"டுனீசியாவில்" இனம் தெரியாதா ஒரு இளைஞன் தீ மூட்டி கொல்லப் படுகின்றான்.அதற்கு அழகான, உள்ளத்தை தொடும் ஒரு கதையைப் பின்னி முகப்பு அட்டை போட்டு உலகளாவிய மக்களது உளவியலையும் வென்றாகி விட்டது.
திடீரென "டுனீசியாவில்" ஒரு மக்கள் புரட்சி.
எது வித இலக்கும் இல்லாத ஒரு ஓட்டம்.
நாட்டுத் தலைவன் நாட்டின் பணத்துடன் ஓடிவிட , அவனது சகா நாட்டை ஆளுகின்றான்.
அடுத்த சில நாள்களில் எகிப்தில் ஒரு புரட்சி.
'டுனீசியாவின்' பின் விளைவு என்று அதற்கு ஒரு பெயர்.
ஒரு அழகிய இளம் பெண் தனது "பேஸ் புக்கில்" எகிப்து மக்களை 'தஹ்ரீர்' சதுக்கத்துக்கு வந்து எகிப்தின் தலைவருக்கு எதிராக மக்களை அணி திரளுமாறு உருக்கமாக ஒரு வேண்டு கோளை விடுக்கிறார்.
ஆச்சரியமான ஒரு செயல்.
ஹுஸ்னி முபாரக் அரசின் உளவாளிகள் மக்களோடு மக்களாக பின்னிப் பிணைந்து ஒன்றுடன் ஒன்றாக இரண்டறக் கலந்து இருக்க, அந்த இளம் பெண்ணின் இந்த செயல் எங்களை விழி பிதுங்க வைக்கிறது.
ஹுஸ்னி முபாரக் அரசின் உளவாளிகள் மக்களோடு மக்களாக பின்னிப் பிணைந்து ஒன்றுடன் ஒன்றாக இரண்டறக் கலந்து இருக்க, அந்த இளம் பெண்ணின் இந்த செயல் எங்களை விழி பிதுங்க வைக்கிறது.
இருக்காதா பின்னே?
'அல் அஷ்கர்' இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் கல்வி கற்கும் ஒரு மாணவன் இஸ்லாமிய அரசைப் பற்றி பேசிய அடுத்த கணம் கைது செய்யப் படுவான்.
இஸ்லாமிய கல்வி கற்கும் மாணவர்களுக்கு 'தாடி' வளர்க்க முடியாது.
அந்த நாட்டின் இராணுவம் அரச சார்பானது.
என்றாலும், அந்தப் பெண்ணுக்கோ அல்லது அவரின் வேண்டுதலை ஏற்று 'தஹ்ரீர்' சதுக்கத்தில் ஒன்று திரண்ட ஒருசில பொது மக்களுக்கோ அந்த நாட்டின் இராணுவமோ அல்லது போலீசாரோ, ஹுசனி முபாரக்குக்கு ஆதரவான உளவாலிகளோ எதுவும் செய்யாமல் வெறுமனே பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
பொது மக்களுக்கும் பயம் கலந்த ஆச்சரியம்?
"இதென்னடா புதுக் கோஷம்?"
பயத்துடனும், ஆச்சரியத்துடனும் புதினம் பார்த்த பொது மக்கள்,சரியான தகவல்களை தெரிந்துக் கொள்ள தொலைக் காட்சிப் பெட்டிகளின் முன்னாள் திரள்கிறார்கள்.
அவர்களுக்கு நன்கு பரிச்சயமான 'அல் ஜெஸீரா' நாட்டு நடப்புகளை மக்களுக்கு நேரலையில் காட்டுகிறது.
திடீரென எகிப்திய பாது காப்பு படையினர் 'அல் ஜெஸீரா' நிருபர்களை தடுத்து வைத்து, அவர்களது 'கேமராக்களை' பறித்து விடுகிறார்கள்.
இப்பொழுது செய்தி சூடு பிடிக்கிறது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் 'அல் ஜெஸீரா' தனது 'கேமராக்களை' இழந்த நிலையிலும் தனது நேரலையை மட்டும் நிறுத்தவில்லை.
'அல் ஜெஸீரா'வின் புண்ணியத்தால் மக்கள் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்கிறார்கள்.
செய்தி சொல்வதில் 'அல் ஜெஸீரா' முன்னணியில் நிற்க மக்கள் அதன் பின்னணியில் இருக்கிறார்கள்.
இப்பொழுது அந்த மக்கள் 'அல் ஜெஸீரா'வினால் வழி நடாத்தப் படுகிறார்கள்.
திடீரென 'அல் ஜெஸீரா'வில் ஒரு அறிவிப்பு?
"எகிப்திய இராணுவம் பொது மக்களுக்கு எதிராக எதுவித எதிர் நடவடிக்கையும் எடுக்க மாட்டாதாம்.பொது மக்களுக்கு பயம் இல்லாமல் அவர்களது எதிர்ப்பு நடவடிக்கைகளை கொண்டு செல்ல முடியுமாம்."
'அப்பாடா? கொஞ்ச நஞ்சம் இருந்த பயமும் இப்பொழுது இல்லை. வீதியில் இனி இறங்கினால் சரி. .........சிலவேளை யாராவது சாப்பாடும் தரலாம்?!'
தடி எடுத்தவன் வேட்டைக் காரன் என்ற கதையாக எகிப்தை மாற்றிய பெருமை 'அல் ஜெஸீரா'வுக்கு வர , எகிப்து 'பிர்அவுனிய' சக்திகளால் மெது மெதுவாக உள் வாங்கப் படத் தொடங்கியது.
உண்மையான இஸ்லாம் எகிப்தில் இல்லை.
அதனால் சரியான ஒரு தலைமைத்துவமும் அங்குள்ள முஸ்லிம்களுக்கு இல்லை.
பலமில்லாத பல இயக்கங்கள், பல பிரிவுகள், பல அமைப்புகள் என்று பலவீனப் பட்டு போயிருந்த எகிப்தில் ஒரு தலைமைத்துவத்துக்கு கட்டுப் படும் பணிவு காணப் படவில்லை.
தலைமைத்துவத்துக்கு கட்டுப் படுவதனால் கிடைக்கும் பலாபலன்களை அறியாத அந்த நாட்டு அப்பாவி பொது மக்கள் ஒரு தலைமைத்துவத்துக்கும் கட்டுப் படவில்லை.
விளைவு?
ஏதோ ஒருவகையில் ஆளுமை உள்ள அனைவரும் தலைவர்கள்.
இந்த நிலையில் இஸ்லாமும் சரியாக தெரியாத காரணத்தால் அந்த நாட்டின் சில பொதுமக்கள் சில்லறைத் தனமான செயல்களை செய்யத் தொடங்கினர்.
முதலில் பெண்களுக்கு தொந்தரவு கொடுக்கத் தொடங்கினர். மெது மெதுவாக வளர்ச்சி கண்ட அது 'பாலியல் வல்லுறவுகளில்' அந்த நாட்டு பெண்களை கொண்டு போய் நிறுத்தியது.
வேலை இல்லாத சில பொது மக்கள் 'கனீமத்' என்று தங்களது செய்கைகளுக்கு தப்பாக அர்த்தம் கற்பித்துக் கொண்டு கொள்ளையடிக்கத் தொடங்கினர்.
அரச நிறுவனங்கள் என்று தொடங்கிய அதுவும் அசுர வளர்ச்சி கொண்டு தனியார் நிறுவனங்களையும் கொள்ளையிடுவதில் அவர்களை கொண்டு போய் நிறுத்தியது.
ஆனால், இந்த செய்கைகளுக்கு பின்னால் இருந்த 'மறை முக' சக்திகளின் முழுக் கவனமும் இன்னொரு இலக்கில் இருந்ததை நாம் கவனிக்கத் தவறிப் போனோம்.
அந்த மறைமுக் சக்திகளின் அமைப்பு ஒரு சதியை விட பன்மடங்கு அபாயகரமான ஒன்றால் உந்தித் தள்ளப் பட்டது.
வேத வாக்க்யத்துக்கு சமமான தரத்தில் மதிக்கப் படும் ஒரு கோட்பாட்டினாலேயே அந்த அமைப்புகள் வழி நடாத்தப் படுகின்றன.
"எல்லா பொருளாதார வளர்ச்சியும் மனித குலத்துக்கு நன்மையே செய்கின்றன. வளர்ச்சி அதிகரிக்க, அதிகரிக்க நலன்களும் மேலும் பரவலாக்கப் படுகின்றன" என்பதுதான் அந்தக் கோட்பாடு.
பார்த்த பார்வைக்கு சரியானது போல இது தெரிந்தாலும், இதன் பின் விளைவில் உள்ள பயங்கரம் மிகவும் கொடூரமானது.
"பொருளாதார வளர்ச்சி என்ற நெருப்பை கிளறி பற்ற வைத்து விடுவதன் மூலம், அந்த செயற்பாடுகளின் முன்னணியில் உள்ளவர்கள் அந்த பொருளாதார வளர்ச்சியில் கிடைக்கும் எல்லா நலன்களையும் அவர்களே சுவீகரித்துக் கொள்கின்ற அதே சமயத்தில் , பின்னணியில் உள்ளவர்களை முழுமையான சுரண்டலுக்கு உட்படுத்துவதுதான் இதன் பயங்கரமான யதார்த்தம்."
மத்திய கிழக்கிலே மன்னராட்சி, சர்வாதிகார ஆட்சி, அடக்கு முறை ஆட்சி,இராணுவ ஆட்சி என்கிற பெயர்களிலே இந்த மறை முக சக்திகள் அந்த நாடுகளின் வளங்களை, பொருளாதார வளர்ச்சிகள் என்ற பெயரிலே முழுமையாக சுரண்டின.
அதற்கு அந்த மக்களிடையே இருந்த கல்வி அறிவிண்மையையும்,பிளவுகளையும் இவர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர்.
கல்வியறிவின் மேம்பாட்டையும், முஸ்லிம் தலைமைத்துவத்தின் தேவைப்பாட்டையும் மக்கள் நினைத்துப் பார்க்க, அஹ்லுல் பைத் இமாம்களின் வழி காட்டுதலின் அவசியம் மெலிதாக உலக முஸ்லிம்களுக்கு பளீரிடத் துவங்கின.
முஸ்லிம்கள் எப்பொழுது அஹ்லுல் பைத்கள் மீது அன்பு கொள்ளத் துவங்கு கிறார்களோ, அன்று முதல் இந்த அமைப்புகளின் முகமூடி கிழியத் துவங்கும் என்பதை இவர்கள் நன்கு புரிந்து வைத்து இருந்தார்கள்.
அஹ்லுல் பைத்களின் அரசியலின் அவசியத்தை முஸ்லிம்கள் உணரத் துவங்கிய பொழுது இந்த அமைப்புகள் இன்னொரு தந்திரத்தை கையாண்டன.
'விக்கி லீகின் ' கசிவுகள் என்ற பெயரில் முஸ்லிம்களின் கவனத்தை திசை திருப்பிய இந்த மறை முக சக்திகள், மத்திய கிழக்கில் மக்கள் எழுச்சி என்ற பெயரில் மீண்டும் புதியதொரு சுரண்டலுக்கு வழிசமைத்து இருக்கிறார்கள்.
இந்த எழுச்சியின் பின் விளைவுகள் வெகு சீக்கிரத்தில் புரிந்து போகும்.
மக்களை ஆளுவது யார் என்று முதலாவது பிரச்சினை வெடிக்கும்.
மக்களிடையே கோஷ்டி மோதல்கள் உருவாகும்.
இந்த கோஷ்டிகள் இஸ்லாமிய இயக்கங்களாக புதிய பரிணாமம் எடுக்கும்.
குடும்ப அமைப்புகள் சீர்குலைந்து விடும். அழகிய இளம் பெண்கள் 'பாலியல்' தேவைகளுக்காக கடத்தப் படுவார்கள்.
நாடுகளின் கல்வி தராதரம் முற்றிலும் பாதிக்கப் படும்.
பிளவு பட்ட இயக்கங்களுக்கு வெவ்வேறாக உதவுகின்ற மறைமுக சக்திகள் , தங்களது ஆதரவு இயக்கத்தைக் கொண்டே அந்த நாடுகளின் வளங்களை சுரண்டுவார்கள்.
"அமைதியின் தேவை, பொருளாதார வளர்ச்சி, பொது மக்கள் பாது காப்பு, மக்கள் நலன்', என்றெல்லாம் தங்களது செய்கைகளுக்கு பெயரும் வைத்துக் கொள்வார்கள்.
எங்களது மார்க்க அறிஞர்களும் 'இந்த உலகம் எமக்கு உரியது அல்ல. மறுமைதான் எங்களது உலகம்' என்று கூறி எங்களில் சிலரை மடையர்களாக்கி விடுவார்கள்.
இன்னும் சிலர் "அல்லாஹ்வின் சட்டத்திற்கே நாம் கட்டுப் பட வேண்டும்.
நாட்டுக்காக உயிர் துறப்பது மறுமையில் உங்களுக்கு வெற்றியை கொண்டு தரும்." என்று கூறி எங்களது ஜிகாத் உணர்வுகளை தூண்டிவிட்டு அதில் இந்த மறை முக சக்திகளை குளிர் காய வைப்பார்கள்.
இதில் நாம் காணப் போகும் வேதனையான வேடிக்கை என்னவென்றால், இந்த உலமாக்கள் எல்லோரும் 'மறை முக' சக்திகளின் அடிவருடிகளாகவே இருப்பார்கள்.
இனி ,'டுனீசியா' மக்களைப் போல இலக்கு இல்லாத ஓட்டம் தான்.
கானல் நீராய் இருக்கின்ற இஸ்லாமிய கிலாபத்தைப் பற்றி எங்களது எல்லா இயக்கங்களும் வரிந்து கட்டிக் கொண்டு பேசுகின்றன.
அந்தோ பரிதாபம் !
எங்கள் இயக்கங்களின் தலைவர்கள் இந்த 'மறைமுக' சக்திகளின் அடியாட்களாக பணத்துக்கும் சொகுசான வாழ்வுக்கும் விலை போய் உள்ளார்கள்.
இஸ்லாத்துக்கு எதிராக எந்த விதமான சதிகளையும் யாரும் செய்யவேண்டியது இல்லை.
ஏனெனில் , மிகவும் நுணுக்கமாக நங்கள் எங்களது சரியான இலக்கை விட்டும் திசை திருப்பப் பட்டு விட்டோம்.
இஸ்லாத்தை விட்டும் திசை திருப்பப்பட்ட நாங்கள் இஸ்லாம் என்று சொல்லிக்கொண்டு இஸ்லாத்துக்கு எதிரான கொள்கையில் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம்.
இவைகளுக்கு நல்ல உதாரணம் மத்திய கிழக்கில் இப்பொழுது ஏற்பட்டுள்ள குழப்பங்கள்.
பாவம் எங்களது முஸ்லிம் பெண்கள்.
பாவம் எங்களது குழந்தைகள்.
எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாத அவர்களின் நிலை பரிதாபமானது.
மத்திய கிழக்கில் உள்ள எண்ணை வயல்களை குறி வைத்த நிலையிலும், அஹ்லுல் பைத்களின் எழுச்சியை ஓரம் கட்ட வேண்டும் என்ற நிலையிலும் நடந்து கொண்டு இருக்கும் இந்த நாடகங்களின் நிஜமான இயக்குனர்கள் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தங்களை ஸ்திரப் படுத்திக் கொண்டுள்ள 'மறை முகசக்திகளாகும்'.
இந்த மறைமுக சக்திகள் யார் என்று உங்களுக்கு தெரியுமா?
அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நிலை கொண்டுள்ள அனைத்து பன்னாட்டுக் கம்பனிகளின் கூட்டு தான் இந்த மறைமுக சக்திகளாகும்.
உலகத்தில் நடைபெறுகின்ற அனைத்து அரசியல் மாற்றங்களின் பின் புலத்தில் இவர்கள் இருக்கிறார்கள்.
இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களிடையே நடை பெறுகின்ற இயக்க மோதல்களின் பின்னாலும் இவர்களே இருக்கிறார்கள்.
யூசுப் அல் கர்ளாவி, சாகிர் நாயக் ஆகிய தனித்துவமான மிக பிரபலமான பிரமுகர்களின் பின்னாலும் இந்த மறைமுக சக்திகள் இருக்கிறார்கள்.
அனைத்து அரபு நாடுகளின் தலைவர்களின் பின்னாலும் இவர்கள் இருக்கிறார்கள்.
கலாச்சாரங்களை குறிவைத்து சீர்குலைக்கும் அனைத்து தொலைகாட்சி நிறுவனங்களின் பின்னாலும், ஒழுக்க விழுமியங்களை சிதைக்கும் அனைத்து இன்டர்நெட் வலை அமைப்பின் பின்னாலும் ,உலகில் உள்ள முன்னணி செய்தி தொலைகாட்சி நிறுவனங்களின் பின்னாலும் இவர்கள் இருக்கிறார்கள்.
'பி பி சியில் சொல்லும் செய்தி இவர்களுடையது. பி பி சி இல்லாமல் அல் ஜெஸீரா என்றாலும் இவர்கள் தான்.
நாம் உண்ணும் உணவாகட்டும், நாம் சொப்பிங் செய்யும் சொப்பிங் காம்ப்ளெக்ஸ் ஆகட்டும் இவை எதுவும் இவர்களின் ஆளுமையை விட்டும் தப்பித்து இருக்கவில்லை.
அமெரிக்காவின் தலைவரும் இவர்களின் ஆள்.
முஸ்லிம்களின் புனித தளங்களின் நிர்வாக தலைவரான , சவூதியின் தலைவரும் இவர்களின் ஆள்தான்.
முஸ்லிம்களின் விடுதலைக்கு போராடும் உசாமா பின் லேடனும் இவர்களின் ஆள்.
கேர்னல் கடாபிக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்கிற 'பத்வாவை' வழங்கிய எங்களது அறிஞர் யூசுப் அல் கண்றாவியும் இவர்களது தயவில் இருக்கும் ஆள்.
எங்களது எல்லா இஸ்லாமிய சர்வா கலாசாலைகளுக்குள்ளும் இவர்கள் ஊடுருவி விட்டார்கள்.
இவர்களுக்கு எதிரான கூட்டம் என்று நாம் கூட்டும் கூட்டத்தில் நாம் பரிமாறும் கோகா கோல வும் இவர்களது பானம் தான்.
நாங்கள் சிக்கி இருக்கும் இவர்களின் இந்த சிக்கலான வலை பின்னலில் இருந்து எப்படித்தான் தப்புவது?
இவர்களின் சூழ்ச்சிகளில் இருந்து தப்புவதற்கு ஒரே வழிதான் இருக்கிறது.
அது என்ன வழி?
இஸ்லாத்தையும், அதன் ஜமாத்தையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். .
அப்படி என்றால், அல் குரானையும், அஹ்லுல் பைத்களையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.
(இன்ஷா அல்லாஹ்) நிச்சயமாக அல்லாஹுத்தாலா எங்களையும் எங்களது குடும்பத்தவர்களையும் இவர்களின் தீங்குகளில் இருந்து காப்பாற்றுவான்.
1 comment:
நல்லவொரு சமுதாயக் கண்ணோட்டப் பதிவுக்கு நன்றி.
நம் மஹ்தி(அலை) வருகைக்கு முன் நிகழும் குழப்பங்களும்,
பிரச்னைகளும் ஆரம்பமாகி விட்டதாகத்தான் தோன்றுகிறது.
Post a Comment