
அல்லாஹ் மனித குலத்துக்கு அவனை அறிமுகப் படுத்துவதற்காக இவ்வுலகிற்கு அனுப்பிய அனைத்து தீர்க்கதரிசிகளும்,தூதர்களும் அநீதத்துக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள்.
இறைத் தூதர்கள் அனைவரும் நீதிக்காக,நியாயத்திற்காக,நேர்மைக்காக போராடியவர்கள்.
அவர்களின் செயல்களில் பிறந்த விளைவுகளில் தனி மனித சுதந்திரமும்,மனித உரிமையும் கௌரவமாக மதித்துப் பேணப் பட்டன.
அவர்கள் நல்லவர்களுக்கு நல்லவர்களாகவும்,திருந்த மறுக்கும் தீயவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் இருந்திருக்கிறார்கள்.
இறுதித் தூதர் முஹம்மது சல்லல்லாஹு அலை ஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்குப் பின்னர் இறைத் தூதர்கள் மனித குலத்துக்கு நேர் வழிக்காட்ட வரப்போவதில்லை.
நபிகளார் சுமந்த அந்த மா பெரும் பொறுப்பு முஸ்லிம்களிடம் ஒப்புவிக்கப் பட்டு விட்டது.
அதனைத்தான் நாம் நபிகளாரின் ஸுன்னா என்று கூறுகிறோம்.