"தாருல் இஸ்லாம்" என்கிற ஒரு அற்புதமான கோட்பாடு நபி (ஸல்) அவர்களது காலத்தில் அமுலில் இருந்தது.
அதென்ன நாம் அறியாத 'தாருல் இஸ்லாம்?'
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த 'தாருல் இஸ்லாம்' கோட்பாட்டின் படி, இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒருவர் எந்த வித 'விசா' அனுமதி பத்திரமும் இல்லாமல் இஸ்லாமிய அரசு கோலோச்சுகின்ற அனைத்து நிலப் பரப்பினுள்ளும் நுழைவதற்கு பூரண அனுமதியைப் பெறுகின்றார்.
அதாவது, ஒரு முஸ்லிமுக்கு 'ஹிஜாசினுள்' அதாவது ,தற்போதைய சவூதி அராபியாவினுள் நுழைவதற்கு 'விசா' அனுமதி தேவைப் படவில்லை.
அவர் அந்த தேசத்தை சார்ந்தவராக இருக்க வேண்டிய அவசியம் இருக்க வில்லை. இஸ்லாத்தை தழுவிய முஸ்லிமாக இருந்தால் போதும்..
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒருவர் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளுடன் இதுவும் ஒரு முஸ்லிமின் சாதாரண உரிமையாக கணிக்கப் பட்டது.
தாருல் இஸ்லாமிய நிலப்பரப்பில் சுதந்திரமாக வாழும் உரிமை அவருக்கு அனுமதிக்கப் பட்டது.
முஸ்லிமுக்கு 'ரெசிடென்ட்' 'விசா'- தங்கி வாழும் அனுமதி பத்திரம் தேவைப் படவில்லை.
தாருல் இஸ்லாத்தினுள் நுழைந்த ஒரு முஸ்லிமுக்கு தனது வாழ்வுக்கு தேவையான தொழில் அல்லது வேலை வாய்ப்புகளை தேடித் பெற்றுக் கொள்வதற்கு பூரண சுதந்திரம் இருந்தது.
முஸ்லிமுக்கு 'வேர்க் பெர்மிட்- வேலை செய்வதற்கான அனுமதி பத்திரம் தேவைப் படவில்லை.
இஸ்லாத்தை ஏற்ற ஒரு முஸ்லிமுக்கு அந்த நாட்டின் இஸ்லாமிய அரசியலில் பங்கு பற்றும் உரிமை அவன் முஸ்லிம் என்ற காரணத்தால் சுயமாகவே கிடைத்து விடுகிறது.
சவூதி என்று ஒரு தேசம் உருவாகும் வரை இந்த தாருல் இஸ்லாம் வழங்கிய உரிமைகளை ஒரு முஸ்லிம் பூரண சுதந்திரத்துடன் அனுபவித்து வந்தான்.
சவூதியின் மலர்வுடன் இந்த தாருல் இஸ்லாம் இல்லாது ஒழிக்கப் பட்டது.
கூடவே காலணித்துவ பெயரில் எங்களது இஸ்லாமிய தேசங்கள் பல துண்டுகளாக கூறு போடப் பட்டு பிரிக்கப் பட்டன.
சவூதி அராபியாவின் பிரமாண்டமான எண்ணெய் வயல்கள் முஸ்லிம் உம்மத்தின் பொது சொத்து.
என்றாலும், பல பிரிவுகளில் பிரிந்து நின்ற முஸ்லிம் உம்மத்தினால் அவர்கள் இழந்த பொது இழப்புகளைப் பற்றி புரிந்து கொள்ள முடியாமல் போனது.
பாலஸ்தீனம் ஆக்கிரமிக்கப் பட்டது.
முஸ்லிம் சமூகத்தின் கல்வி, கலாச்சாரங்கள் திட்டமிட்ட முறையில் நசுக்கப் பட்டன.
ஒரு தலைமையில் ஒன்று பட்டிருந்த முஸ்லிம் சமூகம் , ஒருமித்த தலைமையை தேடும் பணியில் பல தலைமைகளில் பிரிந்து போயின.
உலகத்திலேயே அதிகமான தலைவர்கள் இருப்பது எங்களது சுன்னத் வல் ஜமாத்தில்.
உலகத்திலேயே அதிகமான மக்கள் வறுமையில் வாடுவது எங்களது சுன்னத் வல் ஜமாத்தில்.
கல்வி அறிவில் உலக மக்களுடன் எம்மை ஒப்பிடும் பொழுது நாம் நூற்றுக்கு இருபது சத விகிதம் கூட இல்லை.
உலகிலேயே மக்கள் அதிகமான அளவில் அகதிகளாக பரிதவிப்பது எங்கள் சுன்னத் வல் ஜமாத்தில்.
நூற்றுக்கு சுமார் நான்கு சத விகிதமானவர்கள் தான் எங்களது சுன்னத் வல் ஜமாத்தில் பெரும் பணக்காரர்களாக இருக்கிறார்கள்.
சுமார் பதின் நான்கு சத விகிதமானவர்கள் மத்திய தரத்திலே இருக்க மீதமான
என்பது சத விகித மக்கள் கடுமையான வறுமையில் வாடுகிறார்கள்.
அரேபியா ஏகாதிபத்தியத்திற்கு மீண்டும் ஒருமுறை வித்திட்ட சவூதி அரேபியா முஸ்லிம் உம்மத்திற்கு சொந்தமான அனைத்து வளங்களையும் சூறையாடியது.
அதன் பின்னர் , ஹிஜாஸின் முழு எண்ணெய் வளத்தையும் மிகும் பவ்வியமாக தனது அரசாட்சியின் பாதுகாப்புக்கான உத்திரவாதம் என்கிற பெயரில் அமெரிக்காவுடன் பண்ட மாற்று செய்துக் கொண்டது.
ஹிஜாஸ் தேசத்துடன் உயிர்ப்புடன் இருந்த முஸ்லிம்களின் ஒன்றிணைப்பை, சவூதி தேசம் என்று 'மறை முக சக்திகள்' மிகவும் இலாவமாக துண்டித்தன.
எங்களது பிறப்புக்கு முன்னாலேயே 'தாருல் இஸ்லாம்' என்கிற அற்புதமான இஸ்லாமிய கோட்பாடு சிதைந்து போயிருந்தது.
அதன் காரணமாக அதன் அருமையையும், பெறுமதியையும் எங்களால் உணர முடியாமல் போனது.
நாங்கள் எல்லோரும் பிறந்த பொழுது ஹிஜாஸ் தேசம் இருந்த இடத்தில் சவூதி என்ற இராட்சத சைத்தான் பிறந்து விட்டிருந்தது.
சவூதி உருவாக்கிய இஸ்லாமிய பல்கலைக் கழகங்கள் மூலம் , அவர்களது ஆட்சிக்கு எது வித பாதிப்பும் ஏற்படாதவாறு மூளை சலவை செய்யப்பட உலமாகளை கொண்டு எங்களது மூளையை சலவை செய்வதில் சவூதியை முன்னிலைப் படுத்தி இந்த மறைமுக சக்திகள் பெரும் வெற்றி கண்டன.
இது தவிர, ராபிதா என்கிற நிதி நிறுவனத்தை உருவாக்கி உலகத்தில் உள்ள அநேகமான மதரஸாக்களின் நிதியியல் தேவைகளை நிவர்த்தி செய்து அந்த மதரசாக்களில் சவூதியைப் பற்றிய நல்லெண்ணத்தை வளரச் செய்வதிலும் இவர்கள் பெறு வெற்றி கண்டார்கள்.
நாவன்மை கொண்ட உலமாக்களையும், எழுத்தாற்றல் கொண்ட உலமாக்களையும் மிகவும் நுணுக்கமாக அணுகிய 'ராபிதா' அவர்களை எங்களது தலைவர்களாக உருவகித்து எம்மை கருத்துக் குழப்பங்களில் பிளவு பட்டு மோத வைப்பதிலும் பெறு வெற்றி கண்டது.
இந்த உலமாக்களின் தலைமையில் நாங்கள் எங்களுக்கு எதிராகவே எமக்குள் போர்க் கோடி தூக்கிக் கொண்டோம்.
சவூதியின் மறைமுக தயவில் செழுமையாக வளர்ந்து கொழுப்பு வைத்த எங்களது உலமா தலைவர்கள் 'நபி (ஸல்) அவர்களின் சுன்னாவை அமுல் படுத்துகிறோம் என்று சொல்லி இரண்டு, இரண்டு கல்யாணங்கள் செய்து கொண்டு 'ஆப்பிழுத்த குரங்கு' போல விழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
எங்களது உலமா தலைவர்கள் என்றாவது எமக்கு இழந்து போன எங்களது இழப்புகளைப் பற்றி ஏதாவது சொல்லி இருக்கிறார்களா?
இல்லையே?
விளைவு?
சைத்தான் சவூதியை நம்பிய எங்களது உலமாக்கள் இஸ்லாத்தை விற்று ஏமாந்து போனார்கள்.
அத்தகைய உலமாக்களை நம்பிய நாங்களும்தான்.
"அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள் காபிர்கள் ஆவார்கள்"
"அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்"
"அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள் பாவிகள் ஆவார்கள்"
(அல் மாயிதா - 44 , 45 , 46 )
No comments:
Post a Comment