"நபிகளார் முன் அறிவித்த "தஜ்ஜாலின் தலைமைத்துவ" வரலாறு"
நபி (ஸல்) அவர்களின் முதலாவதும் இறுதியுமான ஹஜ்ஜதுல் விதாவில் சுமார் ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் மக்கள் கலந்துக் கொண்டதாக வரலாற்றில் பதிவாகி உள்ளது.
மக்காவில் நபி (ஸல்) அவர்கள் பட்ட இன்னல்களுக்கு மதீனாவில் முடிவு கண்டாகி விட்டது.
இஸ்லாமிய பேரரசும் உருவாகி விட்டது.
கலிமா, தொழுகை, நோன்பு, ஸகாத் உள்ளிட்ட அனைத்து சட்ட திட்டங்களும் வகுத்து, அவற்றை எப்படி நடைமுறைப் படுத்த வேண்டும் என்றும் செய்து காட்டியுமாகிவிட்டது.
இனி ஒன்றே ஒன்றுதான் பாக்கி.
எப்படி ஹஜ் கடமையை செய்வது?
ஹஜ் சொல்லும் கதைதான் என்ன?
கி.மு.ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உலகில் மிகப் பிரமாண்டமான ஒரு நாகரிகம் இருந்து வந்தது.
அதர்மமும்,அடிமைத்தனமும் , அநீதியும், அடக்குமுறைகளும் நிறைந்திருந்த அந்த நாகரிகத்தின் பெயர் "மெசொபோதேமியன்" நாகரிகம்.
அடக்கி ஒடுக்கப் பட்ட மக்கள் எல்லோரும் தங்களை இத்தகைய கொடிய அடக்கு முறைகளில் இருந்து இரட்சிக்க ஒருவர் வர மாட்டாரா? என ஏங்கித் தவித்துக் கொண்டு இருந்த போது அவர்களின் மீட்சிக்கு அல்லாஹ் ஒருவரை அனுப்பினான்.
இறைவனின் இறைமைக்கு எதிராக உலக மக்களை அரசாட்சி செய்த அந்த நாகரிகத்துக்கு எதிராக எழுந்து நின்றவர்தான் மக்களின் "இமாம்" இப்ராஹீம் (அலை) அவர்கள்.
அவர் கொண்டு வந்த மார்க்கம் தான் இறைவனின் நீதியும், தர்மமும் முழுமையாக நிறைந்து இருந்த இறைவனின் ஏகத்துவ மார்க்கமாகும்.
அவர் காலத்தில் இறைவனின் ஏகத்துவ மார்க்கம் சிறந்த முறையில் நிலை நிறுத்தப் பட்டது.
மனித மனத்தின் உள்ளே புதைந்துள்ள சாத்தானிய ஆசைகளின் விளைவால் அவர் கொண்டு வந்த மார்க்கத்தின் புரோகிதர்கள் நாளடைவில் அந்த தூய மார்கத்தை இறைவனுக்கு எதிரான மார்க்கமாக மாற்றிக் கொண்டார்கள்.
இறைவனின் நீதி மனித குலத்தை ஆட்சி செய்வதை விரும்பாத சைத்தானிய சக்திகளின் இந்த செயற்பாட்டினால் மனிதன் தானே வகுத்த மனித நீதி மனிதனை ஆட்சி செய்யும் முறை மீன்டும் உருவாகத் தொடங்கியது.
மனித சமுகத்தின் மீது அளவற்ற அன்பு கொண்ட அல்லாஹுத்தஆலா இதன் பிறகும் அவனுக்கு எதிராக கலகம் செய்யும் மக்களை திருத்துவதற்கு காலத்துக்கு காலம் நபிமார்களையும், ரசூல் மார்களையும் மக்களில் 'இமாம்களை' மக்களின் தலைவர்களாக அனுப்பி வைத்தான்.
அப்படி வந்தவர்கள் அனைவரும் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தையே மனித குலத்துக்கு மீள ஒரு முறை புதுப்பித்துக் கொடுத்தார்கள்..
அந்த நபிமார்களின் மறைவுடன் மனித சமூகம் மீன்டும் சாத்தானிய புரோகிதர்களால் வழி கெடுக்கப் பட்டது.
இதுதான் மனித குல வரலாறு.
இதற்கு ஒரு முடிவு கட்டப் பட வேண்டும் என்கிற நிலையில் தான் நபி (ஸல்) அவர்கள் இறுதி தூதுவராக வந்து , இப்ராஹீம் (அலை) அவர்கள் நிலை நிறுத்திய அதே ஏகத்துவத்தை மக்கள் மத்தியில் ஸ்தாபித்தார்கள்.
அன்றைய தினம் நபி (ஸல்) அவர்கள் இறைவனின் இறமைக்கு எதிராக மீன்டும் ஒரு முறை உலகை ஆளும் ஒரு தலைமத்துவத்தைப் பற்றி முன்னறிவித்தார்கள்.
இந்த ஹதீத் புஹாரி ஹதீத் கிரந்தத்தில் இப்படி பதிவாகி உள்ளது.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது;
நாங்கள் நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே இருக்க, ஹஜ்ஜதுல் வதாவைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தோம்.
ஹஜ்ஜதுல் வதா என்பதன் கருத்து என்னவென்று எமக்குத் தெரியாது.
இந்நிலையில், நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றி "அல் மஷீஹுத் தஜ்ஜாலைப்" பற்றி கூறத் தொடங்கி, நீண்ட நேரம் அவனைப் பற்றியே சொன்னார்கள்.
அப்போது "அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத் தூதரும் அவனைப் பற்றி தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்தது இல்லை.
நுஹ் (அலை) அவர்கள் அவனைப் பற்றி எச்சரித்தார்கள். .
அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத் தூதர்களும் அவனைப் பற்றி எச்சரித்தார்கள்.
மேலும் உங்களிடையேதான் அவன் தோன்றுவான். அவனது தன்மைகளில் ஏதேனும் சில உங்களுக்குப் புலப் படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் எனபது உங்களுக்கு நன்றாகவே தெரியும்"-
இதை மூன்று முறை கூறினார்கள்.
பிறகு, "உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ வலது கண் குருடானவன். அவனது கண் துருத்திக் கொண்டு இருக்கும் திராட்சைப் போன்றிருக்கும்" என்றார்கள்.
"அறிந்து கொள்ளுங்கள். உங்களது இந்த நகரத்தில், உங்களது இந்த மாதத்தில் உங்களது இந்த நாள் எப்படிப் புனிதமானதாக இருக்கின்றதோ அவ்வாறே அல்லாஹ் உங்களுக்கு உங்கள் இரத்தங்களையும், உங்கள் செல்வங்களையும் புனிதமானவையாக ஆக்கியுள்ளான்." என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லிவிட்டு, "நான் (இறைச் செய்தியை )உங்களிடம் சேர்த்து விட்டேனா?" என்று மக்களிடம் கேட்டார்கள்.
மக்கள் "ஆம்" என்று பதில் சொன்னார்கள்.
நபி (ஸல்) அவர்கள் "இறைவா! நீ சாட்சியாக இரு" என்று மும்முறை கூறிய பிறகு, "உங்களுக்கு என்ன நேரப் போகிறதோ! " அல்லது "அந்தோ பரிதாபமே!" கவனமாக இருங்கள். எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்வதன் மூலம் இறை மறுப்பாளர்களாக நீங்கள் மாறி விடாதீர்கள்" என்று சொன்னார்கள்'
(ஆதாரம்; புஹாரி ஹதீத் --கிரந்தம் ஐந்தாம் பாகம் ஹதீத் இலக்கம் 4402 : 4403 )
நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு தோன்றப் போகின்ற அபாயங்களைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லியாகி விட்டது.
இந்த அபாயங்களில் இருந்து மனித சமுகம் எப்படி தப்புவது?
மனித சமுகம் எதிர் கொள்ளப் போகின்ற இந்த அபாயங்களில் இருந்து தப்புவதற்கான வழி முறை தான் என்ன?
ஒவ்வொரு நபிமார்களின் மறைவிற்குப் பிறகு அந்த நபிமார்களின் 'புரோகிதர்கள்' அந்த சமுகத்தை வழி கெடுத்து உள்ளார்கள்.
ஆகவே, இறுதி நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு எம்மை வழி நடாத்த முன் வருகின்ற இந்தப் "புரோகிதர்களை" நம்ப முடியாது? '
அப்படி என்றால் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு எம்மை வழிநடாத்த யாருமே இல்லையா?
பெரும் சிந்தனையுடன் சஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களுடன் மதீனா நோக்கி திரும்புகிறார்கள்.
அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், வரும் வழியில் திடீரென அல்லாஹ்வின் புறத்தில் இருந்து "வஹி" அருளப்படுகிறது.
""தூதரே! உம் இறைவனிடம் இருந்து உம் மீது இறக்கப் பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்;(இவ்வாறு) நீர் செய்யாவிட்டால் அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராக மாட்டீர்; அல்லாஹ் உம்மை மனிதர்களி ( ன் தீங்கில் ) லிருந்து காப்பாற்றுவான்; நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர் வழியில் செலுத்த மாட்டான்." ( அல் குரான் 5 : 67 )
இஸ்லாமிய கடமைகள் யாவும் முற்று முழுதாக கடமை ஆக்கப் பட்டதன் பிறகு, இது என்ன புதிதாக ஒரு செய்தி அருளப்படுகிறது/
அருளப் பட்ட ஆயத்தின் படி நபி (ஸல்) அவர்கள் சொல்லுகின்ற இந்த செய்தி தான் இறைவனின் துதை முழுமைப் படுத்தப் போகிறது?
மனிதர்களுக்கு தயங்கித்தான் இதை இன்னும் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவிக்கவில்லை.?
அத்தகைய மக்களை அலட்சியப் படுத்தி விட்டு அந்த இறை செய்தியை ஏனைய மக்களுக்கு அறிவிக்குமாறு "வஹி" அருளப்பட்டு விட்டது.
அது என்ன செய்தி?
மக்களை வழி கெடுக்கும் தஜ்ஜாலின் தலைமைத்துவத்துக்கு எதிரான "இஸ்லாமிய தலைமைத்துவம்" பற்றிய செய்தி சொல்லப் படப் போகிறது.
அது என்ன?
No comments:
Post a Comment