Sunday, October 17, 2010

இது ஒரு சிங்கக்குட்டியின் கதை


இது ஒரு சிங்கக்குட்டியின் கதை


இது ஒரு சிங்கக்குட்டியின் கதை தனது தாயின் அரவணைப்பில் மிகவும் செல்லமாக
இருந்த சிங்கக்குட்டி, தன் தாய் தூக்கிக்கொண்டு இருக்கும் பொழுது ஒரு வண்ணாத்திப்பூச்சியை காண்கிறது.

இறகுகளை விரித்து படபடத்த அதன் அழகால் கவரப்பட்ட சிங்கக்குட்டி அந்த வண்ணாத்திப்பூச்சியை  பிடிக்க முயல்கிறது.

சிங்கக்குட்டியின் கைக்கு அகப்படாத  வண்ணாத்திப்பூச்சி பறக்க துவங்குகிறது.
சிங்கக்குட்டியும் அதைத் துரத்தி துரத்தி அதன் பின்னால் ஓடுகிறது.

அதனால் வண்ணாத்துப்பூச்சியை பிடிக்க முடியவில்லை .இந்த முயற்ச்சியின் காரணமாக அது தனது தாயை விட்டும் அதிக தூரம் வந்து  விடுகிறது .

இப்பொழுது அந்த சிங்கம் காணமல் போய்விட்டது.
அடர்ந்த காட்டில் ஓடியே தனித்துவிட்ட சிங்கக்குட்டி அச்சத்தினால் நடுங்குகிறது.
மிகவும் பரிதாபமாக கத்தி கத்தி தனது அருமைத் தாயை தேடி அங்கும் இங்கும் ஓடித்திரிந்து களைத்தது .

தாயிடம்  இருந்து எந்த பதிலும் இல்லை.
அலைந்து களைப்புற்ற  சிங்கக்குட்டிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. 

தனித்த நிலையில் அழுது கொண்டிருந்த சிங்கக்குட்டியை ஒரு தாய் ஆடு கண்டது .
அது அந்த சிங்கக்குட்டியுடன் சிநேகம் கொண்டது .
அதனை தனது குட்டியாக ஏற்றும் கொண்டது. 
தனது வளர்ப்புக்குட்டியின் மீது தாய் ஆடு மிகுந்த பாசம் கொண்டது.
தனது சக ஆட்டு மந்தைகளுடன் சிங்கத்தை புட்கள் மேயவும் பழக்கியது. 


ஆடுகளுடன் சேர்ந்த  சிங்கக்குட்டி ஆடுகளைப்போலவே கத்தவும், இலைகுலைகளை உண்ணவும் பழகியது .

இப்படியே நாள்கள் நகர்ந்தன !.
சிங்கக்குட்டி வேக வேகமாக வளரத்துவங்கியது. நாளடைவில் தாயைவிடவும், தனது சக ஆடுகளைவிரவும் பெரிதாக அது வளரத் துவங்கியது .

தாய்க்கே சில சமயங்களில் தான் வளர்த்த குட்டியை பார்த்து பயம் வந்தது .
தனது வளர்ப்பு குட்டியின் கண்களில் தெரிந்த அன்னியத்தளம் தாய் ஆட்டின் அடிவயிற்றில் புளியை கரைத்தது.

இவைகளை சண்டை செய்யாத சிங்கக்குட்டி மிகவும் மகிழ்ச்சியாக தனது புதிய சகாக்களுடன் வாழ்ந்து வந்தது .

ஒரு நாள் தொலைவில் இருந்த ஒரு மலையின் உச்சியில் வெள்ளை மேகங்களில் பின்னணியில் ஒரு கருப்பு படம் வரைந்தது போல ஒரு பெரிய சிங்கம் தோற்றமளித்தது. 

அது தனது அடர்ந்த பிடரியை ஒரு குலுக்கு குலுக்கி மிகப் பயங்கரமாக, அந்த பகுதியே அதிரும்  வகையில் கர்ஜித்தது .

அதன் கர்ஜனையின் கடூரம் பக்கத்தில் இருந்த மலைகளில் மோதி எதிரொலித்தது .

தாய் ஆடும், ஆட்டுமந்தைகளும் பயத்தால் வெலவெலத்துப் போய் நடுங்கத் தொடங்கியது. அவைகள் அச்சத்தினால் செயல் இழந்து போயின. 

ஆனால் இந்த கர்ஜனையை கேட்டதும், சிங்கக்குட்டி மந்திரத்தால் கட்டுண்டதைப் போல அசையாமல் நின்றது. ஒரு புதுமையான  ஆனால் மிகவும் வசீகரமான ஒரு உணர்வு அதனை ஆட்கொண்டது. 

இந்த உணர்ச்சி அது இதற்கு என்ற எப்பொழுதுமே  அனுபவித்து அறியாத ஒன்று என்று  அதன் உள்ளத்தில் உதித்தது. 

இந்த உணர்ச்சியின்  உந்துதலினால்  அதன் மேனி மெலிதாக நடுங்கியது. அந்த புதிய கர்ஜனை அதன் நாடி நரம்புகளை சிலிர்ந்து எழ வைத்தது. 

அது தன்னுள் புதிய சக்திகள் பீரிட்டு எழுவதை உணர்ந்தது . தான் அறியாத இரகசியம் மெலிதாக  வெளிப்படுவதை புரிந்து கொண்டது. 

இப்பொழுது அதனுள் ஒரு புதிய இயல்பு தோற்றம் பெற தொடங்கியது. 
தன் என்ன செய்கிறோம் என்ற உணர்வு இல்லாமலே ஒரு புதிய மற்றம் அதனுள் நிகழ்கிறது. 

அடுத்த சில கணங்களில் அது தன்னை அறியாமலேயே சிங்கத்தின் கர்ஜனைக்கு சமனாக அல்லது அதைவிடவும் அதிகமான அளவில் பதில்  கர்ஜனை செய்தது .

தன்னுள் ஏற்பட்ட இந்த இயல்புகளால் உந்தப்பட்ட அந்த சிங்கக்குட்டி தனது  சக ஆட்டு சகாக்களை பரிதாபமாக பார்த்தது. 

ஒரே தாவலில் அந்த அந்த இடத்தை விட்டு அகன்ற மலையின் மீது நின்ற சிங்கத்தை நோக்கி ஓடியது .

காணாமற் போன சிங்கம் இப்பொழுது தன்னை தேடி அறிந்து கொண்டது.  இது  வரைக்கும் அது, ஆடுகளுடன் சேர்ந்து ஆடாக வளர்ந்து கொண்டிருக்கும் ஆட்டுக்குட்டியாக,  தன்னைப்போல உள்ள ஆட்டுக்குட்டி நண்பர்கள் செய்யும் காரியங்களுக்கு அப்பால்  இன்னும் சில இரகசியங்கள் இருக்கின்றன என்ற எண்ணம் அற்றதாக , ஏன் சாதாரன ஆட்டுக்குட்டியை விட அதிகமான வலிமை    தனக்கு   இருக்கிறது என்ற உணர்வே  இல்லாததாக அது தனது தாய் ஆட்டை சுற்றி விளையடிக்கொன்று இருந்தது. 

காட்டில் உள்ள விலங்குகள் அனைத்தையும்  அச்சத்தினால் அலறவைக்கும் கர்ஜனை தன்னுள் அடங்கி கிடக்கிறது என்று எண்ணமே அது கற்பனை செய்து கூட பார்த்தது இல்லை. 

அது தன்னை சக ஆடுகளில் ஒன்றாக கருதி தானும் ஒரு ஆடு என்று மட்டுமே எண்ணி இருந்தது .

அது சாதாரண ஒரு ஓநாய்க்கும் பயந்து ஆடுகளுடன் சேர்ந்து ஓடிக்கொண்டு இருந்தது. 
காலம் ஒன்றும் இருந்தது .

ஆனால், தனக்கு அச்சமுட்டிக் கொண்டிருந்த இந்த விலங்குகள் எல்லாம் இப்பொழுது தன்னைக் கண்டதும் பயந்து ஓடுவதை கண்டு சிங்கக்குட்டி பெரு வியப்பு அடைந்தது .

அது தன்னை ஒரு ஆட்டுக்குட்டி என்று நினைத்து கொண்டு இருந்த வரையில் அது ஒரு ஆட்டை போலவே வாழ்ந்துகொண்டிருந்தது. 

ஆனால், அதனுள் இருந்த சிங்கம் உயிர்ப்பிக்கப்பட்ட பொது உடனடியாக அது புதிய பரிணாமம் எடுத்து விட்டது. 

இந்தக் கண்டுபிடிப்பு அற்றனதமனது.
இந்த தருணம் முக்கியமானது  .  

எமது   முஸ்லிம்   சமுகத்தின் நிலையும் , இந்த சிங்கக்குட்டியின் நிலையும் ஏறத்தாழ 
ஒன்றாகவே இருக்கிறது .

சிங்கக்குட்டி சிங்கத்தை தொலைத்து காணமல் போனது போல , நான் என்னை தொலைத்து காணமல் போய்விட்டோம் .

நான் எம்மை கண்டுபிடிக்கும் அந்தத் தருணம் முக்கியமானது .

அந்த சம்பவம் எப்போது , எப்படி எந்த கணத்தில் நிகழப்போகிறது என்பது தான் எம்மிடம் 
இருக்கின்ற மிக முக்கிய  கேள்வி .
   
ஒருவரது வாழ்கையில் குறுக்கிட்ட, விலைமதிப்புள்ள 'ஏதோ ஒன்று ',தான் சந்தித்த 'அந்த அனுபவம் ',தான் வாசித்த 'அந்த நூல்', தான் கேட்ட அந்த 'சொற்பொழிவு', நான் கண்ட 'அந்த மனிதர்',  தன்னை நெருக்கிய 'அந்த நெருக்கடி ', திடீரென  ஏற்பட்ட 'அந்த விபத்து ', 
அல்லது  ''அந்த பேரழிவு ',அந்த ஏதோ ஒன்று ' அந்த மனிதரின் உள்மனதில் மீது நீருபூத்த நெருப்பாய் உறங்கிக்கொண்டிருக்கும்  உண்மையை ஊதி எரியவைத்தால் தொலைந்து போன அவரை அவரால் தேடிக்கொள்ள முடியும் .   

'அஹ்லுல் பைத் - தமிழ் தளம்' மூலமாக இப்பொழுது  தொலைந்து நாம் போன எம்மை தேடும் பணியில் ஈடுபடப்போகிறோம். 

இன்ஷா அல்லாஹ்

இங்கே நாம் எம்மை தொலைந்து போக காரணமாக அமைந்த அந்த அபாக்கியமான தருணங்களை   தேடிப்போகப்போகின்றோம் .

ஏனெனில், தொலைந்து போன பொருளை அது தொலைந்த இடத்தில்தான் தேடி எடுக்க முடியும். 
எம்மை தொலைந்து விடுவதற்கு காரணமாக இருந்த அந்தத் 'தருணங்களின், இரகசியங்களை  வெளிக்கொணர்வதன் மூலம்  எம்மை எம்மால் கண்டு பிடித்துக் கொள்ள முடியும். 

இனி உண்மைகளை தேடும் படலம் ஆரம்பம் ! 


  -ஜவ்பர்  சாதிக் M. ப்துல் ரஸ்ஸாக்

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே.
    அருமையான கருத்தைச் சொல்லும் அழகுக் கதை.

    ReplyDelete