Monday, July 14, 2014

ISIS பெண் கடவுளின் இராச்சியத்தில் இராசாயன ஆயுதங்கள்?

ISIS பெண் கடவுளின் குழந்தைகளின் கைகளில் ISIS இராச்சியத்தைக் காக்க இராசாயன ஆயுதங்கள் வழங்கப் பட்டுவிட்டன என்பதுதான் இப்போதைய லேட்டஸ்ட் செய்தி.

இதனை மக்கள் மயப்படுத்தும் இலுமினாட்டி ஊடகத்தின் கானோளியினை உங்களது ஆய்வுக்காக பதிவேற்றுகிறோம்.

லுமினாட்டிகளின் தந்திரத்துக்கு பலியாகி குவைத்தை ஆக்கிரமித்தார் நமது அரபு சிங்கம் சதாம் ஹுசைன்.

சதுரங்க விளையாட்டில் காய்களை நகர்த்தும் சாணக்கியத்தில் சில தருணங்களில் எதிர் அணி நகர்த்த வேண்டிய காயை நகர்த்தினாலும் வெற்றி அல்லது நகர்த்தாது தவிர்ந்தாலும் வெற்றி என்கிற தருணங்கள் கனிவதுண்டு.

அவ்வாறானதொரு பொண்ணான தருணத்தை சதாம் நாநாவின் குவைத் ஆக்கிரமிப்பில் சுதந்திர சிற்பிகள் செதுக்கிக் கொண்டார்கள்.


சதாமின் அந்த ஆக்கிரமிப்பு நேட்டோ நாடுகளின் உதவியில் தங்கி இருக்கும் நிலைக்கு மத்திய கிழக்கின் சதாமின் எதிரணிகளுக்கும் நானா சதாமுக்கும் ஒரே நேரத்தில் உருவானது.

அதன் பின்னர் அந்த சந்தர்ப்பத்தை இலாவகமாக உபயோகித்துக் கொண்ட அமெரிக்க தலைமையிலான நேட்டோ நாடுகள் ஈராக்கை அலட்சியப் படுத்தி தனிமைப் படுத்திய நிலையில் அரபுலகை ஆக்கிரமித்து கபளீகரம் செய்த கதை உங்களுக்குத் தெரியும்.

சுதந்திர சிற்பிகளின் அந்த ஆட்டத்தில் அவர்களுக்கு சிம்ம சொற்பனமாக எகிப்தில் நிழலாக இயங்கி வந்த இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு இருந்து வந்தது.

நிழலான அந்த அமைப்பை நிஜத்துக்கு கொண்டு வரும் நோக்கில் சுதந்திர சிற்பிகள் டியூனிசியாவை மையமாகக் கொண்டு எரியூட்டி கொல்லப் பட்ட ஒரு இளைஞனின் செத்த உடம்பைக் கொண்டு தமிழ் சினிமா பாணியில் அரபு வசந்தத்தை தங்களது ஊடக வலையமைப்பின் துணையுடன் அரங்கேற்றினர்.

யதார்த்தம் உணராது கனவில் கண்ட கிலாபா அரசாட்சி போதையில் கிறங்கி இருந்த முஸ்லிம்கள் அனைவரும் நான் முந்தி நீ முந்தி என்று போட்டி போட்டுக் கொண்டு திசை காட்டும் தலைவன் இல்லாத அந்த வசந்தப் புரட்சிக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்ட நிலையில் அந்த அலையில் அள்ளுண்டு போயினர்.

அவசர அவசரமாக சுதந்திர சிற்பிகளின் இலுமினாட்டி அமைப்புக்கு சவாலான நிலையில் நிழலாக இருந்த எகிப்தின் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு அரபு வசந்தத்தின் வெற்றி தனக்குத்தான் சொந்தம் என்று கூறிய நிலையில் இலுமினாட்டிகள் விரித்த வலையில் பொசுக்கென்று வீழ்ந்துப் போனது.

கொஞ்ச காலம் செல்ல நிழலான நிலையில் வலுவாக எகிப்தில் செயற்பட்டுக் கொண்டிருந்த இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு நிழல் துறந்து நிஜமாக தன்னை துகிலுரித்து வெளியே வர, சட்டு புட்டென்று இன்னொரு மக்கள் புரட்சி மூலம் அத்தனை இஹ்வான்களும் கைது செய்யப் பட்டு அவசர அவசரமாக படு கொலை செய்யப் பட்ட நிலையில் எகிப்தில் மெலிதாக துளிர் விட்டு தளிரத் துவங்கிய இஸ்லாமிய கிலாபா மீண்டும் கனவாக மாறிப் போனது.

இஹ்வான்களை முழுமையாக அடக்கி ஒடுக்கியதட்குப் பின்னர் சுதந்திர சிற்பிகளுக்கும் அவர்களது இலுமினாட்டிய சக்திகளுக்கும் சவாலாக இருந்த அடுத்த அமைப்பாக அஹ்லுல்பைத் நேசர்களின் தேசமான ஈரான் இருந்தது.

ஈரானுக்கு எதிராக யுத்தத்தில் நேரடியாக இறங்க எந்த நாடும் தயாராக இல்லை.

அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை.

ஈரானை நேரடியாக தாக்கும் நாட்டுடன் ஈரான் நேருக்கு நேராக சமர் செய்யும் வலிமையுடன் இருக்கிறது.

ஆதலினால், ஆப்கானிஸ்தானின் தலிபான்களைக் கொண்டு ஈரானுடன் ஷிஆ சுன்னி கலகமொன்றை உருவாக்க இலுமினாட்டிகள் முயன்றார்கள்.

முயற்சி வெற்றியளிக்கவில்லை.

பாகிஸ்தானை தலைமைப் படுத்தி அவ்வாறான கலகமொன்றுக்கு வித்திட்டார்கள்.

ஊஹும்.......அதுவும் சரிவரவில்லை.

துருக்கியை முஸ்லிம் உலகின் தலைமை நாடு என்று கூறி துருக்கியின் தலைமையில் ஒரு கலகத்துக்கு முயன்றுப் பார்த்தார்கள்.

அதுவும் சரிவரவில்லை.

அதன் பின்னர் லெபனான், சிரியா இரண்டையும் முடித்து விட்டு ஈரானுடன் நேரடியாக மோதுவது என்ற திட்டத்தில் FSA பன்னாட்டு போராளிகளின் துணையுடன் சிரியாவில் களம் இறங்கினர்.

அதற்கு நேட்டோ நாடுகளின் அனைத்து உதவிகளும் பகிரங்கமாக வழங்கப்பட்டன.

சிரியாவுக்கு எதிராக சிரியாவில் நிலைகொண்டுள்ள வெளிநாட்டு போர்வீரர்களை வெற்றி கொள்வதில்தான் ஈரானின் பாதுகாப்பும் தன்னிருப்பும் தங்கி இருப்பதை உணர்ந்த நிலையில் ஈரானின் செல்லப் பிள்ளைகளான ஹிஸ்புல்லாக்கள் சிரியாவில் FSA போராளிகளுக்கு எதிராகவும் சிரியாவின் அரசுக்கு ஆதரவாகவும் களம் இறங்கி சமராடத் துவங்கினர்.

வருடங்கள் பல உருண்டோடியும் வெற்றி தோல்விகள் இல்லாத நிலையில் அந்த போராட்டங்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கும் கதை உங்களுக்குத் தெரியும்.

முடிவில்லாத இந்த சமர் சாதாரண அராபிய மக்களிடையே ஈரானுக்கான ஆதரவு போக்கை கொண்டுவரத் துவங்க இந்த வெகு ஜன மாற்றம் அரபு நாட்டு ஆட்சியாளர்களை ஈரானுடனான தங்களது இராஜதந்திர உறவை பேணும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியது.

இந்நிலையில்தான் மத்திய கிழக்கில் சுதந்திர சிற்பிகளின் இலுமினாட்டி அமைப்பின் தன்னிருப்பை மீண்டும் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில்தான் அவர்களது பன்னாட்டு போர் வீரர்களின் படையான ISIS அமைப்பைக் கொண்டு தனி நாடு கோரிக்கையை இஸ்லாமிய கிலாபா போர்வையில் பிரகடனப் படுத்தியிருக்கிறார்கள்.

ISIS கடவுளின் குழந்தைகளின் கைகளில் இப்பொழுது இராசாயன ஆயுதங்களும் விளையாடுவதட்கு கிடைத்து விட்டன என்ற செய்தி இப்பொழுது மக்கள் மயப்படுத்தப் படுகிறது.

மிகவும் பயங்கரமான ISIS இராஜ்ஜியத்தின் காவலர்கள் இன்னும் பயங்கரமானவர்களாக மாறி நிற்கிறார்கள் என்ற செய்தி இங்கு உலகுக்கும் விஷேசமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கும் சொல்லப் படுகிறது.
ஆகவே, அவர்களை வெற்றி கொள்ள அமெரிக்காவின் நேட்டோ நாடுகளின் உதவி அவசியம் என்ற தோரணை உருவாக்கப் படுகிறது.

அதாவது, அரபு சிங்கம் சதாம் நானா தோற்றுப் போன அதே பழைய பாணிதான் இப்பொழுதும் கையாளப் படுகிறது.

நேட்டோ நாடுகளின் உதவியை மத்திய கிழக்கு அரபு நாடுகள் மறுத்தால் அவர்களை இலுமினாட்டிகளின் பெண் கடவுளின் குழந்தைகளான ISIS விடுதலை வீரர்கள் ஆக்கிரமித்து அந்த நாடுகளை ISIS சாம்ராஜ்யத்துக்குள் இணைத்துக் கொள்வார்கள் என்ற பயமுறுத்தல் சொல்லாமல் சொல்லப் படுகிறது.

அந்த பயமுறுத்தலுக்கு மத்திய கிழக்கு அரபு தேசங்கள் பணிந்து நேட்டோ நாடுகளின் நிபந்தனைகளுக்கு சம்மதித்தால்?

சில காலம் செல்ல சதாம் நானாவுக்கு நடந்த அதே முடிவு இஸ்லாமிய கிலாபாவின் கலீபாவுக்கும் நடக்கும்.

சரி......

நேட்டோ நாடுகளின் பயமுறுத்தலுக்கு மத்திய கிழக்கின் இராஜாக்கள் பணிய மறுத்தால்?

விடை மிக இலகுவானது.

ISIS கடவுளின் செல்லக் குழந்தைகள் இலுமினாட்டிகளின் நிபந்தனைகளுக்கு பணிய மறுக்கும் நாட்டில் ஜிஹாத் கழகம் அமைத்து இஸ்லாமிய கிலாபா கலகம் செய்து லிபியாவின் தலைவர் கேர்ணல் கடாபிக்கு செய்த முடிவை செய்துக் காட்டுவார்கள்.

அவ்வளவுதான்.

No comments:

Post a Comment