'சலசலப்பை' கையில் எடுத்து 'பணியாரத்தை' கோட்டை விட்ட -இலங்கை வானொலி முஸ்லிம் சேவை. ..............................???
கிழக்கிலங்கையில் பொது சனம் அடிகடி உபயோகிக்கும் ஒரு 'பழ மொழி' இது.
அவர்கள் சொல்லுவார்கள்"எமக்கு சலல்சலப்பு தேவை இல்லை. பணியாரம்தான் வேண்டும்" என்று.
பணியாரம் எனபது எண்ணையில் பொறிக்கப் படும் ஒரு வகையான இனிப்பு பண்டம்.
கொதிக்கின்ற எண்ணையில் இதனை ஊற்றும் பொழுது 'சல சல வென' சல சலப்புகள் தோன்றும்.
இந்த சலசலப்புகள் கொஞ்சம் சத்தமாக சத்தமிடும்.
ஆனால், பணியாரம் அமைதியாக இந்த சல சலப்புகளின் பின்னால் ஒளிந்து இருந்து வெளிவரும்.
சலசலப்பு வெறும் எண்ணைதான்.
அதனால் ஒரு பிரயோசனமும் இல்லை. அதனை கையில் எடுத்தால் கைதான் வெந்து போகும்.
ஆனால், பணியாரம் முக்கியமான பணியாரம் அப்படியல்ல. .
இன்று இலங்கை வானொலி முஸ்லிம் சேவை இந்த சல சலப்பை கையில் எடுத்துக் கொண்டு பணியாரத்தை கோட்டை விட்டு விட்டது.
எப்படி என்கிறீர்களா?
இலங்கையில்,முஸ்லிம் மாதர்கள் மத்தியில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றது.
அகமதுவுடன் சேர்ந்த முனவ்வர் என்கிற கோடரிக் காம்பு முஸ்லிம்களுக்கு இலவசமாக கிடைத்த முஸ்லிம் வானொலி அஞ்சல் நிகழ்ச்சிகளை பணமாக மாற்றும் கைங்கரியத்தை தனது 'வானொலி எஜமானர்களுக்கு' படித்துக் கொடுத்தது.
இதன் மூலம் புனித ஹஜ் உம்ரா யாத்திரையை அற்புதமான சுற்றுலா பயணமாக மாற்றிய பெருமை இலங்கை வானொலி முஸ்லிம் சேவைக்கு கிடைக்கும்.
வானொலியைத் திருகினால்......எல்லாம் ஹஜ் மயம்.
இப்பொழுது ஹஜ்ஜுடன்........எல்லாம் கல்வி மயம்.
இன்னும் சில நாள்கள் சென்றால் இலவசமான அஞ்சலாக இலங்கை முஸ்லிம்களுக்கு கிடைத்து இருக்கும் பெரிய உரிமையான 'அதான் ஒலிபரப்பையும் அனுசரனையாலர்களைக் கொண்டு அலங்கரிக்கும் பணியில் இந்த கோடரிக் காம்புகள் ஈடுபடலாம்.
அதன்படி அஹ்மதுவின் ஆதரவாளர்களின் அனுசரணையில் அல்லாஹு அக்பர்... அல்லாஹு அக்பரும்........
ரீசாவின் ஆதரவாளர்களின் அனுசரணையில் அஷ்ஹது அல்லா இலாஹா இல்லலாஹ்வும்........
ஹனிபாவுடைய ஆதரவாளர்களின் அனுசரணையில் அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூளுல்லாவும் ................................
ஹசனுடைய ஆதரவாளர்களின் அனுசரணையில் அதானுடைய ஏனைய வசனங்களும் அஞ்சல் செய்யப் படும் அபாக்கியமான காலம் வெகு சீக்கிரத்தில் வரலாம்.
இப்பொழுது வானொலியில் ஒவ்வொரு பதினைந்து நிமிடத்துக்கு ஒருமுறை , சரியாக டி.வீ. மெகா சீரியல்கள் போல பிரபலமான பல உலமாக்கள் வெட்கம் கெட்டு தமது இஸ்லாமிய பிரச்சாரங்களை துண்டு துண்டாக விற்கத் தொடங்கி விட்டார்கள்.
வெட்கம் கெட்ட ரோஷக்கார உலமாக்கள்"நாங்கள் எங்கே விற்றோம்...?" என்று சாரத்தை மடித்து கட்டிக் கொண்டு அவர்களது கொழுத்த கால்களைக் காட்டிக் கொண்டு எம்மிடம் கேட்க வருவது எமக்கு புரிகிறது.
நாம் இங்கே நீங்கள் உங்கள் பொன்னான பயான்களை காசுக்கு விற்ற கதையைக் கூறவில்லை.
ஆனால், 'புகழ்' அல்லது 'பிரபலம்' என்கிற இடத்தை அடைந்து அதன் மூலம் அந்த பிரபலத்தை பணமாக அடைய வேண்டிய முகஸ்துதிக்கு விற்ற கதையைத்தான் சொல்கிறோம்.
உங்களது துண்டு துண்டு பயான்களைக் கேட்கும் பொழுது எவ்வளவு தலை வலி தெரியுமா?
அண்மையில் மகரூப் என்கிற பெயர் வரக் கூடிய ஒரு அறிவிப்பாளர் நபி (ஸல்) அவர்களின் மீது 'சமீ யூசுபின்' அழகான குரல் வளத்தில் ஒலிக்கின்ற சலவாத்தை ஒரு அனுசரணையாளரின் வியாபாரப் பெயரைக் கூறும் கட்டத்தில் பின்னணி இசையாக ஒலிக்கச் செய்து எங்களை நோவித்தார்.
சைத்தானின் அடியாளர்களுக்கு இந்த உலகம் அவர்களது சுவர்க்கம் அல்லவா?
அல்லாஹ்வின் பெயரால் இலவசமாக முஸ்லிம்களுக்கு கிடைத்த அஞ்சல் நிகழ்ச்சியை விற்றுப் பிழைத்த அகமதுவும் முனவ்வருமான நபர்கள் வெறும் நாற்பதாயிரம் ரூபாய்களையாவது சேர்த்து இருப்பார்களா என்றால் அது சந்தேகமே.
பிரபலம் என்கிற சல சலப்பயைக் கையில் எடுத்து அல்லாஹ்வின் திருப்தியை கோட்டை விட்ட இந்தக் கூட்டத்துக்கு அவர்களது மரணத்துக்கு முன்னரேயே இதற்கான தண்டனையை அல்லாஹ் கொடுப்பானாக என்று அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திப்போமாக!.
No comments:
Post a Comment