அஹ்லுல்பைத் Headline Animator

Monday, January 3, 2011

Lawrence of Arabia vs International Kuds Day

Lawrence of Arabia vs International Kuds Day

03.09.2010  சர்;வதேச ‘குத்ஸ்’ தினம்!

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன மக்களின் துயரங்களை ஒரு கணம் நினைவுப்படுத்தி முஸ்லீம் சமூகத்தை கபளீகரம் செய்ய காத்திருக்கும் மிக அபாயகரமான தருணத்தை தவிர;ந்து கொள்ள எம்மை உசார;ப்படுத்துகின்ற ஒரு முக்கிய தினம்.

சென்ற வாரங்களில் ‘பத்ர் யுத்தத்தின் அபார வெற்றியைப் பற்றி வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் பள்ளிவாசல் குத்பா மேடைகளிலும் நாம் நிறையவே கேட்டு கேட்டு அகமகிழ்ந்து போனோம்.

அந்த வெற்றிப் புழங்காகிதத்தில் எம்மை சூழ்ந்துள்ள சூழ்ச்சிகளின் பயங்கரத்தை உணர;ந்து கொள்ள தவறியும் போனோம்.

சென்ற ஞாயிறு மாலை ‘பிரைம் டீவி’யில் கார;ட்டூனை எதிர்பார்த்து அமர்;ந்திருந்த எனது மகள் என்னிடம் ஓடோடி வந்தாள்.

“வாப்பா………. வாப்பா………. டீ.வியில் ஒரு அராபிய படம் போகிறது வந்து பாருங்கள்” என்றாள்.

ஒரு கணம் துணுக்குற்ற நான் விரைந்து சென்று அது என்ன படம் என்று பார;த்தேன்.

ஓளிபரப்பப்பட்ட திரைப்படத்தை பார்;த்து எம்மை ஆக்கிரமித்துள்ள அபாயத்தின் பயங்கரத்தை உணர்ந்து வெலவெலத்துப் போனேன்.


அது “லோரன்ஸ் ஒவ் அரேபியா”என்கிற திரைப்படம்


திடீரென துண்டிக்கப்பட்ட மின்சாரத்தின் காரணமாக அந்த திரைப்படத்தை முழுமையாக என்னால் பார்க்க கிடைக்கவில்லை.

ஆனால் அந்த படத்தின் கதையைப் பற்றியும் அதன் நாயகன் லோரன்ஸைப் பற்றியும் எனக்கு மிக நன்றாகவே தெரியும்.

அந்த திரைப்படத்தை நான் இன்று வரை பார்த்ததில்லை. அதனால் அந்த திரைப்படத்தில் திரிபுபடுத்தப்பட்டு எம் மத்தியில் உலாவிடப்பட்ட வரலாற்று உண்மைகள் பற்றிய தெளிவை என்னால் கூற முடியாததையிட்டு வருந்துகிறேன்.

என்றாலும் பிரிட்டிஷ் உளவுப் பிரிவின் மிக முக்கிய அங்கத்தவனான லோரன்ஸைப் பற்றியும் அராபிய தீபகற்பத்தில் அந்த கதாநாயகன் ஆற்றிய செயல்களைப் பற்றியும் அதனால் முஸ்லீம் சமூகம் அடைந்த தோல்விகளையும் இங்கே சொல்லவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

லோரன்ஸை முஸ்லீம்கள் அலட்சியப்படுத்தினாலும் பிரிட்டிஷாரும், அமெரிக்கர;களும் அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் ஆட்சியை தீர;மானிக்கின்ற “மறைமுக சக்தி”களும் ஒருபோதும் அலட்சியப்படுத்தப் போவதில்லை.

சுமார் 1400 வருடங்களாக உலகத்தின் பெரும் பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை சிதறடித்து சின்னா பின்னப்படுத்திய சூழ்ச்சிகளின் செயல் வீரன் இந்த லோரன்ஸ்.

“மறைமுக சக்தி”களின் வேலைத்திட்டத்தின் பிரகாரம் இந்த நாயகன் மத்திய கிழக்கு அரேபிய தீபகற்பத்திற்கு தனது கடமையை(?) செய்ய செல்கின்றான்.

உதுமானிய கிலாபத்தின் கட்டுப்பாட்டிலிருந்த அரேபிய தீபகற்பத்தில், உமையாக்களின் அரேபிய ஏகாதிபத்தியத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்திருந்த சின்ன, சின்ன கிளர;ச்சிக் குழுக்களுடன் தொடர்பு கொண்ட லோரன்ஸ் உதுமானியர;களையும், அரபி அல்லாத அஜமிகளையும் அந்த அரேபிய தீபகற்பத்தை விட்டு துரத்தியடிக்கும் பணியில் இந்த கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆலோசனைகளையும் தன்னை அனுப்பிய மறைமுக சக்திகளின் பொருளாதார உதவியையும் பெற்றுக் கொடுக்கிறான்.

நவீன போர்த் தந்திரங்களை சரிவர அறிந்து இருக்காத அந்த கிளர்ச்சி குழுக்களுக்கு இவன் கண்ணி வெடிகளையும் கெரில்லா தாக்குதல் முறைகளையும் அறிமுகப்படுத்துகிறான்.

அதி சீக்கிரத்தில் இந்த திடீர; திட்டமிடப்பட்ட தாக்குதல்களுக்கு தாக்கு பிடிக்க முடியாத நிலையில் உதுமானிய வீரர்களும், அஜமி வீரர்களும் அரேபிய தீபகற்பத்தை விட்டும் துரத்தியடிக்கப்படுகிறார்கள்.

மறுபுறம் 1924 இல் முஸ்தபா கமால் அத்தா துர்கை உபயோகித்து துருக்கியில் ஆட்சி மாற்றத்தை பிரிட்டிஷ் உருவாக்க முழு இஸ்லாமிய கிலாபாவும் செயல் இழந்து சின்னா பின்னமாகி விடுகிறது.

இப்பொழுது இந்த நாயகன் அரேபியாவில் இருந்த கோத்திரங்களுக்கிடையே மிக இலகுவாக பிரிவினையை உருவாக்கி விடுகிறான்.

‘மறைமுக சக்திகள்’ எல்லா கோத்திர குழுக்களுக்கும் தமது ஆதரவை வெவ்வேறாக வழங்க அரேபிய தீபகற்பத்தில் அரேபியர;களுக்கிடையே குழுமோதல்கள் வலுப் பெறுகின்றன.

இந்த நாயகனின் திறமையான அணுகுமுறையால் ஒன்றுபட்டிருந்த அரேபிய தீபகற்பம் மிக லாவகமாக எல்லைகளாக பிரிக்கப்பட்டு‘மறைமுகசக்திகளுக்கு’ஆதரவான குடும்பங்களின் வசம் ஆட்சிசெய்யும் பொறுப்பு ஒப்புவிக்கப்படுகிறது.

இந்த துயர சூழ்நிலையின் பரிதாபத்தை உணர்ந்த பெரும் அளவிலான முஸ்லீம்களையும் கிலாபத்தின் ஆதரவாளர்களையும் கொண்டிருந்த இந்தியாவில் தனித்தனி குழுக்கள் சிதைந்து போன இஸ்லாமிய தலைமைத்துவத்தை சீர் செய்ய முற்பட்டனர்.

இந்த வகையில் ஜமாஅத்தே இஸ்லாமியும், தப்லீக் ஜமாஅத்தும், தரீக்காக்களும் வெவ்வேறாக தத்தமது செல்வாக்கை முஸ்லீம் சமூகத்தில் செலுத்த – அந்தோ பரிதாபம் - ஆளுமையான இந்திய முஸ்லீம் சமூகமும் பிளவு கண்டு பரிதாபமாக பிரிந்து போனது.

‘மறைமுக சக்திகள்’இந்த இயக்கங்களுக்கு இடையே தந்திரமாகவும், சூட்சுமமாகவும் சண்டைகளை மூட்டிவிட இஸ்லாத்தை விடவும் தாம் ஆதரவு செலுத்தும் இயக்கம் தான் சரியானது என்கிற தோரணையில் அங்கேயும் குழு மோதல்கள் இஸ்லாத்தின் பெயரில் தோற்றம் பெற்றன.

அதே சமயம் நாயகன் லோரன்ஸின் ஆதரவுடன் மறைமுக சக்திகளின் பெறும் ஆதரவாளரான சவுதி குடும்பம் அரேபியாவின் பெரும்பான்மையான நிலப்பரப்பை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர அவர்களின் உதவியுடன் பலஸ்தீன பு+மி முஸ்லீம் உலகை விட்டும் மிகவும் சூட்சுமமாக துண்டாடப்படுகிறது.

மறுபுறம் மிக அமைதியாக இஸ்ரவேலும் உருவாகிறது.

சூழ்ச்சியின் படுபயங்கரத்தை உணர்ந்து கொண்ட பலஸ்தீன பு+ர்வீக அரபிகளும் பலஸ்தீன புர்வீக யு+த அரபிகளும் ஒன்று பட்டு‘மறைமுக சக்திகளுக்கு’எதிரான தமது எதிர;ப்பைக் காட்ட துவங்குகிறார;கள்.

தனிமைப்பட்டு மிகவும் பலவீனமான அவர்கள் தமது இயலாமையை உணர்ந்த நிலையில் குறைந்தபட்ச தமது ஆளுமையாக பலஸ்தீனத்தில் ஒரு இஸ்லாமிய சர்வ கலாசாலையை உருவாக்கி இந்த சூழ்ச்சிகளின் பெரும் தாக்கத்தின் வீரியத்தை குறைக்க முயன்றனர;.

ஆனால், யாருமே எதிர;பார்க்காத வகையில் எகிப்தின் ‘அல் அஸ்ஹர்’ சர்;வகலாசாலை பலஸ்தீன மக்களின் இந்த புதிய இஸ்லாமிய சர்வ கலாசாலை திட்டத்திற்கு தனது கடும் எதிர;ப்பை காட்டியது.

சவுதி அரசும் அதற்குப் பின்புலமாக இருந்தது. இவர்களின் பின்புலமாக அந்த ‘மறைமுக சக்திகள்’ செயற்பட்டன.

விளைவு –

முஸ்லீம் உலகத்தை விட்டும் தனிமைப்படுத்தப்பட்ட பலஸ்தீனம் பலவீனமாக செயல் இழந்து போனது.

அதே சமயம் பலஸ்தீன மக்களின் பரிதாப நிலையையும், முஸ்லீம் சமூகத்தின் மூன்றாவது புண்ணிய ஸ்தலமான மஸ்ஜிதுல் அக்ஸாவின் முக்கியத்துவத்தையும் உணர்ந்த எகிப்து முஸ்லீம்கள் இந்த சதிகளை உணர்ந்து பலஸ்தீன சமூகத்துக்கு உதவ ஒன்றுபட்டனர;.

அச்சமயம் இஃவானுல் முஸ்லீமீன் அமைப்பு இஸ்லாமிய கிலாபத்தை மீள நிர;மாணிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் எகிப்தில் தோற்றம் பெற மக்கள் மத்தியிலே அதிலும் மிகவும் தீவிரமாக இஸ்லாத்தைப் பின்பற்றும் இளைஞர;களால் கவரப்பட்ட அந்த இயக்கம் அந்த இளைஞர;களை தமது அங்கத்தவர;களாகக் கொண்டு பலமடைந்தது.

ஆனால், இன்று வரை நாம் அறியாத ஏதோ ஒரு காரணத்தினால் அந்த அமைப்பு அக் காலகட்டத்தில் பலஸ்தீன மக்களின் உதவிக்கு எகிப்து முஸ்லீம்களை இணைய விடாமல் தடுத்து பலஸ்தீனம் அநாதையாக பரிதவித்து போகும் நிலைக்கு காரணமாக அமைந்தது.

இதுதான் இஸ்லாமிய கிலாபத் அமைப்பு சிதைந்து போன வரலாற்று சுருக்கம். இதில் நாயகன் லோரன்ஸ் உடைய பங்களிப்பு 90 வீதம் இருக்கிறது.

‘பத்ர்’ யுத்த கதாநாயகர;களைப் பற்றி எமது அறிஞர;கள் பாராட்டி புகழ்ந்து பேசிக் கொண்டிருந்த சமயத்தில், அந்த‘பத்ர்’வீரர;களின் தியாகத்தால் நிர;மாணிக்கப்பட்ட இஸ்லாமிய ஆட்சியமைப்பின் வீழ்ச்சிக்கு மிகவும் முக்கிய காரணகர;த்தாவாக இருந்த லோரன்ஸ் ஒவ் அரேபியா என செல்லமாக இஸ்லாத்தின் எதிரிகளால் அழைக்கப்படும் லோரன்ஸ் பற்றிய திரைப்படம் ஒளிபரப்பப்பட்ட செய்கை ஏதேச்சையானதாக இருக்க வாய்ப்பு இல்லை.

இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை சிதைத்த ‘மறைமுக சக்திகளின்’ செல்வாக்கு இலங்கையிலும் எதுவித குறைவும் இல்லாமல் இருப்பதை இது துல்லியமாக காட்டுகிறது எனலாம்.

இத்தகைய சதிகளை அறிந்து அதில் இருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ளும் அறிவை அல்லாஹ் எமக்கு தந்தருள்வானாக.

ஆக்கம்
அப்துல் றஸ்ஸாக்
1

No comments:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad