அஹ்லுல்பைத் Headline Animator

Monday, February 28, 2011

மறுமையில் மக்களின் தலைவர்...!


மறுமையில் மக்களின் தலைவர்...!

நபி (ஸல்) அவர்களின் பெற்றோரை நரகத்துக்கு அனுப்பிக் கொண்டு இருக்கும் அறிவியல் உலமாக்கள்  தங்களது வாதத்துக்கு ஆதாரமாக  முஸ்லிம் ஹதீத் கிரந்தத்தில் உள்ள இரண்டு ஹதீத்களை சுன்னத் வல் ஜமாத்தினர் முன் சமர்பிக்கிறார்கள். 

அப்படியென்றால் இந்த ஹதீதுக்கு அவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

முஸ்லிமில் பதிவாகியுள்ள இந்த ஹதீதை கவனியுங்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்;

"மறுமை நாளில் ஆதமின் மக்கள் அனைவருக்கும் தலைவன் நானே.

முதன் முதலில் மண்ணறை  பிளந்து எழுபவனும் நானே.

முதன் முதலில் பரிந்துரை செய்பவனும் நானே.

முதன் முதலில் பரிந்துரை ஏற்கப் படுபவனும் நானே."

ஹசரத் அபூ ஹுரைரா (ரலி)  இந்த ஹதீதை அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம்;  முஸ்லிம்  ஹதீத் கிரந்தம் பாகம் நான்கில் 4574 வது ஹதீத்)

மறுமை நாளில் மக்கள் அனைவரின் தலைவரும், முதன்மையாக ஏற்கப் படும் பரிந்துரை செய்பவரில் முதன்மையானவருமான ஒரு தலைவரின் பெற்றோர் அன்றைய தினம் நரகத்துக்கு இழுத்துச் சென்று எறியப் படுகிறார்களாம்.

மறுமையில் சுவனவாசிகளின் தலைவரின் தாயும், தந்தையும் நரகத்தில்......?

நம்பி ஏற்றுக் கொள்ள முயுமா?

சாதாரண பாமரன் கூட விளங்கிக் கொள்ளும் முறையில் அமைந்த இந்த ஹதீத் உங்களுக்கு தெளிவைக் கொடுக்கும் என்று நம்புகிறோம். 

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தை மட்டுமல்ல, நபி (ஸல்) அவர்களின் பெற்றோரும், அவரை போசித்து பரிபாலித்த அவரது பெரிய தந்தை அபு தாலிப் அவர்களும் , இன்னும் யார் யாரெல்லாம் நபி (ஸல்) அவர்களின் அன்புக்கும் அருளுக்கும் ஆகரிணிக்கப் படுகிறார்களோ  அவர்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரையில் சுவனம் செல்வார்கள் எனபது இந்த ஹதீதில்  இருந்து உங்களுக்கு விளங்கியிருக்கும்.

2 comments:

Aflal Faleel said...

Assalamualikum!
eslathti patriya enthawiza ariwum ellamal tham sholwazu shari enru shilar web site kali creat panne matrawarhlai wemarshikkerarhal. nan koorum widayam ennawaenral islamthinay pooranam wilangathwarhal eppadi usthad marhalukku theetruwazu koodatha widayam azillum neengal awarhalai thootri wittu awarhalukku usthad endru kuruhereerhale..... ya Allah ewarhalukku ariwai puhattuwayaha Ahlulbaith ennum peyarukke artham ellatha walaiyyai sheithulleerhal... Yaa Allah ewarhali manneppayaha.. adakki washikkappatta arsheyal enru koori wera ennawoo shezuwaiththullerhal. karanam ethil ahlul baith eru thalaippai ettu athil adkkewashikkappatta arashiyal enru pottulleerhal.. eppadiyana thawaruhali sheywazanai thiruththikkollawum..jazkallahukhairah...

அஹ்லுல்பைத் said...

aflaal faleel அவர்களுக்கு நன்றி.

நீங்கள் எங்களுக்காக கேட்ட பிரார்த்தனை எங்களது இதயத்தை தொட்டது.

உஸ்தாத்மார்களுடன் எங்களுக்கு தனிப்பட்ட முறையில் எதுவிதமான கோபமும் இல்லை.

எங்களால் அவர்களது தவறான கருத்துக்களுடனும், அந்தக் கருத்துக்களை மக்கள் மயப் படுத்துவதன் மூலம் எங்களது சமூகத்தின் இளைஞர்களை தவறான வழியில் இட்டு செல்வத்தையும் தான் அனுமதிக்க முடியாமல் இருக்கிறது.

நபி (ஸல்) அவர்களின் பெற்றோரை நரகத்துக்கு அனுப்புவதன் மூலம் இந்த உஸ்தாத் மார்கள் எதிர்பார்க் கின்ற சமூக மாற்றங்கள்தாம் என்ன?

அவர்கள் பதில் சொல்லட்டுமே!

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad