Friday, December 23, 2011

இந்த பிஞ்சு மகளின் அவல நிலைக்கு யார் காரணம்...?????????

இந்த பிஞ்சு மகளின் அவல நிலைக்கு யார் காரணம்...?????????



அன்புள்ள மகளே!

உன் நிலை கண்டு என் விழியில் ஓடும் கண்ணீரை என்னால் கட்டுப் படுத்த முடியாதிருக்கிறது.

பயத்தில் ஆடை நனைந்துப் போன உன்னுடைய காற்சட்டையும் , அதனை சட்டை செய்யாமல் உன்னை தர தரவென இழுத்து செல்லும் சியோனிஸ மிருகங்களும் ............இதென்ன கொடுமை!

அச்சத்தில் உறைந்துப் போன உன்னுடைய அழுகையின் அவலம் எனக்கு இங்கே கேட்கிறது.

எனக்கு மட்டுமல்ல...என் போன்ற பலருக்கும் அது புரிகிறது.

ஆனால், என்ன செய்வது என்றுதான் புரிய வில்லை.

அதனை புரிய வைக்கவும் இங்கேயாரும் இல்லை.

புரிந்துப் போன என்போன்றவர்களுக்கு புரியாதவர்களுக்கு புரிய வைக்கும் முறையும் புரியவில்லை.

என்ன செய்ய?

நீ செய்த   குற்றம்தான் என்ன?

அந்த மிருகங்களை நோக்கி கற்களை எறிந்ததுதான் உன்னுடைய குற்றமா?

நீ எறியும் கற்களுக்கு என்ன வலிமைத்தான் இருக்கப் போகிறது?

அந்த மிருகங்களோ உன்னை நோக்கி பொஸ்பரஸ் குண்டுகளை அல்லவா எறிகிறார்கள்?

அழாதே என் அன்பு மகளே!


சோதனை உனக்கல்ல!

உன்னுடைய துர்பாக்கிய நிலை எங்களுடைய சோதனையாக இருக்கிறது.

உனக்கு இன்னுமொரு உண்மை தெரியுமா?

உலகத்தில் இருக்கின்ற அநேக முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம் பெண்களுக்கு உரித்தான உரிமைகள் மறுக்கப் பட்டுள்ளன.

அந்த நாடுகளில் வாழ்கின்ற மாற்று மத சகோதரர்களின் நிலையோ அதை விட பரிதாபமானது. 

நாம் உங்களைப் போன்று அடக்கி ஒடுக்கப் பட்டவர்களுக்காக , அவர்களின்  விடுதலைக்காக என்ன செய்தோம் என்று நாளை மறுமையில் அல்லாஹ் எங்களிடம் கேட்கப் போகிறான்.

உனக்காக, உன் போன்று அடக்கு முறைக்கு ஆளாக்கப் பட்ட அப்பாவிகளுக்கு  நாம் என்னதான் செய்திருக்கிறோம்?

எங்களது தலைவர்களின் தவறான தீர்மானங்களின் காரணமாக எங்களை நாங்களே தொலைத்துக் கொண்டோம்.

அந்தத் தலைவர்களின் வசீகரமான பேச்சில் கணத்தில் தொலைந்துப் போன எங்களால் எங்களை மீண்டும் தேடிக் கொள்ள முடிய வில்லை.

ஏனெனில், நாம் தொலைந்துப் போனதை நாம் உணர்ந்துக் கொள்ளவில்லை.

பணத்துக்கு விலை போன எங்களது தலைவர்களை நம்பி நாம் மோசம் போனோம்.

தனிப்பட்ட முறையில் அவர்களைப் பணக்காரர்களாக்கிய இஸ்லாத்தின் எதிரிகள் அவர்களைக் கொண்டே எங்களை அடிமைப் படுத்திக் கொண்டார்கள்.

அடிமைத்தனம் இல்லை என்று யார் சொன்னது?

நாம் அடிமைகளாகத்தான்   இருக்கிறோம்.

சுதந்திரம் என்ற பெயரில், தலைவர்களின் வசீகரமான கருத்துக்களுக்கு அடிமையாகி எங்களை விற்று விட்டோம்.

அவர்களைமீறி எங்களால் சிந்திக்க முடியாதுள்ளது.

அவர்கள் எங்களது இளமையை எங்களுக்கு தெரியாமல் இஸ்லாத்தின் பெயரால் கொள்ளையிட்டார்கள்.

எங்களுடைய பெற்றோர்கள் கதி கலங்கியிருக்க நாம் எங்களது நயவஞ்சக தலைவர்களால் தவறாக வழி நடாத்தப் பட்டோம்.

எங்களைப் போன்றே தவறாக வழி நடாத்தி அழைத்து வரப் பட்ட இன்னுமொரு இளைஞர்கள் கூட்டத்துக்கு எதிராக  நாம் போர் கோடி தூக்கினோம்.

அல்லாஹ்வின் பெயரால் அல்லாஹ்வுக்காக வேண்டி நாம் இருவரும் எதிரெதிராக களம் இறங்கினோம்.

வயோதிகத்தின் பயங்கரத்தில், சிதைந்துப் போன சமூக பிரிவுகளில்    செய்வதறியாமல் எங்களது மூப்படைந்த பெற்றோர் ஓரம் கட்டப் பட்டார்கள்.

எங்களது வெற்றிகளின் இலாபங்களை எங்களது தலைவர்களும் அவர்களது எஜமானர்களும் சுவீகரித்துக் கொண்டார்கள்.

தோல்விகளின் வேதனைகளை எங்கள் குடும்பத்தினர்களே கண்ணீருடன் ஏற்றுக் கொள்ள நிர்ப்பந்திக்கப் பட்டார்கள்.

எங்களது வீரமெல்லாம் எங்களை அழிப்பதிலேயே வீணாகிக் கொண்டிருக்கிறது.

எங்களது அறிவுகளையும், இளமைகளையும் அல்லாஹ்வின் பெயரால் நாம்  மேற்குக்கும்   கிழக்குக்கும் தாரை வார்த்து கொடுத்துவிட்டோம்.

எங்களது தலைவர்கள் என்று நாம் நம்பிய எங்களது மார்க்க அறிஞர்கள் எங்களை மோசம் செய்து விட்டார்கள்.

எங்களது இளமையை நாம், எங்களை சுரண்டி கொழுத்துப் போன எங்களது தலைவர்களுக்கு அடமானம் வைத்து விட்டு விளித்துக் கொண்டிருக்கிறோம்.

அந்த தலைவர்களோ தங்களது தவறுகளை உணர்ந்துக் கொள்ளும் அறிவைக் கூட பெற்றிருக்க வில்லை என்பதை எம்மை நாம் தொலைத்த பிறகுதான் புரிந்துக் கொண்டோம்.

மகளே!

உன்னுடைய, உன் போன்று அடக்குமுறைக்கு ஆளாக்கப் பட்டிருக்கிற அப்பாவிகளின் இந்த அவல நிலையின் ஆரம்பம் எது என்று உனக்குத் தெரியுமா?

அநீதத்தை ,அடக்கு முறையை ,நடந்துக் கொண்டிருக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்கும் வலிமையை நாம் இழந்துப் போன அந்த தருணம் என்ன என்று உனக்குத் தெரியுமா?

எங்கள் நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்கள் உன் போன்ற மகள்மார்களைக் காக்கும்வலிமைக் கொண்ட இஸ்லாமிய தலைமைத்துவத்தை ஆவணமாக எழுத முனைந்த பொழுது அவர்களின் அருமைத் தோழர்கள் அதற்கு தடையாக இருந்தார்களாம்.

அந்தக் கணத்திலேயே நாம் எம்மை தொலைத்துக் கொண்டோம்.

உன் போன்ற குழந்தைகளின் பாதுகாப்பையும் இழந்துப் போனோம்.

முஸ்லிம் சமூகத்துக்கு பெரும் சோதனையாக அமைந்த அந்தத் தருணத்தில் இஸ்லாத்தின் எதிரிகள் தம்மையும், தங்களது வெறித்தனமான வெற்றியின்   தளத்தையும் பெற்றுக் கொண்டார்கள்.

வெற்றியடைந்த அந்த எதிரிகள் இஸ்லாமியர் என்ற பெயரிலும், நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களின் தோழர்கள் என்ற போர்வையிலும் இஸ்லாத்தின் பெயராலேயே இஸ்லாத்தை புதைத்து விட்டார்கள்.

உன் போன்ற நிலையில் இருந்த ,அநீதத்துக்கு ஆளானவர்களுக்கு பாது காப்பு அரணாக இருந்த இஸ்லாம் நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களின் மறைவுடன் மாறிப் போனது.

இஸ்லாத்தின் தலைமைத்துவத்தில் பலாத்காரமாக அமர்ந்துக் கொண்ட இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்தின் பெயராலேயே அநீதம்  செய்யத் துவங்கினார்கள்.

அந்த துரோகிகளின் வழிவந்த ஆட்சியாளர்கள் சுமார் ஆயிரத்து ஐநூறு வருடங்களாக இஸ்லாத்தின் பெயரால் உலகத்தையே கபளீகரம் செய்தார்கள்.

உன் போன்ற குழந்தைகளையே இஸ்லாத்தின் பெயரால் கொன்றுக் குவித்தார்கள்.

இஸ்லாத்தின் பெயரால் இன்னமும் அதனை செய்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கனீமத் என்ற பெயரில் பெண்களை பலாத்காரம் செய்தார்கள்.உலகத்தை கொள்ளையிட்டார்கள்.

எங்களது உலமாக்கள் அந்த அராஜகமான செய்கைகளுக்கு மார்க்க 'பத்வா' கொடுத்து இஸ்லாமிய போர்வை போர்த்தினார்கள்.

அதன் பின்னர், சமத்துவத்தினதும், சமாதானத்தினதும் கேந்திர நிலையமான மஸ்ஜிதுகள் பிரிவுகளினதும் ,பிளவுகளினதும் தளங்களாக மாறி விட்டன.

ஏகத்துவம் போதிக்கும் இஸ்லாமிய கலாசாலைகள் ஏகாதிபத்திய   நியாயங்களை போதிக்கத் துவங்கின.

பிரமிட்டுக்களில் சிறையான பிர்அவ்ன்கள் மஸ்ஜித்களில் விடுதலையாகத் துவங்கினார்கள்.

அநீதத்துக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய மிம்பர் மேடைகள் அநியாயக் காரர்களை காப்பதற்காக குரல் கொடுக்கத் துவங்கியது.

அன்பு மகளே!

அந்த அநியாயக் காரர்கள் செய்த அநியாயத்தின் பின் விளைவாக இன்று நீ சிக்கிக் கொண்டாய்.

நமது கடந்த கால தவறுகளைப் புரிந்துக் கொள்வதில் மட்டுமே எங்களால் அந்த தவறுகளின் கொடூர விளைவுகளை விட்டும் தப்பும் முறையை அறிந்துக் கொள்ள முடியும்.

ஆனால், நாம் எங்களது மூதாதையர் செய்த தவறுகளில் நியாயம் கற்பிக்கப் பட்டவர்களாகவே எங்களது மத குருமார்களினால் வழி நடாத்தப் பட்டோம்.

அதனால், தவறுகளில் சரி கண்டு தவறிழைக்கத் துவங்கினோம்.

இத்தகைய எங்களது துரதிர்ஷ்ட நிலையில் அவ்வாறான தவறுகளின் பயங்கர விளைவுகளை விட்டும் எப்படித்தான் தப்ப முடியும்?

என்னுடைய மகளே!

நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம்  அவர்களின் வழித் தவறிய தோழர்கள் செய்த தவறுகளின் நிகழ கால விளைவாகவே நான் உன்னைக் காண்கிறேன்.

அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்துவதைத் தவிர என்னால் இப்பொழுது ஒன்றும் செய்ய முடியாதுள்ளது.

 என்னுடைய அன்பு மகளே!

என்னுடைய இயலாமைக்காக என்னை மன்னித்துக் கொள்.

யா! அல்லாஹ் ..என்னுடைய மகளுக்கும், அவள் போன்று அல்லலில் சிக்கியிருக்கும் அனைத்து பெண்களுக்கும் , பெண் மகவுகளுக்கும் நீயே துணையாக இருப்பாயாக!

யா! அல்லாஹ்.. அநியாயக் காரர்களின் அநியாயத்துக்கு  ஆட்பட்டு தவித்துக் கொண்டிருக்கும் அனைத்து பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் நீயே பாதுகாப்பாக இருப்பாயாக!

யா! அல்லாஹ்...நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களின் தோழர்கள் என்று நாம் நம்பிய துரோகிகள் செய்த பாவத்துக்காக நீ எங்களை சோதித்து விடாதே!

அந்தத் துரோகிகளை புரிந்துக் கொள்ளும் அறிவை எங்களது முஸ்லிம் சமூகத்துக்கு தந்தருள்வாயாக!

Saturday, December 17, 2011

சோதனைகளின் மறுபக்கம்...........?????

சோதனைகளின் மறுபக்கம்...........?????




இஸ்லாமிய சமூக சேவை நிறுவனம் ஒன்றில் பணி புரியும் எம்முடைய நண்பர் ஒருவர் அவரின் மேமன் பாய் நண்பர் ஒருவரைப் பற்றி சொன்ன கதை இது.

எம்முடைய நண்பரின் அலுவலகத்தில் இஸ்லாமிய சமூக சேவைக்காக ஒரு தொகைப் பணத்தை வரவு செலவை மட்டிட்டு அந்த இயக்கத்தினர் நண்பரிடம் கொடுத்து வைத்து இருப்பார்கள்.

நண்பருக்கு அந்தப் பணத்தை சுதந்திரமாக செலவழிக்கும் உரிமை   கிடையாது.

அவருக்கு அனுமதிக்கப் பட்ட செலவை மாத்திரமே அவரால் செய்ய    முடியும்.

இந்த நிலையில் ஒரு நாள், அவரின் மேமன் பாய் நண்பர் அந்த அலுவலகத்தில் இருக்கும் பொழுது ஒரு பெண் வந்து யாசகம் கேட்டு   இருக்கிறாள்.

நண்பர் ஒரு உதவியும் அந்தப் பெண்ணுக்கு செய்யவில்லையாம்.

அதற்கான நிலையில் அவர் இல்லை போலும்.

அதனைக் கண்ட அவரின் நண்பர் உடனடியாக அந்தப் பெண்ணுக்கு கொஞ்சம் பண உதவி செய்து விட்டு, நமது நண்பரிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து "யாராவது ஏதாவது கேட்டு இங்கே வந்தால் அவரை வெறும் கையுடன் திருப்பி அனுப்பாதீர்கள்.குறைந்தது பத்து ரூபாயாவது கொடுத்து அனுப்புங்கள்." என்று உபதேசித்து இருக்கிறார்.

அதன் பின்னர் அந்த மேமன் பாய் நண்பர் அந்த இஸ்லாமிய இயக்கத்தின் அலுவலகத்துக்கு வரும் தோறும், பணம் கொடுத்து அந்தப் பணத்தை யாசிக்கும் மக்களுக்கு என்றே ஒதுக்கியும் வைத்திருக்கிறார்.

நமது நண்பருக்கு ஆச்சரியம்.

ஒரு நாள் அவர் தனது நண்பரிடம் அவர் இவ்வாறு செய்வதற்கான காரணத்தைக் கேட்டிருக்கிறார்.

அதற்கு அவர் "இது எங்களது பாட்டனாரின் வசிய்யத்." என்று சொல்லிவிட்டு தொடர்ந்து "எங்களது குடும்பத்தினர் இதனை தவறாமல் செய்து வருகிறோம்" என்றார்.

"வசிய்யத்தா?" என்று நண்பர் ஆச்சரியத்துடன் கேட்டிருக்கிறார்.


அதற்கு அந்த மேமன் பாய் நண்பர் "எங்களது பாட்டனார் கொழும்பில் கடை வைத்திருக்கும் பொழுது யாராவது அவரிடம் ஏதாவது உதவி கேட்டு வந்தால் அவரின் தேவைகளை மறுக்காமல் தன்னால் முடிந்த அளவு நிறை வேற்றி வைப்பார்.அது மட்டுமன்றி, யாராவது அவரிடம் யாசித்தால் அவர்களை விரட்டவும் மாட்டார்." என்ற நண்பரின் நண்பர் தொடர்ந்து "ஒரு நாள் அவர் எதிர் பார்க்காத சம்பவம் ஒன்று அவரின் வாழ்வில் நடந்தது..."என்றார்.

Saturday, November 12, 2011

ஆப்ரகா மன்னனின் பிரமாண்டமான யானைப் படையினர் மக்காவை அழிக்க வந்த மாதம் எது?........துல் ஹஜ்............?முஹர்ரம்........??


ஆப்ரகா மன்னனின் பிரமாண்டமான யானைப் படையினர் மக்காவை  அழிக்க வந்த மாதம் எது?........துல் ஹஜ்............?முஹர்ரம்........?? 


துல் ஹஜ் மாதம் முஸ்லிம்களுக்கு கொண்டாட்டமான மாதம்தான்.


இந்த மாதத்தில் நாம் எங்களது மார்க்கத்தின் நிஜமான ஸ்தாபகர் நபி இப்ராஹீம் (அலை) அவர்களையும், அவர்களது குடும்பத்தவர்களின் தியாகத்தையும் நினைவு கூர்கிறோம்.


இந்த துல் ஹஜ் மாதத்தில்தான் அப்ரகா மன்னனின் மக்காவை ஆக்கிரமிக்கும் யானைப்  படையின் படையெடுப்பும் நடந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கிறது.


ஏனெனில், யானைப் படையெடுப்பு முடிந்து சரியாக ஐம்பத்து இரண்டு நாள்களின் பின்னால் நபி (ஸல்) அவர்கள் பிறந்திருக்கிறார்கள் என்று வரலாற்றில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.


இந்தப் பதிவை நம்ப முடியாதிருக்கிறது.

துல்ஹஜ் பிறை பதினெட்டில் ஒரு பெரு நாள்.......... இதென்ன புதுக் கதை...????

துல்ஹஜ் பிறை பதினெட்டில் ஒரு பெரு நாள்.......... இதென்ன புதுக் கதை...????




துல் ஹஜ் மாதம் முஸ்லிம்களுக்கு கொண்டாட்டமான மாதம்தான்.


இந்த மாதத்தில் நாம் எங்களது மார்க்கத்தின் நிஜமான நாயகன் நபி இப்ராஹீம் (அலை) அவர்களையும், அவர்களது குடும்பத்தவர்களின் தியாகத்தையும் நினைவு கூர்கிறோம்.


இதே மாதத்தில் ஒரு நாளில்தான்  ஆபிரகா மன்னனின் பிரமாண்டமான யானைப் படையினரை அபாபீல் என்கிற சிறு பறவைகளைக் கொண்டு அல்லாஹ் அழித்து ஒழித்தான்.


அதே போல, இஸ்லாமிய தலைமைத்துவ   நியமன நன் நாள் பற்றிய இந்த சம்பவம் கூட ஹிஜ்ரி பத்தாம் வருடம் துல் ஹஜ் மாதம் பிறை பதினெட்டில் தான் நடைபெற்றிருக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் தனது இறுதி ஹஜ்ஜான ஹஜ்ஜதுல் விதாவை முடித்து விட்டு திரும்பி வரும் வழியில் வைத்து 'கதீர் கும்'  என்ற இடத்தில் அஹ்ளுல்பைத்களின் ஆதரவாளர்கள் இன்றும் கொண்டாடி வரும் இந்த பெரு நாளுக்கான சம்பவம் நடை பெற்றதற்கான ஆதாரங்கள் வரலாற்றில் பதிவாகி இருக்கின்றன.

இப்பொழுது சவூதியில் இருக்கின்ற அல் ஜுஹ்பா நகரத்தை அண்டியிருக்கும் ஓர் இடம்தான் 'கதீர் கும்'மாகும்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஹஜ்ஜுக்கு வருகை தந்த மக்கள் எல்லோரும் தத்தமது ஊர்களுக்கு பிரிந்து போகும் இறுதி எல்லை இதுதான்.

ஹஜ்ஜதுல் விதாவை முடித்து விட்டு திரும்பி வரும் வழியில் கதீர் கும்' என்கிற நீர் சுனையின் அருகே வைத்து திடீரென அல்லாஹ்வின்  புறத்தில் இருந்து "வஹி" அருளப்படுகிறது.

""தூதரே! உம் இறைவனிடம் இருந்து உம் மீது இறக்கப் பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்;(இவ்வாறு) நீர் செய்யாவிட்டால் அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராக மாட்டீர்; அல்லாஹ் உம்மை மனிதர்களி ( ன்  தீங்கில் ) லிருந்து காப்பாற்றுவான்; நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர் வழியில் செலுத்த மாட்டான்." ( அல் குரான் 5   :   67   )

இஸ்லாமிய கடமைகள் யாவும் முற்று முழுதாக கடமை ஆக்கப் பட்டு விட்ட நிலையில் இதென்ன சொல்லப் படாத இன்னுமொரு முக்கிய விடயம் என்று சஹாபாக்கள் குழம்பிப் போனார்கள்.

Sunday, November 6, 2011

நபி (ஸல்) அவர்கள் நமக்கு காட்டித் தந்த இஸ்லாம் ...........அபூ சுபியான் குடும்பம் திருத்தித் தந்த இஸ்லாம்..............நீங்கள் எந்த இஸ்லாத்தில்....?????

நபி  (ஸல்) அவர்கள் நமக்கு காட்டித் தந்த இஸ்லாம் ...........அபூ சுபியான் குடும்பம் திருத்தித் தந்த இஸ்லாம்..............நீங்கள் எந்த இஸ்லாத்தில்....?????


அஹ்ளுல்பைத்களில் தனது உயிரினும் மேலாக நேசம் வைத்து இருக்கும் நண்பர் ரூமியின் பார்வையில் பாலஸ்தீனம் இன்றைக்கு இந்நிமிடம் நடந்துக் கொண்டிருக்கும் நிகழ் கால கர்பலாவாகும்.

என்னிடம் அவர் கேட்டார்- 

"மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம்........."

நான் மௌனித்து இருந்தேன்.

நீங்கள்....?

Wednesday, November 2, 2011

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டிகள்....?????????

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டிகள்....??????????


எம்முடைய இணைய முகவரிக்கு அடுத்தடுத்து நான்கு பின்னூட்டங்கள்.

இரண்டு  இந்து மத சகோதர்களின் பெயரில் ஒளிந்திருந்த உமையாக்களின் ஆதரவாளர்களின் பின்னூட்டங்களாக அவை தம்மை பரிதாபகரமாக இனம் காட்டிக் கொண்டன.

எப்படி என்று திகைக்கிறீர்களா?

Tuesday, October 25, 2011

பௌத்த விகாரையின் எளிமையான ஆன்மீக பலமும் ..........'காக்கா'... பிடிக்கும் ஆன்மிகம் தொலைத்த மிடுக்கான பள்ளிவாசல்களும்....????

பௌத்த விகாரையின் எளிமையான ஆன்மீக பலமும் ..........'காக்கா'... பிடிக்கும் ஆன்மிகம் தொலைத்த மிடுக்கான பள்ளிவாசல்களும்....????


கொழும்பில் தெமட்டகொட என்றொரு பிரதேசம் இஸ்லாமிய இயக்கங்களுக்கு பிரசித்தமானது.

அந்த வீதியில் இருக்கின்ற எங்களது இஸ்லாமிய இயக்கங்களின் தொலைந்து போன ஆன்மீக பலம் ஆச்சரியமாக அங்கே இருக்கின்ற ஒரு பௌத்த விகாரையில் பளீரிட்டு தன்னை இனம் காட்டியது.

அந்த பௌத்த விகாரையை மக்கள்   'அலி தென்னா பன்சல' என்று அழைப்பார்கள்.

இரண்டு யானைகளின் சிலைகள் அந்த விகாரையின் நுழை வாயிலில் இருப்பதால் அதற்கு அப்படியொரு பெயர்.

 'இரண்டு யானைகளின் விகாரை' என்று அதன் அர்த்தம் தமிழ் வடிவம் பெறும்.

Tuesday, October 18, 2011

ஹஜ் கிரிகைகளில் மறக்கடிக்கப் பட்ட அஹ்ளுல்பைத்களின் நினைவுத் தடயங்கள்....???

ஹஜ் கிரிகைகளில் மறக்கடிக்கப் பட்ட அஹ்ளுல்பைத்களின் நினைவுத் தடயங்கள்....???


இதென்ன புதுக் கோஷம் என்று நீங்கள் விழி பிதுங்குவது புரிகிறது.

ஆனாலும் உண்மை அதுதான்.

சம்  சம்   கிணற்றின் நீரின் சுவையில் நபி இஸ்மாயில் (அலை) அவர்களின் தாகத்தின் வேதனை புரிந்து போகும்.

சபாவுக்கும்  மர்வாவுக்கும் இடையேயான  ஓட்டத்தின் தடுமாற்றத்தில் அன்னை ஹாஜாராவின் தனிமையான பரிதவிப்பு பட படக்கும்.

சம் சம் கிணற்றின் தீரமான கதைகளில் பரிதாபமாக நாம் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தின் கதையை சுத்தமாக மறக்கடிக்கப் பட்டுப் போனோம்.

அதென்ன மறந்த கதை?

தூர்ந்து போன சம் சம் கிணற்றை மீண்டும் தோண்டி உயிர்ப்பித்த நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் வாலிப அப்துல் முத்தலிபின் தீரமிக்க தீர்மானங்களில் ஒன்றாக அந்தக் கதை இருக்கிறது.


மறைந்துப் போய் கதைகளிலே மட்டும் உயிர்த்துக்   கொண்டிருக்கின்ற சம் சம் கிணறு இருக்கும் இடத்தை தனக்குக் காட்டித் தந்தால் தனது முதாதையர் நபி இப்ராஹீம் (அலை) அவர்களைப் போல தனது மகன்களில் ஒருவரை அல்லாஹ்வுக்காக பலியிடுவதாக வாலிபர் அப்துல் முத்தலிப் அல்லாஹ்விடம் நேர்ச்சை வைக்கின்றார்.

கிணறு இருக்கும் இடம் பற்றி அவருக்கு கனவில் காண்பிக்கப் படுகிறது.

குறைஷி அராபியரின் எதிர்ப்பையும் மீறி அவர் துணிந்து கிணறு இருக்கும் இடத்தை தன்னந் தனியாக தோண்டுகிறார்.

அவர் தோண்டிய இடத்தில் இருந்து நீர் மீண்டும் பீரிட்டு கிளம்புகிறது.

அதன் பின்னர் அவர் தான் அல்லாஹ்விடம் நேர்ந்துக் கொண்டவிதமாக தனது மகன்களில் ஒருவரை அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிட முனைகிறார்.

அவ்வாறு அறுத்துப் பலியிட அழைத்துச் செல்லப் பட்டவர் வேறு யாரும் இல்லை.

அவர்தாம், நபி (ஸல்) அவர்களின் தந்தை அப்துல்லாஹ் (அலை).

அப்துல்லாஹ் (அலை) அவர்களின் மாமன்மார்களின் தலையீட்டால் அவருக்குப் பகரமாக நூறு ஒட்டகைகள் அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடப் பட்ட கதை வரலாறு.

நமது இன்றைய ஹஜ் தின பிரசங்கங்களில் சம் சமக் கிணற்றின் பெருமையைப் பேசும் கட்டங்களில் கூட இந்த விடயங்களை யாரும் மருந்துக்குக் கூட நினைவு படுத்துவது இல்லை.

சரி! அதை விடுங்கள்.

Thursday, October 6, 2011

யமாமா கொலைக் கள நாடகங்கள்....?????? ஹதீக்கத்துள் மவ்த்தின் -மரணப் பூங்காவின்-மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்.....?????

யமாமா கொலைக் கள நாடகங்கள்....?????? ஹதீக்கத்துள் மவ்த்தின் -மரணப் பூங்காவின்-மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்.....?????

முதலாம் கலீபாவின் இரண்டு வருடமும் மூன்று மாதங்களும் மட்டுமே நீடித்த மிகக் குறுகிய இஸ்லாமிய ஆட்சியில் இஸ்லாமிய வரலாற்றில் ஜீரணிக்க முடியாத பல கசப்பான நிகழ்ச்சிகள் அவசர அவசரமாக நடைபெற்று முடிந்துள்ளன.

அவற்றில் சகாத் கொடுக்க மறுத்தவர்களுடனான போராட்டம்,  இஸ்லாத்தை விட்டும் வேறு மதங்களுக்கு மாறிவிட்டவர்களுடனான போராட்டம், பொய் நபிமார்களுடனான போராட்டம் என்பன முக்கியமான பிரச்சினைகளாக எமக்கு சொல்லித் தரப் பட்டன.

ஆனால், முதலாம் கலீபா சந்தித்த இதே பிரச்சினைகளை நபி சல்லல்லாஹு அலைஹி  வஆலிஹி வசல்லம் அவர்களும் சந்தித்திருக்கிறார்கள் என்கிற உண்மை மிகவும் சூசகமாக எங்கள் கவனத்தை விட்டும் மறைக்கப் பட்டன.

அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை.

நபி  சல்லல்லாஹு அலைஹி  வஆலிஹி வசல்லம் அவர்களின் சுன்னாவுக்கு முரணாகவே முதலாம் கலீபா நடந்துக் கொண்டார் என்கிற விடயம் வெளியே தெரிந்து போகும் அபாயம் இந்த விடயங்களை பகிரங்கமாக தெரியப் படுத்துவதில் தொக்கியிருந்தது.

அந்த முரண்பாடுகளை இன்னொருமுறை விரிவாகக் கவனிப்போம்.

எமது இன்றைய ஆய்வில் யமாமா கொலைக் களத்தில் முஸைலமா என்ற பொய் நபியுடன் நடந்த யுத்தத்தில் 'மங்காத்தா' பாணியில் நடந்த சில சந்தேகமான விடயங்களை உங்களது  கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.

Monday, October 3, 2011

"சுன்னத் வல் ஜமாத்தினரின் அகீதாவின் படி அபூதாலிப் காபிர்................?" இலங்கையின் தலைமைத்துவ உலமாவின் தீர்ப்பு!


"சுன்னத் வல் ஜமாத்தினரின் அகீதாவின் படி திரு .அபூதாலிப் காபிர்................?" இலங்கையின் தலைமைத்துவ உலமாவின் தீர்ப்பு!.......அஹ்லுல்பைத் தமிழ் தளத்தின் பதில் என்ன?


அண்மையில்  BMICH இல் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பொழுது நரகத்தில் மிகக் குறைந்த வேதனை அளிக்கப் படுகின்ற திரு.அபூதாலிபின் இணை வைப்பு சம்பந்தமாகவும் அவரது இஸ்லாம் சம்பந்தமாகவும் ஒரு சர்ச்சை எழுந்தது.

அப்பொழுது அங்கே பிரசன்னமாகியிருந்த இலங்கையின் உலமா சபை ஒன்றின் தலைவரிடம் இது பற்றிய தீர்ப்பு கேட்கப் பட்டது.

அந்தத் தலைவர் தனக்கு அருகே அமர்ந்திருந்த ஜாமியா நளீமியாவின் மூத்த பணிப்பாளர் ஒருவருடன் கலந்தாலோசித்து விட்டு "சுன்னத் வல் ஜமாத்தினரின் அகீதாவின் படி திரு. அபூதாலிப் காபிர்" என்று தீர்ப்பு வழங்கினார்.

திரு.அபூதாலிப் முஸ்லிம், மன்னிக்கவும் ..மூமின் என்கிற அஹ்லுல்பைத்  தமிழ்  தளத்தின் வாதம் இலங்கையின் மூத்த இஸ்லாமிய அறிஞர்களின் கூற்றுடன் முரண்படுகிறதே?

Sunday, September 25, 2011

இடித்து தரை மட்டமாக்கப் படும் மஸ்ஜிதுகளின் அழிவுகளுக்கு காரணமான முஸ்லிம்கள்................??????



இடித்து தரை மட்டமாக்கப் படும் மஸ்ஜிதுகளின் அழிவுகளுக்கு காரணமான முஸ்லிம்கள்................??????



காலையில் மனைவி சொன்னாள் "தெருக் கோடியில் இருந்த மாடி வீட்டு மனிதனை இரவில் இனந்தெரியாத யாரோ வந்து கண்ணைக் கட்டி அழைத்து சென்றார்களாம்...."

'ஓஹ் ..அந்த கம்யூனிசவாதியா?....' நான் நினைத்தேன். 'இறைவனே இல்லை என்று சொன்ன அவனுக்கு அது வேண்டும்!'

அந்தக் கடத்தல் என்னைப் பாதிக்காததால் நான் மெளனமாக இருந்தேன்.

ஒரு வாரத்தில் காலையில் மனைவி மீண்டும் சொன்னாள்."இம்முறை மூன்று வீடுகள் தங்கியிருந்த எதிர்க் கட்சி அரசியல் வாதியை இரவில் வந்த இனந்தெரியாத நபர்கள் கடத்திச் சென்றார்களாம் ..."


'ஓஹ்..அந்த எதிர்க் கட்சி அரசியல்வாதியா.......' நான் நினைத்தேன்.'தேவை இல்லாமல் ஆளும் கட்சியை எதிர்க்கும் அவனுக்கும் அது வேண்டும்.'

அந்தக் கடத்தலும் என்னைப் பாதிக்காத காரணத்தால் நான் மௌனித்து ஒதுங்கிப் போனேன்.

சில நாள்களுக்கு பின்னர் ஒரு நாள் காலையில்   மனைவி சொன்னாள்"எங்களது எதிர் வீட்டில் குடியிருக்கும் எப்பொழுதும் பொதுநலத்தையே பேசுகின்ற மனிதரை நேற்றிரவு வந்த சிலர் கடத்திப் போனார்களாம்..."


"ஓஹ்... அந்தப் பொதுநலவாதியையா' நான் நினைத்தேன்.'அவருக்கு அது வேண்டும்.எப்பொழுதும் தேவை   இல்லாமல் மற்றவர்களின் விடயத்தில் தலையிட்டுக் கொண்டே இருந்ததற்கு இது வேண்டும்'

மற்றவர்களின் விடயத்தில் தலையிடாத நான் பேசாமல் இருந்தேன்.

சூழ் நிலைகள் இவ்வாறு மோசமாக இருந்தாலும் எங்கள் வீட்டில் நாம் நிம்மதியுடன் இருந்தோம்.

ஒரு நாள் நடு நிசி.

என் வீட்டு கதவு தட்டப் பட்டது.

கதவைத் திறந்தால்..........

Thursday, September 15, 2011

வெளிநாட்டு நன்கொடை பேரீத்தம் பழங்களும் நாமும்??

வெளிநாட்டு நன்கொடை பேரீத்தம் பழங்களும் நாமும்??


ரமழான் மாதம் எம்மை விட்டும் விடை பெற்று விட்டது.

ரமளானுக்கு முந்திய ஒரு நாளில் எங்கள் பகுதி ஜும்மாஹ் பள்ளிவாசலில் எங்கள் ஊர் தனவந்தர்கள் ஒன்று கூடி ஒரு பிரச்சினைக்கு முடிவு கட்டுவதற்காக ஒன்று திரண்டிருந்தார்கள்.

என்ன பிரச்சினை என்று மூக்கை நுழைத்துப் பார்த்ததில், நன்கொடையாக வந்திருக்கின்ற பேரீத்தம் பழங்களை ஊர் ஜமாத்தினர் மத்தியில் எவ்வாறு பங்கிடுவது எனபது சம்பந்தமாக அவர்கள் கூட்டம் கூடி இருந்தார்கள்.

சில இளமையான இளைஞர்கள் மிக உற்சாகமாக பேரீத்தம் பழங்களை பங்கு வைப்பதில் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

பணக்கார தனவந்தர்கள், ஜமாஅத் இளைஞர்கள், காய்ந்துபோன பேரீத்தம் பழங்கள் என பள்ளிவாசல் அல்லோலகல்லோலமானது.

Tuesday, August 23, 2011

ஒரு குழந்தையின் பார்வையில் மறுமையில் நபி (ஸல்) அவர்களது பெற்றோரின் நிலை....??


ஒரு குழந்தையின் பார்வையில் மறுமையில் நபி (ஸல்) அவர்களது பெற்றோரின் நிலை....??

இந்த ரமளானில், சில நாள்களாக எம்முடைய வீட்டில் நபி (ஸல்) அவர்களின் பெற்றோர்கள் சுவனவாசிகள் என்கிற கருத்தில் அடிக்கடி உரையாடல்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன.

நம்முடைய சில நண்பர்கள் தவ்ஹீத் ஜமாஅத் கருத்துக்களினால் ஆளுமை கொள்ளப் பட்டு இருந்தார்கள்.

அவர்கள் ஸஹிஹ் முஸ்லிமில் இருக்கின்ற நபி (ஸல்) அவர்களது பெற்றோரின் இறை மறுப்பு நிலை சம்பந்தமான சில ஹதீஸ்களை எதுவித மறுப்புமின்றி ஏற்றுக் கொண்டிருந்ததனால், மறுமை நாளில் நபி (ஸல்) அவர்களது பெற்றோர்களின் நிலை சம்பந்தமாக நேர் மறை கருத்தியலில் இருந்தார்கள்.

அத்தகைய அனைத்து ஹதீஸ்களும் அல் குர்ஆனுக்கு முற்றிலும் முரணானவை என்பது நமது வாதம்.

இந்த நிலையில் நமது நண்பர் ஒருவர் நேற்று முன்தினம் எங்களது வீட்டுக்கு அவரது குடும்பத்தவர்கள் சகிதம் வந்தார்.

வழமைப் போல நமது பேச்சு அஹ்ளுல்பைத்களின் பக்கம் திரும்பியது.

அந்த உரையாடல் கொஞ்ச நேரத்தில் நபி (ஸல்) அவர்களின் பெற்றோர்களின்
மறுமை நிலை சம்பந்தமாக திசை மாறியது.

நண்பர் அவரது நம்பிக்கையின் நிலையை வலியுரித்தினார்.

நாம் நமது தரப்பு ஆதாரங்களை எடுத்து வைத்தோம்.

நாம் இருவரும் ஒருமித்த ஒரு முடிவுக்கு வந்தபாடில்லை.

ஏனெனில், நாம் நெறி பிறழ்ந்த இஸ்லாமிய ஆட்சியாளர்களின் அடாவடித்தனத்தை சொல்ல, நண்பரோ அந்த ஆட்சியாளர்களின் தவறுகளுக்கான சமாதானங்களை சொல்லிக் கொண்டு இருந்தார்.

திடீரென நண்பரின் எட்டு வயது மகள் எங்களது உரையாடலுக்கு குறுக்கே வந்தாள்.

அவள் அவளுக்கே உரிய குறும்புடன் "எக்ஸ் கியுஸ் மீ.......நான் கொஞ்சம் பேசவா?" என்றாள்.

Saturday, August 20, 2011

நபி (ஸல்) அவர்களது பெற்றோர்கள் மூமின்கள் என்பதற்கான அல் குரான் ஆதாரம்:

அன்னை ஆமினா (அலை) அவர்களின் அடக்கஸ்த்தளம்
(ஒரு முறை சலவாத் சொல்வோம்!) 

"அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மத் வஆலி முஹம்மத்."

நபி (ஸல்) அவர்களது பெற்றோர்கள் மூமின்கள் என்பதற்கான அல் குரான் ஆதாரம்: 

நபி  (ஸல்) அவர்களது அருமைப் பெற்றோர்கள் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காத மூமின்கள் என்பதற்கு அல் குரானில் ஆதாரம் இருக்கிறது.

இந்த விடயம் பற்றி உலமாக்களுக்கு நன்கு தெரியும் .

எனினும், அதனை அவர்கள் வெளியே சொல்வதில்லை.

அவர்களுடைய மாணவர்களுக்கும் படித்துக் கொடுப்பதில்லை.அதனை ஆராய  விரும்பும்  மாணவர்களை அப்படி ஆய்வு செய்வது கூடாது என்று தடுத்தும் விடுகிறார்கள்.

Sunday, August 7, 2011

நபி (ஸல்) அவர்களின் பெற்றோர்கள் நரகவாதிகளா?



நபி (ஸல்) அவர்களின் பெற்றோர்கள் நரகவாதிகளா?




ஆச்சரியம்!

ஆச்சரியங்களையே ஆச்சரியப் படுத்துகின்ற ஒருஆச்சரியம்?

மனித குலத்தின் மோட்சத்துக்கு வழி சொல்லி அவர்களின் மீட்சிக்கு காரணமாக இருந்த மகானை பெற்றெடுத்த புண்ணியவான்களுக்கு மீட்சி இல்லையாம்?

நபி (ஸல்) அவர்களது பெற்றோர்கள் நரகத்தில் தீயினால் பொசுக்கப் படுகிறார்களாம்?

சூரியனுக்கே சாணி பூச முயற்சிக்கும் சாணக்கியம் புரிகிறதா?

இஸ்லாத்தின் எதிரிகளின் நாடுகளில் எல்லாம், அவர்களது வீடுகளில் எல்லாம், அவர்கள் கூடும் கூட்டங்களில் எல்லாம், ஏன்? தராவிஹ் தொழுகையின் பின்னர் எங்களது ஊர் மஸ்ஜிதுகளில் எல்லாம் இதே பேச்சு.

பாடசாலைகளில், பல்கலைக் கழகங்களில், கிறிஸ்தவ  தேவாலயங்களில், யூத மடாலயங்களில், கோயில்களில், கஹ்பதுல்லாஹ்வில், நபியின் பள்ளி வாசலில், ஏன்? உங்களது ஊர் எல்லையில் இருக்கும் நான்கு பேர் மட்டுமே தொழுகின்ற தர்காவிலும் இதே பேச்சுதான்.

நபியின் பெற்றோர்கள் நரகத்திலாமே?

புத்தகங்களில், இணையங்களில், நாங்கள் போகும் ஆட்டோ ரிக்ஷாவின் செலுத்துனர் வாய்களில் எல்லாம் மெல்லப் பட்டுக் கொண்டே இருக்கின்ற சுவை குன்றாத ஒரு அவல்.

நபிகளாரின் பெற்றோர்கள் நரகத்திலாமே?

படித்த ஆலிம் முதல் படிக்காத முஅத்தின் வரை தரம் தராதரம் எதுவும் இல்லாமல் பயமில்லாமல் பத்வா கொடுக்கும் ஒரே விடயம்.

நபிகளாரின் பெற்றோர்கள் நரகவாதிகள்.

இஸ்லாத்தின் எதிரிகளின் ஊடக வலிமையின் வீரியத்துக்கு போடுங்கள் ஒரு சபாஷ்.

அதிர்ச்சியோடு  நாம்  கேட்கிறோம்?

நபியின் பெற்றோர்களா?அதெப்படி சாத்தியம்?

திமிருடன் பதில் சொல்கிறார்கள்.

அவர்கள் இணை வைப்பாளர்கள்.

நபி (ஸல்) அவர்களின் பெற்றோரும், அவரை சிறு வயது முதல் பாது காத்து  வளர்த்த  அவரது  பெரிய தந்தை ஹசரத் அபூதாலிப் அவர்களும் பெரும் இணைவைப்பாளர்கள். அவர்களது இணை வைப்பின் காரணமாக அவர்கள் நரக நெருப்பில் வேதனை செய்யப் படுகிறார்கள்.

இதே விதமான கருத்துக்களை நமது சில முஸ்லிம் அறிஞர்களும் பகிரங்கமாக மிகவும் துணிச்சலுடன் முஸ்லிம்கள் மத்தியில் சொல்வது வேதனையான நிஜமாகும்.

இத்தகைய இஸ்லாமிய அறிஞர்களின் இதுபோன்ற செயல் முறைகள் எமது சமூகத்தின் அதால பாதாள வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் செயல் முறையாகும் என்கிற கூற்று ஒரு மிகையான கூற்றல்ல. 

இஸ்லாத்தின் எதிரிகளினதும்,  இத்தகையஎதிரிகளின்   கருத்துக்களுக்கு  பலியான நமது உலமாக்களும் தம்முடைய வாதத்துக்கு ஆதாரமாக சில இஸ்லாமிய அறிஞர்களின் ஹதீத்களின்  பதிவுகளையும் கோடிட்டு காட்டி இருக்கிறார்கள்.

இஸ்லாத்தின் எதிரிகளும் ,இஸ்லாத்துக்கு எதிரான இத்தகைய கருத்துக்களில் தம்மை அறியாமல் துணை போகும் நமது அறிஞர்களும் தமது கருத்துக்கு ஆதாரமாக எடுத்து வைக்கும் ஹதீத் கருத்துக்களின் தொகுப்பாசிரியர்களான இமாம்கள் முஸ்லிம் சமூகத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் எனபது எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.

இதன் காரணமாக இஸ்லாத்தின் எதிரிகளினதும் எமது அறிஞர்களினதும்  இத்தகைய கருத்துக்கள் சரியானவை என்று நாமும், ஏனையவர்களும் குழம்பிப் போய் விடுகிறோம்.

எம்மை அதிர்ச்சிக்கு ஆளாக்கிய செய்தின் பின்னணியில் தொக்கி இருக்கும் இந்த செய்தி எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்காது.

ஏனெனில் நிஜம் அதுவல்ல.

Monday, July 25, 2011

பராத் இரவும் அதில் உள்ள அஹ்லுல்பைத் அரசியலும்.............????


பராத் இரவும் அதில் உள்ள அஹ்லுல்பைத் அரசியலும்.............????


வருடம் தோறும் சஹ்பான் பிறை பதின் ஐந்தில் பராத் இரவு ஒரு சிறு சல சலப்பை முஸ்லிம்கள் மத்தியில் சலசலக்க வைக்கும்.

பராத் இரவு சம்பந்தமாக பல கதைகள்.

அன்றைய இரவில் மனித சமூகத்தில் ஒரு வருடத்தில் நடை பெற இருக்கின்ற அனைத்து விடயங்களையும் அல்லாஹ் பதிவதாகவும், மூன்று நோன்புகளை நாம் தொடராக நோற்றிவிட்டு அன்றிரவில் மூன்று யாசீன் சூராக்களை ஓதி சில விடயங்களை அல்லாஹ்விடம் கேட்டால் அவைகளை அல்லாஹ் நிறைவேற்றி வைப்பதாகவும் ஒரு நம்பிக்கை தொன்று தொட்டு நிலவி வருகிறது.


அதன் படி முதலாவது யாசீன் சூராவை ஓதிவிட்டு நமது நீண்ட ஆயுளுக்கும், இரண்டாவது யாசீனை ஓதி விட்டு உணவு விஷ்தீரனத்துக்கும், மூன்றாவது யாசீனை ஓதிவிட்டு நாம் அந்த வருடத்தில் செய்யப் போகின்ற பிழைகளையும்,  அத்துடன் கூடவே மரணித்து மண்ணறைகளில் இருக்கும் நமது உறவினர்களின் பிழைகளையும் மன்னித்து நமக்கு நல்லருளை அருளுமாரும் பிரார்த்திக்க நமக்கு நமது உலமாக்கள் சொல்லித் தந்து இருக்கிறார்கள்.

நாமும் மிகவும் பக்தி சிரத்தையுடன் அதனை செய்துக் கொண்டு வருகிறோம்.

பராத் தினத்தில் நோன்பு நோற்று நாம் அல்லாஹ்விடம் கேட்கும் பிரார்த்தனையில் எதுவித உயிர்ப்பும் இல்லை என்பதை நாம் அல்லாஹ்விடம் முன் வைக்கும் வேண்டுதல்களே நமக்கு பறை சாட்டுவதை மிகக் கவனமாக கவனித்தால் புரிந்து போகும்.

நாம் நீண்ட ஆயுளைக் கேட்கிறோம்.

அந்த ஆயுள் முழுதும் உண்பதற்கு உணவைக் கேட்கிறோம்.

உணவு உண்ட கொழுப்பில் நாம் செய்யும் பாவங்களையும் மன்னிக்குமாறு கேட்கிறோம்.

நாம் கேட்கும் இத்தகைய பிரார்த்தனையில் பொதிந்திருக்கும் ஆன்மீக இரகசியங்கள் என்ன?

எதுவுமே இல்லை.

அல்லாஹ்வை அறியும் ஞான இரகசியங்கள் எதாவது இருக்கிறதா?

அதுவும் இல்லை.

சரி, எதாவது சமூக சீர் திருத்தங்கள்?

ஒன்றும் இல்லை.

இத்தகைய இல்லாமைகளைக் கவனித்த நமது சீர்திருத்த தௌஹீத் தலைவர்களும், அவர்களுடன் ஒன்றிணைந்த ஜமாத்தே இஸ்லாமி  தலைவர்களும் இந்த பராத் நோன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் எதிராக கிளர்ந்து எழுந்தார்கள்.

இந்த முற்போக்கு தலைவர்களுக்கு எதிராக நோன்பு நோற்று பராத் இரவில் பிரார்த்தனை செய்யும் அடுத்த கூட்டமும் கிளர்ந்து எழுந்தது.

ஒவ்வொரு வருடமும் இந்த இரண்டு கூட்டத்தார்களும் வரிந்துக் கட்டிக் கொண்டு தமது பக்க நியாயங்களை தத்தமது ஆதரவாளர்களுக்கு சொல்ல, வருடா வருடம் இந்தத் தலைவர்களுக்கு ஒரு முக்கிய பொறுப்பு அவர்களின் மேல் சுமத்தப் பட்டு விட்டது.

முஸ்லிம் மக்களின் கவனத்தை பராத் இரவில் இருந்து திசை மாற்றிய கூட்டத்தாரின் இலக்கு இதன் காரணமாக செவ்வனே நிறை வேற்றப் பட்டாகி விட்டது.

முஸ்லிம்களின் கவனத்தை பராத் இரவில் இருந்து திசை திருப்பும் அளவுக்கு அதில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்று நீங்கள் கேட்பது நமக்கு புரிகிறது.

Wednesday, July 6, 2011

நாம் அறியாத ஷரியா..........மறுமையில் 'ரிசானாவின்' முன் முழங்கால்களில் எங்களது முப்திகள்...????


நாம் அறியாத ஷரியா..........மறுமையில் 'ரிசானாவின்' முன் முழங்கால்களில் எங்களது முப்திகள்...????


ஒரு நாள் இமாம் அலியிடம் ஒரு வழக்கு வந்தது.

ஒருவன் ஒரு மனிதனைக் கொலை செய்து விட்டான்.கொலை செய்தவனை கொலை செய்தவனின் தம்பி கட்டி இழுத்துக் கொண்டு , அவன் செய்த கொலைக்கு நீதி கேட்டு இமாம் அலியிடம் வந்தான்.

இமாம் நடந்தது என்ன என்று விசாரித்தார்.

"இவன் எனது சகோதரனைக் கொலை செய்து விட்டான்" கொல்லப் பட்டவனின் தம்பி சொன்னான்."இஸ்லாமிய ஷரியாவின் முறைப் படி எனக்கு நீதி தாருங்கள்?"

"இவன் சொல்வது உண்மையா?" என்று இமாம் குற்றம் சுமத்தப் பட்டவனிடம் கேட்டார்.

"நான் வேண்டுமென்றே அவனைக் கொல்லவில்லை" குற்றம் சுமத்தப் பட்டவன் நடுங்கியபடி சொன்னான்."நான் மரத்தில் ஏறியிருந்தேன். அவன் மரத்துக்கு அடியில் இருந்தான். நான் ஏறியிருந்த மரத்தின் கிளை உடைந்ததால் நான் அவனின் மேலே விழுந்தேன்.அதன் காரணமாக அவன் கழுத்து உடைந்து இறந்து போனான்"

இமாம் கொல்லப் பட்டவனின் தம்பியின் பக்கம் தனது பார்வையைத் திருப்பினார்.

"இவன் சொல்வது சரி " அவன் சொன்னான். "இவன் மரத்தில் இருந்து எனது சகோதரன் மேலே விழுந்ததன் காரணமாகத்தான் அவன் இறந்தான்."

."நீ இவனை மன்னித்து விடு."இமாம் தீர்ப்பு சொன்னார்"அல்லது கொலைக்குப் பகரமாக நட்டஈட்டைப் பெற்றுக் கொண்டு அவனை விட்டு விடு"

"என்னால் முடியாது" கொலைசெய்யப் பட்டவனின் தம்பி கோபத்தில் அலறினான்."இஸ்லாமிய ஷரியாவின் படி கொலைக்கு கொலை.ஆகவே என்னுடைய சகோதரனின் கொலைக்குப் பகரமாக அவன் கொல்லப் படுத்தல் வேண்டும்."

Monday, July 4, 2011

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் பெயரைக் கெடுத்த 'ஜமல்' யுத்தம்!... 'ஜமல்' யுத்தத்தின் மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்??????????


அன்னை ஆயிஷா  (ரலி) அவர்களின் பெயரைக் கெடுத்த 'ஜமல்' யுத்தம்!...
'ஜமல்' யுத்தத்தின் மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்??????????


நபி (ஸல்) அவர்களின் அருமைத் தோழர்கள் 'சஹாபாக்கள்' என எம்மால் மரியாதையுடன்  நினைவு கூறப் படுகிறார்கள்.

அந்த சஹாபாக்களில் நபி (ஸல்) அவர்களின் தூதை உள்ளத்தில் உண்மையாக ஏற்றுக் கொள்ளாமல், நயவஞ்சகத் தனத்தை நெஞ்சில் நிறைத்து  இருந்த முனாபிகான சஹாபாக்கள் நிறையவே இருந்து இருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மறைவுடன் இந்த முனாபிகான சஹாபாக்கள் முஸ்லிம் சமூகத்தில் தமது ஆளுமையை, திரை மறைவில் தீட்டும் சதிகளின் மூலமும், அந்தச் சதிகளை 'வாளின்' துணை கொண்டும்    நிலை நிறுத்திக் கொண்டார்கள்.

முஸ்லிம் உம்மாவின் ஆட்சியாளர்களாக இந்த நயவஞ்சக சஹாபாக்கள் அரசேறிய காரணத்தினால், இவர்கள் இஸ்லாமிய வரலாறை தமக்கு தோதாக மாற்றி எழுதிக் கொண்டார்கள்.

இந்த ஊடகவியலின் வலிமையால் நாம் இன்று வரை பொய்களினால் பின்னப் பட்ட ஒரு மாயையில் எம்மையே ஏமாற்றிக் கொண்டு வாழ்ந்து வருகிறோம்.

Saturday, July 2, 2011

"ஹவ்லுல் கவ்தரில் தண்ணீர் அருந்துவதட்குரிய அனுமதிப் பத்திரம்.........?"


"ஹவ்லுல் கவ்தரில் தண்ணீர் அருந்துவதட்குரிய அனுமதிப் பத்திரம்.........?"


நேற்றைய தினம் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் ஜூம்மா பிரசங்கத்தை மதிப்புக்குரிய அப்துல் ஹமீத் பஹ்ஜி அவர்கள் நிகழ்த்தி இருக்கிறார்கள்.

சஹ்பான் மாதத்தை நாம் எதிர் கொள்வதால் அந்த மாதத்தின் மகத்துவத்தைப் 
பற்றியதாக  அவரின் உரை அமைந்து இருக்கிறது.

சஹ்பான் மாதத்தில் நாம் செய்ய வேண்டிய நல் அமல்களில் அதிகம் , அதிகமாக சலவாத் சொல்லுமாறு வேண்டி, சலவாத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும், நாம் சலவாத் சொல்லவேண்டிய அவசியத்தைப் பற்றியும், சஹ்பான் மாதத்தில் நாம் எதற்காக அதிகம் சலவாத் சொல்ல வேண்டும் என்கிற காரணங்களைப் பற்றியும் அவர் விலாவாரியாக மிகவும் சிறந்த முறையில் பிரசங்கம் நிகழ்த்தி இருக்கிறார்.

ஹவ்லுல் கவ்தரில் தண்ணீர் அருந்துவதட்குரிய அனுமதிப் பத்திரத்தை  ஒருவர் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அவர் அஹ்ளுல்பைத்களின் மேல் நேசம் கொள்ள வேண்டும்.

அஹ்ளுல்பைத்களின் மேல் நேசம் கொள்வது என்பதன் அடையாளம் அவர்களின் மேல் அதிகம் அதிகம் சலவாத் சொல்வதில் இருக்கிறது என்று அவர் கூறி இருக்கிறார்.

அவரது கூற்று அப்பழுக்கு இல்லாத நிஜமாகும்.

Wednesday, June 29, 2011

மிஹ்ராஜ் தினமும் நாங்களும்............

மிஹ்ராஜ் தினமும் நாங்களும்............


இரண்டு தினங்களுக்கு முன்னர் ஒரு மாலைப் பொழுதில் எமது நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்றோம்.

அவரின் தாயாரும் , அவரது சிறிய தாயாரும் வீட்டு வேலைகளில் மும்முரமாக இருந்தார்கள்.

அவர்களின் முகத்தில்  ஒரு பதட்டமும், அதை மீறிய மகிழ்ச்சியும் தெரிந்தது.

நாம் கேட்டோம் "என்ன உம்மா விசேசம்?"

நண்பரின் தாயார் சொன்னார்" நாளை ரஜப் இருபத்து ஏழு!"

எமக்கு ஒன்றும் புரியவில்லை.

"ரஜப் இருபத்து ஏழில் என்ன விசேசம்?"

"அன்று மிஹ்ராஜ் நோன்பு நோற்க வேண்டும்" அவரது குரலில் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது."அதுக்குத்தான் நாம் தயாராகிக் கொண்டு இருக்கிறோம்"

நாம் நண்பரின் பெயரை கூறிக் கேட்டோம்"அவர் நோன்பு பிடிப்பாரா?"

"இல்லை" அந்தத் தாயார் வருத்தத்துடன் சொன்னார்."அவர்தான் தௌஹீத் ஜமாத்தில் இருக்கிறாரே. அவர் இது 'பிதுஆத்' என்று கூறுகிறார்."

"அப்படியென்றால் வீட்டில் யார் ...யாரெல்லாம் நோன்பு பிடிப்பீர்கள்?" நாம் கேட்டோம்.

"நாங்கள் ..வயசாலிகள் மட்டும்தான்."

Monday, June 27, 2011

சலவாத் சொல்வதில் 'தர்ம சங்கடத்தில்' உலமாக்கள்???!!!


சலவாத் சொல்வதில் 'தர்ம சங்கடத்தில்' உலமாக்கள்???!!!


சில வாரங்களுக்கு முன்னர், ஒரு வெள்ளிக்கிழமை மருதானை ஜும்மாஹ் மஸ்ஜிதில் இலங்கையிலும் தமிழ் நாட்டிலும்  பிரபலமான மௌலவி முஹாஜிரீன் அவர்களின் குத்பா பேருரையில் கலந்துக் கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது.

நபி (ஸல்) அவர்களின் புகழ் பாடும் அருமையான குத்பா பேருரை.

நபி (ஸல்) அவர்களின் முக்கியத்துவத்தைப் பற்றியும், நாம் அவர்களின் பெயரில் சலவாத் சொல்ல வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் மௌலவி அவர்கள் சிறப்பாக உரையாற்றினார்கள்.

ஆனால், அவர் சொன்ன சலவாத்தில் ஒரு சின்ன குழப்பம்.

முஹாஜிரீன் மௌலவி அவர்கள் தனது உரையில் நபி (ஸல் ) அவர்களின் பெயர் கூறக் கேட்ட மாத்திரம் சொன்ன சலவாத்துக்களை கீழே தருகிறோம்.

அதில் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் ஏதாவது தெரிகிறதா என்று கவனமாக கவனியுங்கள்.

மௌலவி அவர்களின் உரையில், அவர் முஹம்மத் என்று சொன்ன வுடன் - சல்லல்லாஹு அலைஹிவசல்லம் - என்றார்.

நபி -என்ற கட்டங்கள் வரும் தோறும் அவர் -சல்லல்லாஹு அலைஹிவசல்லம்  - என்றார்.

ரசூல் என்று கூறும் பொழுதெல்லாம் அவர் -சல்லல்லாஹு அலைஹிவசல்லம் - என்றார்.

நாம் அன்றாடம் கேட்கும் சலவாத்துடன் இதில் ஒரு முரண்பாடும் இல்லை என்று பார்த்த பார்வைக்கு தெரிகிறதல்லவா?

ஆனால், நாம் சரி கண்ட இந்த சலவாத்தில் பெரும் முரண்பாடு இருக்கிறது.

என்ன என்கிறீர்களா?

Thursday, June 23, 2011

வேகம்.........! விவேகம்...!! சிறுபான்மையினராக இருக்கும் மக்களுக்கு எது தேவை?


வேகம்.........! விவேகம்...!! சிறுபான்மையினராக இருக்கும் மக்களுக்கு எது தேவை? 


மக்களின் தலைவர்களாக இருப்பவர்களுக்கு பல முக்கிய பொறுப்புக்கள் இருக்கின்றன.

அந்த முக்கிய பொறுப்புக்களை சில சமயம் அவர்கள் மறந்து செயல் படுகிறார்கள்.

அதனால் வருகின்ற விளைவுகள் பயங்கரமானது.

அந்தத் தலைவனின் சந்தோஷம் அவனது மக்களின் சந்தோஷமாக இருக்கிறது.

அவனின் கவலை அந்த மக்களின் கவலையாக உருவெடுக்கிறது.

அவனின் வெற்றி அந்த மக்களின் வெற்றியாக பரிணமிக்கிறது.

அவனது இனத்தில் அவனை வெறுப்பவர்களும் அவனது வெற்றி தோல்வியில் ஏதோ  ஒரு விதத்தில் செல்வாக்கு செலுத்தப் படுகிறார்கள்.

இலங்கை பல தசாப்தங்களாக பல கலவரங்களை சந்தித்து மீண்ட பூமி.

Saturday, June 18, 2011

நபிமார்கள் ரசூல்மார்களை விஞ்சிய சாதாரண குழந்தைகள்...?'இஸ்ராலியியட்' ஹதீத்களின் அபத்தங்கள்!!!!


நபிமார்கள் ரசூல்மார்களை விஞ்சிய சாதாரண குழந்தைகள்...?'இஸ்ராலியியட்'  ஹதீத்களின் அபத்தங்கள்!!!!


புஹாரி ஹதீத் கிரந்தத்திலும், முஸ்லிம் ஹதீத் கிரந்தத்திலும் பதிவாகி இருக்கின்ற சில ஹதீத்கள் நபி (ஸல்) அவர்களின் அந்தஸ்த்தை குறைத்து  மதிப்பிடும் அளவுக்கு ஆபத்தானவைகளாக இருக்கின்றன.

அபூஹுரைரா அறிவிக்கிறார்கள்;

ஜுரைஜ் என்ற பெயருள்ள ஒரு இஸ்ரவேலர் இருந்தார்.

அவர் தனது ஆசிரமத்தில் தொழுதுகொண்டு இருக்கும் பொழுது, அவரது தாயார் அவரை  அழைத்தார்.

அவர் தனக்குள் "நான் எனது தாயாருக்கு பதில் சொல்வதா, அல்லது எனது தொழுகையை முடிப்பதா?" என்று கூறிக் கொண்டார்.

அவரது தாயார்"யா! அல்லாஹ்! எனது மகனை விபச்சாரி அழைக்காத நிலையில் விட்டு விடாதே" என்று பிரார்த்தித்தார்.

ஒரு நாள், ஜுரைஜ் தனது ஆசிரமத்தில் இருக்கும் பொழுது ஒரு விபச்சாரி அவருடன் சல்லாபம் செய்யும் நோக்கில் நெருங்கினார்.

Friday, June 17, 2011

நபி (ஸல்) அவர்கள் இனங்காட்டிய "இரண்டு தலை வாசல்கள்" .....ஒன்று 'ஞானத்தின்' வாசல்! மற்றயது 'குழப்பத்தின்' வாசல்.!!

நபி (ஸல்) அவர்கள் இனங்காட்டிய "இரண்டு தலை வாசல்கள்"

ஒன்று   அல்லாஹ்வை அறிந்துக் கொள்ள உதவும் 'ஞானத்தின்' வாசல்!

மற்றயது மனிதனை வழிக் கேட்டில் கொண்டு செல்லும் 'குழப்பத்தின்' வாசல்.!!

".......... வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் இல்லை;ஆனால், இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணிய முடையோராவார்;எனவே, வீடுகளுக்குள் வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்; நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை , அஞ்சி நடந்துக் கொள்ளுங்கள்"
(அல் குரான்: 02 : 189 )

Monday, June 13, 2011

"'மறுமையில் ஹவ்லுல் கவ்தரில் முதன் முதலில் தண்ணீர் அருந்தும் பாக்கியம் பெற்ற முதல் முஸ்லிம்" ----'ரஜப்' அவர் பிறந்த மாதம் -

"'மறுமையில் ஹவ்லுல் கவ்தரில் முதன் முதலில் தண்ணீர் அருந்தும் பாக்கியம் பெற்ற முதல் முஸ்லிம்" ----'ரஜப்' அவர் பிறந்த மாதம் -



இஸ்லாத்தின் முதல் முஸ்லிமும், மறுமையில் ஹவ்லுல் கவ்தரில் முதன் முதலில் தண்ணீர் அருந்தும் பாக்கியம் பெற்றவர் என்று நபி (ஸல்) அவர்களால்  நன்மாராயம்  சொல்லப் பட்டவருமான இமாம் அலி அவர்கள் ரஜப் மாதம் பிறை பன்னிரெண்டில்  இந்த உலகில் பிறந்தார்கள்.

அவர் பிறந்த அக்கால ஐயாமுல் ஜாஹிலிய்யா அராபியாவில் வழக்கில் இருந்த கொள்கைகளில் பிரதானமான கொள்கைகளில் ஒன்று ,அவர்கள்  அவர்களது மூதாதையர்களை கண்மூடித்தனமாக நம்பி அவர்களை பின்பற்றுவது ஆகும்.

"எங்களது மூதாதையர்கள் நேர் வழி நின்றவர்கள். அப்பழுக்கு இல்லாத அவர்களையே நாம் பின்பற்றுவோம்" என்கிற கொள்கை அழுத்தம் திருத்தமாக அன்றைய அராபியாவிலே நிலவியது.

ஆனால், நபித்துவ அழைப்பை தத்துவரீதியாக சிந்தித்த பத்து வயது நிரம்பிய இமாம் அலி , சிறு வயதிலேயே  அக்கால அராபிய கொள்கைகளுக்கு எதிராக ஒரு முடிவு எடுக்கிறார்.

பதின் மூன்று வருடங்களாக மக்கத்து அராபியர்களுக்கு புலப் படாத சத்தியங்கள் அந்த பத்து வயது சிறுவர் இமாம் அலிக்கு ஒரு நாளில் புலப்பட்டது எப்படி என்கிற ஆய்வு , சிறுவர் இமாம் அலியின் தர்க்கவியல் அடிப்படையில் முடிவு எடுக்கும் திறமைக்கு ஒரு சான்றாக இன்றுவரை இருந்துக் கொண்டு இருக்கிறது.

தம்மை கட்டிப் போட்டு இருக்கிற நம்பிக்கைகளுக்கு முரணாக சிந்திக்கவே தயங்கிய அந்த அராபிய சமூகத்தில் , துணிந்து அவர் எடுத்த முடிவு ஆச்சரியமானது.

மூதாதையர்களை அச்சொட்டாக பின்பற்றுகின்ற வழமை இன்று கூட   எங்களிடையேயும்  நிலவுகிறது.

Sunday, June 5, 2011

மண்ணறை 'தல்கீனும்' 'தல்கீனில்'மறைந்திருக்கும் 'அஹ்லுல் பைத்களும்' .....???!!!


மண்ணறை 'தல்கீனும்' 'தல்கீனில்'மறைந்திருக்கும் 'அஹ்லுல் பைத்களும்' .....???!!! 

சில தினங்களுக்கு முன்பு, மாவனல்லை நகரில் ஹெம்மாதகம கிராமத்துக்கு உறவினர் ஒருவரின் மரண வீட்டுக்கு சென்று இருந்தோம்.

மாலையில் மையத்தை அடக்கினார்கள்.

அதன் பின்னர், அப் பகுதி மதரசாவின் அதிபர் மையத்தை அடக்க வந்த மக்களுக்கு அற்புதமான உரையொன்றை மண்ணறை அருகே திரண்டிருந்த மக்கள் மத்தியில் நிகழ்த்தினார்.


இந்த உரை,  நாம் முன்னர் செய்து  வந்த  'தல்கீனுக்கு ' பகரமாக  நிகழ்த்தப்  பட்டது 

அதென்ன 'தல்கீன்'?

மையத்தை அடக்கியதன் பின்னர் இமாம் அந்த மையத்துக்கு சில விடயங்களை சொல்லிக் கொடுப்பார்.

அவ்வாறு சொல்லிக் கொடுப்பதை 'தல்கீன்' என்று அழைப்பார்கள்.

மையத்தை அடக்கி முடித்ததன் பின்னர், 'தல்கீன்' ஓதும் வழக்கம் தொன்று  தொட்டு இருந்து வந்தது.

தல்கீனில் சில முக்கிய விடயங்களை அடக்கப் பட்ட மையத்துக்கு சொல்லிக் கொடுப்பது போல பேஷ் இமாம் உரையாற்றுவார்.

சுற்றி இருப்பவர்கள் காது தாழ்த்தி அமைதியாக அதனைக் கேட்டுக்  கொண்டு இருப்பார்கள்.

அவர் சொல்லும் விடயங்கள் அடக்கப் பட்ட மையத்துக்கு சொல்லுவது போல இருந்தாலும், நிஜத்தில்  அவைகள் மையத்தை அடக்க வந்த மக்களுக்கே சொல்லப் படும். 

தொன்று  தொட்டு  எது வித மாற்றமும் இன்றி ஒரே மாதிரி நினைவு படுத்தி சொல்லி வரப்பட்ட 'தல்கீன்' இப்பொழுது மருவி "கபுரடி பயானாக" புது அவதாரம் எடுத்து இருக்கிறது.

தல்கீன் ஓதும் பொழுது மண்ணறையில் அடக்கப் பட்ட மையத்திடம்   மலக்குகள் கேட்கும் கேள்விகளையும், அதற்கான பதில்களையும் பள்ளி வாயல் இமாம் சொல்லிக் கொடுப்பார்.

தவ்ஹீத் ஜமாஅத், ஜமாத்தே இஸ்லாமி, இஹ்வானுல் முஸ்லிமீன் போன்ற முற்போக்கு இஸ்லாமிய இயக்கங்களின் செல்வாக்கினால், இப்பொழுது தல்கீன் தூக்கி எறியப் பட்டு விட்டது.

நாம் கூட மண்ணறையில் ஓதப் படுகின்ற 'தல்கீனை' குறித்து வாதம் செய்பவர்களாக, அதற்கு எதிரானவர்களாக இருந்து இருக்கிறோம்.

ஜமாத்தே இஸ்லாமியினதும், தவ்ஹீத் ஜம்மாத்தினதும் செல்வாக்கு எங்களின் மீது ஆதிக்கம் செலுத்தியது அதற்கு பிரதான காரணமாகும். 

அத்தகைய முற்போக்கு இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள்  தல்கீனுக்குப் பதிலாக "கபுரடி பயானை" அறிமுகப் படுத்தி விட்டார்கள்.

தல்கீனுக்கு எதிரான இஸ்லாமிய முற்போக்கு இயக்கங்களின் செயல் பாடு 'நருக்'கென நெஞ்சில் குத்தியது.

'அறிந்தோ அறியாமலோ அஹ்ளுல்பைத்களுக்கு எதிரான போக்கில் இருக்கின்ற இவர்கள் எதற்காக தல்கீனை இலக்கு வைத்தார்கள்?'

உடனே, நாம் தல்கீனில் கேட்கப் படுகின்ற கேள்விகளையும், அதற்கு சொல்லிக் கொடுக்கப் படுகின்ற பதில்களையும் ஆராய்ந்துப் பார்த்தோம்.
     
ஆச்சரியமாக, இஸ்லாமிய முற்போக்கு இயக்கங்களினால்  இலக்கு வைக்கப் பட்டு தூக்கி எறியப் பட்ட தல்கீனில் கேட்கப் படும் கேள்விகளிலும், அதற்கான பதில்களிலும் 'அஹ்லுல் பைத்களுக்கு' ஆதரவான ஒரு உண்மை ஒளிந்து இருந்தது.

Wednesday, June 1, 2011

இரண்டாம் கலீபாவின் படு கொலை சூத்திர தாரிகள்.... .......பின்புல வடிவமைப்பு : சப்பரை அறிஞர் 'காப் அல் அஹ்பார்'


இரண்டாம் கலீபாவின் படு கொலை சூத்திர தாரிகள்....
.......பின்புல வடிவமைப்பு : சப்பரை அறிஞர்  'காப் அல் அஹ்பார்'


உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மதீனாவுக்கு அராபிகள் அல்லாதவர்கள் அனுமதிக்கப் படவில்லை.

கிட்டத்தட்ட இஸ்லாமிய தலை நகர் மதீனா ஒரு பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப் பட்டு இருந்தது.

மதீனாவினுள் வருவதற்கு தடை செய்யப் பட்ட யாராவது மதீனாவினுள் நுழைய வேண்டும் என்றால் அவருக்கு கலீபாவின் அனுமதியும், பொறுப்பாளர் ஒருவரின் சிபாரிசும் வேண்டப்பட்டது.

தலை நகர் மதீனாவின் பாதுகாப்பே இப்படி என்றால், கலீபாவின் பாதுகாப்பு எப்படி இருந்திருக்கும் என்பது உங்களுக்கு புரிந்து போகும்.

இத்தகைய பாதுகாப்பு வியூகத்தை உமர் (ரலி) அவர்களின் கொலையின் சூத்திரதாரிகள் மிக இலாவமாக சிதைக்கிறார்கள். 

Wednesday, May 25, 2011

அன்னை ஆயிசா(ரலி) அவர்களைக் காப்பாற்றிய இமாம் அலி......இஸ்லாமிய வரலாற்றில் மறைக்கப் பட்ட இன்னொரு பதிவு!!!!

அன்னை ஆயிசா(ரலி) அவர்களைக் காப்பாற்றிய இமாம் அலி......இஸ்லாமிய வரலாற்றில் மறைக்கப் பட்ட இன்னொரு பதிவு!!!!

மர்வான் இப்னு ஹகமின் திட்டமிடப்பட்ட சதியின் விளைவாக நடந்து முடிந்த 'ஜமல்' கலவரத்தில் நிறைய அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப் பட்டார்கள்.

கலவரத்துக்கு முந்திய தினம் மாலையில் இமாம் அலியுடன் நடந்த சந்திப்பின் பின்னர் ஹசரத் தல்ஹா (ரலி) அவர்களும், ஹசரத் ஸுபைர் (ரலி) அவர்களும் அந்த எதிர்ப்பு கலகக் கூட்டத்தை விட்டும் விலகிப் போய்விட தீர்மானித்தார்கள்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் நிலையும் அப்படியே இருந்தது.

முஸ்லிம்களிடையே சமாதானம் ஏற்பட்டுவிடும் என்று அஞ்சிய மர்வான் இப்னு ஹகமும் அவனது சதிகாரக் கூட்டத்தினரும் இரவில் திடீரென தாக்குதலை ஆரம்பித்தார்கள்.

பதட்டத்துடன் என்ன நடக்குமோ என்றிருந்த அப்பாவி மக்களிடையே திடீர் கலகம் வெடித்தது.

Tuesday, May 24, 2011

பாலூற்றி வளர்த்தவரையே கொத்திய பாம்பு.....சஹாபாக்களின் தவறுகள் கற்றுத் தரும் படிப்பினைகள்...



பாலூற்றி வளர்த்தவரையே கொத்திய பாம்பு.....சஹாபாக்களின் தவறுகள் கற்றுத் தரும் படிப்பினைகள்...


நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்  பொழுது சிலருக்கு மரணதண்டனை வழங்கி 'பத்வா' கொடுத்து இருந்தார்கள்.

அதில் கஹ்பதுல்லாவின் திரை சீலையைப் பிடித்து 'அபயம்' கேட்டாலும் 'அபயம்' கொடுக்கக் கூடாது என்று அறிவித்திருந்த நபர்களில் ஹகம் இப்னு அல் ஆஸ்  முக்கியமானவன்.

லுஹருடைய நேரத்தில் இந்த ஹகமை ஹசரத் உதுமான் (ரலி) நபி (ஸல்) அவர்களின் சமூகத்துக்கு பொது மன்னிப்பை வேண்டி அழைத்து வந்தார்கள்.

நபிகளார்(ஸல்) அவர்கள் இந்த ஹகமுக்கு  உடனே மன்னிப்பு வழங்க வில்லை.

உதுமான் (ரலி)  நபி (ஸல) அவர்களை அணுகி அவனுக்காக மீண்டும் பொது மன்னிப்பை வேண்டினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஒன்றும் கூறவில்லை.

இப்படியே பலமுறை இந்த ஹகமுக்காக உதுமான் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் மன்னிப்பை வேண்டுவதும், அதற்கு நபி (ஸல்) அவர்கள் மெளனமாக இருப்பதுமாக நேரம் கடந்து கொண்டு இருந்தது.

இறுதியில் மாலையில் நபி (ஸல்) அவர்கள் இந்த ஹகமுக்கு மிகவும் கடுமையான ஒரு நிபந்தனையின் அடிப்படையில் பொது மன்னிப்பை வழங்கினார்கள்.

அது என்ன நிபந்தனை?

"இஸ்லாமிய அரசின் தலை நகரில் இந்த ஹகம் எந்தக் காரணம் கொண்டும் நுழையக் கூடாது. இவன், இஸ்லாமிய அரசின் எல்லையை விட்டும் நாடு கடத்தி வைக்கப் படல் வேண்டும்"

இதுதான் அந்த கடுமையான நிபந்தனை.

ஹகமுக்கு இவ்வளவு கடுமையான நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பைக் கேட்டதும் சஹாபாக்கள் அதிர்ந்து போனார்கள்.

ஹசரத் உமர் (ரலி)   நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார் "யா... ரசூலுல்லாஹ்!
நீங்கள் ஹகமுக்கு இன்று பகலில் இருந்து மாலை வரை மன்னிப்பை வழங்க வில்லை."என்ற உமர் (ரலி) வியப்புடன் கேட்டார் "அப்படி மன்னிப்பு வழங்கும் பொழுதும் அவரை இஸ்லாமிய எல்லையை விட்டும் நாடு கடத்தும் கடுமையான நிபந்தனையுடனே மன்னிப்பை வழங்கி இருக்கிறீர்கள். இதன் அர்த்தம் என்ன?"

"நான் இந்த ஹகமுக்கு இவர் காபதுல்லாவின் திரை சீலையைப் பிடித்துக் கொண்டு அபயம் கேட்டாலும் அபயம் அளிக்காமல் இவரை கொன்று விடுமாறு இவருக்கு   மரண தண்டனை வழங்கி 'பத்வா' கொடுத்து இருந்தேன்." என்ற நபி (ஸல) அவர்கள் தொடர்ந்தார்கள் "உங்களில் யாராவது எனது 'பத்வாவை' கருத்தில் கொண்டு இவருக்கான மரண தண்டனையை நிறைவேற்றுகிறீர்களா என்று மாலை வரை காத்து இருந்தேன்.ஆனால், உங்களில் யாரும் எனது நோக்கத்தைப் புரிந்துக் கொள்ளவில்லை." என்றார்கள்.

உடனே உமர் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எனக்கு மெதுவாக கண் சாடைக் காட்டி இருந்தால் நான் அந்த வேலையை செய்து இருப்பேனே" என்று அங்கலாயித்தார்.

இதைக் கேட்ட நபி (ஸல) அவர்கள் "அப்படி கண் சாடை காட்டி ஏமாற்றுவது தூதர்களுக்கு அழகல்ல" என்று உமர் (ரலி) அவர்களுக்கு பதிலளித்தார்கள்.

இஸ்லாமிய அரசின் எல்லையினுள்  எக்காரணம் கொண்டும் எடுக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் பொது மன்னிப்பு வழங்கப் பட்ட ஹகமை , நபி (ஸல்) அவர்களின் கட்டளையை மீறி இஸ்லாமிய எல்லைக்குள் எடுத்தது மட்டுமன்றி, அவனது மகன் மர்வான் இப்னு ஹகமை இஸ்லாமிய அரசின் 'செயலாளராக' உதுமான் (ரலி) நியமித்து நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு மாறு செய்தார்.

உஹது யுத்தத்தில் நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு மாறு செய்த காரணத்தால், வெற்றி பெற்ற உஹது யுத்தம் தோல்வியில் முடிவடைந்த கதை நமக்கு தெரியும்.

நபி (ஸல்) அவர்களால் மரண தண்டனை விதிக்கப் பட்ட ஒரு பயங்கரமான நபருக்கு தனது செல்வாக்கைப் பயன் படுத்தி மன்னிப்பு பெற்றுக் கொடுக்கும் முதலாவது தவறை உதுமான் (ரலி) செய்கிறார்.

பின்னர், நபி (ஸல்) அவர்கள் தேசபிரதிருஷ்டம் செய்த ஒருவனை இஸ்லாமிய அரசினுள் உள்வாங்கிய இரண்டாவது தவறையும் உதுமான் (ரலி) மீண்டும் செய்கிறார்.

அது மட்டுமன்றி, அந்த நபரின் மகன் மர்வானை தனது மருமகனாகவும் ஏற்றுக் கொண்டு மீண்டும் ஒரு பாரிய தவறை செய்து நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு திரும்பத் திரும்ப மாறு செய்தார்.

பின்னாளில், மர்வான் இப்னு ஹகம் செய்த சதிகளினாலேயே உதுமான் (ரலி) கொல்லப் படுகிறார்.

பரிதாபமாக, பாம்புக்கு பாலூற்றி வளர்த்து அந்தப் பாம்பினாலேயே தீண்டப் பட்டு முடிந்த கதையாக அவரது கதை முடிகிறது