Wednesday, February 13, 2013

இஸ்லாத்தின் பெயரால் சிரியாவில் நடந்துக் கொண்டிருக்கும் கொடூரம்......




சிரியாவில் கொல்லப்பட்டவர்களின் தொகை 70,000 ஆக அதிகரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்பு..........

http://youtu.be/wdNWYTO7hqg

5 comments:

  1. ” இஸ்லாம் ”என்றால் சமாதானம் என்று அர்த்தம் என்று தமிழ்நாட்டில் மூலை முடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்யப்படகிறது. சவுதி அரேபியா தவிர வேறு எந்த அரபு நாடும் அமைதியாக உள்ளதா ?
    சிரியாவை மட்டும் பேசுவதற்கு ? எகிப்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை கற்பழிக்கப்பட்ட பெண்கள் என்தனை என்த தெரியாமல் இருக்கலாம். அரேபிய நாகரீகம் உலகத்திற்கு அழிவைத் தந்தது. அழிவை தந்து கொண்டிருக்கின்றது. அழிவை அழிவை மட்டுமே தரும். நிச்சயம்.

    ReplyDelete
  2. யோகம் தரும் கலை (முஸ்லீம்களுக்கு ஏற்கனவே இப்பயிற்சி உள்ளது என்பது பாராட்டத்தக்கது. )
    இன்று உலகம் பரபரப்பாகிவிட்டது. எந்த நேரமும் பதற்றம், மனச் சோர்வு, எரிச்சல், அவசரம் என ஒரே கவலையாகவே மாறிவிட்டது. காரணம் அந்த அளவுக்கு வேகமாக வாழ்க்கை ஓடுகிறது.
    ரயில் வண்டி போல தொடர் ஓட்டத்தை ஓடிக்கொண்டிருக்கிறோம். இப்படி ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையில் நாம் பலவற்றை இழந்திருக்கிறோம். குறிப்பாக நட்பு, உறவு வட்டாரங்களைப் பெருமளவில் இழந்துள்ளோம். வாழ்க்கையில் நாம் சந்தித்த மனிதர்களில் எத்தனை பேர் நண்பர்கள் என்பதை என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா? இல்லை. காரணம், அத்தனை சுலபத்தில் காலம் ஓடிவிடுவதும், தொடர்புகள் துண்டித்திருப்பதும்தான்.
    சுமார் 30 ஆண்டுகள் பின்னோக்கி பார்த்தோமேயானால் நம்மோடு பழகியவர்கள், சந்தித்தவர்கள் என பெரிய பட்டியலே இருக்கும். ஆனால் அவர்கள் பற்றிய நினைவுகளை அத்துடன் மூட்டைகட்டி வைத்திருப்போம். ஆபத்தில் உதவியவர்கள், முக்கியத் தருணங்களில் சந்தித்தவர்கள் அனைவரையும் மறந்து விட்டோம். தொடர்புகள் துண்டித்ததற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. ஆனால் அதை மீண்டும் புதுப்பிப்பதும் இயலாத காரியமாகிவிடுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் என்ன காரணம்? மனதை ஒருமைப்படுத்தும் தன்மை கிடையாது. எப்போதும் எதையாவது நினைத்து மனம் அலைபாய்வதுதான்.
    இதன் விளைவு மன அழுத்தம், மன உளைச்சல். அதற்கு நாம் இடம் அளிக்கக் கூடாது. "இயற்கை ஒரு கதவை சாத்தினால் மறு கதவைத் திறக்கும்' என்பதுபோல மனதை அமைதியாக்கினாலே நாம் ஆரோக்கியமாகவும், தெளிவாகவும் வாழக் கற்றுக்கொள்ளலாம். இன்று அடிக்கடி நடைபெற்றுவரும் பாலியல் குற்றங்களைப் பார்த்தால் அனைத்துமே திட்டமிடாத மன உந்தலில்தான் நடக்கின்றன என்று தெரியும். போதை, ஒரே சம்பவத்தைத் திரும்பத் திரும்ப நினைத்து ஏங்குதல் போன்றவை அவர்களுக்குள் தவறுசெய்யத் தூண்டுகின்றன.

    இறுதியில், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மன நோயாளிகளாகவே மாறியிருப்பதைக் காண முடிகிறது. இதற்கெல்லாம் காரணம் நமது வாழ்க்கை நெறிமுறைகள் தடம் மாறிச் செல்வதுதான்.

    விலகிச் செல்லும் பாதையில் பயணிப்பதற்குக் காரணம் தவறான வழிகாட்டல்தான். இதெல்லாம் தெரிந்துதான் நம் முன்னோர் சில வழிமுறைகளை வகுத்து வைத்திருக்கின்றனர். அவை தியானம், யோகம் என அழைக்கப்படுகிறது.

    யோகக் கலையில் லட்சக்கணக்கான அம்சங்கள் இருக்கின்றன. அவற்றை முறையாகக் கற்று அனுபவத்தின் அடிப்படையில் 100 வகையான யோகங்களை மட்டுமே நாம் பயன்பாட்டில் வைத்திருக்கிறோம்.

    இவைதான் அடிப்படை யோகக் கலை. இதை முறையாகக் கற்றாலே வாழ்க்கையில் உடலளவிலும், மனதளவிலும் மிளிர முடியும். ஆற்றலைப் பயனுள்ள வகையில் செலவழித்தாலே போதுமானது. வீணாகப் பயப்படுதல், சினங்கொள்ளல் போன்றவை தேவையற்றவை. இதைத் தடுக்க நாம் முறையான சில பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

    வாழ்க்கைக்கு எது தேவை என்பதை நாமே திட்டமிட்டுச் செயல்படுத்த முடியும். உடனடியாகப் பலன்தரும் செயல்களைத் திட்டமிட்டு வேலைகளைச் சுருக்கி, பிரணாயாமம், தியானம் போன்றவற்றைக் கடமையாக்கிக் கொண்டால் வாழ்க்கைக்குத் தேவையான சக்திகளை நாம் பெற முடியும்.

    தினசரிச் செயல்பாட்டில் இதுபோன்ற அம்சங்களை நாம் முறையாகப் பின்பற்றினால் மிகத் தெளிவான முடிவை மேற்கொள்ளும் பக்குவம் ஏற்பட்டுவிடும். கவலை, கோபம், காமம், குரோதம் என பல்வேறு செயல்களைக் கட்டுப்படுத்த இன்றைய காலகட்டத்தில் அமைதியான பிரார்த்தனை தேவைப்படுகிறது. அதைத் தேர்வு செய்து பின்பற்றினாலே கவலை மறைந்துவிடும்
    நன்றி தினமணி 15-02-2013.

    ReplyDelete
  3. அரேபியாவை சற்று மறந்து தமிழ் இலக்கியம் நினைப்போம்.
    தினமணி -

    ""ஊருணி நிறையவும் உதவும் மாடு உயர்

    பார்கெழு பயன்மரம் பழுத்தற்று ஆகவும்

    கார்மழை பொழியவும் கழனி யாய்நதி

    வார்புனல் பெருகவும் மறுக்கின்றார்கள் யார்?''

    மேலே கண்டது கம்பராமாயணம் - அயோத்தியா காண்டம் மந்திரப்படலத்தில் வரும் ஒரு பாடல். இதன்கண், திருக்குறள் ஒப்புரவு அதிகாரத்தில் வரும் கீழ்க்காணும் முதல் மூன்று (215, 216, 211) குறப்பாவின் கருத்துகளை மூன்றடியினும் கம்பர் முறையே அமைத்துக் கூறியுள்ள திறனைக் காணலாம்.

    ÷மேலும், அதே அதிகாரத்தில் 216, 217-ஆவது குறட்பாக்களில் வரும் "மரம்' எனும் சொல்லை அதே கம்பராமாயணப் பாடலில் கம்பர் அமைத்துள்ள அழகையும் கண்டு தோய்ந்து மகிழலாம்.



    ""ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

    பேரறி வாளன் திரு'' (215)

    ""பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

    நயனுடை யான்கண் படின்'' (216)

    ""கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

    என்ஆற்றுங் கொல்லோ உலகு'' (211)

    ""மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
    பெருந்தகை யான்கண் படின்'' (217)

    கவிச்சக்கரவர்த்தி, வள்ளுவப் பேராசானின் குறட்பாக்களை எந்த அளவுக்குக் கற்றுத் தெளிந்து, உள்வாங்கி, ஆழமும் அழுகும் கண்டு தன்னுடைய பாடல்களில் புகுத்தியிருக்கிறார் என்பதை இந்த ஒரு பாடல் மூலம் அறியலாம்.
    2.ஊன்உண்டு உழுவை நிறம் பெறூஉம்; நீர் நிலத்துப்

    புல்லினான் இன்புறூஉம் காலேயம்; நெல்லின்

    அரிசியான் இன்புறூஉம் கீழ்எல்லாம்; தம்தம்

    வரிசையான் இன்புறூஉம் மேல்

    (பாடல்-65)

    விலங்குகளின் இறைச்சியை உண்டு, புலி செழுமை பெறும். கால்நடைகள், நீர் நிறைந்த நிலத்தில் உள்ள புல்லை மேய்ந்து செழிக்கும். கீழ்மக்கள், அரிசி உணவை உண்டு செழிப்பர். மேலோரோ அரிய செயல்களைச் செய்து செழிப்பர். (புலிக்கு இறைச்சியும், கால்நடைகளுக்குப் புல்லும், கீழ்மக்களுக்கு அரிசியும் உணவாக இருக்கின்றன. அறிஞர்களுக்கோ உயர்ந்த செயல்களே உணவாக இருக்கின்றனவாம்!)

    3.கவிராயர்கள்

    By கந்தழி

    First Published : 11 November 2012 01:50 AM IST

    ஓருமுறை கவிவாணர்கள் பலர் கவி காளமேகத்தை இழிவுபடுத்த நினைத்தனர். அவ்வாறு நினைத்த அவர்கள் அனைவரும் சூழ்ந்திருந்த அரசவையில் உயர்ந்த பீடங்களில் ஏறி அமர்ந்துகொண்டு காளமேகத்தை அலட்சியமாகப் பார்த்தனர்.

    அரசவைக்குள் நுழைந்த காளமேகப் புலவர், அங்கு நின்றிருந்த சேவகனைப் பார்த்து, ""யார் இவர்கள், மிக உயரத்தில் அமர்ந்திருக்கிறார்களே?'' என்று கேட்டார்.

    அதற்கு அந்த சேவகன், கவிவாணர்கள் முன்பே அவனிடம் கூறியபடி, ""கவிராயர்கள்'' என்று பதில் கூறினான். இதைக் கேட்ட காளமேகம், உடனே ஒரு பாடலைப் பாடினார்.

    ராயர்கள் என்றால் "ராஜர்கள்' என்று பொருள். சம்ஸ்கிருதத்தில் "கவி' என்ற சொல்லுக்குக் குரங்கு என்ற பொருளும் உண்டு. தமிழில் "கபி' என்றால் குரங்கு. தமிழில் கபி என்பதுதான் கவி என மருவிற்று.

    "இவர்கள் புவிராயர்கள் போற்றும் கவிராயர்கள் தான் என்று நினைத்திருந்தேன். ஆனால் நீங்கள் உங்களைக் "கவி' ராயர்கள் என்று கூறுகிறீர்கள். நீங்கள் குரங்குகளைப் போல் உயரத்தில் இருந்தால் மட்டும் போதுமா? குரங்குக்கு இருக்க வேண்டிய வால், நீண்ட வயிறு, முன்னிரண்டு கால், உட்குழிந்த கண்கள் போன்ற மற்ற அங்கங்களும் அழகும் இருக்க வேண்டாமா?' என்று காளமேகம் கேட்டவுடன், காளமேகத்தை இழிவுபடுத்த நினைத்த கவிவாணர்கள் தாங்கள் அவமானப்பட்டு "கவி'வாணர்களாகித் தலைகுனிந்தனர்.



    ""வாலெங்கே? நீண்ட வயிறெங்கே? முன்னிரண்டு

    காலெங்கே? உட்குழிந்த கண்ணெங்கே? - சாலப்

    புவிராயர் போற்றும் புலவீர்காள்! நீவிர்

    "கவி'ராயர் என்றிருந்தக் கால்!''

    ReplyDelete
  4. இஸ்லாத்தின் பெயரால் சிரியாவில் நடந்துக் கொண்டிருக்கும் கொடூரம்......

    சிரியாவின் ஆட்சியாளர்கள் நோ்மையற்றவர்கள் என்று அந்த நாட்டு மக்கள் - இந்தியாவில் உள்ளது போல் ஜனநாயரக முறைப்படி தோ்வு செய்த ஆட்சியாளர்கள் மற்றும் ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம் வேண்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். உலக எடுத்துக் காட்டு முகம்மதுதான் அவர்கள் கேட்ட படித்த அறிந்த ஒரே உதாரணம். அதன்படி -வன்முறை -வாளால் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் ஆக அரசுக்கு ஆதரவாக ராணுவப் படைகளும் ஆட்சிமாற்றம் வேண்டும் மக்களுக்கு எதிரரக ஆயதப்போர் - உட்நாட்டுக் கலகம் நடைபெற்று வருகிறது.”காந்தியன் முறை” - யில் ஆட்சியாளர்களை எதிர்க்க அந்த மக்களுக்கு தெரியாது.எனவே ஆயத போராட்டம்.நிலைமை இப்படியிருக்க தாங்கள் அளித்துள்ள ”தலைப்பு”
    நியாயமானதுதானா ? இஸ்லாம் என்ற அரேபிய சமயத்திற்கும் உள்நாட்டு போருக்கும் என்ற சம்பந்தம் என்று தெரியவில்லை.

    ReplyDelete
  5. பெக்ரெயின் நாட்டிலும் ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் கலவரம் ஆரம்பித்து விட்டது.பாக்கிஸ்தானில் நிலைமையைப் படிப்போமே!
    பாகிஸ்தானின் குவெட்டா நகரை ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் வரை, குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய மாட்டோம் என்று, ஷியா பிரிவு முஸ்லிம்கள் மறுத்துள்ளனர்.

    பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் ஷியா பிரிவு முஸ்லிம்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த சனிக்கிழமை குவெட்டாவின் ஹஜாரா நகரத்தில் பல்வேறு இடங்களில் கார் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

    இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 92-ஆக உயர்ந்துள்ளது. தடைசெய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-ஜாங்வி இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இந்த சம்பவம் ஷியா பிரிவு முஸ்லிம்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    போர்க்கொடி: குவெட்டா நகர் முழுவதையும் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதுவரை, குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய மாட்டோம் என்று அவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். நூற்றுக்கணக்கான ஷியா பிரிவு முஸ்லிம்கள், பலியானவர்களின் உடல்களை வைத்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக 48 மணி நேரத்துக்குள் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அரசுக்கு கெடு விதித்துள்ளனர்.

    பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு அமைப்புகள் சில ஆதரவு அளித்து வருகின்றன என்று ஷியா பிரிவினர் அப்போது குற்றம்சாட்டினர். குவெட்டா நகர போலீஸ் அதிகாரி வஜிர் கான் நசீர் கூறுகையில், ""ஷியா பிரிவு தலைவர்களை சமாதானப்படுத்தி, உடல்களை அடக்கம் செய்ய வைப்பதற்காக அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்,'' என்று தெரிவித்தார்.

    ஆனால், அதிகாரிகளின் இந்த சமாதானத்தை ஷியா பிரிவு தலைவர்கள் ஏற்கவில்லை. ""பயங்கரவாதிகளை குறி வைத்து ராணுவ நடவடிக்கை தொடங்கும் வரை, குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய மாட்டோம்,'' என்று ஷியா தலைவர் கய்யூம் சங்கேஜி தெரிவித்தார்.

    ஷியா பிரிவுகள் கூட்டணியின் செய்தித் தொடர்பாளரான சயீத் முகமது ஹடி அளித்த பேட்டியில், ""குவெட்டாவில் ஷியா பிரிவினருக்கு பாதுகாப்பு வேண்டும். இந்த நகரத்தின் கட்டுப்பாட்டை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும். பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,''என்று வலியுறுத்தினார்.
    ஷியா பிரிவு முஸ்லீம்கள் பிற முஸ்லீம்களின் பார்வையில் ” கா பீ ர் ” ஆகிப்போனார்களோ ! என்னக் கொடூரம். அகமதி காதியானி முஸ்லீம்கள் என்றால் வேறுபாடு தெரிகின்றது. ஷியாப்பிரிவு சன்னிபிரிவு என்றால் எப்படி இத்தகைய பிரிவுகள் வந்தது என்று தெரியவில்லை. ஆனால் சென்னை மக்கா மஸஜித் செமசுதீன் இந்தஷியாக்களுக்கு என்ன திமீர். நமது கண்ணமணி நபித்தோழர்கள் கல்லறையின் முன் நின்று கடுமையாக அவர்களை திட்டுகிறார்கள் . இது என்ன நியாயம் என்று எங்கள் ஊரில் அரபி பள்ளி ஆண்டுவிழாவில் பேசினார். மேலும் இந்துக்களும் கிறிஸதவர்களும் வழிகேடர்கள். நரகவாசிகள் என்று பேசியதால் காவல் துறை அவரை தடுத்து வீட்டுக்கு ஒழுங்காகப் போய் சேர் என்று அனுப்பி வைத்தது.

    ReplyDelete