Tuesday, July 25, 2017

உம்மிகளின் நபி – இரண்டு




அல்லாஹுத்தஆலா மனிதர்களது சக்திக்கு மீறிய செயலை செய்யுமாறு மனிதர்களை கட்டாயப்படுத்துவதில்லை. வற்புறுத்துவதில்லை. அப்படி எதிர்பார்ப்பதுமில்லை. அப்படியான செய்கை அவனது மகத்துவத்துக்கு உகந்ததில்லை. 

மறுப்பேதுமின்றி அனைவரும் ஏற்றுக் கொள்ளும் செய்தியிது.

இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறோம் என்று சமூகத்தை விட்டும் ஒதுங்கியிருந்த பனு ஹாஷிம்களை மக்கள் ‘ஹனீப்கள்’ என்று அழைத்தார்கள். பாரம்பரியத்தை பேணுபவர்கள் என்று அதற்கு அர்த்தம் வரும். அந்தக் குடும்பத்தில் வந்துதித்த நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் ஹனீப் பிரிவினரைப் போலவே ஓரிறைவனை விசுவாசித்திருந்தார். ஹிறா குகையில் தனித்திருந்தார். இறைவனை வணங்கி வந்தார்.

ஒரு நாள் அவரிடம் வானவர் ஜிப்ரீல் (அலை) வருகிறார்கள். ‘யாவற்றையும் படைத்த உமதிறைவனின் திருப்பெயரைக் கொண்டு வாசிப்பீராக!’ என்று சொல்கிறார்கள்.நபிகளாரும் அவர் சொன்ன பிரகாரம் வாசிக்கிறார்கள். அதன் பின்னர் அல் குர்ஆனின் முதல் ஐந்து ஆயத்துக்கள் நபிகளாருக்கு அருளப்படுகின்றது.

எழுத்தறிவும் வாசிப்பறிவும் இல்லாத நிலையில் நபிகளார் இருந்திருந்தால், எழுதவும் வாசிக்கவும் தெரியாத நபியைப் பார்த்து ‘‘யாவற்றையும் படைத்த உமதிறைவனின் திருப்பெயரைக் கொண்டு வாசிப்பீராக’ என்று அல்லாஹ் கட்டளையிட மாட்டான். இல்லையா?

மனிதக்குல மோட்சத்துக்கு அல்லாஹ்வினால் அருளப்பட்ட முதலாவது இறைவசனமே நபிகளார் வாசிக்கத் தெரிந்தவர் என்பதற்கு சான்றாக இருக்கிறதல்லவா?

கலந்துரையாடல்களை வரவேற்கிறேன்.
பின்குறிப்பு:

‘இக்ரா’ என்ற அறபு சொல்லுக்கு Read- பாடங்களை ஒப்புவித்தல் அல்லது முறையாகக் கூறுதல். Recite- பார்த்துப் படித்தல் அல்லது அர்த்தம் காணுதல். Procclaim- அதிகார பூர்வமாக வெளியிடுதல் அல்லது அறிவித்தல் என்று அர்த்தம் வரும்.
தேடல்கள் இன்னும் தொடரும் – இன்ஷா அல்லாஹ்.

No comments:

Post a Comment