Wednesday, June 29, 2011

மிஹ்ராஜ் தினமும் நாங்களும்............

மிஹ்ராஜ் தினமும் நாங்களும்............


இரண்டு தினங்களுக்கு முன்னர் ஒரு மாலைப் பொழுதில் எமது நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்றோம்.

அவரின் தாயாரும் , அவரது சிறிய தாயாரும் வீட்டு வேலைகளில் மும்முரமாக இருந்தார்கள்.

அவர்களின் முகத்தில்  ஒரு பதட்டமும், அதை மீறிய மகிழ்ச்சியும் தெரிந்தது.

நாம் கேட்டோம் "என்ன உம்மா விசேசம்?"

நண்பரின் தாயார் சொன்னார்" நாளை ரஜப் இருபத்து ஏழு!"

எமக்கு ஒன்றும் புரியவில்லை.

"ரஜப் இருபத்து ஏழில் என்ன விசேசம்?"

"அன்று மிஹ்ராஜ் நோன்பு நோற்க வேண்டும்" அவரது குரலில் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது."அதுக்குத்தான் நாம் தயாராகிக் கொண்டு இருக்கிறோம்"

நாம் நண்பரின் பெயரை கூறிக் கேட்டோம்"அவர் நோன்பு பிடிப்பாரா?"

"இல்லை" அந்தத் தாயார் வருத்தத்துடன் சொன்னார்."அவர்தான் தௌஹீத் ஜமாத்தில் இருக்கிறாரே. அவர் இது 'பிதுஆத்' என்று கூறுகிறார்."

"அப்படியென்றால் வீட்டில் யார் ...யாரெல்லாம் நோன்பு பிடிப்பீர்கள்?" நாம் கேட்டோம்.

"நாங்கள் ..வயசாலிகள் மட்டும்தான்."

Monday, June 27, 2011

சலவாத் சொல்வதில் 'தர்ம சங்கடத்தில்' உலமாக்கள்???!!!


சலவாத் சொல்வதில் 'தர்ம சங்கடத்தில்' உலமாக்கள்???!!!


சில வாரங்களுக்கு முன்னர், ஒரு வெள்ளிக்கிழமை மருதானை ஜும்மாஹ் மஸ்ஜிதில் இலங்கையிலும் தமிழ் நாட்டிலும்  பிரபலமான மௌலவி முஹாஜிரீன் அவர்களின் குத்பா பேருரையில் கலந்துக் கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது.

நபி (ஸல்) அவர்களின் புகழ் பாடும் அருமையான குத்பா பேருரை.

நபி (ஸல்) அவர்களின் முக்கியத்துவத்தைப் பற்றியும், நாம் அவர்களின் பெயரில் சலவாத் சொல்ல வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் மௌலவி அவர்கள் சிறப்பாக உரையாற்றினார்கள்.

ஆனால், அவர் சொன்ன சலவாத்தில் ஒரு சின்ன குழப்பம்.

முஹாஜிரீன் மௌலவி அவர்கள் தனது உரையில் நபி (ஸல் ) அவர்களின் பெயர் கூறக் கேட்ட மாத்திரம் சொன்ன சலவாத்துக்களை கீழே தருகிறோம்.

அதில் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் ஏதாவது தெரிகிறதா என்று கவனமாக கவனியுங்கள்.

மௌலவி அவர்களின் உரையில், அவர் முஹம்மத் என்று சொன்ன வுடன் - சல்லல்லாஹு அலைஹிவசல்லம் - என்றார்.

நபி -என்ற கட்டங்கள் வரும் தோறும் அவர் -சல்லல்லாஹு அலைஹிவசல்லம்  - என்றார்.

ரசூல் என்று கூறும் பொழுதெல்லாம் அவர் -சல்லல்லாஹு அலைஹிவசல்லம் - என்றார்.

நாம் அன்றாடம் கேட்கும் சலவாத்துடன் இதில் ஒரு முரண்பாடும் இல்லை என்று பார்த்த பார்வைக்கு தெரிகிறதல்லவா?

ஆனால், நாம் சரி கண்ட இந்த சலவாத்தில் பெரும் முரண்பாடு இருக்கிறது.

என்ன என்கிறீர்களா?

Thursday, June 23, 2011

வேகம்.........! விவேகம்...!! சிறுபான்மையினராக இருக்கும் மக்களுக்கு எது தேவை?


வேகம்.........! விவேகம்...!! சிறுபான்மையினராக இருக்கும் மக்களுக்கு எது தேவை? 


