முஸ்லிம் சமூகம் நிர்வாணப்பட்டு , சிதைந்து போக காரணமாக இருந்த தப்புகள்.......?
நபி (ஸல்) அவர்களது மறைவுடன் முதலாவது கலீபா அபூபக்கர் (ரலி) உமர்
(ரலி) அவர்களால் தெரிவு செய்யப் படுகிறார்.
(ரலி) அவர்களால் தெரிவு செய்யப் படுகிறார்.
இதனால் உமர் (ரலி) அவர்கள் தான் இஸ்லாமிய அரசியல் அமைப்பின் அரசாங்கத்தின் முதலாவது நிர்மானகர்த்தா என இன்றும் மரியாதையுடன் நினைவு கூறப்படுகிறார்.
மிகவும் அவசர அவசரமாக அதே சமயம் வெற்றிகரமாக நடந்த இந்த தெரிவின் பின்னால், பின்னாளில் பல இழப்புகளை கொண்டுவந்த குற்றங்களுக்கு தளம் அமைத்த ஒரு குற்றம் ஒளிந்து இருந்தது.
அராபியரின் படு தோல்விகளுக்கு களம் அமைத்த மேட்டுக் குடி எண்ணங்களின் ஆதிக்கம் இங்கிருந்துதான் ஆரம்பமாகியது.
அராபியரின் படு தோல்விகளுக்கு களம் அமைத்த மேட்டுக் குடி எண்ணங்களின் ஆதிக்கம் இங்கிருந்துதான் ஆரம்பமாகியது.
"எனக்குப் பின்னால் ஒரு நபி வருவதாக இருந்தால் அது உமர்தான்" என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்ற ஹதீத் அப்பட்டமான பொய் ஹதீத் என்கிற உண்மை இந்த தெரிவில் அம்பலமாகிப் போனது.
இந்த ஹதீத் மட்டும் உண்மையாக இருந்திருந்தால், உமர் (ரலி) அவர்கள் தான் இஸ்லாமிய உம்மாவின் முதல் கலீபாவாக தெரிவு செய்யப் பட்டு இருப்பார்.
இந்த ஹதீத் மட்டும் உண்மையாக இருந்திருந்தால், உமர் (ரலி) அவர்கள் தான் இஸ்லாமிய உம்மாவின் முதல் கலீபாவாக தெரிவு செய்யப் பட்டு இருப்பார்.
அப்படி அந்த ஹதீத் உண்மையானது என்றால் நபி (ஸல்) அவர்களின் வாக்கு பொய்க்குமா?
இல்லை! இல்லை!!
இட்டுக் கட்டப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஹதீத்களில் இதுவும் ஒன்று என்கிற செய்திதான் நிஜமானது என்று இப்பொழுது புரிந்து போனது.
முஸ்லிம் உம்மாவின் தலைமைத்துவத்துக்கு நபி (ஸல்) அவர்கள் தெரிவு செய்து நியமித்து இருந்த முஸ்லிம்களின் தலைவர் இமாம் அலி அநியாயமான முறையில் ஓரம் கட்டப் பட்ட தவறு , அபூபக்கர் (ரலி) அவர்களின் தெரிவில் ஒளிந்து இருந்தது.
தாம் செய்த தவறுகளுக்கு மேற்பூச்சு பூசும் வகையில் ' நபி (ஸல்) அவர்கள் அவர்களின் பிறகு, இந்த உம்மத்தின் தலைவராக யாரையும் விட்டு செல்ல வில்லை. மக்களின் தெரிவுக்கு அந்த முக்கிய பொறுப்பை விட்டு விட்டு சென்றார்கள். அதுதான் நபி (ஸல்) அவர்களின் 'சுன்னா' என்று காரணம் வேறு சொன்னார்கள்.
அப்பாவி மக்களும் அதை நம்பி மோசம் போனார்கள்.
சரி! இதுதான் நபி (ஸல்) அவர்களின் 'சுன்னா' என்று வைத்துக் கொள்வோமே.
நடந்ததுதான் என்ன?
அதன் பின்னர் , நபி (ஸல்) அவர்களின் சுன்னாவை அணு அணுவாக பின்பற்றியவர்கள் என்று பெருமையுடன் இப்பொழுதும் நினைவு கூறப்படும் அபூபக்கர் (ரலி) அவர்களே இந்த செய்கையில் நபி (ஸல்) அவர்களின் சுன்னாவுக்கு மாறு செய்கிறார்கள்.
நடந்ததுதான் என்ன?
அதன் பின்னர் , நபி (ஸல்) அவர்களின் சுன்னாவை அணு அணுவாக பின்பற்றியவர்கள் என்று பெருமையுடன் இப்பொழுதும் நினைவு கூறப்படும் அபூபக்கர் (ரலி) அவர்களே இந்த செய்கையில் நபி (ஸல்) அவர்களின் சுன்னாவுக்கு மாறு செய்கிறார்கள்.
அது எப்படி?
அபூபக்கர் (ரலி) அவர்களோ, அவருக்குப் பின்னர் உமர் (ரலி) அவர்களை இந்த உம்மத்தின் தலைவராக நியமிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தமது இறுதிப் படுக்கையில் வைத்து பேனாவும் மையும் கொண்டுவரச் சொல்லி எழுதுவதற்கு முயற்சித்த செய்கையை தடை செய்த உமர் (ரலி) தனது செய்கைக்கு சொன்ன காரணங்களில் ஒன்று இப்படி ஒலிக்கிறது.
"நபி (ஸல்) அவர்கள் கடும் நோய்வாய்ப் பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் என்ன செய்கிறோம் என்கிற சுய நினைவு கூட அவருக்கு இல்லாமல் இருக்கலாம். எனவே , அவரை துன்புறுத்தக் கூடாது, அவர் சுயநினைவு இல்லாமல்
எதுவும் எழுதக் கூடாது, என்பதால் தான், நாம் அவருக்கு எதுவும் எழுத விடவில்லை."
இது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு நொண்டிச் சாக்கு எனபது எமக்குத் தெரியும்.
அது அப்படியே இருந்தாலும் முதலாம் கலீபா அபூபக்கர்(ரலி) இரண்டாம் கலீபாவை நியமனம் செய்து கடிதம் எழுதும் பொழுது இரண்டு முறை சுயநினைவு இழந்து மூர்ச்சையாகி இருக்கிறார்.
மூர்ச்சையாகிய அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து பலத்த சிரமங்களுக்கு மத்தியில் தான் அந்த நியமனக் கடிதம் பெறப் படுகிறது.
அத்தகைய கடிதம் எழுதும் பொழுது அவர் அருகில் யார், யாரெல்லாம் இருந்தார்கள் என்பது
எல்லாம் சிதம்பர இரகசியம்.
மூச்..! அதைப் பற்றி எல்லாம் பேசக் கூடாது.
அதன் பிறகு, முஸ்லிம் தலைமைத்துவத்தை தீர்மானம் செய்த 'கிங் மேகர்'கள் அபூபக்கர்(ரலி) உடைய செய்கையை முஸ்லிம் உம்மாவின் மேல் அவர் கொண்ட அக்கறையின் விளைவு அது என்று மக்களுக்கு புதிதாக கதையளந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் நியமித்து விட்டு சென்ற முஸ்லிம் தலைமையை அநியாயமாக இப்படி அப்புறப் படுத்தி உமரின் தலைமைத்துவ வெற்றியின் பின்னால் அஹ்லுல் பைத் இமாம் ஓரங்கட்டப் பட்ட தவறு மீண்டும் கரணம் போட்டு ஒளிந்து கொண்டது.
சாதாரணமாக இரண்டு வருடங்கள் ஆட்சியில் இருந்த அபூபக்கருக்கே அப்படியான கரிசனை முஸ்லிம் உம்மாவின் மேல் இருக்கும் பொழுது, தனது வாழ்நாள் முழுதும் மிகவும் கஷ்டப் பட்டு உயிர்த்து இஸ்தாபித்த இஸ்லாமிய உம்மாவின் மேல் நபி (ஸல்) அவர்களுக்கு இவ்வாறான அக்கறை இருக்க வில்லையா ? என்று மக்களுக்கு சந்தேகம் வந்தது.
சிலர் வாய்விட்டும் கேட்டார்கள்.
அத்தகையவர்கள் இந்த தலைமைத்துவத்துக்கு எதிராகவும் இருந்தார்கள்.
சரி ! அப்படி இருக்கவில்லை என்றே வைத்துக் கொள்வோம்.
அப்படியென்றால் ,நபி (ஸல்) அவர்களுக்கு இந்த உம்மத்தின் மீது இல்லாத அக்கறை ' அபூபக்கரே !உங்களுக்கு எதற்கு என்று வேறு கேட்கத் தோன்றியது.
சிலர் வாய்விட்டும் கேட்டார்கள்.
அத்தகையவர்கள் இந்த தலைமைத்துவத்துக்கு எதிராகவும் இருந்தார்கள்.
சரி ! அப்படி இருக்கவில்லை என்றே வைத்துக் கொள்வோம்.
அப்படியென்றால் ,நபி (ஸல்) அவர்களுக்கு இந்த உம்மத்தின் மீது இல்லாத அக்கறை ' அபூபக்கரே !உங்களுக்கு எதற்கு என்று வேறு கேட்கத் தோன்றியது.
வீண் வம்பு எதற்கு என்று அவர்கள் மௌனித்து போனார்கள்.
அவர்களின் மௌனத்தை கண்டு துணிவு பெற்ற அரசியல் நிறுவன தெரிவாளர்கள், அதாவது 'கிங் மேகர்'களான உமய்யாக்கள்- உமரின் தலைமையில் முஸ்லிம் உம்மாவை தமது விருப்பம் போல ஆண்டார்கள்.
அமீர் முஆவியா உமரின் காலத்தில் சிரியாவை திட்டமிட்ட முறையில் மிகக் கவனமாக சிரியா முழுவதையும் தனது பூரண கட்டுப் பாட்டில் கொண்டு வந்தார்.
நபி (ஸல்) அவர்கள் கடலில் குதி என்று சொன்னால் உடனே கேள்வி எதுவும் கேட்காமல் குதித்து விடும் சுபாவம் கொண்டவர் உமர் என்கிற எங்களது நம்பிக்கையை சிதைக்கும் வகையில், உமரும் நபி (ஸல்) அவர்களின் சுன்னாவுக்கு மாறு செய்கிறார்.
அறுவர் கொண்ட தெரிவுக் குழுவில் அவர் முஸ்லிம் உம்மாவின் தலை விதியை தீர்மானிக்கும் பொறுப்பை விட்டு செல்கிறார்.
இந்த அறுவரில் அதிகப் படியானவர்களின் தீர்மானத்துக்கு எல்லோரும் கட்டுப் பட வேண்டும் என்றும், அப்படி யாராவது இந்த அறுவரில் முரண் பட்டால் அவரை கொன்று விட வேண்டும் என்றும் 'அரச ஆணை' பிறப்பித்து புதியதொரு பித்ஆத்தை அறிமுகம் செய்கிறார்.
அந்த அறுவரில் நிறுவன தெரிவாளர் அதாவது 'கிங் மேகர்' 'அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ப்' ஒரு புதிய நிபந்தனையை இந்த அறுவர் கொண்ட குழுவின் முன்வைக்கிறார். .
'தெரிவு செய்யப் படும் தலைவர் நபி (ஸல்) அவர்களின் 'சுன்னா'வுடன் இரண்டு கலீபாக்களின் 'சுன்னா'க்களையும் இணைத்து பின் பற்றியே முஸ்லிம் உம்மாவை ஆள வேண்டும்'
இரண்டு கலீபாக்களுமே ஒன்றுடன் ஒன்று முரண்பட்ட 'சுன்னாக்'களையே கொண்டிருந்தார்கள் என்பதையே அவர் அறிய தவறி விட்டார்.
அது என்ன வித்தியாசமான சுன்னாக்கள்?
முதலாம் கலீபா 'பைத்துல் மால்' - பொது நிதியியலில் மிகக் கடுமையான நிலையை கொண்டிருந்தார்.
பைத்துல் மால் பொது நிதி எல்லோருக்கும் சரி சமனாகவே பங்கீடு செய்யப் பட்டது.
ஆனால், இரண்டாம் கலீபாவோ அதில் தாராள தன்மையை கையாண்டு, 'சீனியர்' முஸ்லிம்களுக்கு 'சிநியாரிட்டியை' கருத்தில் கொண்டு அவர்களுக்கு அதிகமாகவும், புதிய முஸ்லிம்களுக்கு குறைவாகவும் பங்கீடு செய்தார்.
முதல் இரண்டு கலீபாக்களின் 'சுன்னாவை' பின்பற்றுவது என்றால் இதில் எதனை பின்பற்றுவது?
இமாம் அலி இந்த நிபந்தனைக்கு மறுப்பு தெரிவிக்க, நிபந்தனையை ஏற்றுக் கொண்ட உத்மான் (ரலி) உடனே இஸ்லாமிய ஆட்சிக்கு தலைவராகிறார்.
உதுமானின் வெற்றியின் பின்னாலும் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம் சமூகத்துக்கு நியமித்து விட்ட சென்ற தலைமை புறக்கணிக்கப் படும் குற்றம் ஒளிந்து இருந்தது.
அது மட்டுமா?
அவர் தனது தெரிவுக்கு முன்னர் வாக்களித்தபடி நபி (ஸல்) அவர்களின் சுன்னாவையோ அல்லது முதல் இரண்டு கலீபாக்களின் சுன்னாவையோ பின் பற்றாமல் தமது இஷ்டத்துக்கு....
இல்லை..! இல்லை...!!
உமய்யாக்களின் நிஜமான நிறுவன கர்த்தா மர்வானின் இஷ்டத்துக்கு
உமய்யாக்களின் நிஜமான நிறுவன கர்த்தா மர்வானின் இஷ்டத்துக்கு
இஸ்லாமிய ஆட்சியை இழுத்து சென்றார்.
இதன் விளைவாக சரியான தலைமைத்துவத்தை இழந்த முஸ்லிம் உம்மா இன்று வரை நிர்வாணப் பட்டு போனது.
அன்று முதல் இந்த நிமிடம் வரை யாருக்கு வலிமை இருக்கிறதோ அவர்கள் தமது விருப்பப் படி கற்பழிக்கும் அவல நிலைக்கு எங்களது சமூகம் ஆளாகிவிட்டது.
சரியான தலைமைத்துவம் சரியான நேரத்தில் தொலைந்து போனதால் அதனை சரி செய்வதற்கு எங்களது பிடிவாத குணம் தடையாக இருக்கின்றது.
அதென்ன பிடிவாத குணம்?
சைத்தானிய தலைவர்கள் தங்களது குஞ்சுகளுடன் குதூகலமாக இருக்கிறார்கள்
யூசுப் அல் கர்ளாவிகளினதும், அவரது சீடர்களினதும் வசீகரமான பேச்சுக்கு தன் நிலை மறந்து 'ஏவல் நாய்களாக ' அமெரிக்காவின் நலனை பாதுகாக்க 'ஜிகாத்' செய்த அப்பாவி முஜாஹித்களின் இறுதி நிலை.....??
அமெரிக்க சிறையில் முஜாஹித்களின் இன்னொரு நிலை
நாம் நேசிக்கும் சில தனி நபர்களில் நாம் வைத்து இருக்கும் நேசம் இந்த தவறுகளை இனம் காண எம்மை விடுவது இல்லை.
அப்படி இனம் கண்டாலும், நாமே எமது வாயை பொத்திக்கொண்டு அலறுவதால் எங்களது வேதனையை யாரும் உணர்ந்து கொள்வது இல்லை.
அல்லாஹ்வை மட்டும் ஏற்றுக் கொள்வதில் விமோசனம் இருக்கிறது என்று சொல்லப் படும் ஏகத்துவத்தில் நாம் நம்ப வைக்கப் பட்டோம்.
மிகவும் பழமையான இந்த கருத்தை வரலாறுகளில் பலர் எமக்கு சொல்லித் தந்து இருக்கிறார்கள்.
இன்னும் பலர் இப்பொழுதும் சொல்லிக் கொண்டும் இருக்கிறார்கள்.
மனித குல வரலாற்றில் இந்த ஏகத்துவத்தை முழங்கிய தனித் தன்மை வாய்ந்த முக்கியமான இருவரை இந்த இடத்தில் நினைவு கூர்வது மிகவும் பொருத்தம்.
இத்தகைய ஏகத்துவத்தை கேட்ட அல்லாஹ் அப்படி சொன்னவரில் கடும் கோபம் கொண்டான்...?அது யார்
சைத்தானின் சைகை காட்டும் அவனது நிகழ்கால தலைவர்கள்
ஆதம் (அலை) அவர்களை படைத்த அல்லாஹ் வானவர்களுக்கு ஆதம் (அலை) அவர்களுக்கு சிரம் பணியுமாறு கட்டளை பிறப்பித்தபோது, வானவர்களின் தலைவனாக இருந்த சைத்தான்" ஒளியினால் படைக்கப் பட்ட நான் மண்ணால் படைக்கப் பட்ட அவருக்கு சிரம் பணிய மாட்டேன். நான் சிரம் பணிவது என்றால் ; அது உனக்கு மட்டுமாகவே இருக்கும்...!" என்று ஏகத்துவம் பேசினான்.
இது ஏகத்துவம் மாதிரி தெரிந்தாலும் இதில் தொனிப்பது பெரும் ஆணவமாகும்.
அல்லாஹ்வின் தர்பாரில்,அல்லாஹ்வின் முன்னிலையில் வைத்து இவ்வாறு ஆணவமாக ஏகத்துவம் பேசிய சைத்தானுக்கு நடந்த கதை நாமறிவோம்.
மனித குல வரலாற்றில் இதே மாதிரியான ஏகத்துவத்தை மிக முக்கியமான இன்னுமொருவர் முக்கியமான ஒரு தருணத்தில் செய்திருக்கிறார்.
மனித குல வரலாற்றில் இதே மாதிரியான ஏகத்துவத்தை மிக முக்கியமான இன்னுமொருவர் முக்கியமான ஒரு தருணத்தில் செய்திருக்கிறார்.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அவர்களது முக்கிய சஹாபாக்களில் ஒருவரான அவர் , இந்த கருத்தை ஒருமுறை முன்வைத்தார்.
அவர் வேறு யாரும் இல்லை.
நாம் எமது நெஞ்சில் பெரு மதிப்பு வைத்து இருக்க நிர்பந்திக்கப் பட்டு இருக்கும் உமர் (ரலி) தான் அவர்கள்.
அதிர்ச்சியாக இருக்கிறதா?
"எப்பொழுது அவர் அப்படி சொன்னார். ?" என்று அதிர்ச்சியுடன் கேட்கிறீர்கள?
" அவர் அப்படி சொல்லி இருந்தாலும் அவர் சொன்னது சரிதானே?" என்று அவர் செய்கையில் நீங்களாகவே நியாயம் காண்கிறீர்களா?
" அவர் அப்படி சொல்லி இருந்தாலும் அவர் சொன்னது சரிதானே?" என்று அவர் செய்கையில் நீங்களாகவே நியாயம் காண்கிறீர்களா?
நபி (ஸல்) அவர்களின் இறுதிப் படுக்கையில் வைத்து முஸ்லிம் உம்மா வழி தவறி விடாது இருப்பதற்காக முக்கியமான ஒரு விடயத்தை எழுதுவதற்கு நபி (ஸல்) அவர்கள் முயன்ற போது "அது நமக்கு தேவை இல்லை. அல்லாஹ்வின் குரான் - வேதம் நமக்கு இருக்கிறது . அது போதும்..." என்று அல்லாஹ்வின் வேத நூலை முன்னிலைப் படுத்தி ஏகத்துவம் பேசி , நபி (ஸல்) அவர்களின் போதனையை அலட்சியப் படுத்திய தவறு அவரில் இருக்கிறது.
இந்த சம்பவம் நபி (ஸல்) அவர்களது மறைவிற்கு சுமார் மூன்று நாள்களுக்கு முன்னர் நடந்தது.
இந்த அபாக்கியமான சம்பவத்தை அல்குர்ஆனுடன் ஒப்பு நோக்கி ஆராயும் பொழுது உமர் (ரலி) அவர்கள் இருந்த அபாயகரமான தளம் எம்மை திடுக்குற்று சில்லிட வைக்கிறது.
"(ஆகவே, இறை தூதருக்கு) வழிப் பட்டு நடப்பதும் , நன்மையான சொல்லுமே (மேலானதாகும்) எனவே, ஒரு காரியம் உறுதியாகிவிட்டால், அல்லாஹ்வுக்கு அவர்கள் உண்மையாக நடந்து கொண்டால் அவர்களுக்கு நன்மையாக இருக்கும்.
(அல் குர்ஆன் 47 : 21)
"நிச்சயமாக, நிராகரிப்பவர்கள் (பிறரை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுத்தும்,நேர் வழி தங்களுக்கு தெளிவான பிறகு (நம்) தூதரை எதிர்த்து முரண் பட்டுக் கொண்டும் இருக்கின்றனரோ - அவர்கள் அல்லாஹ்வுக்கு எவ்வித இடர் பாடும் செய்துவிட முடியாது: அன்றியும் அவர்களுடைய செய்கைகளை அவன் பயனற்றவையாக ஆக்கியும் விடுவான்."
(அல் குர்ஆன் 47 : 32)
"ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிப் படுங்கள். இன்னும் இத்தூதருக்கும் வழிப் படுங்கள் - உங்கள் செயல்களை பாழாக்கி விடாதீர்கள்."
(அல் குர்ஆன் 47 : 33)
"அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர் , அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே) நீர் காண மாட்டீர்.அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே;(ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில் ,(அல்லாஹ்) ஈமானை எழுதி (பதித்து) விட்டான்................"
இந்த அல் குர் ஆன் கருத்துக்களுடன் ஹசரத் உமர் (ரலி) உடைய செயலை ஒப்பிட்டுப் பார்ர்க்கும் பொழுது , உமர் (ரலி) உடைய செயலை நியாயப் படுத்த முயற்சிக்கின்ற ஒருவர் அல்லது ,அவருக்கு பக்கசார்பாக பேசுகிற ஒருவரும் உமர் (ரலி) உடைய தளத்திலேயே இருப்பதாகவே கணிக்கப் படும் அபாயம் இருப்பதை கருத்திட் கொள்ளளவும்.
உமர் (ரலி) அவர்களின் தவறான இந்த செய்கையின் விளைவாக சரியான தலைவரை இழந்து நாம் இன்று வரை தவறாக வழி நடாத்தப் படுகிறோம்.
அவர், நபி (ஸல்) அவர்களது இறுதி மரண சாசனம் எழுதப்படுவதை தடுத்த சம்பவம் இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனையாகும்.
அன்று மட்டும் உமர் அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களுடைய இறுதி மரண சாசனத்தை எழுத அனுமதித்து இருந்தால் எங்களது முஸ்லிம் உம்மா ஒரு போதும் வழி தவறி போயிருக்க மாட்டாது.
உமர் (ரலி) அபூபக்கரை தெரிவு செய்ய, அதன் பின்னர் அபூபக்கர் அதற்கு நன்றிக் கடனாக உமரைத் தெரிவு செய்ய, உமர் (ரலி) யின் பின்னால் பெரும் செல்வாக்கு செலுத்திய உமையாக்கள் மிகவும் தந்திரமாக உதுமான் (ரலி) அவர்களை தெரிவு செய்ய உதுமானோ மர்வானின் எடுப்பார் கைபிள்ளையாகி முஆவியாவின் ஆளுமைக்கு துணை போகிறார்.
தந்திரமாக முஆவியா முஸ்லிம் உம்மாவின் சர்வாதிகார மன்னராகிறார்.
முஆவியாவின் அருளால் இன்றைய எமது மன்னர் முன் தலை வணங்கும் அமெரிக்க அதிபர் 'பாரக் ஒபாமா.............- பெருமையாக இல்லை?!!!
அவருக்கு எதிராக, அஹ்லுல் பைத்களின் பெயரைக் கூறி அப்பாசியாக்கள் அவர்களை துரத்திவிட்டு ஆட்சிக்கு வருகிறார்கள்.
அவர்களோ இவர்களுக்கு கொஞ்சமும் குறைவு இல்லாமல்உமய்யாக்களையும், அஹ்லுல் பைத்களையும் கொன்று குவிக்கிறார்கள்.
முஆவியாவின் அருளால் இன்றைய எமது மன்னர் முன் தலை வணங்கும் அமெரிக்க அதிபர் 'பாரக் ஒபாமா.............- பெருமையாக இல்லை?!!!
அவருக்கு எதிராக, அஹ்லுல் பைத்களின் பெயரைக் கூறி அப்பாசியாக்கள் அவர்களை துரத்திவிட்டு ஆட்சிக்கு வருகிறார்கள்.
அவர்களோ இவர்களுக்கு கொஞ்சமும் குறைவு இல்லாமல்உமய்யாக்களையும், அஹ்லுல் பைத்களையும் கொன்று குவிக்கிறார்கள்.
இஸ்லாமிய வரலாற்றில் இந்த ஆட்சியாளர்களை நாம் எம்மை அறியாமல் இவர்களை மா பெரும் வெற்றி வீரர்களாக கணித்து இவர்களின் துதி பாடுகிறோம்.
முஸ்லிம் உம்மா சரியான தலைமைத்துவத்தை இழந்து இன்றும் சீரழிந்து முஸ்லிம்களின் எதிரிகள் இழுத்த இழுப்புக்கு எல்லாம் இழுபட்டு போய்க் கொண்டு இருப்பதற்கு இந்த தலைவர்களின் வெற்றிதான் முழுக் காரணம் என்று புரிகிறதா?
நரகத்துக்கு அழைக்கும் அல் கர்ளாவி
நரகத்துக்கு அழைக்கும் அல் கர்ளாவி
பயந்து கதறும் எங்களது பெண்களும், குழந்தைகளும்
ஈரானில் இஸ்லாமிய புரட்சி எழுச்சி கண்டு இமாம் குமைனி
ஆட்சியாளராகிறார்.
அதன் பின்னர், சதாம் ஹுசைனின் தலைமையில் ஈரானை ஆக்கிரமிக்கும் யுத்தம் நடைபெறுகிறது.
ஐரோப்பாவும் , மேற்கும் தோன்றாத் துணையாக சதாமுக்கு ஆதரவு அளித்து ஈரானை குறி வைத்து தாக்குகிறார்கள்.
ஈராக்கில் சுமார் எழுபது சத விகிதம் ஷியாக்கள் இருக்கிறார்கள்.
உமரின் அரபி மேட்டுக் குடி கருத்தியலில் ஆழ்ந்து போன அந்த அராபிய ஷியாக்கள் இமாம் குமைனிக்கு ஆதரவு தெரிவித்து சதாம் ஹுசைனை எதிர்த்து நிற்க வில்லை.
தொன்னூறுகளில் குவைத் ஆக்கிரமிக்கப் படுகிறது.
அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் ஒன்றிணைந்து சதாம் ஹுசைனை அடி அடி என்று அடித்து ஒரு செத்த பாம்பின் நிலைக்கு சதாம் ஹுசைனை கொண்டு வந்து நிறுத்தி இருந்தார்கள்.
பாவம் அப்பாவி இராக் சுன்னத் வல் ஜமாஅத் முஸ்லிம் மக்கள்.
அமெரிக்க இராணுவ அடக்குமுறைக்கு அஞ்சும் இராக்கிய பச்சிளம் பாலகர்கள்
இராக்கின் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக இராக் ஷியாக்கள் என்ன செய்தார்கள்?
ஈராக் ஷியாக்கள் வீறு கொண்டு எழுந்து செத்த பாம்பின் நிலையில் இருந்த சதாம் ஹூசைனை அப்புறப் படுத்தி விட்டு இஸ்லாமிய ஆட்சியை நிலை நிறுத்த அருமையான சந்தர்ப்பம்.
அமெரிக்காவை எதிர்க்க இராக்கிய ஷியாக்கள் முன்வந்து இருந்தால், இராக்கின் சுன்னத் வால் ஜமாஅத் முஸ்லிம்கள் அந்த ஷியாக்களின் பின்னால் அணி திரண்டு ஒற்றுமையாக இருந்து இருப்பார்கள்.
இராக் ஷியாக்கள் அப்படி செய்தார்களா?
சரி! அவர்களாவது ஒருமித்த தலைமையில் இருந்தார்களா என்றால் அதுவும் இல்லை.
இது அரபிகளுக்கு மத்தியில் அல்லாஹ் விதித்த ஒரு சாபம்.
இரண்டாயிரத்தில் நேசப் படைகள் மீண்டும் இராக்கை தாக்கினார்கள்.
எழுபது சத விகிதமான ஷியாக்கள் ஒரு தலைமையில் அமெரிக்காவையும் அதன் நேச நாடுகளையும் எதிர்த்து நின்றிருந்தார்கள் என்றால் எவ்வளவோ இழப்புகளை தவிர்த்து இருக்க முடிந்தது.
அராபிய ஏகாதிபத்தியத்துக்கு உமர் வித்திட்டார்.
சுன்னி, ஷியா என்கிற வேறுபாடுகள் இன்றி அது அரபிகளிடத்தில் இன்னமும் இருக்கிறது.
இந்த ஏகாதிபத்திய, மேட்டுக் குடி எண்ணங்கள் அராபிகளிடம் இருக்கும் வரை 'மறைமுக சக்தி' களின் காட்டில் மழைதான்.
நாங்களாக எங்களது நிலையை மாற்றிக் கொள்ளும் வரை அல்லாஹ் ஒரு போதும் எங்களது நிலையை மாற்றப் போவது இல்லை.
பரிதவிக்கும் இந்த அப்பாவிகளின் கதறல்களுக்கு, உலகாயுத ஆசைகளுக்கு விலை போன யூசுப் அல் கர்ளாவியும், அவரது விசமக் கருத்துக்களை காவித் திரியும் உஸ்தாத் மன்சூர்களும் அவர் சார்ந்த உலமாக்களுமே நாளை மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லவேண்டும்.
இவர்களின் தீங்குகளை விட்டும் அல்லாஹ் நம்மை பாது காப்பானாக.
No comments:
Post a Comment