ஆப்ரகா மன்னனின் பிரமாண்டமான யானைப் படையினர் மக்காவை அழிக்க வந்த மாதம் எது?........துல் ஹஜ்............?முஹர்ரம்........??
இந்த மாதத்தில் நாம் எங்களது மார்க்கத்தின் நிஜமான ஸ்தாபகர் நபி இப்ராஹீம் (அலை) அவர்களையும், அவர்களது குடும்பத்தவர்களின் தியாகத்தையும் நினைவு கூர்கிறோம்.
இந்த துல் ஹஜ் மாதத்தில்தான் அப்ரகா மன்னனின் மக்காவை ஆக்கிரமிக்கும் யானைப் படையின் படையெடுப்பும் நடந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கிறது.
ஏனெனில், யானைப் படையெடுப்பு முடிந்து சரியாக ஐம்பத்து இரண்டு நாள்களின் பின்னால் நபி (ஸல்) அவர்கள் பிறந்திருக்கிறார்கள் என்று வரலாற்றில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.
இந்தப் பதிவை நம்ப முடியாதிருக்கிறது.
நபி (ஸல்) அவர்களின் அருமை மகளார் அன்னை பாத்திமாவின் (ஸலாமுன் அலைஹா) பிறப்பு பற்றிய சரியான திகதி வருடங்கள் என்ன என்பதில் எங்களது அறிஞர்களிடையே இன்னமும் குழப்பம் நிலவி வருகிறது.
நுபுவ்வத்துக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் அவர் பிறந்ததாக ஒரு சாராரும், நுபுவ்வத்துக்குப் பின்னர் ஐந்து வருடங்கள் கழிந்து அவர் பிறந்ததாக் இன்னொரு சாராரும் சொல்லியிருக்கிறார்கள்.
அதே போல நபி (ஸல்) அவர்களது மறைவு நாளிலும் அறிஞர்களிடையே குழப்பம் இருக்கிறது.
சபார் மாதம் என்று சிலரும், ரபியுல் அவ்வல் என்று சிலரும் சொல்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் சுமார் நூற்றி ஐம்பதுக்கும் அதிகமான ஜனாஸா தொழுகை நடாத்தியிருக்கிறார்கள்.
என்றாலும், நபி (ஸல்) அவர்களின் ஜனாஸா தொழுகையில் எத்தனை தக்பீர் என்பதில் சஹாபாக்களிடையே கருத்து மோதல் உருவானது.
நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுதார்கள் என்பதே இன்னமும் நமக்கு சரியாக தெரியாது.
கைகளை நெஞ்சில் கட்டினார்கள் என்றும்..........இல்லை..இல்லை..வயிற்றில் கட்டினார்கள் என்றும்.......இல்லை..இல்லை...கைகளை கட்டவில்லை என்றும்.......
இப்படி நிறையவே ஆதாரங்களை எங்களால் தர முடியும்.
இப்படியிருக்க, அக்காலத்தில் ஹஜ் மாதத்தில் மாக்கவில் திரளும் ஹாஜிகள் நேர்ச்சையாக நிறைய செல்வங்களைக் கொண்டு வருவார்கள் என்று வரலாற்றில் பதிவாகியிருக்கிறது..
ஹஜ் மாதத்தில் மக்காவில் பிரமாண்டமான வர்த்தக சந்தைகள் ஏற்பாடு செய்யப் பட்டு மிகப் பெரிய அளவில் வியாபாரங்கள் நடை பெற்றிருப்பதாகவும் வரலாறு சொல்கிறது.
ஆனால், இஸ்லாத்தில் எங்களுக்கு சொல்லப் பட்டிருக்கிற ஆபிரகாவின் பிரமாண்டமான யானைப் படையெடுப்புக் கதையோ வேறு விதமானது.
ஆப்ரகா மன்னன் தனது யானைப் படையுடன் மக்காவுக்கு ஹஜ் முடிந்த பின்னர் முஹர்ரம் மாதம் இருபது அல்லது அதனை ஒட்டிய நாளில் படைஎடுத்திருப்பது போல கதை அளந்திருக்கிறார்கள்.
சரி, அப்படித்தான் நடந்தது என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும், முஹர்ரம் மாதத்தில் அந்த மாதத்தின் முக்கியத்துவத்தைப் பேசும் நமது அறிஞர்கள் முக்கியமான இந்த சம்பவம் பற்றி மூச்சு விடுவதில்லையே?
ஆதலால், புத்திசாலியான அப்ரகா மன்னன் துல் ஹஜ் மாதத்தில் தான் மக்காவின் மீது படை எடுத்திருக்க வேண்டும்.
அவன் துல் ஹஜ் மாதம் படை எடுப்பதில் பல அனுகூலங்கள் அவனுக்கு இருக்கின்றன.
* துல் ஹஜ் மாதத்தில் அராபிய குறைசிகள் போர் செய்ய மாட்டார்கள்.
*துல் ஹஜ் மாதத்தில் பிரமாண்டமான செல்வம் மக்காவில் திரண்டிருக்கும்.
*திரண்டிருக்கும் மக்களின் முன்னால் கஹ்பதுல்லாஹ்வை அழிப்பதில்தான் அவனது கௌரவம் பேசப் படும்.
ஆனால் நடந்தது என்ன?
கஹ்பதுல்லாஹ்வை அவனால் நெருங்க முடிய வில்லை.
திரண்டிருந்த மக்களின் மத்தியில் அவனது படையினரை மட்டுமே இலக்காகக் கொண்டு அல்லாஹ் அபாபீல் பறவைகளைக் கொண்டு அந்த பிரமாண்டமான யானைப் படையினரை அழித்து ஒழித்தான்.
ஆப்ரகா மன்னனது தோல்வியின் வீரியத்தக் குறைக்கும் வண்ணம் அவன் முஹர்ரம் மாதம் கஹ்பதுல்லாஹ்வை அழிக்க வந்தான் என்று நாம் நம்பவைக்கப் பட்டிருக்கிறோம்.
திரண்டிருந்த ஹஜ் யாத்திரிகர்கள் மத்தியில் அவனது படையினர் மட்டுமே அழிக்கப் பட்டார்கள் என்ற கருத்தில் அல்லாஹ்வின் வல்லமையும், அவனது ஆற்றலும் தொக்கியிருக்கிறது.
இஸ்லாத்தின் எதிரிகளின் கைகளினால்தான் நாம் நம்பும் இஸ்லாமிய வரலாறு எழுதப் பட்டிருக்கிறது.
அவர்கள் ஒருபோதும் அல்லாஹ்வின் வல்லமையைக் கூறும் சம்பவங்களை நமக்கு சொல்லப் போவதில்லை.
நீங்கள் கொஞ்சம் சிந்தித்தால் நாம் சொல்லும் நிஜங்கள் புரிந்துப் போகும்.
1 comment:
ஏனெனில், யானைப் படையெடுப்பு முடிந்து சரியாக ஐம்பத்து இரண்டு நாள்களின் பின்னால் நபி (ஸல்) அவர்கள் பிறந்திருக்கிறார்கள் என்று வரலாற்றில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.
இந்தப் பதிவை நம்ப முடியாதிருக்கிறது.
நபி (ஸல்) அவர்களின் அருமை மகளார் அன்னை பாத்திமாவின் (ஸலாமுன் அலைஹா) பிறப்பு பற்றிய சரியான திகதி வருடங்கள் என்ன என்பதில் எங்களது அறிஞர்களிடையே இன்னமும் குழப்பம் நிலவி வருகிறது.
நுபுவ்வத்துக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் அவர் பிறந்ததாக ஒரு சாராரும், நுபுவ்வத்துக்குப் பின்னர் ஐந்து வருடங்கள் கழிந்து அவர் பிறந்ததாக் இன்னொரு சாராரும் சொல்லியிருக்கிறார்கள்.
அதே போல நபி (ஸல்) அவர்களது மறைவு நாளிலும் அறிஞர்களிடையே குழப்பம் இருக்கிறது.
சபார் மாதம் என்று சிலரும், ரபியுல் அவ்வல் என்று சிலரும் சொல்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் சுமார் நூற்றி ஐம்பதுக்கும் அதிகமான ஜனாஸா தொழுகை நடாத்தியிருக்கிறார்கள்.
என்றாலும், நபி (ஸல்) அவர்களின் ஜனாஸா தொழுகையில் எத்தனை தக்பீர் என்பதில் சஹாபாக்களிடையே கருத்து மோதல் உருவானது.
நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுதார்கள் என்பதே இன்னமும் நமக்கு சரியாக தெரியாது.
கைகளை நெஞ்சில் கட்டினார்கள் என்றும்..........இல்லை..இல்லை..வயிற்றில் கட்டினார்கள் என்றும்.......இல்லை..இல்லை...கைகளை கட்டவில்லை என்றும்.......
Several Islamic preachers are saying that Islamic Literatures are known for their fidelity of fact. In fact it is absolutly wrong. The date of death of Mr.Mohammed is not known for certain.this goes to prove the inconsistencies in Islamic Literature.
Post a Comment