத்தைப் போட்டுக் காண்பித்தார்கள் இலங்கை தணிக்கை சபையினர்.

அந்த நண்பர்களில் அநேகர் சினிமா தியேட்டருக்குச் சென்று சினிமா பார்க்காதவர்கள்.

இன்னும் சிலர் சினிமா கூடாது என்ற கருத்தில் இருப்பவர்கள்.

ஆக்ரோசமாக விஸ்வரூபம் எடுத்து விஸ்வரூபத்தை எதிர்க்கும் வஹ்ஹாபிய நிதியியல் பொறியில் சிக்கி தமது எஜமானர்களின் திருப்திக்கு ஜால்ரா அடிக்கும் திரு பி.ஜெய்னுலாப்தீன் அண்ணனின் தம்பிமாரோ இசையைக் கேட்பதுகூட 'ஹராம்' தவறு என்று வாதிடுபவர்கள்.

அவர்களின் இத்தகையப் போக்கு சாராய கடையில் சாராயம் குடிக்கும் ஒருவன் 'சுவையூட்டிக்கு' வைக்கப் பட்ட பன்றி இறைச்சியை 'ஹராம்'என்று சொன்னவனின் நிலையில் இருக்கின்றது என்று நண்பர் ரூமி சொல்வது நமக்குக் கேட்கிறது..

விஸ்வரூபம் திரைப் படத்தை இலவசமாக இலவச கேக் கூல் ட்ரிங்க்ஸ் களுடன் ரசித்துப் பார்த்த இவர்கள் இஸ்லாமிய முறைப்படி நமக்கு நாம் அந்தப் படத்தைப் பார்க்கக் கூடாது என்று தடை விதிக்கும் தகுதியை இழந்து நிற்கின்றார்கள்.

Friday, February 1, 2013

துபாயின் இரட்டை முகங்கள்...................................


நம்ரூதிய அடிமை சேவகம் இன்னும் தொடர்கின்றது..........அதற்கு சான்றுப் பகர்கின்ற இந்தப் பதிவுகள்  ஒரு சாட்சி மத்திய கிழக்கின் வசந்த பூமி என்று வர்ணிக்கப் படுகின்ற துபாயில் வேலை செய்கின்ற பணிப்பெண்கள் தங்களது எஜமானர்களின் சில்மிஷ லீலைகளினால் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள்........(தனது கணவனின் அத்துமீறல்களுக்கு அச்சத்துடன் அனுமதி அளிக்கின்ற எஜமானி அம்மாள் பயங்கரமான பொறாமை உணர்வுடன் வீட்டுப் பணிப்பெண்களுடன் நடந்துக் கொள்கின்றார்களாம்..........சில சமயம் நமது மகள் ரிசானா நபீக்குடன் அவள் வேலை செய்த வீட்டு எஜமானி தனது கணவனின் சில்மிஷ நடவடிக்கைகளினால் ரிசானாவைக் கொலை செய்யும் அளவுக்கு பொறாமை உணர்வுடன் இருந்திருப்பாளோ?........)

மத்திய கிழக்கு சிறைச்சாலைகளில் சிறை வைக்கப் பட்டிருக்கின்ற பெண் கைதிகளுடன் சிறைக் காவலர்கள் தகாத முறையில் நடந்துக் கொள்வார்களாம்.........(நமது மகள் ரிசானாவுக்கு அவ்வாறான கொடுமைகள் எதாவது நடந்திருந்து அவை சம்பந்தமான தகவல்கள் வெளியே கசிந்து விடும் என்கின்ற பயத்தில் அவளை மூடிய சிறைச்சாலையினுள்  அவசர அவசரமாக தலையைக்  கொய்து தமது இரகசியங்களை கசியாமல் பார்த்துக் கொண்டார்களோ?....)

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad