எங்களது இமாம் இப்ராஹீம் (அலை) உடைய நிஜமான போராட்டம் என்ன?
எங்கள் தளத்துக்கு விஜயம் செய்த எமது நண்பர் ஒருவர் தொலைபேசியில் எம்மை தொடர்பு கொண்டார்.
"இப்ராஹீம் (அலை) பற்றி புதிதாக சொல்லி இருக்கிறீர்களே?" என்றார்.
"நாம் புதிதாக ஒன்றும் சொல்லவில்லையே? "என்றோம்.
"சிலை வணக்கத்துக்கு எதிரான அவரது போராட்டத்தை 'அடிமை விடுதலை' என்று மட்டுப் படுத்தி இருக்கிறீர்களே?" என்றார்.
அவர் சொன்ன சொல் எம்மை கொஞ்சம் சிந்திக்க வைத்தது.
எங்களது இமாம் இப்ராகிம் (அலை) எதற்கு எதிராக போராடினார்?
அவருக்கு வழங்கப் பட்ட இறை கட்டளைகள் தான் என்ன?
நாம் சொல்லுவது போல் அடிமை விடுதலையா? அல்லது எமது நண்பர் சொல்லுவது போல சிலை வணக்கத்துக்கு எதிரான போராட்டமா?
உடனே நாம் நாம் அறிந்த எங்களது சில மார்க்க அறிஞர்களை தொடர்பு கொண்டோம்.
"இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு வழங்கப் பட்ட இறைக் கட்டளைகள் என்ன?" என்று கேட்டோம்.
சிலர் தங்களை சுதாகரித்துக் கொண்டு "கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்" என்றார்கள்
ஒருவர் மட்டும் "அவை 'கலிமாத்துக்கள்' என்று சொல்லப் படும். இரண்டு நாள் டைம் தாருங்கள். நான் சொல்கிறேன்" என்றார்.
நீங்களும் இதைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த அறிஞர்களிடம் விசாரியுங்கள்.
வெகு விரைவில் சரியான தகவல்களுடன் உங்களை சந்திக்கிறோம்.
No comments:
Post a Comment