படிகள் படிப்பினைகள்- ஒன்று.
இரவு 'டிஸ்கவரி' சேனலில் ஒரு காட்சி.
ஒட்டக சிவிங்க்யைப் பற்றிய ஒரு விவரணசித்திரம்.
தாய் ஒட்டகசிவிங்கி நின்றபடியே ஒரு குட்டியை ஈன்றது.
அதனது குட்டி தாயின் வயிறு என்ற பாதுகாப்பில் இருந்து தரையில் தடாலென வீழ்ந்தது.
அது மிகவும் கஷ்டப்பட்டு தரையில் அமர்ந்த காட்சி பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது.
அதனது தாய் செய்த முதல் வேலையைப் பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது.
கஷ்டப்பட்டு தரையில் அமர்ந்த குட்டியின் பின்னால் வந்த அதனது தாய் தனது குட்டியை எட்டி உதைத்தது.
உடனே அந்த குட்டி எழுந்தது. நிற்க முடியாமல் வெல வெல என நடுங்கியது.என்றாலும் அதனது கால்கள் வலிமை இல்லாத காரணத்தால் தடுமாறி மீன்டும் அமர்ந்தது.
அதனது தாய் மீன்டும் தனது குட்டியின் பின்னால் வந்து ஒரு உதை கொடுத்தது.
தடுமாறி எழுந்த குட்டி வெலவெலத்தபடி மீன்டும் அமர்ந்தது.
தாய் உதைப்பதும் குட்டி எழுந்து நிற்க முடியாமல் அமர்வதும் தொடர்ந்து கொண்டே இருந்தது.
ஒரு கட்டத்தில் அந்த குட்டி எழுந்து தன்னை சுதாகரித்துக் கொண்டு தனது காலில் நிற்க தொடங்கியது.
ஆரம்பத்தில் கல் நெஞ்சுடைய தாயார் போல அதன் தாய் தெரிதாலும், அது ஏன் குட்டியை மீன்டும் மீன்டும் உதைத்தது எனபது இப்பொழுது புரிந்தது.
ஏன்? என்றால் அந்தக் குட்டிக்கு அந்தக் காட்டில் உயிர் வாழத் தேவையான ஒரே வாய்ப்பு அதனது கால்களில் நிற்பதே என்று அந்தத் தாய்க்குத் தெரியும். இல்லாவிட்டால் காட்டில் இருக்கும் அதன் எதிரிகள் அவற்றை கொன்று தின்று விடும்.
தாய் தனது குட்டியை உதைத்தது தாய் அன்பின் செயல் தான் எனபது இப்பொழுது புரிந்தது.
இயற்கையில் இருந்து நாம் கற்றுக் கொள்வதற்கு நிறையவே பாடங்கள் இருக்கின்றன.
சுதந்திரம் என்பதற்காக செய்கின்ற செய்கை எல்லாம் சுதந்திரமும் இல்லை. விளைவுகளைப் பற்றி எண்ணாத செயல்களுக்குப் பெயர் சுதந்தரமும் இல்லை.
கட்டுப் பாடான ஒரு சுதந்திரம் அந்தக் குட்டிக்கு வழங்கப் படுகிறது.
கட்டுப் பாடு எனபது ஒருவர் தனது குழந்தைகளை பிரம்பால் அடிப்பது என்பதல்ல. அது ஒரு வகையான பைத்தியக்காரத்தனம்.
கட்டுப்பாடு எனபது அன்போடு கூடிய உறுதிப்பாட்டை குறிக்கும்.
இது சரியான வழிகாட்டியாகும்.ஒரு பிரச்சினை வருவதற்கு முன் தடுப்பதாகும்.பெரிய செயல்களை செய்வதற்கு சக்தியை ஒரு முகப் படுத்துவதாகும்.
கட்டுப்பாடு எனபது நீங்கள் அக்கறை கொண்டுள்ளவர்கள் மீது பிரயோகிக்கும் தடை அல்ல.மாறாக, அவர்களின் நன்மைக்காக செய்யும் செயலாகும்.
No comments:
Post a Comment