மக்களின் தலைவர்களாக இருப்பவர்களுக்கு பல முக்கிய பொறுப்புக்கள் இருக்கின்றன.

அந்த முக்கிய பொறுப்புக்களை சில சமயம் அவர்கள் மறந்து செயல் படுகிறார்கள்.

அதனால் வருகின்ற விளைவுகள் பயங்கரமானது.

அந்தத் தலைவனின் சந்தோஷம் அவனது மக்களின் சந்தோஷமாக இருக்கிறது.

அவனின் கவலை அந்த மக்களின் கவலையாக உருவெடுக்கிறது.

அவனின் வெற்றி அந்த மக்களின் வெற்றியாக பரிணமிக்கிறது.

அவனது இனத்தில் அவனை வெறுப்பவர்களும் அவனது வெற்றி தோல்வியில் ஏதோ  ஒரு விதத்தில் செல்வாக்கு செலுத்தப் படுகிறார்கள்.

இலங்கை பல தசாப்தங்களாக பல கலவரங்களை சந்தித்து மீண்ட பூமி.

Saturday, June 18, 2011

நபிமார்கள் ரசூல்மார்களை விஞ்சிய சாதாரண குழந்தைகள்...?'இஸ்ராலியியட்' ஹதீத்களின் அபத்தங்கள்!!!!


நபிமார்கள் ரசூல்மார்களை விஞ்சிய சாதாரண குழந்தைகள்...?'இஸ்ராலியியட்'  ஹதீத்களின் அபத்தங்கள்!!!!


புஹாரி ஹதீத் கிரந்தத்திலும், முஸ்லிம் ஹதீத் கிரந்தத்திலும் பதிவாகி இருக்கின்ற சில ஹதீத்கள் நபி (ஸல்) அவர்களின் அந்தஸ்த்தை குறைத்து  மதிப்பிடும் அளவுக்கு ஆபத்தானவைகளாக இருக்கின்றன.

அபூஹுரைரா அறிவிக்கிறார்கள்;

ஜுரைஜ் என்ற பெயருள்ள ஒரு இஸ்ரவேலர் இருந்தார்.

அவர் தனது ஆசிரமத்தில் தொழுதுகொண்டு இருக்கும் பொழுது, அவரது தாயார் அவரை  அழைத்தார்.

அவர் தனக்குள் "நான் எனது தாயாருக்கு பதில் சொல்வதா, அல்லது எனது தொழுகையை முடிப்பதா?" என்று கூறிக் கொண்டார்.

அவரது தாயார்"யா! அல்லாஹ்! எனது மகனை விபச்சாரி அழைக்காத நிலையில் விட்டு விடாதே" என்று பிரார்த்தித்தார்.

ஒரு நாள், ஜுரைஜ் தனது ஆசிரமத்தில் இருக்கும் பொழுது ஒரு விபச்சாரி அவருடன் சல்லாபம் செய்யும் நோக்கில் நெருங்கினார்.

Friday, June 17, 2011

நபி (ஸல்) அவர்கள் இனங்காட்டிய "இரண்டு தலை வாசல்கள்" .....ஒன்று 'ஞானத்தின்' வாசல்! மற்றயது 'குழப்பத்தின்' வாசல்.!!

நபி (ஸல்) அவர்கள் இனங்காட்டிய "இரண்டு தலை வாசல்கள்"

ஒன்று   அல்லாஹ்வை அறிந்துக் கொள்ள உதவும் 'ஞானத்தின்' வாசல்!

மற்றயது மனிதனை வழிக் கேட்டில் கொண்டு செல்லும் 'குழப்பத்தின்' வாசல்.!!

".......... வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் இல்லை;ஆனால், இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணிய முடையோராவார்;எனவே, வீடுகளுக்குள் வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்; நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை , அஞ்சி நடந்துக் கொள்ளுங்கள்"
(அல் குரான்: 02 : 189 )

Monday, June 13, 2011

"'மறுமையில் ஹவ்லுல் கவ்தரில் முதன் முதலில் தண்ணீர் அருந்தும் பாக்கியம் பெற்ற முதல் முஸ்லிம்" ----'ரஜப்' அவர் பிறந்த மாதம் -

"'மறுமையில் ஹவ்லுல் கவ்தரில் முதன் முதலில் தண்ணீர் அருந்தும் பாக்கியம் பெற்ற முதல் முஸ்லிம்" ----'ரஜப்' அவர் பிறந்த மாதம் -



இஸ்லாத்தின் முதல் முஸ்லிமும், மறுமையில் ஹவ்லுல் கவ்தரில் முதன் முதலில் தண்ணீர் அருந்தும் பாக்கியம் பெற்றவர் என்று நபி (ஸல்) அவர்களால்  நன்மாராயம்  சொல்லப் பட்டவருமான இமாம் அலி அவர்கள் ரஜப் மாதம் பிறை பன்னிரெண்டில்  இந்த உலகில் பிறந்தார்கள்.

அவர் பிறந்த அக்கால ஐயாமுல் ஜாஹிலிய்யா அராபியாவில் வழக்கில் இருந்த கொள்கைகளில் பிரதானமான கொள்கைகளில் ஒன்று ,அவர்கள்  அவர்களது மூதாதையர்களை கண்மூடித்தனமாக நம்பி அவர்களை பின்பற்றுவது ஆகும்.

"எங்களது மூதாதையர்கள் நேர் வழி நின்றவர்கள். அப்பழுக்கு இல்லாத அவர்களையே நாம் பின்பற்றுவோம்" என்கிற கொள்கை அழுத்தம் திருத்தமாக அன்றைய அராபியாவிலே நிலவியது.

ஆனால், நபித்துவ அழைப்பை தத்துவரீதியாக சிந்தித்த பத்து வயது நிரம்பிய இமாம் அலி , சிறு வயதிலேயே  அக்கால அராபிய கொள்கைகளுக்கு எதிராக ஒரு முடிவு எடுக்கிறார்.

பதின் மூன்று வருடங்களாக மக்கத்து அராபியர்களுக்கு புலப் படாத சத்தியங்கள் அந்த பத்து வயது சிறுவர் இமாம் அலிக்கு ஒரு நாளில் புலப்பட்டது எப்படி என்கிற ஆய்வு , சிறுவர் இமாம் அலியின் தர்க்கவியல் அடிப்படையில் முடிவு எடுக்கும் திறமைக்கு ஒரு சான்றாக இன்றுவரை இருந்துக் கொண்டு இருக்கிறது.

தம்மை கட்டிப் போட்டு இருக்கிற நம்பிக்கைகளுக்கு முரணாக சிந்திக்கவே தயங்கிய அந்த அராபிய சமூகத்தில் , துணிந்து அவர் எடுத்த முடிவு ஆச்சரியமானது.

மூதாதையர்களை அச்சொட்டாக பின்பற்றுகின்ற வழமை இன்று கூட   எங்களிடையேயும்  நிலவுகிறது.

Sunday, June 5, 2011

மண்ணறை 'தல்கீனும்' 'தல்கீனில்'மறைந்திருக்கும் 'அஹ்லுல் பைத்களும்' .....???!!!


மண்ணறை 'தல்கீனும்' 'தல்கீனில்'மறைந்திருக்கும் 'அஹ்லுல் பைத்களும்' .....???!!! 

சில தினங்களுக்கு முன்பு, மாவனல்லை நகரில் ஹெம்மாதகம கிராமத்துக்கு உறவினர் ஒருவரின் மரண வீட்டுக்கு சென்று இருந்தோம்.

மாலையில் மையத்தை அடக்கினார்கள்.

அதன் பின்னர், அப் பகுதி மதரசாவின் அதிபர் மையத்தை அடக்க வந்த மக்களுக்கு அற்புதமான உரையொன்றை மண்ணறை அருகே திரண்டிருந்த மக்கள் மத்தியில் நிகழ்த்தினார்.


இந்த உரை,  நாம் முன்னர் செய்து  வந்த  'தல்கீனுக்கு ' பகரமாக  நிகழ்த்தப்  பட்டது 

அதென்ன 'தல்கீன்'?

மையத்தை அடக்கியதன் பின்னர் இமாம் அந்த மையத்துக்கு சில விடயங்களை சொல்லிக் கொடுப்பார்.

அவ்வாறு சொல்லிக் கொடுப்பதை 'தல்கீன்' என்று அழைப்பார்கள்.

மையத்தை அடக்கி முடித்ததன் பின்னர், 'தல்கீன்' ஓதும் வழக்கம் தொன்று  தொட்டு இருந்து வந்தது.

தல்கீனில் சில முக்கிய விடயங்களை அடக்கப் பட்ட மையத்துக்கு சொல்லிக் கொடுப்பது போல பேஷ் இமாம் உரையாற்றுவார்.

சுற்றி இருப்பவர்கள் காது தாழ்த்தி அமைதியாக அதனைக் கேட்டுக்  கொண்டு இருப்பார்கள்.

அவர் சொல்லும் விடயங்கள் அடக்கப் பட்ட மையத்துக்கு சொல்லுவது போல இருந்தாலும், நிஜத்தில்  அவைகள் மையத்தை அடக்க வந்த மக்களுக்கே சொல்லப் படும். 

தொன்று  தொட்டு  எது வித மாற்றமும் இன்றி ஒரே மாதிரி நினைவு படுத்தி சொல்லி வரப்பட்ட 'தல்கீன்' இப்பொழுது மருவி "கபுரடி பயானாக" புது அவதாரம் எடுத்து இருக்கிறது.

தல்கீன் ஓதும் பொழுது மண்ணறையில் அடக்கப் பட்ட மையத்திடம்   மலக்குகள் கேட்கும் கேள்விகளையும், அதற்கான பதில்களையும் பள்ளி வாயல் இமாம் சொல்லிக் கொடுப்பார்.

தவ்ஹீத் ஜமாஅத், ஜமாத்தே இஸ்லாமி, இஹ்வானுல் முஸ்லிமீன் போன்ற முற்போக்கு இஸ்லாமிய இயக்கங்களின் செல்வாக்கினால், இப்பொழுது தல்கீன் தூக்கி எறியப் பட்டு விட்டது.

நாம் கூட மண்ணறையில் ஓதப் படுகின்ற 'தல்கீனை' குறித்து வாதம் செய்பவர்களாக, அதற்கு எதிரானவர்களாக இருந்து இருக்கிறோம்.

ஜமாத்தே இஸ்லாமியினதும், தவ்ஹீத் ஜம்மாத்தினதும் செல்வாக்கு எங்களின் மீது ஆதிக்கம் செலுத்தியது அதற்கு பிரதான காரணமாகும். 

அத்தகைய முற்போக்கு இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள்  தல்கீனுக்குப் பதிலாக "கபுரடி பயானை" அறிமுகப் படுத்தி விட்டார்கள்.

தல்கீனுக்கு எதிரான இஸ்லாமிய முற்போக்கு இயக்கங்களின் செயல் பாடு 'நருக்'கென நெஞ்சில் குத்தியது.

'அறிந்தோ அறியாமலோ அஹ்ளுல்பைத்களுக்கு எதிரான போக்கில் இருக்கின்ற இவர்கள் எதற்காக தல்கீனை இலக்கு வைத்தார்கள்?'

உடனே, நாம் தல்கீனில் கேட்கப் படுகின்ற கேள்விகளையும், அதற்கு சொல்லிக் கொடுக்கப் படுகின்ற பதில்களையும் ஆராய்ந்துப் பார்த்தோம்.
     
ஆச்சரியமாக, இஸ்லாமிய முற்போக்கு இயக்கங்களினால்  இலக்கு வைக்கப் பட்டு தூக்கி எறியப் பட்ட தல்கீனில் கேட்கப் படும் கேள்விகளிலும், அதற்கான பதில்களிலும் 'அஹ்லுல் பைத்களுக்கு' ஆதரவான ஒரு உண்மை ஒளிந்து இருந்தது.

Wednesday, June 1, 2011

இரண்டாம் கலீபாவின் படு கொலை சூத்திர தாரிகள்.... .......பின்புல வடிவமைப்பு : சப்பரை அறிஞர் 'காப் அல் அஹ்பார்'


இரண்டாம் கலீபாவின் படு கொலை சூத்திர தாரிகள்....
.......பின்புல வடிவமைப்பு : சப்பரை அறிஞர்  'காப் அல் அஹ்பார்'


உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மதீனாவுக்கு அராபிகள் அல்லாதவர்கள் அனுமதிக்கப் படவில்லை.

கிட்டத்தட்ட இஸ்லாமிய தலை நகர் மதீனா ஒரு பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப் பட்டு இருந்தது.

மதீனாவினுள் வருவதற்கு தடை செய்யப் பட்ட யாராவது மதீனாவினுள் நுழைய வேண்டும் என்றால் அவருக்கு கலீபாவின் அனுமதியும், பொறுப்பாளர் ஒருவரின் சிபாரிசும் வேண்டப்பட்டது.

தலை நகர் மதீனாவின் பாதுகாப்பே இப்படி என்றால், கலீபாவின் பாதுகாப்பு எப்படி இருந்திருக்கும் என்பது உங்களுக்கு புரிந்து போகும்.

இத்தகைய பாதுகாப்பு வியூகத்தை உமர் (ரலி) அவர்களின் கொலையின் சூத்திரதாரிகள் மிக இலாவமாக சிதைக்கிறார்கள்.