Friday, May 24, 2013

நெஞ்சு நெகிழ்ந்த நன்றியுடன்..........



சஹாபாக்கள் என்று நாம் பெரு மதிப்பு வைத்திருக்கும் பெரியார்களின் மத்தியில் ஒளிந்து தமது தவறுகளை மறைத்துக் கொண்டிருக்கும் நய வஞ்சகர்களின் சுயரூபத்தை நாம் வெளிப்படுத்தியதினால் நம்முடன் முரண் பட்ட இணைய நண்பர்  'அரபுத் தமிழன்' தனது தொடர்பை அஹ்லுல்பைத் தமிழ்த் தளத்துடன் துண்டித்துக் கொண்டார்.

இறைவனை அவனது தூய வடிவில் நாம் விசுவாசித்ததை - நாம் விசுவாசிக்கும் இறைவன் அராபிய இறைவன் என்றுக் குழம்பிப் போன நமது இணைய நண்பர் அன்புராஜும் தனது மதிப்புக்குரிய தொடர்பை அஹ்லுல்பைத் தமிழ்த் தளத்துடன் முறித்துக் கொண்டார்.



அஹ்லுல்பைத் தமிழ்த் தளத்தின் பெறுமதிமிக்க பேரிழப்புகள் இவை என்பது எனது கருத்து.

நிஜத்தில் இதுதான் வாழ்க்கை.

வாழ்க்கைப் பயணத்தில் நிறையப்பேர் வருவார்கள்.போவார்கள்.

ஆனால், நமது இந்தப் பயணத்தில் ஒரு வித்தியாசம் காத்திருக்கிறது.

இன்ஷா அல்லாஹ்......இந்த இருவரும் என்றாவது ஒரு நாள் நம்முடன் மீண்டும் இணைவார்கள்.

அந்த நல்ல நாளுக்காக அஹ்லுல்பைத் தமிழ்த் தளம் பொறுமையுடன் காத்திருக்கும்.

நல்ல நட்புகளின் இழப்புகளை நாம் ஒருபோதும் விரும்புவதில்லை.

அகிலங்களின் இரட்சகன் அல்லாஹ்வின் நல்லருள் உங்கள் இருவருக்கும் ஈருலகிலும் கிடைக்கப் பிரார்த்திக்கிறோம்.


1 comment:

  1. தங்களது கடிதம் கட்டுரை கருத்துக்கள் பச்சை வெளிவேசம் .நயவஞ்சகம்.தொளுத கையுள்ளும் படை ஒடுங்கும்” என்பார்களே அதற்கு நல்ல உதாரணம்.

    ReplyDelete