காலையில் ஒரு தொலைபேசி அழைப்பு.
மறுமுனையில் எமது நண்பர் ஒருவர்.
"இப்ராகிம் (அலை) அவர்களின் தந்தை இறைவனின் பகைவன்.ஸுரா மர்யம் 41 வது ஆயத்தில் இருந்து 47 வது ஆயத் வரை அல் குரானில் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது" என்றார்.
நாம் "அப்படியா?" என்றோம்.
அவர் குறும்பான சிரிப்புடன் "அஹ்லுல் பைத் தமிழ் தளமும் அல் குரானுக்கு முரண் படுகின்ற மாதிரி தெரிகிறதே?" என்றார்.
நாம் "இல்லையே!" என்றோம்.
அவர் சத்தமாக சிரித்தபடி " அஹ்லுல் பைத் தமிழ் தளத்துக்கு பதில் சொல்லாமல் ஓடுகின்ற ஜாமியா நளீமிய்யாவின் உஸ்தாது மார் போல இனி, நீங்களும் ஓட வேண்டியதுதான் பாக்கி" என்றார்
உண்மைதான்.
அஹ்லுல் பைத் தமிழ் தளம் அவர் சொல்வது போல சிக்கலில் மாட்டிக் கொண்டதா?
அல்லது இந்த கேள்விக்கு விடை சொல்ல தயாராக இருக்கிறதா?
நாம் எமது விடையை சொல்லுவதற்கு முன், வழமை போல எங்களது உலமாக்களின் சமூகத்தில் இந்த கேள்வியை கேட்டுப் பார்ப்போம்.
நீங்களும் , உங்களுக்கு அறிமுகமான உலமாக்களிடம் இந்த கேள்வியை கேளுங்கள்.
"இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தை நாம் சொல்லுவது போல 'முஸ்லிமா?' அல்லது, எங்களது சில உலமாக்கள் சொல்லுவது போல 'அல்லாஹ்வின் எதிரியா?' "
நல்லதொரு ஆய்வுக்கு களம் அமைத்து தந்த நண்பருக்கு எமது உளப்பூர்வமான நன்றிகள்.
எமது இனைய நண்பர் 'அரபுத் தமிழனே! இந்த ஆய்வில் உங்களது காத்திரமான பங்களிப்பையும் எதிர்பார்க்கிறோம்.
வாருங்கள்.
இன்ஷா அல்லாஹ் , நாம் ஒன்றாக விடை தேடுவோம்.
3 comments:
ஆஹா, எம்மையும் கோர்த்து விட்டீர்களா, எனக்கென்னவோ யாரும்
நரகத்திற்குப் போகக் கூடாதென்று நினைக்கிறவன். ஆனால் இது
அல்லாஹ்வின் அதிகாரத்திற்கு உட்பட்டதாயிற்றே,
நாம் தலையிட முடியுமா ?
கற்றறிந்த ஆலிம்களும் விரிவுரையாளர்களும் இந்த விஷயத்தில் கருத்து
கூற வேண்டும். நான் ஆலிம் அல்ல, மன்னிக்கவும்.
குர்ஆனுக்குள் தம் சொந்தக் கருத்தைப் புகுத்தியவன் (அது உண்மையாகவே
இருக்கும் பட்சத்தில்), நரகம் செல்வான் என்ற நபிமொழி இவ் விடயத்தில்
கருத்துச் சொல்ல என்னை அச்சுறுத்துகிறது.
எமது இணைய நண்பர் 'அரபுத் தமிழனுக்கு',
உங்களது பணிவான கருத்துக்களுக்கு நன்றி.
'அஹ்லுல் பைத்களுக்கு' எதிரான நிகழ் கால நிகழ்வுகளின் பதிவுகளையும், அதற்கான சரியான அல் குரான்,
அல் ஹதீத் விளக்கங்களையும் ஒன்று திரட்டி அவைகளைஒரு கோவைக்குள் கொண்டு வருவது தான் 'அஹ்லுல்பைத் தமிழ் தளத்தின்' பிரதான நோக்கம்.
எமது இந்தப் பணியில் உலமாக்களும், பல்கலைக் கழக பேராசிரியர்களும்- ஏன், ஜாமியா நளீமிய்யாவின் சில பட்டதாரிகளும் ,பிரபலமான சட்டத்தரணிகளும் , வக்கீல்களும் ; அஹ்லுல் பைத்களுக்கு எதிரான அரசியலை தோலுரித்து காட்ட ஒன்றிணைந்து இருப்பது அல்லாஹ் எமக்கு அளித்த பலம்.
எங்களின் ஒன்றிணைப்பில் உங்களைப் போன்ற, நாம் முகம் அறியாத நண்பர்களும் எமக்குத் தேவைப் படுகிறார்கள்.
ஏனெனில், மக்கள் மன்றத்தில் அஹ்லுல் பைத்களின் ஆதரவாளர்கள் என்றும், அஹ்லுல் பைத்களின் எதிரிகள் என்றும் இரு வேறுபட்டு- களம் இறங்கி இருக்கின்ற எங்களுக்கு மத்தியில் நீங்கள் தான் எங்களது இந்தப் போராட்டத்தின் நிஜமான நடுவர்கள்.
அஹ்ளுல்பைத்களின் நிகழ் கால எதிரிகளின் கொடூர முகங்களை மக்களுக்கு தெளிவு படுத்தப் போகிறவர்கள் உங்களைப் போன்ற நடு நிலை நடுவர்களே.
அன்புடன்,
அஹ்லுல்பைத் தமிழ் தளம்.
Post a Comment