அஹ்லுல்பைத் Headline Animator

Monday, July 14, 2014

ISIS கடவுளின் காவலர்களான ISIS போராளிகள்

உலக முஸ்லிம் இளைஞர்கள் அநேகரின் கிலாபா கனவு இயக்கமாக புதிய அவதாரம் எடுத்து இருக்கும் ISIS இயக்கத்தின் ISIS என்ற சுருக்கப் பெயரில் பண்டைய எகிப்தின் பிரவ்னிய சாத்தானிய கடவுள் நம்பிக்கையில் ஒரு பெண் கடவுள் அழைக்கப் படும் இந்த செய்தி சில சமயம் உங்களுக்கு புதிய செய்தியாக இருக்கலாம்.

ISIS ஹோருசின் அன்னையாவார்.

ஹோருஸ் யார் என்று குழப்பமாக இருக்கிறதா?


எப்பொழுதும் தொலைகாட்சி ஸ்டார் வார் கார்ட்டூன் படத்தினால் வசீகரிக்கப் பட்டிருக்கும் உங்களது நான்கு வயது குழந்தையிடம் ஹோருஸ் யார் என்று கேட்டுப் பாருங்கள்.

உங்களுக்கும் நமக்கும் பரிச்சயம் இல்லாத இந்த ஹோருஸ் உங்களது வீட்டுக்கு அடிக்கடி தொலைகாட்சி பெட்டி மூலமாக இலுமினாட்டிகளின் ஸ்டார் வார் கார்ட்டூன் கதாபாத்திரமாக பருந்தின் தலையுடன் கூடிய குள்ள உருவில் உங்களது குழந்தையுடன் அறிமுகமாகி இருக்கும் நிஜம் அறிந்து ஆச்சரியப் பட்டுப் போவீர்கள்.

ஹோருஸ் என்றால் யுத்தத்துக்கும், பாதுகாப்புக்குமான கடவுள் என்று பண்டைய எகிப்தியர்கள் நம்பினார்கள்.

இப்போதைய இலுமினாட்டிகளும் அதைத்தான் சொல்கிறார்கள்.

இந்த ISIS என்றழைக்கப் படும் பெண் கடவுள் இயற்கையையும், மாய ஜாலங்களையும் காக்கும் கடவுளாகவும் பெண் காப்பாளராகவும் கருதப் பட்ட அதே நேரம் அடிமைகளின், பாவிகளின் நண்பராகவும் கணிக்கப் பட்டு வந்தது. அத்துடன் அவர்களது பண்டைய கடவுள் நம்பிக்கையின் பிரகாரம் ISIS என்றழைக்கப் பட்ட இந்தப் பெண் கடவுள் உயர் ஜாதியினரினதும், பணக்கார வர்க்கத்தினரினதும், ஆட்சியாளர்களினதும் பிரார்த்தணைகளை மறுப்பேதும் சொல்லாமல் ஏற்றுக் கொள்வதாகவும் கருதி வந்தனர்.அத்துடன் இறந்துப் போனக் குழந்தைகளின் பாதுகாவலனாகவும் இந்த ISIS பெண் கடவுள் கருதப் பட்டது.

ISIS இன் ஆண் கடவுள் துணையின் பெயர் ஒஸ்ரிச்ஸ்.

இனி பண்டைய எகிப்தின் பிரவ்னிய கடவுள் நம்பிக்கையில் முக்கியமான முக்கடவுளர்களான OSRIS, அவர் மனைவி ISIS அவர்களது குழந்தைகளான HORUS ஆகியோரது விடயங்களை ஆராய்ந்து முடிவெடுப்பதை உங்களது பொறுப்பில் விட்டு விட்டு இன்னுமொரு முக்கிய விடயத்துக்கு வருகிறோம்.

அண்மையில் திடீரென சிரியாவிலும் ஈராக்கிலும் தோற்றம் பெற்று மத்திய கிழக்கை ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கும் பணக்கார ஜிஹாதிய அமைப்பின் பெயரும் ISIS என்று அழைக்கப் படுவதை உங்களது அவதானத்துக்குக் கொண்டு வருகிறோம்.

இலுமினாட்டி சக்திகளின் நெறியாள்கையில் ஸ்லீப்பர் செல்ஸ்களாக நமது ஜிஹாதிய இயக்கங்கள் பல இயங்குவதை நாம் அவ்வப்போது தெளிவு படுத்தி வந்திருக்கிறோம்.

உலகாயுத ஆசைக்கு பலியாகிய நிலையில் உலக அறிவு தொலைத்த நமது சப்பரை அறிஞர்கள் நமது இக்கருத்துடன் ஒருபோதும் உடன்பட்டதில்லை.

இந்நிலையில் மத்திய கிழக்கில் தமது தன்னிருப்பை தக்கவைத்துக் கொள்ள இந்த ISIS கடவுளின் போராளிகளின் துணையை இலுனாட்டிகள் மிகவும் சூட்சுமமாக உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதன் பிரகாரம் இன்னுமொரு இஸ்ரவேலாக இந்த ISIS கடவுளின் போராளிகளின் இராச்சியம் இஸ்லாமிய கிலாபா என்ற பெயரில் மலர்ந்து விட்டது.

கிலாபாக் கனவில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் ISIS க்கு பேராதரவு கொடுப்பார்கள் என்ற விடயம் இலுமினாட்டி சக்திகளுக்குத் தெரியும்.

இலுமினாட்டிகளின் ஊடக வலையமைப்பு இந்த அகோர நகர்வுகளுக்கு தோன்றாத்துணையாக வலிமையுடன் துணை நிற்கின்றன.

அத்துடன், உண்மையான இஸ்லாமிய போராளிகள் அனைவரையும் தன்னுள் சுவீகரித்துக் கொள்ளும் வசீகரத்துடன் இருக்கும் இந்த ISIS இராச்சியம் பிரவ்னிய கடவுளுக்கு எதிரான அவர்களை இனம் காணும் தருணங்களில் அவர்களின் புதை குழியாகவும் மாறி நிற்கும் அபாயமும் எஞ்சி நிற்கிறது.

முஸ்லிம்களுக்கு சிந்திக்கும் அறிவு துளியும் இல்லை என்ற துணிவில்தான் இம்முறை இலுமினாட்டிகள் அவர்களின் ஆதரவில் களம் இறங்கி போராடிக் கொண்டிருக்கும் பன்னாட்டு போர் வீரர்களை கொண்டிருக்கும் சிரியாவின் விடுதலை இராணுவத்திற்கு துணிவுடன் இலுமினாட்டிகள் வணங்கும் ISIS கடவுளின் பெயரை போராளிகளுக்கும் அந்தப் போராளிகளின் இராச்சியத்துக்கும் வழங்கி முஸ்லிம்களை அவ்வாறு அழைத்துக் கொள்ள அவர்களது ஊடகத் துணையுடன் வழி அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

video
எது எப்படிப் போனாலும் இலுமினாட்டிகளின் இராஜாங்கத்தில் இலுமினாட்டிகளின் ஸ்லீப்பர் செல்ஸ் களின் துணையுடன் இன்னும் பல தசாப்தங்களுக்கு அடைமழைதான்.

1 comment:

Dr.Anburaj said...

july 14 2014 க்கு பிறகு ஒரு கட்டுரையை கூட தங்களால் எழுத முடியவில்லையே ஏன் ? தங்களுக்கு உடல நலக்குறைவு ஏதும் ஏற்படக் கூடாது என்று மாயனை மன்னு வடமதுரை மைந்தனை வேண்டுகின்றேன்.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad