Sunday, May 22, 2011

"தஹ்லீம்" குர்ஆணை கூட மொழி பெயர்த்து வயிறு வளர்க்கும் இலங்கை ஜமாத்தே இஸ்லாமி...???!!!"


"தஹ்லீம்" குர்ஆணை கூட மொழி பெயர்த்து வயிறு வளர்க்கும் இலங்கை ஜமாத்தே இஸ்லாமி.... 

அதிர்ச்சியாக இருக்கிறதா?


ஆனால், அதுதான் உண்மை.

எமக்குத் தெரிந்த நிறைய மதரசாக்களில் தஹ்லீம் குரானை குழந்தைகளுக்கு இலவசமாக வழங்குகிறார்கள்.  

"இது எப்படி சாத்தியம்?" என்று ஆச்சரியமாக ஒரு மதரசாவின் நிர்வாகி மௌலவியிடம் கேட்டேன்.

"நான் மரண வீடுகளுக்கு சென்றால் அந்த வீட்டில் உள்ளவர்களிடம் அந்த மையத்தின் பெயரில் சில தஹ்லீம் குரான்களை வாங்கித் தருமாறு வேண்டுவேன்." என்ற அந்த மௌலவி தொடர்ந்தார் "அந்த மய்யித்து வீட்டார்களும் மகிழ்ச்சியுடன் தஹ்லீம் குரானை அச்சிட்டு   தருவார்கள்.ஏனெனில், அவர்கள் அச்சிட்டு தருகின்ற குரானைக் கொண்டு எந்தக் குழந்தையாவது ஒரு வசனத்தை பாடமாக்கினால் அந்த நன்மைகள் அந்த மய்யித்துக்கு தொடர்ந்து கிடைக்கும் அல்லவா?" என்று அவர் சொன்னார்.

சாதாரண பாமர முஸ்லிம்கள் தஹ்லீம் குரான்களை தாராளமாக அச்சிட்டு இலவசமாக விநியோகிக்கும் இத்தகைய நல்ல செயல்களுக்கு "ஆப்பு" வைக்கும் வேலையை ஜமாத்தே இஸ்லாமி 'பதிப்புரிமை" என்ற பெயரில் செய்து விட்டது.

இதைவிட இழிவான நிலைக்கு இனி அவர்களால் இறங்கவே முடியாது.

 இலங்கை ஜமாத்தே இஸ்லாமி என்றால் இலங்கையில் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.

வானொலியில் அவர்களது விளம்பரங்கள் தனித்தன்மையுடன் ஒலிக்கும்.

"கவனியுங்கள்...பதின் ஏழு படிகள் ஏறி வரவேண்டிய பில்டிங் " என்று விசேஷமாக அறிவுறுத்தி வாடிக்கையாளர்களை அடுத்து அண்டியிருக்கும் புத்தக கடைகளுக்கு போகாமல் பார்த்துக் கொள்வார்கள் என்றால் அவர்களின் சாமர்த்தியம் என்ன வென்று உங்களுக்கு விளங்கிப் போகும்.


('அண்டை வீட்டுக்காரனை நேசி.....அவன் நலனில் அக்கறைக் கொள் ' என்பது போன்ற எமது உபதேசங்கள் எல்லாம் வெறும் மேடைப் பேச்சுகள். எங்களது செயல்களில் அவைகளை நீங்கள் எதிர்பார்ப்பது என்பது எங்களது சாமர்த்தியத்தைப் புரிந்துக் கொள்ளாத உங்களது அறியாமையைக் காட்டுகிறதே தவிர நாம் சொல்லும் இஸ்லாத்தை அல்ல)

உங்களுக்கு தேவையான எல்லா வகையான 'கிதாபுகளும்" அவர்களது புக் சொப்பில் கிடைக்கும்.

தீனுல் இஸ்லாத்தில் இருந்து குடிகாரக் கவிஞர் கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்து மதம்" என்கிற கூத்தாடிக் கவிஞனின் "உளறலும்" அங்கே இருக்கும் புத்தக அலுமாரியில் விற்பனைக்கு இருக்கும்.

நாளை, சல்மான் ருஸ்தியின் "சாத்தானிய வசனங்களும்' மாணவர்கள் "ஆய்வு" செய்யும் நோக்கில் விற்கப் பட்டாலும் ஆச்சரியம் இல்லை.

ஏன் தெரியுமா?

மிகவும் மலிவான விலையில் எங்களது பச்சிளம் பாலகர்கள் அல் குரானை ஓதுவதற்கு இலகுவாக இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் விநியோகிக்கப் பட்டுக் கொண்டிருந்த தஹ்லீம் குரானை இப்பொழுது அவர்கள் தங்களது 'சியோனிச' பிடிக்குள் கொண்டு வந்து இருக்கிறார்கள்.

அவர்களது பிரமாண்டமான புக் சொப்பில் தஹ்லீம் குரான் தமிழ் மொழியில் மொழி பெயர்த்த நிலையில் விற்பனைக்கு ஏங்கிக் காத்துக் கிடக்கிறது.

இதில் அதிர்ச்சியான விடயம் என்ன தெரியுமா?

இந்த மொழி பெயர்ப்பை "இஸ்லாமிய புக் ஹவுஸ்" கொபி ரைட் செய்துக் கொண்டு அதனை இன்னொருவர் அச்சடிக்க முடியாதவகையில் 'தத்து' எடுத்து இருக்கிறது.

தஹ்லீம் குரானின் ஆசிரியர் பெரியவர் பாஸி ஆலிம் சாஹிப் என்பது நிறைய பேருக்கு தெரியாத விடயம்.


அவரின் பெயரையாவது நன்றிக் கடனாக அந்தப் புத்தகத்தின் ஒரு மூலையிலாவது குறிப்பிட்டார்களா என்றால் அதுவும் இல்லை.

பெரியவர் பாஸி ஆலிம் சாஹிப் பெற்ற பிள்ளை நாளை பணம் சம்பாரிக்க உதவுகின்ற பிள்ளை அல்லவா?

அதனால், பணத்தை அல்லாஹ்வாக நேசிக்கும் நேசர்கள் பணத்துக்கு சோரம் போவது ஒன்றும் குற்றமில்லை அல்லவா?.

இஸ்லாத்தின் பெயரில் அல்லாஹ்வுக்காக என்று கூறிக் கொண்டு இப்படி செய்யும் திருட்டுக்களுக்கு இஸ்லாமிய 'சரீஆவில்' என்ன தண்டனை இருக்கிறது?

சமூகத்தின் நலனில் அக்கறைக் கொண்ட ஒரு மகான் அல்லாஹ்வுக்காக அரும் பாடு பட்டு ஒரு நல்ல செயலை செய்து விட்டு போக இவர்கள் அவசர அவசரமாக அதனை மொழி பெயர்த்து "பதிப்புரிமை" போட்டுக் கொண்டு பணம் சம்பாதிக்க துவங்கி விட்டார்கள்.




இலங்கை ஜமாத்தே இஸ்லாமிக்கு மட்டும் தஹ்லீம் குரானை தமிழ் மொழி பெயர்க்கும் உரிமையை யார் வழங்கினார்கள் என்று கேட்க விரும்புகிறோம்.

அதனை அவர்கள் எங்களது சிறார்களின் நலனை நாடி அல்லாஹ்வுக்காக  செய்தார்கள் என்றால் எதற்காக "பதிப்புரிமை" போட்டு அதற்கு உரிமை கொண்டாட வேண்டும்?



ஏழை முஸ்லிம் சிறார்களை அல் குரானை விட்டும் தூரமாக்கும் இத்தகைய இழி செயல்கள் ஜமாத்தே இஸ்லாமியில் 'அல்லாஹ்வின் பெயரால்' இப்பொழுது ஆரம்பமாகி விட்டது.

என்பதுகளில் ஆப்கான் ஜிகாதுக்கு தொண்டைக் குழி தண்ணீர் வற்றும் அளவிற்கு கூக்குரலிட்டு ,அவர்களை நம்பி வந்த இஸ்லாமிய இளைஞர்களின் இளமையை அமெரிக்க C.I.A.வுக்காக அடகு வைத்தார்கள்.

அமெரிக்காவுக்கு வக்காலத்து வாங்கும் அதே தவறு இப்போதைய அமெரிக்காவின் ஆப்கான் ஆக்கிரமிப்புக்கு மெளனமாக அனுமதி வழங்குவதன் மூலம் இன்னும் தொடர்ந்துக் கொண்டுதானிருக்கிறது.

இது போதாது என்று ,இப்பொழுது எங்களது பச்சிளம் சிறார்களின் அல் குரானின் ஆரம்ப அறிவை 'கற்பழிக்கத்' துவங்கி விட்டார்கள்.

வெகு விரைவில் இவர்கள் அல் குரானுக்கும் "பதிப்புரிமையிட்டு" அல்லாஹ்வுக்கே வேட்டு வைத்தாலும் ஆச்சரியம் இல்லை.

அல்லாஹ்வின் மேலான திருப்தியை விட்டு விட்டு கேவலம் பணத்துக்கு விலையாகிப் போன இந்த அரை வேக்காடு செயல் வீரர்களை நாம் எப்படி எதிர் கொள்வது?

எமக்கு என்றால் ஒன்றுமே புரிய வில்லை.

உங்களுக்கு?

2 comments:

  1. மன்னிக்கவும் 17 அல்ல 15படிகள்

    ReplyDelete
  2. நண்பர் சல்மானுக்கு நன்றி '
    நல்லவேளை சரியான படிகளை எமக்கு நினைவூட்டினீர்கள்.
    இல்லாவிட்டால், இது நம்மை பற்றிய குறிப்பு இல்லை என்று அவர்கள் நழுவி இருப்பார்கள்.
    அவசரத்தில் நாம் இரண்டு படிகள் தாவி விட்டோம் போலும்.

    ReplyDelete