"என்னைப் போன்று வாழ்ந்து என் வழியிலேயே மரணிக்க விரும்பும் ஒருவருக்கு"
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: "என்னைப் போன்று வாழ்ந்து என் வழியிலேயே மரணித்து மறுமையில் சுவனத்தை அடைய விரும்பும் ஒருவர் அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய செய்தி யாதெனில், அத்தகைய ஒருவர் அலியை ஏற்று அவரை ஆதரிப்பவராக இருந்து அஹ்லுல் பைத்களான எனது குடும்பத்தவர்களை எனக்குப் பின்னால் பற்றிப் பிடித்துக் கொள்ளவும்.
" அஹ்லுல் பைத்தினர் எனது குடும்பத்தினராவர். அவர்கள் என்னில் இருந்தும் உள்ளவர்களாவர். எனக்கு இருக்கும் அதே அறிவும், இறைவனைப் பற்றிய விளக்கமும் தெளிவும் அவர்களுக்கும் வழங்கப் பட்டுள்ளது.
"எனது உம்மத்தில் யாரெல்லாம் எனது அஹ்லுல்பைத்களை எதிர்க்கிறார்களோ - அவர்களுக்கு கேடுதான். அஹ்ளுல்பைத்களின் உயர்வுகளையும், முக்கியத் துவங்களையும் மறுத்து அவர்களுக்கு உரிய கௌரவத்தை கொடுக்கதவர்களுக்கு கேடுதான்.
"அல்லாஹுத்தாலா அத்தகையவர்களை எனது ஷபாஅத்தை விட்டும் தூரமாக்கி அப்புறப் படுத்தி விடுவான்."
ஆதாரம்; அல் இஷாபாஹ் - இப்னு ஹாஜர் (ரஹ் ).
அல் முவத்தா.- இமாம் மாலிக் (ரஹ்)
கன்சுல் உம்மால்
இந்த பிரபலமான இமாம்களுடன் இணைநது இன்னும் பல இமாம்கள் இந்த ஹதீதை தங்களது ஹதீத் கிரந்தங்களில் பதிவு செய்துள்ளார்கள்.
என்றாலும், இந்த அறிவிப்பை ஷஹீஹுஸ் ஷித்தாக்களில் முதன்மையான புஹாரி கிரந்தத்தில் காணமுடியவில்லை.
ஆனால், இந்த அறிவிப் பிற்குப் பதிலாக மிகவும் நுணுக்கமான செயல் முறை ஒன்றை இமாம் புகாரி தனது ஹதீத் கிரந்தத்தில் செயற்ப் படுத்தி இருப்பது அபாரமானது.
மிகவும் புத்திசாலித்தனமானது.
'இப்னு யாலா அல் முகாரிபி' என்பவர் இந்த ஹதீதின் அறிவிப்பளராவார்.
இவர் ஹதீத் அறிவிப்பாளர்களில் மிகவும் நம்பிக்கையானவர். இந்த அறிவிப்பாளரின் பல அறிவிப்புகளை இமாம் புஹாரி தனது ஹதீத் கிரந்தத்தில் எதுவித தயக்கமும் இன்றி பதிவு செய்துள்ளார்.
புஹாரி ஹதீத் கிரந்தம் பாகம் மூன்றில் ஹுதைபியா சம்பவம் பற்றிய பதிவுகளில் இந்த அறிவிப்பாளரின் பல ஹதீத்களை இமாம் புஹாரி பதிவு செய்துள்ளார்.
என்றாலும், இமாம் புஹாரி தனது கிரந்தத்தில் அஹ்ளுல்பைத்களின் முக்கியத் துவத்தை மிகவும் அப்பட்டமாக சொல்லும் இந்த ஹதீதை பதிவு செய்வதில் நின்றும் தவிர்ந்து கொண்டார்.
இதற்கு அவரை குற்றம் சொல்ல முடியாது.
சில சமயம் அவ்வாறு அவர் பதிவு செய்திருந்தால் அப் பதிவின் காரணமாகவே அவரது கிரந்தம் ஷஹீஹுஸ் ஷித்தாக்களில் இருந்தும் அகற்றப் படும் நிலைக்கு ஆளாகி இருக்கும்.
அஹ்ளுல்பைத்களுக்கு ஆதரவாக இருக்கின்ற அனைத்து கிரந்தங்களும் அக்கால ஆட்சியாளர்களினால் ஆதார பூர்வமானதாக ஏற்றுக் கொள்ளப் படாமல் வந்திருப்பது வரலாறு.
ஆனால், இமாம் புஹாரி இந்த ஹதீத் அறிவிப்பாளரின் நம்பகத் தன்மைக்கு மிக உறுதியாக சான்று பகன்றார்.
இத்தகைய நட்ச் சான்றின் மூலம் அவர் எமக்கு இந்த ஹதீதை ஆதாரபூர்வமான தரத்துக்கு உரியதாக மறை முகமாக உணர்த்தியுள்ளார்.
நடு நிலையாக நின்று ஆராய்கின்ற ஒருவருக்கு இமாம் புஹாரியின் இந்த நுணுக்கம் பிரமிப்பை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இமாம் புஹாரியின் இந்த செயல் முறை அவர் தலையில் சூட்டப் பட்ட இன்னுமொரு மயில் இறகாகும்.
No comments:
Post a Comment