Wednesday, July 31, 2013

அன்னை ஆயிஷா (ரலி) ......மெய் சிலிர்க்கும் சத்தியங்கள்

அத்தியாயம் நான்கு........அன்னை ஆயிஷா (ரலி) ......மெய் சிலிர்க்கும் சத்தியங்கள்

சென்ற பதிவில்.......நான் என்னுடைய நண்பருக்கு இவற்றை விளக்கியவுடன் அவர் மீண்டும் அந்த முஸ்லிம் அறிஞருக்கு செல்பேசி அழைப்பை எடுத்து நான் சொன்ன விடயங்களை அக்குவேறு ஆணிவேராக விளக்கினார்.

அவரது விளக்கங்களைக் கேட்ட அந்த அறிஞர் சொன்ன விடயங்கள் நகைப்புக்கிடமானவை.


அப்படி அவர் என்னதான் சொன்னார்?


"உங்களது நண்பர் சொல்லும் விடயங்கள் அனைத்தும் உண்மையானவை.ஆனால்,அவற்றை நாம் பிரசித்தமாக பேசக் கூடாது.அதனை யாருக்கும் விளக்கமாக சொல்லிக் கொடுக்கவும் கூடாது. மீறி நாம் அப்படி செய்தால்,அது இஸ்லாத்துக்கு இழுக்கை கொண்டுவரும்.ஆகவே,இந்த விடயங்களில் நாம் மௌனம் காப்பதே சிறந்தது."

அந்த அறிஞரின் நிலையும் அவர் சொல்லுவதும் சரியானதா?

இல்லை....தவறானது! மட்டுமல்ல கண்டிக்கத் தக்கதும்கூட .!!

நாம் சர்ச்சைக்குரிய இந்த விடயங்களைத் தெளிவு படுத்தும் செய்கையில் புனித இஸ்லாத்தின் கௌரவமும் அண்ணல் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களது கண்ணியமும் காக்கப் படுகின்ற செயல் விளைவுகளுக்கு களம் அமைக்கப் படுகிறது.

அதற்கு மாற்றமாக இந்தத் தவறான செய்திகளைக் கேட்டு மௌனித்துப் போகும் செய்கையானது இத்தகையத் தவறான செய்திகளுக்கு அங்கீகாரம் அளித்து ஏற்றுக் கொள்ளும் செயல் விளைவுகளுக்கு காரணமாக அமைந்துப் போகிறது.

அதனால் நாம் அறிந்த உண்மைகளை மக்கள் மயப் படுத்துவது அத்தியாவசியமாகிறது.

Tuesday, July 30, 2013

அன்னை ஆயிஷா (ரலி) ...மெய் சிலிர்க்கும் சத்தியங்கள்.......!!!!!!

அத்தியாயம் மூன்று......

அன்னை ஆயிஷா (ரலி) ...மெய் சிலிர்க்கும் சத்தியங்கள்.......!!!!!!



"..........ஒப்பீட்டாய்வுகள் மூலமாக ஹிஷாம் இப்னு உர்வா அறிவித்ததாக கூறப் படுகின்ற  இத்தகைய ஹதீஸ்கள் அனைத்தும் ஆதார பூர்வமானவைகளாக இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பது உறுதியாகின்றது."

நாம் சொன்னதைக்  கேட்டவுடன் நமது நண்பர் தனது செல் பேசியை மீண்டும் எடுத்து அதே இஸ்லாமிய அறிஞரிடம் நாம் சொன்ன செய்திகளை அப்படியே இடைக்கிடை சில கேள்விகளை நம்மிடம் கேட்டு நாம் சொன்ன விடைகளுடன் ஒப்புவித்தார்.

எங்களது கருத்துக்களைக் நமது நண்பர் சொல்லக் கேட்டு அந்த அறிஞர் நமது நண்பரிடம் சொன்ன விடயங்கள் அனைவரையும் நிமிடத்துக்கு வாயடைத்துப் போக செய்யும்.

அப்படி என்னதான் அவர் சொன்னார்?

"இமாம் புஹாரி,இமாம் தபாரி,இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்,  இமாம் ஹஜர் அல் அஸ்கலானி,ஆகிய அனைத்து இமாம்களும் அண்ணல் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்   அவர்களினதும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களினதும் திருமணம் நடைபெற்ற பொழுது அன்னையவர்களின் வயது ஆறு என்றும் அவர்கள் ஒன்பது வயதில் வீடு கூடினார்கள் என்றும் ஒருமித்து அறிவித்திருக்கிறார்கள்."என்று கூறிவிட்டு "உங்களது நண்பர்கள் இந்த அறிஞர்களை விடவும் இந்த விடயத்தில் பேரறிவு பெற்றிருக்கிறார்களா?...என்று திருப்பிக் கேட்கிறார்" 
என்று சொல்லிவிட்டு சிரித்தார்.

இதற்கு எங்களது பதில் என்ன?

நாம் நமது நண்பருக்கு சொன்ன பதில் இதுதான்.


இமாம் தபாரி, இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்,இப்னு ஸாத் ஆகியோரது கிரந்தங்களில் ஹிஷாம் இப்னு உர்வா (ரஹ் ) அறிவித்ததாக பதிவு செய்யப் பட்டிருக்கின்ற ஹதீஸ் பதிவுகள் ஒருமித்த நிலையில் இப்படி பதியப் பட்டிருக்கின்றன.

"அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை அண்ணல் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் திருமணத்திற்கு நிச்சயம் செய்யும் பொழுது அன்னை ஆயிஷா (ரலி) அவர்களது வயது ஆறு. நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்  அவர்கள் அன்னையவர்களுடன் வீடு கூடும் பொழுது அன்னையவர்களின் வயது ஒன்பது."

Friday, July 26, 2013

அன்னை ஆயிஷா (ரலி) ...........மெய் சிலிர்க்கும் சத்தியங்கள்......


அன்னை ஆயிஷா (ரலி) ...........மெய் சிலிர்க்கும் சத்தியங்கள்...... 
அத்தியாயம் - இரண்டு - 


சென்ற பதிவில்.............நான் இதனை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது என்னுடைய நண்பர் ஒருவர் என்னுடைய அலுவலகத்தினுள் 'ஸலாம் 'கூறியபடி நுழைந்தார்.

"என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள்?" என்றுக் கேட்டார்.

நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களினதும் அண்ணல் நபி சல்லல்லாஹு அலை ஹி வஆலிஹி வசல்லம்  அவர்களினதும் திருமணக்  கதைகளில் இருக்கின்ற நம்பகத் தன்மைகளின் நம்பகம் இல்லாத தன்மைகளின் ஆய்வை விளக்கினேன்.

அவர் உடனே தனது செல்போனை எடுத்து கொழும்பில் இருக்கும் ஒரு பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞருக்கு போன் எடுத்து நான் ஆய்வு செய்யும் விடயம் தொடர்பான அவரது கருத்தைக் கேட்டார்.

அந்த மார்க்க அறிஞர் சொன்ன விடயங்கள் கொஞ்சம் வித்தியாசமானது.

"அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை நபி சல்லல்லாஹு அலை ஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் சிறு வயதிலே திருமணம் செய்ததில் ஒரு பெரிய இரகசியம் அடங்கியுள்ளது.ஒரு கணவன் தனது மனைவியுடன் நடந்துக் கொள்ளும் முறைகள் சம்பந்தமான அறிவை நடைமுறை செயல் முறை மூலம் அண்ணலார் அன்னையவர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.அது மட்டுமன்றி,அண்ணலார் சம்பந்தமான அநேக  ஹதீஸ் அறிவிப்புக்களை அன்னையார் நடைமுறை சம்பவங்களின் துணைக் கொண்டே அறிவித்ததற்கு அவர்களின் சிறு வயதுத் திருமணமே காரணம்."

இதனை எனக்கு சொன்ன நண்பர் "இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?" என்று என்னிடம் திருப்பிக் கேட்டார்.

அவருக்கு நான் சொன்ன பதில் இவ்வாறு விரிந்தது.

Thursday, July 25, 2013

"நாம் ஹலாலை அற்ப விலைக்கு விற்றோம்......." ACJU தலைவர் ரிஸ்வி முப்தி........

"நாம் ஹலாலை அற்ப விலைக்கு விற்றோம்......." ACJU தலைவர் ரிஸ்வி முப்தியின் ஒப்புதல் வாக்கு மூலம்......அதனை அவர் சொல்லக் கேட்டுப் பாருங்கள்.



Tuesday, July 23, 2013

அன்னை ஆயிஷா (ரலி) .......?????மெய் சிலிர்க்கும் சத்தியங்கள்.......!!!

அத்தியாயம் ஒன்று......1

அன்னை ஆயிஷா (ரலி) .......?????மெய் சிலிர்க்கும் சத்தியங்கள்.......!!!


என்னுடைய இந்து நண்பர் ஒருவர் ஒரு முறை என்னிடம் இப்படிக் கேட்டார்."நீங்கள் உங்களது ஏழு வயதுக் குழந்தையை ஐம்பத்து மூன்று வயது நபருக்கு திருமணம் செய்துக் கொடுப்பீர்களா?"

இஸ்லாம் மார்க்கம் சம்பந்தமாக ஆழமாக ஆய்வு செய்யும்  நண்பரின் அறிவுத்திறமையை அறிந்திருந்த நான் மௌனமாக இருந்தேன்.

அவர் தொடர்ந்தார் "நீங்கள் அப்படி செய்யப் போவதில்லை என்பது எனக்குத் தெரியும் .........இந்நிலையில் அப்பாவி ஏழு வயது குழந்தை ஆயிஷாவை உங்களது நபி திருமணம் செய்ததை எவ்வாறு அனுமதித்து ஏற்றுக் கொள்கிறீர்கள்?"

அதற்கு நான் அவரிடம்  "உங்களது கேள்விக்கான பதில் இப்பொழுது என்னிடம் இல்லை." என்றேன்.

அவர் முறுவலித்தார்.

எங்களது உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்த எங்களது இன்னுமொரு முஸ்லிம் நண்பர் அவசர அவசரமாக "ஒரு சமூகம் தனது சமூக சட்டமாக கருதி அனுமதித்து இருக்கின்ற ஒரு சட்டத்தை நாம் விமர்சிக்கத் தேவை இல்லை.இந்தியாவில் திருமண வயதெல்லை பதினாறாக இருக்கும் அதே சமயம் இந்தோனேசியாவில் அந்த வயதெல்லை பதினெட்டாக இருக்கிறது.ஒரு நாட்டுக்கு சட்டமாக அனுமதிக்கப் படுகின்ற திருமண வயதெல்லை இன்னுமொரு நாட்டின் சட்ட விரோதமான செயலாக கணிக்கப் படுகிறது. சிறு பெண் குழந்தைகளைத் திருமணம் செய்வதை அராபியக் கலாசாரம் அனுமதித்து ஏற்றுக் கொண்டிருக்கிறது.அதனால்தான்  இப்பொழுதுகூட அநேக அராபிய நாடுகளில் சிறு பெண் குழந்தையைத் திருமணம் செய்கின்ற கலாச்சாரம் வழக்கில் இருக்கிறது.அது அந்நாட்டின் கலாசாரம்.அதனால்தான்  இந்தத் திருமணத்திற்கு அராபிய மக்கள் எவ்விதமான எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை .." என்றார்.

எதையும் கண்மூடித்தனமாக விசுவாசித்து தம்மை தம்மையறியாமல் ஏமாற்றி மற்றவர்களை ஏமாற்ற நினைக்கின்ற  சிலரது இத்தகைய கருத்துக்கள் இக்காலத்துக்கு ஒவ்வாதது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

முஸ்லிம் நண்பரது பதிலைக் கேட்ட என்னுடைய இந்து நண்பர் முகத்திலிருந்த முறுவல் மாறாது "அப்படியென்றால் உங்களது இஸ்லாம் மார்க்கம் அக்காலத்துக்கும் ,அராபிய கலாசாரங்களை அனுமதித்து ஏற்றுக் கொள்ளும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மக்களைக் கொண்டிருக்கும் தேசங்களுக்கு மட்டும் பொருத்தமானது என்று நாம் கருதும் கருத்தில் தவறில்லையே.......?" என்று சொல்லி விட்டு தொடர்ந்து "முஸ்லிம்கள் கூறுவது போல இஸ்லாம் மதம் உலகத்துக்குக்கான பொது மதம் என்ற கூற்று தவறானது என்ற கருத்தை உங்களது பதில் தருகிறது!...இல்லையா?" என்றார்.

நமது நண்பர் மௌனமானார்.

நமது இந்து நண்பர் தொடர்ந்து "சில தினங்களுக்கு முன்னர் உஸ்தாத் மன்சூர் அவர்களின் முக நூலில் நான் ஆயிஷாவின் திருமண விடயம் சம்பந்தமாக அவர் கூறியிருந்த விளக்கத்தை கவனித்தேன்.அதில் அவர் "ஆயிஷாவினதும் முஹம்மது நபியினதும் திருமணம் நடந்தேறும் பொழுது ஆயிஷாவின் வயது ஆறு முஹம்மது நபியின் வயது ஐம்பத்து மூன்று.இந்தத் திருமணக் கதை ஆதாரபூர்வமானது.அதில் எந்த சந்தேகமும் இல்லை." என்று கூறி விட்டு சிரிப்புடன் "அதன் பின்னர் அவர் குறிப்பிடும் கூற்றுக்கள் அவரது ஆதார பூர்வ உறுதிப்பாட்டை தகர்த்து விடுகிறது."என்றார்.

நண்பர் குறிப்பிட்ட உஸ்தாத் மன்சூர் இலங்கை ஜாமியா நளீமியாவின் முன்னாள் விரிவுரையாளர்.இலங்கையில் இருக்கும் பிரபலமான விரல் விட்டு எண்ணக் கூடிய இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவர்.

உடனே நான் "அவர் அப்படி என்னதான் சொன்னார்?" என்றுக் கேட்டேன்.

Saturday, July 6, 2013

"அரபுலகின் அதிசயமான எழுச்சிகளின் பின்னால்......????"



மார்ச் மாதம் 5 ஆம் திகதி  2011 ஆம் வருடம் எகிப்தில் களை கட்டிய மக்கள் புரட்சியின் பொழுது அஹ்லுல்பைத் தமிழ்த் தளத்தில் பதிவேற்றிய பதிவு எவ்விதமான திருத்தங்களுமின்றி மீண்டும் உங்களது ஆய்வுக்கு பதிவேற்றப் படுகிறது...............

"டுனீசியாவில்" இனம் தெரியாதா ஒரு இளைஞன் தீ மூட்டி கொல்லப் படுகின்றான்.அதற்கு அழகான, உள்ளத்தை தொடும் ஒரு கதையைப் பின்னி முகப்பு அட்டை போட்டு உலகளாவிய மக்களது உளவியலையும் வென்றாகி விட்டது.

திடீரென "டுனீசியாவில்" ஒரு மக்கள் புரட்சி.

எது வித இலக்கும் இல்லாத ஒரு ஓட்டம்.

நாட்டுத் தலைவன் நாட்டின் பணத்துடன் ஓடிவிட , அவனது சகா நாட்டை ஆளுகின்றான்.

அடுத்த சில நாள்களில் எகிப்தில் ஒரு புரட்சி.

'டுனீசியாவின்' பின் விளைவு என்று அதற்கு ஒரு பெயர்.

ஒரு அழகிய இளம் பெண் தனது "பேஸ் புக்கில்" எகிப்து மக்களை 'தஹ்ரீர்' சதுக்கத்துக்கு வந்து எகிப்தின் தலைவருக்கு எதிராக மக்களை அணி திரளுமாறு உருக்கமாக ஒரு வேண்டு கோளை விடுக்கிறார்.

ஆச்சரியமான ஒரு செயல்.