Saturday, July 2, 2011

"ஹவ்லுல் கவ்தரில் தண்ணீர் அருந்துவதட்குரிய அனுமதிப் பத்திரம்.........?"


"ஹவ்லுல் கவ்தரில் தண்ணீர் அருந்துவதட்குரிய அனுமதிப் பத்திரம்.........?"


நேற்றைய தினம் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் ஜூம்மா பிரசங்கத்தை மதிப்புக்குரிய அப்துல் ஹமீத் பஹ்ஜி அவர்கள் நிகழ்த்தி இருக்கிறார்கள்.

சஹ்பான் மாதத்தை நாம் எதிர் கொள்வதால் அந்த மாதத்தின் மகத்துவத்தைப் 
பற்றியதாக  அவரின் உரை அமைந்து இருக்கிறது.

சஹ்பான் மாதத்தில் நாம் செய்ய வேண்டிய நல் அமல்களில் அதிகம் , அதிகமாக சலவாத் சொல்லுமாறு வேண்டி, சலவாத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும், நாம் சலவாத் சொல்லவேண்டிய அவசியத்தைப் பற்றியும், சஹ்பான் மாதத்தில் நாம் எதற்காக அதிகம் சலவாத் சொல்ல வேண்டும் என்கிற காரணங்களைப் பற்றியும் அவர் விலாவாரியாக மிகவும் சிறந்த முறையில் பிரசங்கம் நிகழ்த்தி இருக்கிறார்.

ஹவ்லுல் கவ்தரில் தண்ணீர் அருந்துவதட்குரிய அனுமதிப் பத்திரத்தை  ஒருவர் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அவர் அஹ்ளுல்பைத்களின் மேல் நேசம் கொள்ள வேண்டும்.

அஹ்ளுல்பைத்களின் மேல் நேசம் கொள்வது என்பதன் அடையாளம் அவர்களின் மேல் அதிகம் அதிகம் சலவாத் சொல்வதில் இருக்கிறது என்று அவர் கூறி இருக்கிறார்.

அவரது கூற்று அப்பழுக்கு இல்லாத நிஜமாகும்.


சலவாத்தின் சிறப்பைப் பற்றி ஒரு ஜும்மாஹ் பிரசங்கம் நிகழ்த்தியமைக்கு அவருக்கு நாம் நன்றி சொல்ல கடமைப் பட்டு இருக்கிறோம்.


"கௌரவத்துக்கு உரிய ஹசரத் அப்துல் ஹமீத் பஹ்ஜி அவர்களுக்குஅஹ்லுல் பைத் தமிழ் தளத்தின் சார்பில் எமது நன்றிகள்."

ஹசரத் அப்துல் ஹமீத் பஹ்ஜி அவர்களின் ஜும்மாஹ் பயானில் பங்கு பற்றிய நமது நண்பர்களில் சிலர் தொலை பேசியில் எம்முடன் தொடர்பு கொண்டார்கள்.

ஹசரத் அவர்களின் சலவாத்தின் மகிமையை பற்றி பிரலாபித்த ஜும்மாஹ் பயானைப் பற்றி நல்லவிதமாக சொன்னார்கள்.

என்றாலும், ஹசரத் அப்துல் ஹமீத் பஹ்ஜி அவர்கள் சலவாத் சொல்லும் முறையைப் பற்றியோ, அஹ்லுல் பைத்களைச் சேர்த்துக் கொளாத சலவாத் தவறானது என்பதைப் பற்றியோ எதுவுமே சொல்ல வில்லை என்றும் வருத்தப் பட்டார்கள்.

அது மட்டுமன்றி, ஹசரத் அவர்கள் கூட அன்றைய ஜும்மாஹ் பயானில் அவர்  சொல்லிய சலவாத்களில் அஹ்லுல் பைத்களை சேர்த்துக் கொள்ளாததையும் அவர்கள் நோட்டமிட்டு அதைப் பற்றியும் எம்மிடம் சொல்லி வருத்தப் பட்டார்கள்.

அஹ்லுல் பைத்களை சேர்த்துக் கொள்ளாத சலவாத்தை அவர் வேண்டுமென்றே சொன்னாரா அல்லது அது பற்றிய சரியான தெளிவு அவருக்கு இலையா என்று அவர்கள் கொஞ்சம் குழம்பிப் போனார்கள்.

ஹசரத் அப்துல் ஹமீத் பஹ்ஜி அவர்களும் எங்களது மதிப்புக்குரிய முஹாஜிரீன் மௌலவி அவர்களைப் போலவே, நபிகளாரின் பெயர் கூறும் கட்டங்களில் எல்லாம் "சல்லல்லாஹு அலைஹிவசல்லம் " என்றே கூறி இருக்கிறார்.

சரியான சலவாத் என்றால் அதில் "அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மத் வஆலி முஹம்மத்" என்று தான் கூறப் படல் வேண்டும்.


ஆகவே, இதன் பின்னராவது நாம் நபி என்று கூறும் ஒவ்வொரு கட்டத்திலும் அதனுடன் இணைத்து 'அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மத் வஆலி முஹம்மத்" என்று சொல்லுவதற்கு தயாராகுவோமாக.

அல்லது யாராவது நபி (ஸல்) அவர்களின் பெயரைக் கூற கேட்ட மாத்திரம் நாம் உடனே "சல்லல்லாஹு அலைஹிவசல்லம்" என்று கூறுவதை தவிர்த்து , முறையாக நபி (ஸல்) அவர்களின் பெயரைக் கூறக் கேட்டவுடன் " அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மத் வஆலி முஹம்மத்" என்று சரியாக சொல்லு வதற்கு நம்மைப் பழக்கப் படுத்திக் கொள்வோமாக.

அஹ்ளுல்பைத்களை இணைத்துக் கொண்ட சரியான சலவாத்தினை அதிகம் அதிகம் சொல்லி ஹவ்லுல் கவ்தரில் தண்ணீர் குடிக்கும் அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்ட கூட்டத்தாரில் அல்லாஹ் நம் அனைவரையும் சேர்த்து வைப்பானாக!

"அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மத் வஆலி முஹம்மத்."

No comments:

Post a Comment