Wednesday, May 4, 2011

ஒசாமாவின் பூதவுடல் இஸ்லாமிய ஷரீஆவுக்கு முரணாக ஜல சமாதி செய்யப் பட்டது!

ஒசாமாவின் பூதவுடல் இஸ்லாமிய ஷரீஆவுக்கு முரணாக ஜல சமாதி    செய்யப் பட்டது!
அல் அஸ்கர் சர்வகலாசாலையின் இஸ்லாமிய அறிஞர்அஹ்மத் அல் தாயிப்


எகிப்து அல் அஸ்கர் இஸ்லாமிய சர்வகலாசாலையின் தலைமைத்துவ அறிஞர்அஹ்மத் அல் தாயிப் கடலில் வீசி எறியப் பட்ட ஒசாமா பின் லேடனின் அமெரிக்க 'ஜல சமாதி செய்கையை ' வன்மையாக கண்டித்துள்ளார்.

ஜல சமாதி செய்தல் என்கிற பெயரில் கடலில்  வீசி எறியப் பட்ட ஒசாமாவின் பூத உடல் சம்பந்தமான அமெரிக்காவின் செய்கையானது "மனித நேயத்துக்கும், இஸ்லாமிய சட்டவரைக்கும் உடன் பாடில்லாத மிலேச்சத்தனமான செய்கையாகும் " என்று அவர் வர்ணித்து உள்ளார்.


ஒரு மரணத்தின்   பின்னர் அந்தப்  பூதவுடலுக்கு  அந்த சமுதாயத்தினரின் மத நம்பிக்கைகளுக்கும், அவர்களது மத அனுஷ்டானங்களுக்கும்    மதிப்பு அளிக்கின்ற வகையில் பூரண கௌரவம் கொடுக்கப் படல் வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார் .

சென்ற ஞாயிறு இரவு அமெரிக்காவின் அதிபர் பரக் ஒபாமா தொலைக்காட்சியில் தோன்றி இரண்டு நாட்களுக்கு முன்னால் அவர் ஒசாமா பின் லேடனைக் கொலை செய்வதற்கு அமெரிக்க தரப்புக்கு அனுமதி வழங்கியதாகவும், அவரது விஷேட அனுமதியை சிரமேட் கொண்டு துரிதமாக செயல் பட்ட  அமெரிக்க விஷேச அதிரடிப் படையினர் மூன்று நாட்களுக்குள் பாகிஸ்தானில் வைத்து அதிரடி தாக்குதல் மூலமாக ஒசாமா பின் லேடனைக் கொலை செய்த்ததாகவும்  அறிவித்தார். 

அதன் பின்னர் கொலை செய்யப் பட்ட ஒசாமா பின் லேடனின் பூதவுடல் இஸ்லாமிய சடங்குகள் பூரணமாக நிறை வேற்றப் பட்டு கடலில் ஜல சமாதி  செய்யப் பட்டதாக  அமெரிக்காவின் மூத்த இராணுவ  அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

 கொலை செய்யப் பட்ட ஒசாமாவின் பாகிஸ்தான் வீடு.

தரையில் அவரது உடல் நல் அடக்கம் செய்யப் படும் பட்சத்தில்  முஸ்லிம்கள் அந்த இடத்தை நினைவு மண்டபமாக மாற்றிக் கொள்ளும் அபாயம் இருந்ததாகவும், எனினும், ஒசாமாவின் பூதவுடலை ஏற்றுக் கொள்ள எந்தவொரு நாடும் தயாராக இருக்க வில்லை என்றும் அதனாலேயே அவரது இறுதிக் கிரிகைகளை  வட அராபிய நடுக் கடலில் நடத்தவேண்டிய சூழல் உருவானதாகவும் அந்த இராணுவா அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

எகிப்து அல் அஸ்கர் இஸ்லாமிய சர்வகலாசாலையின் தலைமைத்துவ அறிஞர்அஹ்மத் அல் தாயிப் உடைய  கருத்துப்படி   கடலில் ஜல சமாதி செய்வது என்பது  இஸ்லாமிய நடைமுறை செய்கை அல்ல.

எனவே, இஸ்லாமிய கிலாபாவின்  மீள் எழுச்சிக்காக அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய அமெரிக்காவுடன் ஒன்றிணைந்து போராடிய  ஒசாமா பின் லேடனின் பூதவுடல் இறுதியில் இஸ்லாமிய ஷரீஆவுக்கு முரணான முறையிலேயே ஜல சமாதி செய்யப் பட்டிருக்கிறது.

நிஜமான இஸ்லாமியப் போராட்டம் என்பது 'அஹ்லுல்பைத்' இமாம்களின் வழிக்காட்டுதல்  இன்றி நெறிப் படுத்த முடியாதது என்கிற உண்மை ஒசாமா பின் லேடனின் ஏமாந்துப் போன தியாகக் கதையில் ஒளிந்திருக்கிறது.

அவரது தன்னலமில்லா இஸ்லாமிய ஜிஹாத் உணர்வுகளை உசுப்பேற்றித்தான் அவரை, இஸ்லாத்தின் எதிரிகள் தமக்கு ஏற்றவாறு மிகவும் அற்புதமாக பாவித்துக் கொண்டார்கள்.

அவரைப் போலவே இன்று பல்லாயிரக் கணக்கான இஸ்லாமிய  இளைஞர்கள்  அமெரிக்க பின் புலத்தில் நெறிப்படுத்தப் படுகின்ற சவூதி ஆதரவு இஸ்லாமிய இயக்கங்களினால் தவறாக வழி நடாத்தப் பட்டுக் கொண்டு  இருக்கிறார்கள்.

நாளை அவர்களுக்கும் இன்று ஒசாமா பின் லேடனுக்கு நடந்த கதை தான் நடக்கப் போகிறது.

ஒரு சிறு வித்தியாசம்.

அவர்கள் இவரைப் போல பேசப் படப் போவது இல்லை.

1 comment:

  1. Bin Laden is no Mumin or Muslim.It is dangerous to stamp BinLaden as " Hero /Redeemer of Islam ". He is no better than a Arabian Thug/Rubbian/terrorist/in Tamil a " Khadayan ".

    ReplyDelete