அஹ்லுல்பைத் Headline Animator

Friday, December 23, 2011

இந்த பிஞ்சு மகளின் அவல நிலைக்கு யார் காரணம்...?????????

இந்த பிஞ்சு மகளின் அவல நிலைக்கு யார் காரணம்...?????????



அன்புள்ள மகளே!

உன் நிலை கண்டு என் விழியில் ஓடும் கண்ணீரை என்னால் கட்டுப் படுத்த முடியாதிருக்கிறது.

பயத்தில் ஆடை நனைந்துப் போன உன்னுடைய காற்சட்டையும் , அதனை சட்டை செய்யாமல் உன்னை தர தரவென இழுத்து செல்லும் சியோனிஸ மிருகங்களும் ............இதென்ன கொடுமை!

அச்சத்தில் உறைந்துப் போன உன்னுடைய அழுகையின் அவலம் எனக்கு இங்கே கேட்கிறது.

எனக்கு மட்டுமல்ல...என் போன்ற பலருக்கும் அது புரிகிறது.

ஆனால், என்ன செய்வது என்றுதான் புரிய வில்லை.

அதனை புரிய வைக்கவும் இங்கேயாரும் இல்லை.

புரிந்துப் போன என்போன்றவர்களுக்கு புரியாதவர்களுக்கு புரிய வைக்கும் முறையும் புரியவில்லை.

என்ன செய்ய?

நீ செய்த   குற்றம்தான் என்ன?

அந்த மிருகங்களை நோக்கி கற்களை எறிந்ததுதான் உன்னுடைய குற்றமா?

நீ எறியும் கற்களுக்கு என்ன வலிமைத்தான் இருக்கப் போகிறது?

அந்த மிருகங்களோ உன்னை நோக்கி பொஸ்பரஸ் குண்டுகளை அல்லவா எறிகிறார்கள்?

அழாதே என் அன்பு மகளே!


சோதனை உனக்கல்ல!

உன்னுடைய துர்பாக்கிய நிலை எங்களுடைய சோதனையாக இருக்கிறது.

உனக்கு இன்னுமொரு உண்மை தெரியுமா?

உலகத்தில் இருக்கின்ற அநேக முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம் பெண்களுக்கு உரித்தான உரிமைகள் மறுக்கப் பட்டுள்ளன.

அந்த நாடுகளில் வாழ்கின்ற மாற்று மத சகோதரர்களின் நிலையோ அதை விட பரிதாபமானது. 

நாம் உங்களைப் போன்று அடக்கி ஒடுக்கப் பட்டவர்களுக்காக , அவர்களின்  விடுதலைக்காக என்ன செய்தோம் என்று நாளை மறுமையில் அல்லாஹ் எங்களிடம் கேட்கப் போகிறான்.

உனக்காக, உன் போன்று அடக்கு முறைக்கு ஆளாக்கப் பட்ட அப்பாவிகளுக்கு  நாம் என்னதான் செய்திருக்கிறோம்?

எங்களது தலைவர்களின் தவறான தீர்மானங்களின் காரணமாக எங்களை நாங்களே தொலைத்துக் கொண்டோம்.

அந்தத் தலைவர்களின் வசீகரமான பேச்சில் கணத்தில் தொலைந்துப் போன எங்களால் எங்களை மீண்டும் தேடிக் கொள்ள முடிய வில்லை.

ஏனெனில், நாம் தொலைந்துப் போனதை நாம் உணர்ந்துக் கொள்ளவில்லை.

பணத்துக்கு விலை போன எங்களது தலைவர்களை நம்பி நாம் மோசம் போனோம்.

தனிப்பட்ட முறையில் அவர்களைப் பணக்காரர்களாக்கிய இஸ்லாத்தின் எதிரிகள் அவர்களைக் கொண்டே எங்களை அடிமைப் படுத்திக் கொண்டார்கள்.

அடிமைத்தனம் இல்லை என்று யார் சொன்னது?

நாம் அடிமைகளாகத்தான்   இருக்கிறோம்.

சுதந்திரம் என்ற பெயரில், தலைவர்களின் வசீகரமான கருத்துக்களுக்கு அடிமையாகி எங்களை விற்று விட்டோம்.

அவர்களைமீறி எங்களால் சிந்திக்க முடியாதுள்ளது.

அவர்கள் எங்களது இளமையை எங்களுக்கு தெரியாமல் இஸ்லாத்தின் பெயரால் கொள்ளையிட்டார்கள்.

எங்களுடைய பெற்றோர்கள் கதி கலங்கியிருக்க நாம் எங்களது நயவஞ்சக தலைவர்களால் தவறாக வழி நடாத்தப் பட்டோம்.

எங்களைப் போன்றே தவறாக வழி நடாத்தி அழைத்து வரப் பட்ட இன்னுமொரு இளைஞர்கள் கூட்டத்துக்கு எதிராக  நாம் போர் கோடி தூக்கினோம்.

அல்லாஹ்வின் பெயரால் அல்லாஹ்வுக்காக வேண்டி நாம் இருவரும் எதிரெதிராக களம் இறங்கினோம்.

வயோதிகத்தின் பயங்கரத்தில், சிதைந்துப் போன சமூக பிரிவுகளில்    செய்வதறியாமல் எங்களது மூப்படைந்த பெற்றோர் ஓரம் கட்டப் பட்டார்கள்.

எங்களது வெற்றிகளின் இலாபங்களை எங்களது தலைவர்களும் அவர்களது எஜமானர்களும் சுவீகரித்துக் கொண்டார்கள்.

தோல்விகளின் வேதனைகளை எங்கள் குடும்பத்தினர்களே கண்ணீருடன் ஏற்றுக் கொள்ள நிர்ப்பந்திக்கப் பட்டார்கள்.

எங்களது வீரமெல்லாம் எங்களை அழிப்பதிலேயே வீணாகிக் கொண்டிருக்கிறது.

எங்களது அறிவுகளையும், இளமைகளையும் அல்லாஹ்வின் பெயரால் நாம்  மேற்குக்கும்   கிழக்குக்கும் தாரை வார்த்து கொடுத்துவிட்டோம்.

எங்களது தலைவர்கள் என்று நாம் நம்பிய எங்களது மார்க்க அறிஞர்கள் எங்களை மோசம் செய்து விட்டார்கள்.

எங்களது இளமையை நாம், எங்களை சுரண்டி கொழுத்துப் போன எங்களது தலைவர்களுக்கு அடமானம் வைத்து விட்டு விளித்துக் கொண்டிருக்கிறோம்.

அந்த தலைவர்களோ தங்களது தவறுகளை உணர்ந்துக் கொள்ளும் அறிவைக் கூட பெற்றிருக்க வில்லை என்பதை எம்மை நாம் தொலைத்த பிறகுதான் புரிந்துக் கொண்டோம்.

மகளே!

உன்னுடைய, உன் போன்று அடக்குமுறைக்கு ஆளாக்கப் பட்டிருக்கிற அப்பாவிகளின் இந்த அவல நிலையின் ஆரம்பம் எது என்று உனக்குத் தெரியுமா?

அநீதத்தை ,அடக்கு முறையை ,நடந்துக் கொண்டிருக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்கும் வலிமையை நாம் இழந்துப் போன அந்த தருணம் என்ன என்று உனக்குத் தெரியுமா?

எங்கள் நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்கள் உன் போன்ற மகள்மார்களைக் காக்கும்வலிமைக் கொண்ட இஸ்லாமிய தலைமைத்துவத்தை ஆவணமாக எழுத முனைந்த பொழுது அவர்களின் அருமைத் தோழர்கள் அதற்கு தடையாக இருந்தார்களாம்.

அந்தக் கணத்திலேயே நாம் எம்மை தொலைத்துக் கொண்டோம்.

உன் போன்ற குழந்தைகளின் பாதுகாப்பையும் இழந்துப் போனோம்.

முஸ்லிம் சமூகத்துக்கு பெரும் சோதனையாக அமைந்த அந்தத் தருணத்தில் இஸ்லாத்தின் எதிரிகள் தம்மையும், தங்களது வெறித்தனமான வெற்றியின்   தளத்தையும் பெற்றுக் கொண்டார்கள்.

வெற்றியடைந்த அந்த எதிரிகள் இஸ்லாமியர் என்ற பெயரிலும், நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களின் தோழர்கள் என்ற போர்வையிலும் இஸ்லாத்தின் பெயராலேயே இஸ்லாத்தை புதைத்து விட்டார்கள்.

உன் போன்ற நிலையில் இருந்த ,அநீதத்துக்கு ஆளானவர்களுக்கு பாது காப்பு அரணாக இருந்த இஸ்லாம் நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களின் மறைவுடன் மாறிப் போனது.

இஸ்லாத்தின் தலைமைத்துவத்தில் பலாத்காரமாக அமர்ந்துக் கொண்ட இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்தின் பெயராலேயே அநீதம்  செய்யத் துவங்கினார்கள்.

அந்த துரோகிகளின் வழிவந்த ஆட்சியாளர்கள் சுமார் ஆயிரத்து ஐநூறு வருடங்களாக இஸ்லாத்தின் பெயரால் உலகத்தையே கபளீகரம் செய்தார்கள்.

உன் போன்ற குழந்தைகளையே இஸ்லாத்தின் பெயரால் கொன்றுக் குவித்தார்கள்.

இஸ்லாத்தின் பெயரால் இன்னமும் அதனை செய்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கனீமத் என்ற பெயரில் பெண்களை பலாத்காரம் செய்தார்கள்.உலகத்தை கொள்ளையிட்டார்கள்.

எங்களது உலமாக்கள் அந்த அராஜகமான செய்கைகளுக்கு மார்க்க 'பத்வா' கொடுத்து இஸ்லாமிய போர்வை போர்த்தினார்கள்.

அதன் பின்னர், சமத்துவத்தினதும், சமாதானத்தினதும் கேந்திர நிலையமான மஸ்ஜிதுகள் பிரிவுகளினதும் ,பிளவுகளினதும் தளங்களாக மாறி விட்டன.

ஏகத்துவம் போதிக்கும் இஸ்லாமிய கலாசாலைகள் ஏகாதிபத்திய   நியாயங்களை போதிக்கத் துவங்கின.

பிரமிட்டுக்களில் சிறையான பிர்அவ்ன்கள் மஸ்ஜித்களில் விடுதலையாகத் துவங்கினார்கள்.

அநீதத்துக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய மிம்பர் மேடைகள் அநியாயக் காரர்களை காப்பதற்காக குரல் கொடுக்கத் துவங்கியது.

அன்பு மகளே!

அந்த அநியாயக் காரர்கள் செய்த அநியாயத்தின் பின் விளைவாக இன்று நீ சிக்கிக் கொண்டாய்.

நமது கடந்த கால தவறுகளைப் புரிந்துக் கொள்வதில் மட்டுமே எங்களால் அந்த தவறுகளின் கொடூர விளைவுகளை விட்டும் தப்பும் முறையை அறிந்துக் கொள்ள முடியும்.

ஆனால், நாம் எங்களது மூதாதையர் செய்த தவறுகளில் நியாயம் கற்பிக்கப் பட்டவர்களாகவே எங்களது மத குருமார்களினால் வழி நடாத்தப் பட்டோம்.

அதனால், தவறுகளில் சரி கண்டு தவறிழைக்கத் துவங்கினோம்.

இத்தகைய எங்களது துரதிர்ஷ்ட நிலையில் அவ்வாறான தவறுகளின் பயங்கர விளைவுகளை விட்டும் எப்படித்தான் தப்ப முடியும்?

என்னுடைய மகளே!

நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம்  அவர்களின் வழித் தவறிய தோழர்கள் செய்த தவறுகளின் நிகழ கால விளைவாகவே நான் உன்னைக் காண்கிறேன்.

அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்துவதைத் தவிர என்னால் இப்பொழுது ஒன்றும் செய்ய முடியாதுள்ளது.

 என்னுடைய அன்பு மகளே!

என்னுடைய இயலாமைக்காக என்னை மன்னித்துக் கொள்.

யா! அல்லாஹ் ..என்னுடைய மகளுக்கும், அவள் போன்று அல்லலில் சிக்கியிருக்கும் அனைத்து பெண்களுக்கும் , பெண் மகவுகளுக்கும் நீயே துணையாக இருப்பாயாக!

யா! அல்லாஹ்.. அநியாயக் காரர்களின் அநியாயத்துக்கு  ஆட்பட்டு தவித்துக் கொண்டிருக்கும் அனைத்து பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் நீயே பாதுகாப்பாக இருப்பாயாக!

யா! அல்லாஹ்...நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களின் தோழர்கள் என்று நாம் நம்பிய துரோகிகள் செய்த பாவத்துக்காக நீ எங்களை சோதித்து விடாதே!

அந்தத் துரோகிகளை புரிந்துக் கொள்ளும் அறிவை எங்களது முஸ்லிம் சமூகத்துக்கு தந்தருள்வாயாக!

7 comments:

Dr.Anburaj said...

Allah if true would ask every muslim Have you been honest to Non-muslims living in Islamic states ? You weep for a small girl .Good.Please show the same kindness to Hindus Living in Pak and Bangaladesh. The Muslim world is blinking about it ? You are no more better thanAbukatha Kalith - the Abubakkar appointed General who raped the wife of Malic. What haapped to Shiek Mujibur Rahman .... Pak Military ....... Are you aware ???????????? One crore people were driven out of East Pakistan - Islamic country - and Hindustan fed them for one year, and militarily won East Pakistan, country inhabited by Islamic hooligan

Dr.Anburaj said...
This comment has been removed by the author.
Dr.Anburaj said...

www.newageislam has several articles about modernisation of Islam.The author like you ventures to do some rationalisation of Islam. I having completed all the articles in the Web,strongly agree with the Web that several verses in Koran were suitable to the time of theProphet.Arab world/Islam needs Sri Ram one who loved his single wife whole heartely- ie Ramayanam and the Message of Swami Vivekananda,Sri Ramakrishna that all religion have produced men and women of most exalted characters.Islam alone is true-this great superstition is the backbone of Terrorism indulged in my Muslims. The Elite muslims are silent about this. Please make available articles available in wwwnewage islam, for the
benefit of all readers of your web.Let us liberate muslims from superstitions,which are sustained by Koran and the life of Mohammed, who had behaved barbarically several times.

Dr.Anburaj said...

I am longing to read your articles refuting www.alisina and www.anwarsheik.But you are dead silent about it. have you forgotten ?

அஹ்லுல்பைத் said...

இணைய நண்பர் டாக்டர் அன்புராஜின் பின்னூட்டங்களுக்கு நன்றி.

அஹ்லுல்பைத் தமிழ் தளம் வரலாற்று நெடுகிலும் அஹ்ளுல்பைத்களுக்கு எதிராக திட்டமிட்ட ரீதியில் மிகவும் சூட்சுமமாக மக்கள் மயப் படுத்தப் பட்டிருக்கும் தவறான கருத்துக்களை துகிலுரித்து மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்ப்பதற்காக உருவாக்கப் பட்டதொன்றாகும்.

நீங்கள் எங்களுக்கு பரிந்துரைத்த இணையங்கள் அனைத்தும் துரதிர்ஷ்ட வசமாக அஹ்லுல் பைத்களின் எதிரிகள் மக்கள்மயப் படுத்திய கருத்துக்களையே காவிக் கொண்டு புனித இஸ்லாத்தில் குறை காணும் நிலையில் இருப்பதை நாம் அறிந்துக் கொண்டோம்.

குறை அல்லாஹ்விலோ , அவனது தூதரிலோ அல்லது இஸ்லாத்திலோ இல்லை.

அராபிய ஏகாதிபத்தியத்துக்கு துணை நின்ற இஸ்லாத்தின் எதிரிகளின் கருத்துக்களை கண்மூடித்தனமாக பின் பற்றும் மக்களிலேயே, அவர்களை அவ்வாறு வழி நடாத்தும் அறிஞர்களிலேயே குறை இருப்பதை நீங்கள் புரிந்துக் கொள்ளவேண்டும்.

நீங்கள் எம்மிடம் கருத்துக் கேட்கும் ஹதீஸ்களின், அல் குர்ஆன் வசனங்களின் ஆதாரங்களை எங்களுக்கு குறிப்பிட்டு தந்தீர்கள் என்றால் அவை பற்றிய விளக்கங்களை தேடித் தருவதற்கு இலேசாக இருக்கும் என்பதை தயை கூர்ந்து கவனத்தில் கொள்ளவும்.

உங்களது கருத்துக்களுடன் முழுமையாக உடன்படாமைக்கு எங்களில் கோபம் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம்.

என்றாலும், என்றும் நன்றியுடன் உங்களது பின்னூட்டங்களை வரவேற்கிறோம். அவற்றிற்கு எப்பொழுதும் எங்கள் தளத்தில் இடம் இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மீண்டும் சந்திக்கும்வரை........,

நன்றி- வணக்கம்.!

Dr.Anburaj said...

Koran is a well and Muslims are FROGs.They are living contended living within the limits of that well.If you choose to live a life of a frog in a well .......... time would answer that question.
I am not a Scholar of Islam.I donot want to be.
I feel highly insulted when a Muslim call Hindus as Khaffirs . All Muslim scholars without exception say Khaffirs is sysnanamous with Hindus.
I wanted to test you.But you are also the same ..........................

Dr.Anburaj said...

Please refer to a article Radical Islam -www.newageislam

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad