இந்த ரமளானில், சில நாள்களாக எம்முடைய வீட்டில் நபி (ஸல்) அவர்களின் பெற்றோர்கள் சுவனவாசிகள் என்கிற கருத்தில் அடிக்கடி உரையாடல்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன.
நம்முடைய சில நண்பர்கள் தவ்ஹீத் ஜமாஅத் கருத்துக்களினால் ஆளுமை கொள்ளப் பட்டு இருந்தார்கள்.
அவர்கள் ஸஹிஹ் முஸ்லிமில் இருக்கின்ற நபி (ஸல்) அவர்களது பெற்றோரின் இறை மறுப்பு நிலை சம்பந்தமான சில ஹதீஸ்களை எதுவித மறுப்புமின்றி ஏற்றுக் கொண்டிருந்ததனால், மறுமை நாளில் நபி (ஸல்) அவர்களது பெற்றோர்களின் நிலை சம்பந்தமாக நேர் மறை கருத்தியலில் இருந்தார்கள்.
அத்தகைய அனைத்து ஹதீஸ்களும் அல் குர்ஆனுக்கு முற்றிலும் முரணானவை என்பது நமது வாதம்.
இந்த நிலையில் நமது நண்பர் ஒருவர் நேற்று முன்தினம் எங்களது வீட்டுக்கு அவரது குடும்பத்தவர்கள் சகிதம் வந்தார்.
வழமைப் போல நமது பேச்சு அஹ்ளுல்பைத்களின் பக்கம் திரும்பியது.
அந்த உரையாடல் கொஞ்ச நேரத்தில் நபி (ஸல்) அவர்களின் பெற்றோர்களின்
மறுமை நிலை சம்பந்தமாக திசை மாறியது.
நண்பர் அவரது நம்பிக்கையின் நிலையை வலியுரித்தினார்.
நாம் நமது தரப்பு ஆதாரங்களை எடுத்து வைத்தோம்.
நாம் இருவரும் ஒருமித்த ஒரு முடிவுக்கு வந்தபாடில்லை.
ஏனெனில், நாம் நெறி பிறழ்ந்த இஸ்லாமிய ஆட்சியாளர்களின் அடாவடித்தனத்தை சொல்ல, நண்பரோ அந்த ஆட்சியாளர்களின் தவறுகளுக்கான சமாதானங்களை சொல்லிக் கொண்டு இருந்தார்.
திடீரென நண்பரின் எட்டு வயது மகள் எங்களது உரையாடலுக்கு குறுக்கே வந்தாள்.
அவள் அவளுக்கே உரிய குறும்புடன் "எக்ஸ் கியுஸ் மீ.......நான் கொஞ்சம் பேசவா?" என்றாள்.