Thursday, February 21, 2013

முஸ்லிம் சமூகத்தின் விமோசனத்துக்கு வித்திட்டு தீர்ப்பளிக்கப் பட்ட 'ஹலால்' விவகாரம்...........ACJU புரிந்துக் கொள்ளத் தவறிய உண்மைகள்.........?


இன்றைய தமிழ் Mirror அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஹலால் தரச் சான்றிதழ் சம்பந்தமான  முடிவை இவ்வாறு வெளியிட்டிருந்தது......

//.....பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவுடனான சந்திப்பினை அடுத்து ஹலால் சான்றிதழ் பொறிக்கப் பட்ட பொருட்களை முஸ்லிம்களுக்கு மாத்திரமே வழங்குவது என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தீர்மானித்துள்ளது.//

jaffna muslim இணையம் அதனை இப்படி சொல்லியது.

// ........இங்கு உலமா சபையின் செயலாளர் எம்.எம்.ஏ .முபாரக் கருத்து வெளியிடுகையில் 

//....இதற்கமைய அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தனது ஹலால் சான்றிதழை பெறும்  வர்த்தக நிறுவனங்கள் தமது ஹலால் உற்பத்திப் பொருட்களை முஸ்லிம்களுக்கு மாத்திரம் வழங்கும் வகையில் ஒரு பொறிமுறையை வகுக்க ஆவண செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்வது என முடிவு செய்யப் பட்டுள்ளது என்றார்.....//

இற்றைக்கு ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஹுதைபியா இணக்கப் பாட்டை முன்வைத்து தனது செயல்களுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டிருந்த ACJU வினர் திடீரென அந்த ஹுதைபியா சொல்லிக் கொடுத்த பாடத்தை மறந்து போன நிலையை இந்த ஊடக செய்திகள் நிரூபிக்கின்றன.




ஹுதைபியா சொல்லிக் கொடுத்த பாடத்தை மூன்றாம் வகுப்பு முஸ்லிம் பாலகர்கள் கூட தெரிந்து வைத்திருக்கிற காரணத்தால் நாம் அதனைப் பற்றிப் பேசத் தயாராக இல்லை.

ஹுதைபியாவில் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் நிறைய விடயங்களை குறைஷி நிராகரிப்பாளர்களுக்கு விட்டுக் கொடுத்தார்கள்.

அந்த விட்டுக் கொடுப்புகள் நிறைய இலாபங்களை முஸ்லிம்களுக்கு நாளடைவில் பெற்றுக் கொடுத்தது வரலாறு.

இன்று ACJU கம்பீரமாக ஊடகவியலாளர்களின் முன்னிலையில் இப்படி சொல்லியிருந்தால்........

"இதன்பின்னர் முஸ்லிம் நிறுவனங்களுக்கு மாத்திரமே நாம் ஹலால் சான்றிதழ் வழங்குவதென முடிவு செய்துள்ளோம்.........."

என்று அறிவித்து அவ்வாறே முடிவு செய்திருந்தால் அந்த முடிவின் செயல் விளைவு எப்படி இருந்திருக்கும் என்று கொஞ்சம் கற்பனை செய்துப் பாருங்கள்.......அயர்ந்துப் போவீர்கள்.

அதனை நாம் கற்பனை செய்தோம்.........அது இப்படி விரிந்தது.

அந்தத் தீர்மானம் இலங்கையில் இருக்கின்ற அனைத்து முஸ்லிம் நிறுவனங்களினதும் உற்பத்திப் பொருட்களை உலக ஏற்றுமதிச் சந்தைக்கு கொண்டு செல்வதற்கு பெரும் வாய்ப்பாக அமைந்திருக்கும் .......

அந்தத் தீர்மானத்தின் காரணமாக இலங்கையில் பிஸ்கட் உற்பத்தியில் முன்னணியில் இருக்கின்ற மஞ்சி,மெலிபன்,லிட்டில் லயன் போன்ற உணவு உற்பத்தி நிறுவனங்களினது  பிஸ்கட் வகைகளை மத்திய கிழக்கு சந்தைக்கு ஏற்றுமதி செய்கின்ற வாய்ப்புகளுக்கு அனுமதி மறுத்திருக்கும்.........

ACJU வினரின் உறுதியான அத்தகைய முடிவு இலங்கையில் இருக்கின்ற விரல் விட்டு எண்ணக் கூடிய முஸ்லிம்களின் பிஸ்கட் நிறுவனங்களின் பிஸ்கட் வகைகளை மாத்திரமே இலங்கை முஸ்லிம்கள் தேடி வாங்குகின்ற முடிவுக்கு இலங்கை முஸ்லிம்களை கொண்டு நிறுத்தியிருக்கும்.........

நமது சமூகத்தின் விடிவுக்கு வழிக் காட்டுகின்ற அந்த முடிவு நாளடைவில் 'பைரஹா' கோழி இறைச்சியையும், அதனைப் போன்ற முஸ்லிம் நிறுவனங்களின் கோழி இறைச்சியை மாத்திரமே இலங்கை முஸ்லிம்கள் நுகர்வு செய்யும் மகோன்னத நிலையைத் தோற்றுவித்திருக்கும்........... 

ACJU வினர் முடிவு செய்திருக்கின்ற ஹலால் தரச் சான்றிதழ் பெற்றுக் கொள்கின்ற தகைமை முஸ்லிம்களுக்கு மாத்திரமே இருக்கிறதென்ற உத்திரவாதம் ஹலால் நிறுவனங்களை நாடி இலங்கை வருகின்ற முதலீட்டாளர்கள் இலங்கை முஸ்லிம் பங்குதாரர்களை தேடும் நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்தும் செய்கைக்கு வழிசெய்திருக்கும் ......

இலங்கை ஜம்மிய்யாவின் உறுதியான முடிவு எண்ணெய் ஆயுர்வேத உற்பத்திகளில் விடிவை எதிர் நோக்கியிருக்கின்ற  இலங்கை முஸ்லிம் வைத்தியர்களுக்கு தமது உற்பத்திப் பொருட்களை மத்திய கிழக்கு அல்லது ஐரோப்பிய சந்தைகளுக்கு அனுப்புகின்ற வாய்ப்புகள் உருவாக்கியிருக்கும்.......... 

இதனைப் போன்ற அல்லது இதனைவிடவும் ஆச்சரியமான பிரமாண்டமான மாறுதல்களை இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ள இருந்த வாய்ப்புகளை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் 'ரிவர்ஸ் கியர்'போட்ட தீர்மானம் தகர்த்துவிட்டது.

முஸ்லிம் அரசியல்வாதிகளின் சுயநல தீர்மானங்களின் காரணமாக முஸ்லிம்கள் அரசியல் அகதிகளாக மாறி நிற்கும் அபாயம் இன்று உருவாகிவிட்டது.

தமிழ் அரசியல் தலைமைகள் முஸ்லிம் அரசியல் தலைவர்களை நம்பத் தயாராக இல்லை.

நமது மத குருமார்களோ முண்டியடித்துக் கொண்டு அரசின் கால்களில் விழுந்துக் கொண்டிருக்கிறார்கள்.

உன் மொழி பேசும் தமிழனைக் காட்டிக் கொடுத்த நீ நாளை என்னை விட்டு வைப்பாய் என்று நான் எப்படி நம்புவது என்றோ என்னவோ 

சிங்கள அரசியல் தலைமைகள் முஸ்லிம் அரசியல்வாதிகளை கணக்கில் எடுத்து மதிப்பதில்லை.





எனினும்,ஒரு முக்கியமான விடயத்தை இலங்கையின் BODU BALA SENA வும்
ACJU யும் இலங்கை அரசும் மறந்துப் போனார்கள்.

அதென்ன அப்படி மறந்துப் போன விடயம்...


அல்லாஹ்வின் அருளினால் முஸ்லிம்கள் இலங்கையில்தான் சிறுபான்மையினர்.ஆனால், உலகத்தில் ......உலக நுகர்வு சந்தையில் அவர்கள் பெரும்பான்மையினர்.

அவர்களின் ஆதரவு இல்லாமல் இலங்கையின் எந்த உற்பத்தி நிறுவனமும் அசுர வளர்ச்சி காண முடியாது.

No comments:

Post a Comment