அஹ்லுல்பைத் Headline Animator

Monday, January 31, 2011

எம்மைக் காப்பாற்ற நங்கூரம் தரித்து இருக்கின்ற நபி நுஹு (அலை) உடைய கப்பல்
எம்மைக் காப்பாற்ற நங்கூரம் தரித்து இருக்கின்ற நபி நுஹு (அலை) உடைய கப்பல்

நபி (ஸல்) அவர்கள் தனது குடும்பத்தவர்களான 'அஹ்லுல்பைத்'களைப்    பற்றிக் குறிப்பிடும் பொழுது இப்படி சொல்லி இருக்கிறார்கள்.

"என்னுடைய அஹ்ளுல்பைத்களின் உதாரணம் நுஹ் (அலை) உடைய கப்பலைப் போன்றதாகும். அக் கப்பலினுள் யார் யார்  எல்லாம் ஏறினார்களோ அவர்கள் அனைவரும் காப்பாற்றப் பட்டார்கள்.

யார் யார் எல்லாம்ஏறுவதற்கு மறுத்தார்களோ அவர்கள் அனைவரும் எல்லாவற்றையும் இழந்த நிலையில் முழ்கடிக்கப் பட்டார்கள்."  

ஆதாரம்: "துர்ருள் மன்சூர்" - இமாம் ஷுயுத்தி  
                   "யா நபி அல் முஅத்தா " - இமாம் சுலைமான் பால்கி ஹனபி
                  "ஷவாய்க்குல் முஹ்ரிகா" - இமாம் இப்னு ஹாஜர் மக்கி  

இது தவிர சுமார் நுற்றுக்கு மேற்பட்ட இமாம்களால் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப் பட்ட நபி மொழி இதுவாகும்.Sunday, January 9, 2011

வெள்ளி தோறும் தவறும் ஒரு பொன்னான தருணம்
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு -


ஒரு வௌ்ளிக் கிழமை!


ஜும்ஆ தொழுகைக்கு கொள்ளுப்பிட்டி பள்ளி வாசலுக்கு சென்றிருந்தேன்.


அன்று


மிகவும் அற்புதமான ஒரு பிரசங்கம்.


முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றிய, அவரது தனித்தன்மை, முக்கியத்துவங்கள் என்பவற்றை தெளிவாக விளக்குகின்ற அற்புதமான பிரசங்கம்.


அதைப் போன்றதொரு பிரசங்கத்தை நான் இன்றுவரை கேட்டது இல்லை.


ஜும்ஆவுக்கு வந்திருந்த மக்கள் அனைவரும் வாய் பிளந்து, விழி பிதுங்கி ஆடாமல் அசையாமல் அந்த பிரசங்கத்தில் லயித்து போய் இருந்தார;கள்.


நானும் கூடத்தான்.


பிரசங்கத்தில் சில கட்டங்களில் மக்கள் முகத்தில் மலர்ச்சி! சில கட்டங்களில் அதிர;ச்சி! சில கட்டங்களில் கண்களில் கண்ணீர் என்று எங்களை பலவகையான உணர்வுகளில் அலைக்கழித்தார் அந்தப் பிரச்சாகரிர். அந்தப் பிரச்சாகரின் முகத்தில் அற்புதமான ஒரு ஒளி வீசியது.

Monday, January 3, 2011

Lawrence of Arabia vs International Kuds Day

Lawrence of Arabia vs International Kuds Day

03.09.2010  சர்;வதேச ‘குத்ஸ்’ தினம்!

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன மக்களின் துயரங்களை ஒரு கணம் நினைவுப்படுத்தி முஸ்லீம் சமூகத்தை கபளீகரம் செய்ய காத்திருக்கும் மிக அபாயகரமான தருணத்தை தவிர;ந்து கொள்ள எம்மை உசார;ப்படுத்துகின்ற ஒரு முக்கிய தினம்.

சென்ற வாரங்களில் ‘பத்ர் யுத்தத்தின் அபார வெற்றியைப் பற்றி வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் பள்ளிவாசல் குத்பா மேடைகளிலும் நாம் நிறையவே கேட்டு கேட்டு அகமகிழ்ந்து போனோம்.

அந்த வெற்றிப் புழங்காகிதத்தில் எம்மை சூழ்ந்துள்ள சூழ்ச்சிகளின் பயங்கரத்தை உணர;ந்து கொள்ள தவறியும் போனோம்.

சென்ற ஞாயிறு மாலை ‘பிரைம் டீவி’யில் கார;ட்டூனை எதிர்பார்த்து அமர்;ந்திருந்த எனது மகள் என்னிடம் ஓடோடி வந்தாள்.

“வாப்பா………. வாப்பா………. டீ.வியில் ஒரு அராபிய படம் போகிறது வந்து பாருங்கள்” என்றாள்.

ஒரு கணம் துணுக்குற்ற நான் விரைந்து சென்று அது என்ன படம் என்று பார;த்தேன்.

ஓளிபரப்பப்பட்ட திரைப்படத்தை பார்;த்து எம்மை ஆக்கிரமித்துள்ள அபாயத்தின் பயங்கரத்தை உணர்ந்து வெலவெலத்துப் போனேன்.


அது “லோரன்ஸ் ஒவ் அரேபியா”என்கிற திரைப்படம்

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad