அஹ்லுல்பைத் Headline Animator

Saturday, November 30, 2013


சாத்தானிய குறியீடுகள்...... பாகம் ஒன்று Thursday, October 3, 2013

தவறாகப் புரிந்துக் கொள்ளப் பட்ட இமாம்......!!! உலமாக்கள் உணர மறுக்கும் உண்மைகள்??? இறுதி அத்தியாம்

தவறாகப் புரிந்துக் கொள்ளப் பட்ட இமாம்......!!! உலமாக்கள் உணர மறுக்கும் உண்மைகள்???

இறுதி அத்தியாம்மன்சூருடையக் காலத்தில் நிப்சிஸ் சக்கியாவையும்அவரது சகோதரர் இப்ராஹிமையும் காட்டிக் கொடுக்காத காரணத்துக்காக கலீபா மன்சூர் இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி அவர்களது சந்ததியினர் அனைவரையும் கைது செய்தார்.

அவர்களுடைய அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்தார்.

கைதுசெய்யப்பட்ட அவர்கள்அனைவரினதும்  கைகளில்,கால்களில்,கழுத்துகளில் சங்கிலிகளைக் கொண்டு விலங்குகளை மாட்டி மதீனாவில் இருந்து ஈராக் கொண்டு சென்று சிறை வைக்கப் பட்டனர்.

சிறைச்சாலைகளில் அவர்கள்மீது சொல்லொனாக்கொடுமைகள் கட்டவிழ்த்து விடப் பட்டன.

Friday, September 27, 2013

(5) தவறாகப் புரிந்துக் கொள்ளப் பட்ட இமாம்.......!!உலமாக்கள் உணர மறுக்கும் உண்மைகள்.....????


(5) தவறாகப் புரிந்துக் கொள்ளப் பட்ட இமாம்.......!!உலமாக்கள் உணர மறுக்கும் உண்மைகள்.....???? 
அத்தியாயம் ஐந்து நபிக் குடும்பத்துக்கு எதிராக கர்பலாவில் இருந்து பகிரங்கமாக துவக்கப் பட்ட இத்தகைய கொடூரமான செயல்களின் செயல் விளைவுகள் உலக முஸ்லிம்களை நபிக் குடும்பத்துக்கு தமது பூரணமான ஆதரவை வழங்கும் நிலைக்கு ஆளாக்கியது.

இவ்வாறான ஆதரவின் முழுமையான பங்கினை உலகின் பல பாகங்களுக்கும் அகதிகளாக சென்றிருந்த அப்பாஸியகுடும்பத்தினர் மிகவும் சூட்சுமமாக  தமக்கேற்றவாறு மாற்றியமைத்துக் கொண்டனர்.

ஏனெனில்,நபிக் குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்களாக இருந்த அப்பாஸிய சந்ததியினரின் தலைமையை மக்கள் எவ்வித எதிர்ப்புமின்றி அங்கீகரித்தனர்.

அவர்களும் நயவஞ்சகத் தனமாக அபூதாலிபின் குடும்பத்துக்கே ஆட்சி அதிகாரம் செல்ல வேண்டும்....அதற்காகத்தான் நாம் போராடுகிறோம்  என்று வாதாடி மக்களின் பூரண ஆதரவை பெற்று எழுச்சி கண்டு வந்தனர்.

இறுதியில் அப்பாசியர்களின் சூட்சுமமான சதியின் மூலம் பனு உமையாக்கள் ஆட்சியில் இருந்து தூக்கியெறியப் படுகிறார்கள்.

அபூதாலிபின் மக்களுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்குவோம் என்று சொல்லி புரட்சியில் வெற்றி பெற்ற அப்பாசியர்கள் நபிக் குடும்பத்தை அலட்சியப் படுத்தி விட்டு ஆட்சியை பலவந்தமாக அபகரித்துக் கொள்கிறார்கள்.

Friday, September 20, 2013

04- தவறாகப் புரிந்துக் கொள்ளப் பட்ட இமாம்........!!! உலமாக்கள் உணர மறுக்கும் உண்மைகள்???- (4)அத்தியாயம் நான்கு....கர்பலா கொலைக் களத்தில் இமாம் ஹுசைன் ஸலாமுன் அலைஹி அவர்களும் அவர்களது குடுபத்தவர்கள் அனைவரும் கொடூரமாக படு கொலை செய்யப் பட்டதன் பின்னர் உமையாக்களின் அராஜகங்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் மக்கள் அவர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து புரட்சி செய்யத் துவங்குகிறார்கள்.

இதில் நபிக் குடும்பத்தவர்கள் உமையாக்களினால் நேரடியாக பாதிக்கப் பட்டிருந்தக் காரணத்தினால் மக்களின் பேராதரவு நபிக் குடும்பத்தின் அங்கத்தவர்கள் மீதிருந்தது உண்மையே.

இமாம் ஹுசைன் ஸலாமுன் அலைஹி அவர்களது மகன் இமாம் ஜைனுல் ஆப்தீன் ஸலாமுன் அலைஹி அவர்களுக்கு இரண்டு புதல்வர்கள்.

Saturday, September 14, 2013

ஒற்றுமையே பலம் !!!

முஸ்லிம் சமூகம் உணரத் தவறிய உண்மை?
Tuesday, September 10, 2013

(03) தவறாகப் புரிந்துக் கொள்ளப் பட்ட இமாம்.............??? உலமாக்கள் உணர மறுக்கும் உண்மைகள்!!!. -03


அத்தியாயம் மூன்றுசில வரலாற்றாசிரியர்கள் தமது வரலாற்று நூல்களிலே இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி எழுபது மனைவியரைத் திருமணம் செய்து அவர்களை விவாகரத்து செய்தார் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இன்னும் சிலர் தமது வரலாற்றுக் குறிப்பில் அவர் தொண்ணூறு மனைவியரைத் திருமணம் செய்து அவர்களை விவாக விடுதலை செய்தார் என்று குறிப்பிடுகின்றனர்.

இன்னம் சிலர் தமது பதிவுகளில் இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி அவர்களது மனைவியர் தொகையை முன்னூறு என்றும் குறிப்பிடுகின்றனர்.

இக்கதைகளின் பிரகாரம் இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி பெண்களைத் திருமணம் செய்வார் பின்னர் விவாகரத்து செய்வார்.....திருமணம் செய்வார் மீண்டும் விவாகரத்து செய்வார்.திரும்பவும் திருமணம் செய்வார் மீண்டும் விவாகரத்து செய்வார் என்கின்ற தொனி ஒலிக்கிறது.

Thursday, September 5, 2013

தவறாகப் புரிந்துக் கொள்ளப் பட்ட இமாம்.............??? உலமாக்கள் உணர மறுக்கும் உண்மைகள்!!!. -02

தவறாகப் புரிந்துக் கொள்ளப் பட்ட இமாம்.............??? உலமாக்கள் உணர மறுக்கும் உண்மைகள்!!!. -02

அத்தியாயம் இரண்டு........

இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி அவர்களது பிறப்பு சம்பந்தமாக பதிவாகி இருக்கும் இந்த ஹதீஸைக் கொஞ்சம் ஆழமாகக் கவனியுங்கள்.

இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி பிறந்த செய்தி நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு எடுத்து சொல்லப் படுகிறது.

அவர்கள் குதூகலத்துடன் அன்னை பாத்திமா ஸலாமுன் அலைஹா உடைய வீட்டுக்கு விரைந்து வருகிறார்.

வீட்டிலே குழந்தைப் பிறந்தவுடன் அங்கிருந்தவர்கள் அமீருல் மூமினீன் இமாம் அலி ஸலாமுன் அலைஹி அவர்களிடம் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப் போகிறீர்கள் என்று கேட்டார்கள்.

அதற்கு இமாம் அலி ஸலாமுன் அலைஹி அவர்கள் கூறிய பதில் வித்தியாசமானது.நாம் கூர்ந்து கவனிக்கத் தக்கது.

Tuesday, September 3, 2013

தவறாகப் புரிந்துக் கொள்ளப் பட்ட இமாம்.............??? உலமாக்கள் உணர மறுக்கும் உண்மைகள்!!!.

தவறாகப் புரிந்துக் கொள்ளப் பட்ட இமாம்.............??? உலமாக்கள் உணர மறுக்கும் உண்மைகள்!!!.

அத்தியாயம் ஒன்று...

சில தினங்களுக்கு முன்னர் என்னுடைய அலுவலகத்துக்கு உடுகொடை என்ற ஊரிலே இருக்கின்ற மிகவும் பழமையும் பிரபல்யமுமான 'மதரசா'வின் பணிப்பாளர் தரத்திலிருக்கும் இரண்டு உலமாக்கள் வருகை தந்தார்கள்.

பளீரென்ற வெள்ளை ஜுப்பா அணிந்திருந்த அவர்கள் மிகவும் வசீகரமாகத் தோற்றம் கொண்டிருந்தார்கள்.

Tuesday, August 13, 2013

ஈரான் தூதரகம் தடம் பிரளக் காரணம் என்ன?கனடாவில் நடந்து முடிந்த பிரமாண்டமான 'குத்ஸ் தின' நிகழ்வுகள்.......


இமாம் கொமைனியின் ';பத்வா'வின் பிரகாரம் ரமழான் மாத இறுதி வெள்ளிக் கிழமை 'குத்ஸ்' தினமாக பிரகடனப் படுத்தப் பட்டு வருடந்தோறும் நினைவு படுத்தப் பட்டு வருகிறது.

நாமறிந்த 'சியொனிசத்துகும்' நாமறியாத 'சுதந்திர சிற்பிகளின்' இராஞ்சங்கத்துக்கும் எதிரான இந்த பிரகடனம் சென்ற வருத்துக்கு முந்திய வருடம் இலங்கையில்  இருக்கும் ஈரான் கலாசார நிலையத்தினால் இலங்கையில் இருக்கும் பிரபலங்களை அழைப்பிதல் அனுப்பி வர சொல்லி 'கஞ்சியை' மட்டும் வழங்கி விடியோ பண்ணி ஆஹா.......ஓஹோ' என்று கொண்டாடினார்கள்.

அந்த நிகழ்வு சம்பந்தமான 'அஹ்லுல்பைத் தமிழ்த் தளம் உற்சாகமாக  பதிவேற்றிய பதிவு இப்படி பதிவேறியது ...........

Monday, August 12, 2013

காகிதப் பூக்களும்......கண்ணாடி வளையல்களும்....?

காகிதப் பூக்களும்......கண்ணாடி வளையல்களும்....?


சில தினங்களுக்கு முன்னர் ACJU தலைவர் மௌலவி ரிஸ்வி முப்தி வானொலியில் இம்முறை கடும் கண்டனத்துக்கும் சர்ச்சைகளுக்கும் களம் அமைத்த ஷவ்வால் தலை பிறை சம்பந்தமாக உரையாற்றிய தனது பக்க நியாயங்களை விவரித்த உரையின் தொணி இப்படி ஒலித்தது.

Sunday, August 11, 2013

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.......மோலவத்த பள்ளி உடைப்பு சொல்லுகின்ற பாடம்.......!!!!!!

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு........SLTJ அமைப்புக்கு எனது உளப் பூர்வமான வாழ்த்துக்கள்.......இன்று மட்டும் இந்த செய்கைக்கு இவ்வாறான எதிர்ப்பை வெளிக் காட்டி இருக்காத நிலையில் ஏனைய 'தௌஹீத்,சலபி பள்ளி வாயல்களும் இலவமாக இலக்கிடப் பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது......பிறை விடயத்தில் ACJU நிறுவனத்தைக் கொண்டு SLTJ யை தனிமைப் படுத்திய சுதந்திர சிற்பிகளின் ஏஜண்டுகளின் இலாவகமான இலக்கு அல்லாஹ்வின் அருளினால் தவிடு பொடியாக்கப் பட்டிருப்பது புரிகிறது.

SLTJ சகோதர்களின் போராட்டத்திற்கு அஹ்லுல்பைத் தமிழ்த் தளத்தின் ஆதரவு என்றும் இருக்கும்.https://www.facebook.com/photo.php?v=1402020496686696&set=vb.198076380290566&type=2&theater

Thursday, August 8, 2013

ஜமியதுல் உலமாவிடம் ஒரு சில அறிவு பூர்வமான கேள்விகள்....

இலங்கை பாமர முஸ்லிம் மக்கள் சார்பில் ACJU  தலைவரின் வானொலி உரை முடிந்த அடுத்த சிலவினாடிகளில் முஹம்மத் ராபி கேட்கும் கேள்விக்கு ACJU பொறுப்புடன் பதில் சொல்லுமா?


ஜமியதுல் உலமாவிடம் ஒரு சில அறிவு பூர்வமான கேள்விகள்....

பதிலளிக்குமா ஜமியதுல் உலமா?

01.நேற்று பிறை தெரிவதற்கான வானியல் வாய்ப்பு இல்லைஎன்று தெரிந்தும் ஏன் நீங்கள் பிறை பார்பதற்காக பிறை குழுவை நியமித்தீர்கள்?

02.இன்று பிறை பார்க்க தகுந்தத நாளில்லை என்று முன்னமே ஏன் அறிவிக்கவில்லை?

03. வானியலின் படி பிறை நேற்று தெரிவதற்கான வாய்ப்பில்லை என்பது எந்த வானியல் அறிஞ்சரின் கருத்து? ஆதாரம் எங்கே?

04. நம்பகமான 20 பேர் அறிவித்தும் எந்த அடிப்படையில் அதை நீங்கள் மறுத்தீர்கள்? 20 பேரின் தகவலும் பொய்யானதா?

06. பிறை கண்ட இமாமை அன்கு வாழும் மக்களும் உலமா சபையும் ஏற்றாக்கள்.ஏன் நீங்கள் ஏற்கவில்லை?

06. கிண்ணியாவின் ஜமியதுல் உலமா கிளை பிறையை உறுதி செய்து அனுப்பிய பின்னரும் ஏன் அது பற்றி தகவல் தெரிவிக்கவில்லை?

07.ஜமியதுல் உலமாவை ரவூப் ஹகீம் அவர்கள் நீண்ட நேரம் தொடபு கொள்ள முயன்றும் ஏன் அவருக்கு பதில் அளிக்கவில்லை?

08. பிறையில் சந்தேகம் வந்தால் நோன்பு வைத்தவர் நபிக்கு மறு செய்து விட்டார் என்ற ஹதீசுக்கு என்ன பதில்? இதோ ஹதீஸ்...
"ராமலானா? ஷவ்வாலா? என்று சந்தேகம் உள்ள நாளில் யார் நோன்பு நோற்கிறாரோ? அவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு மாறு செய்துவிட்டார்." அறிவிப்பவர்:அம்மார் பின் யாசிர் (ரலி) நூல்: திர்மிதி.
622


அஸ் ஷேய்க் ரிஸ்வி முப்தி தனது வானொலி உரையை முடித்து அமர்ந்து இருக்கக் கூட மாட்டார் ........இந்த வேகத்துக்கு ஒரு சபாஷ்........! 

Monday, August 5, 2013

மாடறுக்கும் மடுவங்களாக மாறப்போகும் மஸ்ஜிதுகள் .........????? ACJU வினரின் '.......'த்தனமான தீர்மானங்கள்........... ??

மாடறுக்கும் மடுவங்களாக மாறப்போகும் மஸ்ஜிதுகள் .........????? ACJU வினரின் 'மாட்டு'த்தனமான தீர்மானங்கள்........... ??


சென்ற வாரம் இலங்கையில் அநேகமாக எல்லா மஸ்ஜித்களிலும் சொல்லிவைத்தால் போல ஒரே தொனியிலான ஜும்மாஹ் பிரசங்கங்கள்.

Wednesday, July 31, 2013

அன்னை ஆயிஷா (ரலி) ......மெய் சிலிர்க்கும் சத்தியங்கள்

அத்தியாயம் நான்கு........அன்னை ஆயிஷா (ரலி) ......மெய் சிலிர்க்கும் சத்தியங்கள்

சென்ற பதிவில்.......நான் என்னுடைய நண்பருக்கு இவற்றை விளக்கியவுடன் அவர் மீண்டும் அந்த முஸ்லிம் அறிஞருக்கு செல்பேசி அழைப்பை எடுத்து நான் சொன்ன விடயங்களை அக்குவேறு ஆணிவேராக விளக்கினார்.

அவரது விளக்கங்களைக் கேட்ட அந்த அறிஞர் சொன்ன விடயங்கள் நகைப்புக்கிடமானவை.


அப்படி அவர் என்னதான் சொன்னார்?


"உங்களது நண்பர் சொல்லும் விடயங்கள் அனைத்தும் உண்மையானவை.ஆனால்,அவற்றை நாம் பிரசித்தமாக பேசக் கூடாது.அதனை யாருக்கும் விளக்கமாக சொல்லிக் கொடுக்கவும் கூடாது. மீறி நாம் அப்படி செய்தால்,அது இஸ்லாத்துக்கு இழுக்கை கொண்டுவரும்.ஆகவே,இந்த விடயங்களில் நாம் மௌனம் காப்பதே சிறந்தது."

அந்த அறிஞரின் நிலையும் அவர் சொல்லுவதும் சரியானதா?

இல்லை....தவறானது! மட்டுமல்ல கண்டிக்கத் தக்கதும்கூட .!!

நாம் சர்ச்சைக்குரிய இந்த விடயங்களைத் தெளிவு படுத்தும் செய்கையில் புனித இஸ்லாத்தின் கௌரவமும் அண்ணல் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களது கண்ணியமும் காக்கப் படுகின்ற செயல் விளைவுகளுக்கு களம் அமைக்கப் படுகிறது.

அதற்கு மாற்றமாக இந்தத் தவறான செய்திகளைக் கேட்டு மௌனித்துப் போகும் செய்கையானது இத்தகையத் தவறான செய்திகளுக்கு அங்கீகாரம் அளித்து ஏற்றுக் கொள்ளும் செயல் விளைவுகளுக்கு காரணமாக அமைந்துப் போகிறது.

அதனால் நாம் அறிந்த உண்மைகளை மக்கள் மயப் படுத்துவது அத்தியாவசியமாகிறது.

Tuesday, July 30, 2013

அன்னை ஆயிஷா (ரலி) ...மெய் சிலிர்க்கும் சத்தியங்கள்.......!!!!!!

அத்தியாயம் மூன்று......

அன்னை ஆயிஷா (ரலி) ...மெய் சிலிர்க்கும் சத்தியங்கள்.......!!!!!!"..........ஒப்பீட்டாய்வுகள் மூலமாக ஹிஷாம் இப்னு உர்வா அறிவித்ததாக கூறப் படுகின்ற  இத்தகைய ஹதீஸ்கள் அனைத்தும் ஆதார பூர்வமானவைகளாக இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பது உறுதியாகின்றது."

நாம் சொன்னதைக்  கேட்டவுடன் நமது நண்பர் தனது செல் பேசியை மீண்டும் எடுத்து அதே இஸ்லாமிய அறிஞரிடம் நாம் சொன்ன செய்திகளை அப்படியே இடைக்கிடை சில கேள்விகளை நம்மிடம் கேட்டு நாம் சொன்ன விடைகளுடன் ஒப்புவித்தார்.

எங்களது கருத்துக்களைக் நமது நண்பர் சொல்லக் கேட்டு அந்த அறிஞர் நமது நண்பரிடம் சொன்ன விடயங்கள் அனைவரையும் நிமிடத்துக்கு வாயடைத்துப் போக செய்யும்.

அப்படி என்னதான் அவர் சொன்னார்?

"இமாம் புஹாரி,இமாம் தபாரி,இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்,  இமாம் ஹஜர் அல் அஸ்கலானி,ஆகிய அனைத்து இமாம்களும் அண்ணல் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்   அவர்களினதும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களினதும் திருமணம் நடைபெற்ற பொழுது அன்னையவர்களின் வயது ஆறு என்றும் அவர்கள் ஒன்பது வயதில் வீடு கூடினார்கள் என்றும் ஒருமித்து அறிவித்திருக்கிறார்கள்."என்று கூறிவிட்டு "உங்களது நண்பர்கள் இந்த அறிஞர்களை விடவும் இந்த விடயத்தில் பேரறிவு பெற்றிருக்கிறார்களா?...என்று திருப்பிக் கேட்கிறார்" 
என்று சொல்லிவிட்டு சிரித்தார்.

இதற்கு எங்களது பதில் என்ன?

நாம் நமது நண்பருக்கு சொன்ன பதில் இதுதான்.


இமாம் தபாரி, இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்,இப்னு ஸாத் ஆகியோரது கிரந்தங்களில் ஹிஷாம் இப்னு உர்வா (ரஹ் ) அறிவித்ததாக பதிவு செய்யப் பட்டிருக்கின்ற ஹதீஸ் பதிவுகள் ஒருமித்த நிலையில் இப்படி பதியப் பட்டிருக்கின்றன.

"அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை அண்ணல் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் திருமணத்திற்கு நிச்சயம் செய்யும் பொழுது அன்னை ஆயிஷா (ரலி) அவர்களது வயது ஆறு. நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்  அவர்கள் அன்னையவர்களுடன் வீடு கூடும் பொழுது அன்னையவர்களின் வயது ஒன்பது."

Friday, July 26, 2013

அன்னை ஆயிஷா (ரலி) ...........மெய் சிலிர்க்கும் சத்தியங்கள்......


அன்னை ஆயிஷா (ரலி) ...........மெய் சிலிர்க்கும் சத்தியங்கள்...... 
அத்தியாயம் - இரண்டு - 


சென்ற பதிவில்.............நான் இதனை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது என்னுடைய நண்பர் ஒருவர் என்னுடைய அலுவலகத்தினுள் 'ஸலாம் 'கூறியபடி நுழைந்தார்.

"என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள்?" என்றுக் கேட்டார்.

நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களினதும் அண்ணல் நபி சல்லல்லாஹு அலை ஹி வஆலிஹி வசல்லம்  அவர்களினதும் திருமணக்  கதைகளில் இருக்கின்ற நம்பகத் தன்மைகளின் நம்பகம் இல்லாத தன்மைகளின் ஆய்வை விளக்கினேன்.

அவர் உடனே தனது செல்போனை எடுத்து கொழும்பில் இருக்கும் ஒரு பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞருக்கு போன் எடுத்து நான் ஆய்வு செய்யும் விடயம் தொடர்பான அவரது கருத்தைக் கேட்டார்.

அந்த மார்க்க அறிஞர் சொன்ன விடயங்கள் கொஞ்சம் வித்தியாசமானது.

"அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை நபி சல்லல்லாஹு அலை ஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் சிறு வயதிலே திருமணம் செய்ததில் ஒரு பெரிய இரகசியம் அடங்கியுள்ளது.ஒரு கணவன் தனது மனைவியுடன் நடந்துக் கொள்ளும் முறைகள் சம்பந்தமான அறிவை நடைமுறை செயல் முறை மூலம் அண்ணலார் அன்னையவர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.அது மட்டுமன்றி,அண்ணலார் சம்பந்தமான அநேக  ஹதீஸ் அறிவிப்புக்களை அன்னையார் நடைமுறை சம்பவங்களின் துணைக் கொண்டே அறிவித்ததற்கு அவர்களின் சிறு வயதுத் திருமணமே காரணம்."

இதனை எனக்கு சொன்ன நண்பர் "இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?" என்று என்னிடம் திருப்பிக் கேட்டார்.

அவருக்கு நான் சொன்ன பதில் இவ்வாறு விரிந்தது.

Thursday, July 25, 2013

"நாம் ஹலாலை அற்ப விலைக்கு விற்றோம்......." ACJU தலைவர் ரிஸ்வி முப்தி........

"நாம் ஹலாலை அற்ப விலைக்கு விற்றோம்......." ACJU தலைவர் ரிஸ்வி முப்தியின் ஒப்புதல் வாக்கு மூலம்......அதனை அவர் சொல்லக் கேட்டுப் பாருங்கள்.Tuesday, July 23, 2013

அன்னை ஆயிஷா (ரலி) .......?????மெய் சிலிர்க்கும் சத்தியங்கள்.......!!!

அத்தியாயம் ஒன்று......1

அன்னை ஆயிஷா (ரலி) .......?????மெய் சிலிர்க்கும் சத்தியங்கள்.......!!!


என்னுடைய இந்து நண்பர் ஒருவர் ஒரு முறை என்னிடம் இப்படிக் கேட்டார்."நீங்கள் உங்களது ஏழு வயதுக் குழந்தையை ஐம்பத்து மூன்று வயது நபருக்கு திருமணம் செய்துக் கொடுப்பீர்களா?"

இஸ்லாம் மார்க்கம் சம்பந்தமாக ஆழமாக ஆய்வு செய்யும்  நண்பரின் அறிவுத்திறமையை அறிந்திருந்த நான் மௌனமாக இருந்தேன்.

அவர் தொடர்ந்தார் "நீங்கள் அப்படி செய்யப் போவதில்லை என்பது எனக்குத் தெரியும் .........இந்நிலையில் அப்பாவி ஏழு வயது குழந்தை ஆயிஷாவை உங்களது நபி திருமணம் செய்ததை எவ்வாறு அனுமதித்து ஏற்றுக் கொள்கிறீர்கள்?"

அதற்கு நான் அவரிடம்  "உங்களது கேள்விக்கான பதில் இப்பொழுது என்னிடம் இல்லை." என்றேன்.

அவர் முறுவலித்தார்.

எங்களது உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்த எங்களது இன்னுமொரு முஸ்லிம் நண்பர் அவசர அவசரமாக "ஒரு சமூகம் தனது சமூக சட்டமாக கருதி அனுமதித்து இருக்கின்ற ஒரு சட்டத்தை நாம் விமர்சிக்கத் தேவை இல்லை.இந்தியாவில் திருமண வயதெல்லை பதினாறாக இருக்கும் அதே சமயம் இந்தோனேசியாவில் அந்த வயதெல்லை பதினெட்டாக இருக்கிறது.ஒரு நாட்டுக்கு சட்டமாக அனுமதிக்கப் படுகின்ற திருமண வயதெல்லை இன்னுமொரு நாட்டின் சட்ட விரோதமான செயலாக கணிக்கப் படுகிறது. சிறு பெண் குழந்தைகளைத் திருமணம் செய்வதை அராபியக் கலாசாரம் அனுமதித்து ஏற்றுக் கொண்டிருக்கிறது.அதனால்தான்  இப்பொழுதுகூட அநேக அராபிய நாடுகளில் சிறு பெண் குழந்தையைத் திருமணம் செய்கின்ற கலாச்சாரம் வழக்கில் இருக்கிறது.அது அந்நாட்டின் கலாசாரம்.அதனால்தான்  இந்தத் திருமணத்திற்கு அராபிய மக்கள் எவ்விதமான எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை .." என்றார்.

எதையும் கண்மூடித்தனமாக விசுவாசித்து தம்மை தம்மையறியாமல் ஏமாற்றி மற்றவர்களை ஏமாற்ற நினைக்கின்ற  சிலரது இத்தகைய கருத்துக்கள் இக்காலத்துக்கு ஒவ்வாதது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

முஸ்லிம் நண்பரது பதிலைக் கேட்ட என்னுடைய இந்து நண்பர் முகத்திலிருந்த முறுவல் மாறாது "அப்படியென்றால் உங்களது இஸ்லாம் மார்க்கம் அக்காலத்துக்கும் ,அராபிய கலாசாரங்களை அனுமதித்து ஏற்றுக் கொள்ளும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மக்களைக் கொண்டிருக்கும் தேசங்களுக்கு மட்டும் பொருத்தமானது என்று நாம் கருதும் கருத்தில் தவறில்லையே.......?" என்று சொல்லி விட்டு தொடர்ந்து "முஸ்லிம்கள் கூறுவது போல இஸ்லாம் மதம் உலகத்துக்குக்கான பொது மதம் என்ற கூற்று தவறானது என்ற கருத்தை உங்களது பதில் தருகிறது!...இல்லையா?" என்றார்.

நமது நண்பர் மௌனமானார்.

நமது இந்து நண்பர் தொடர்ந்து "சில தினங்களுக்கு முன்னர் உஸ்தாத் மன்சூர் அவர்களின் முக நூலில் நான் ஆயிஷாவின் திருமண விடயம் சம்பந்தமாக அவர் கூறியிருந்த விளக்கத்தை கவனித்தேன்.அதில் அவர் "ஆயிஷாவினதும் முஹம்மது நபியினதும் திருமணம் நடந்தேறும் பொழுது ஆயிஷாவின் வயது ஆறு முஹம்மது நபியின் வயது ஐம்பத்து மூன்று.இந்தத் திருமணக் கதை ஆதாரபூர்வமானது.அதில் எந்த சந்தேகமும் இல்லை." என்று கூறி விட்டு சிரிப்புடன் "அதன் பின்னர் அவர் குறிப்பிடும் கூற்றுக்கள் அவரது ஆதார பூர்வ உறுதிப்பாட்டை தகர்த்து விடுகிறது."என்றார்.

நண்பர் குறிப்பிட்ட உஸ்தாத் மன்சூர் இலங்கை ஜாமியா நளீமியாவின் முன்னாள் விரிவுரையாளர்.இலங்கையில் இருக்கும் பிரபலமான விரல் விட்டு எண்ணக் கூடிய இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவர்.

உடனே நான் "அவர் அப்படி என்னதான் சொன்னார்?" என்றுக் கேட்டேன்.

Saturday, July 6, 2013

"அரபுலகின் அதிசயமான எழுச்சிகளின் பின்னால்......????"மார்ச் மாதம் 5 ஆம் திகதி  2011 ஆம் வருடம் எகிப்தில் களை கட்டிய மக்கள் புரட்சியின் பொழுது அஹ்லுல்பைத் தமிழ்த் தளத்தில் பதிவேற்றிய பதிவு எவ்விதமான திருத்தங்களுமின்றி மீண்டும் உங்களது ஆய்வுக்கு பதிவேற்றப் படுகிறது...............

"டுனீசியாவில்" இனம் தெரியாதா ஒரு இளைஞன் தீ மூட்டி கொல்லப் படுகின்றான்.அதற்கு அழகான, உள்ளத்தை தொடும் ஒரு கதையைப் பின்னி முகப்பு அட்டை போட்டு உலகளாவிய மக்களது உளவியலையும் வென்றாகி விட்டது.

திடீரென "டுனீசியாவில்" ஒரு மக்கள் புரட்சி.

எது வித இலக்கும் இல்லாத ஒரு ஓட்டம்.

நாட்டுத் தலைவன் நாட்டின் பணத்துடன் ஓடிவிட , அவனது சகா நாட்டை ஆளுகின்றான்.

அடுத்த சில நாள்களில் எகிப்தில் ஒரு புரட்சி.

'டுனீசியாவின்' பின் விளைவு என்று அதற்கு ஒரு பெயர்.

ஒரு அழகிய இளம் பெண் தனது "பேஸ் புக்கில்" எகிப்து மக்களை 'தஹ்ரீர்' சதுக்கத்துக்கு வந்து எகிப்தின் தலைவருக்கு எதிராக மக்களை அணி திரளுமாறு உருக்கமாக ஒரு வேண்டு கோளை விடுக்கிறார்.

ஆச்சரியமான ஒரு செயல்.

Saturday, June 8, 2013

மரணத்தின் இறுதி கணங்களில் கேர்ணர் முஹம்மர் அல் கடாபி கூறியவை.....
நன்றி : கைபர் தளம்.

by: Abu Sayyaf        அந்த துடிப்பான லிபிய இளைஞன் கத்தினான். “யூ சிட்”. இது நான் ஆத்திரத்தில்அரபியில் கத்தும் “ஹராமி”யின் இன்னொரு ஆங்கில வடிவமாக இருக்கலாம். மீண்டும் அவன் கத்தினான் “பக் யூ. ஆனால் நான் அரபியில் ஒரு போதும் இப்படிய கத்தியது கிடையாது. ஒருவன் எனது அலைபாயும் முடியை பிடித்து வேகமாக இழுத்தான். அவன் கரத்தில் SEIKO கடிகாரம் கட்டப்பட்டிருந்தது. ஒவ்வொரு லிபிய குடிமகனும் நல்ல ரக சீக்கோ கைகடிகாரம் கட்ட வேண்டும் என நான் எடுத்த தீர்மானத்திலேயே இன்று இவர்கள் கைகளில் கூட அது ஆடி நிற்கிறது.
 

Tuesday, June 4, 2013

(அமீர் முஆவியாவின் -அமெரிக்க) சுன்னத்வல் ஜமாத்தினரிற்கும் -ஷியாக்களிற்கும் நடக்கும் யுத்தம்! - யூசுப் அல்-கர்ளாவி (சிறப்பு பதிவு)
'இது ஹிஸ்புல்லாக்களிற்கும் சிரிய முஜாஹித்களிற்கும் நடக்கும் யுத்தம் மட்டுமல்ல! '

நன்றி: கைபர் தளம் 

லக முஸ்லிம்களிடையே புகழ் பெற்றவரும், இஹ்வான்களின் ஆகர்ஷ புருஷருமான கலாநிதி யுசுப் அல்-கர்ளாவி உலக முஸ்லிம்களை நோக்கி ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். பல விடயங்களில் சர்ச்சைக்குரியவரும், நவீனத்துவ இஸ்லாத்தின் (?) முன்னோடியுமான இவர் புரிந்து கொள்ள முடியாத ஒரு நபர். லிபியாவில் கடாபியை கொல்வதற்கு துணை நின்றவர். அதே வேளை காஸாவின் முஸ்லிம்களிற்காக கண்ணீர் விட்டவர். சரி விடயத்திற்கு வருவோம். அவர் முஸ்லிம்களை நோக்கி கடந்த வெள்ளியன்று நடைபெற்ற ஊர்வலத்தில் விட்ட வேண்டுகோள் இதுதான்...


“ஓ முஸ்லிம்களே. உங்களிற்கு எதிராக (அமெரிக்க, சவூதி ) யகூதி நஸராக்கள் ஒன்று பட்டு விட்டனர். அவர்களின் ஒரே குறிக்கோள் (உண்மையான)முஸ்லிம்களை அழிப்பது. அதனை நாம் கடந்த பல தசாப்தங்களாக கண்கூடாக கண்டு வருகிறோம். ஆனால் அதனை தடுத்து நிறுத்த செயற்திறன் அற்றவர்களாக எம்முள் பிளவுண்டு கிடக்கிறோம்”.

Friday, May 24, 2013

நெஞ்சு நெகிழ்ந்த நன்றியுடன்..........சஹாபாக்கள் என்று நாம் பெரு மதிப்பு வைத்திருக்கும் பெரியார்களின் மத்தியில் ஒளிந்து தமது தவறுகளை மறைத்துக் கொண்டிருக்கும் நய வஞ்சகர்களின் சுயரூபத்தை நாம் வெளிப்படுத்தியதினால் நம்முடன் முரண் பட்ட இணைய நண்பர்  'அரபுத் தமிழன்' தனது தொடர்பை அஹ்லுல்பைத் தமிழ்த் தளத்துடன் துண்டித்துக் கொண்டார்.

இறைவனை அவனது தூய வடிவில் நாம் விசுவாசித்ததை - நாம் விசுவாசிக்கும் இறைவன் அராபிய இறைவன் என்றுக் குழம்பிப் போன நமது இணைய நண்பர் அன்புராஜும் தனது மதிப்புக்குரிய தொடர்பை அஹ்லுல்பைத் தமிழ்த் தளத்துடன் முறித்துக் கொண்டார்.

Wednesday, May 22, 2013

அன்புராஜ் புரிந்துக் கொள்ளத் தவறிய நிஜங்கள்...............இறைவனை அறிந்துக் கொள்ளும் ஆவலில் தவிக்கின்ற நண்பர் அன்புராஜை அல்லது இறைவனை விசுவாசிக்கின்ற கோடானு கோடி மக்களை காபிர்கள் என்ற வரையறையினுள் எந்தக் கொம்பனாலும் கொண்டு நிறுத்த அல்லது வரையறுக்க முடியாது.

ஏனெனில்,ஒரு மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையேயான தொடர்புகளை யாராலும் கணித்து கூற முடியாது.

இறைவனைப் பொருத்தவரை அவனை நிராகரிப்பவர்களே காபிர்களாகும்.

Tuesday, May 21, 2013

காபிர்..........ஒரு விளக்கம்!"இறைவனை அல்லது கடவுளை முழுமையாக ஏற்று அந்த ஏகனை நம்புகின்ற என்னையும் என்னைப் போன்ற இந்துக்களையும்  முஸ்லிம்கள் காபிர் என்று அழைக்கின்றார்கள்.

"அதே போன்று ஓரிறைவனை விசுவாசிக்கின்ற கிறிஸ்த்தவர்களையும் யூதர்களையும் இந்த முஸ்லிம்கள் காபிர்கள் என்றுதான் கூறுகின்றார்கள். 

"காபிர்கள் என்ற வட்டத்தினுள் எம்முடன் சேர்த்து அதே முஸ்லிம்கள் தனது கருத்தை ஏற்காத சக முஸ்லிமையும் அழைப்பது இன்னும் வேடிக்கையான செய்தியாகும்.

"இந்நிலையில்,காபிர் என்ற இந்த மாய மந்திரச் சொல்லின் நிஜமான அர்த்தம்தான் என்ன?"

விடை தேடுகின்ற கேள்விக்கு பதிலாக ஒரு கேள்வி?நமது நண்பர் அன்புராஜின் பல கேள்விகளில் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லுவதற்கு பதிலாக ஒரு கேள்வியை நண்பர் அன்புராஜிடமும் நமது இன்னுமொரு இணைய நண்பர் சுகுமாரிடமும் கேட்கிறோம்.

Thursday, May 16, 2013

ஜக்கூம் மரம்.........இஸ்லாம் மார்க்கத்தை அழித்த .....வரலாற்று ஆவணம்...?இஸ்லாமிய அறிஞர்கள் புரிந்துக் கொள்ள மறுக்கும் உண்மைகள்...!!!

ஜக்கூம் மரம்.........இஸ்லாம் மார்க்கத்தை அழித்த .....அழித்துக் கொண்டிருக்கும்  வரலாற்று ஆவணம்...?இஸ்லாமிய அறிஞர்கள் புரிந்துக் கொள்ள மறுக்கும் உண்மைகள்...!!!

புனித அல் குர்ஆனும்  புனித பைபிளும் மனிதர்களின் நல்ல செயல்களுக்கு நல்ல மரத்தையும் கெட்ட செயல்களுக்கு கெட்ட மரத்தையும் உவமானமாக குறிப்பிடுகின்றன.

உதாரணமாக :

Saturday, May 11, 2013

மனித சமூகத்திற்கு குர் ஆன் என்ற புதிய வேதத்தின் தேவை ஏன்?

ஆக்கம் : டாக்டர் அன்புராஜ் இஸ்லாமிய கொள்கைகளின் அடிப்படை குர்ஆன். எனவே இக்கேள்வியை இஸ்லாம் என்ற புதிய வழிமுறை ஏன்? எனவும் கேட்கலாம். இவ்வினாவிற்கு பதில்

Monday, April 29, 2013

முதன்முறையாக இலங்கையில் நடைபெறுகின்ற மாபெரும் அஹ்லுல்பைத் மா நாடு:

முதன்முறையாக இலங்கையில் நடைபெறுகின்ற மாபெரும் அஹ்லுல்பைத் மா நாடு:


இடம்: கெக்கிராவ-  கட்டுக்கெலியாவ மஹ்லரதுல் ஜலாளிய்யாஹ் அரபிக் கல்லூரி. 

அன்னை பாத்திமா நாயகின் பிறந்த தினமான ஜுமதுல் ஆகிர் பிறை 20 ஆம் திகதி  (இவ்வருட மே மாதம் முதலாம் திகதி) அஹ்லுல்பைத் நினைவு தினமாக கெக்கிராவ-  கட்டுக்கெலியாவ மஹ்லரதுல் ஜலாளிய்யாஹ் அரபிக் கல்லூரியில் கொண்டாடப் படுகிறது.

இலங்கையில் பல பாகங்களில் இருந்தும் பல நூற்றுக் கணக்கான மார்க்க அறிஞர்கள் , உலமாக்கள் பங்கேற்கும்  இந்த மாநாட்டில் பிரதம பேச்சாளர்களாக அஹ்ளுபைத் மாநாட்டை அலங்கரிக்க இருக்கும் இஸ்லாமிய அறிஞர்களின் விபரமும் அவர்கள் பேச இருக்கும் தலைப்புகளும்  வருமாறு:

Friday, April 26, 2013

முஸ்லிம் பெண்களின் எதிர்காலம்..........???


முஸ்லிம் பெண்களின் எதிர்காலம்..........???

ஆக்கம்: டாக்டர் அன்புராஜ்.

இஸ்லாம் என்பது மதப் பிரச்சாரத்தில்தான் இருக்கிறது என்று சிலர் நினைக்கிறார்கள். நாம் மதப்பிரச்சாரம் செய்தால் நமக்கு ஆயிரம் நன்மைகள் கோடி நன்மைகள் என்று வந்து குவியும். இறைவன் நம்மை நேரே சொர்க்கத்துக்கு அழைத்துக்கொள்வான் என்று தவறாக நினைக்கிறார்கள்.


Tuesday, April 16, 2013

"ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி"


"ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி"

ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த ஐந்து விஷயங்கள்:

1) ஆடம்பரமாய் வாழும் தாய்,

2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,

3) ஒழுக்கமற்ற மனைவி,

4) ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர் மற்றும்

5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும்..

இவர்களை கொண்டிருப்பவன், அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும்.Monday, April 8, 2013

86 வருட சிறைத் தண்டனை அனுபவிக்கும், நாம் மறந்து விட்ட சகோதரி டாக்டர் ஆபியா சித்தீகி. அதிர்ச்சி தரும் சித்திரவதைகள்.


86 வருட சிறைத் தண்டனை அனுபவிக்கும்நாம் மறந்து விட்ட சகோதரி டாக்டர் ஆபியா சித்தீகி.
அதிர்ச்சி தரும் சித்திரவதைகள்.

ஆக்கம் :ஹைதர் அலி 
 
டாக்டர் ஆபியா சித்தீகி அமெரிக்காவின் பெருமைமிக்க மாஸ்சூசெட்ஸ் நிருவனத்தின் உயிரியல் பட்டதாரி..ஆபியா 2003 மார்ச்30ல்பாகிஸ்தானில் மர்மமான முறையில் கடத்தப்பட்டு காணாமல்போனார்.
 

Sunday, March 31, 2013

முஸ்லிம்களின் இந்த நிலைக்கு மாற்று-சமுதாயத்தினர்தான் காரணமா ?
படிகள்.........படிப்பினைகள்.............


ஆக்கம்: டாக்டர் அன்புராஜ்
முஸ்லிம்களின் இந்த நிலைக்கு மாற்று-சமுதாயத்தினர்தான் காரணமா ?
இல்லை.


 மற்ற சமுதாயத்தினருடன் ஒப்பிடும்போது, முஸ்லீம்களிடம் தங்களது முன்னேற்றத்தினைப் பாதிக்கும் கூறுகள் அவர்களது வாழ்க்கைமுறைகளில் தென்படுகிறது. 

தமிழகத்தினைப் பொருத்தவரை, நான் கீழ்காணும் கூறுகளை அடையாளம் காணுகிறேன்.

Tuesday, March 19, 2013

இஸ்லாத்தை விற்கும் லெப்பைமார்கள் ....................


இஸ்லாத்தை விற்கும் லெப்பைமார்கள் ....................


அவரவர் தகுதிக்கு ஏற்ப இஸ்லாத்தை விற்று வயிறு வளர்க்கும் மதகுருமார்கள்...............

Monday, March 18, 2013

முஸ்லிம்களின் சுய மரியாதையைக் கேள்விக்குட்படுத்துகின்ற சூளுரை...........


முஸ்லிம்களின் சுய மரியாதையைக் கேள்விக்குட்படுத்துகின்ற சூளுரை...........


இலங்கை முஸ்லிம்களின் தனித்துவமான பிரதிநிதிகள் என்று தம்மை அறிமுகம் செய்துக் கொண்டனர் இஸ்லாமிய கடமைகளில் பணம் திரட்டுகின்ற தந்திரமான சூழ்ச்சியை முன்னெடுத்த ஜனாப் ரிஸ்வி முப்தியும் அவரது அடிவருடி லெப்பைமார்களும்.

பாமர முஸ்லிம்கள் அதனை அக்கறைக் கொண்டு கவனிக்கவில்லை.

விளைவு?

BBS முன் வைக்க தீர்மானித்துள்ள தீர்மானங்கள்........


Thursday, March 14, 2013

BBS முன்னெடுக்கவுள்ள 'நிகாப்' அல்லது 'புர்கா' பிரச்சினைக்கு அஹ்லுல்பைத் தளம் முன் வைக்கும் தீர்வு............

BBS முன்னெடுக்கவுள்ள 'நிகாப்' அல்லது 'புர்கா'  பிரச்சினைக்கு அஹ்லுல்பைத் தளம் முன் வைக்கும் தீர்வு............


நகைப்புடன் முடிவு காணும் தீர்வுகள் வெறுப்புடன் எதிர்நோக்கப் படுவதில் இருக்கும் இலாபம் என்ன?

ஆதங்கமாக நாம் பதிவேற்றுகின்ற பதிவுகளைப் பார்த்து நமக்கு ஆறுதல் சொல்லும் விதமாக நகைச்சுவைத் துணுக்குகளைப் பகிர்ந்துக் கொள்ளும் நண்பர் அன்புராஜ் விரும்பும் பதிவாக இது இருக்கும் என்று நம்புகிறோம்.


Sunday, March 10, 2013

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவர்களின் தலைமைத்துவம் தொலைக்கும் செய்கைகள்................இலங்கை முஸ்லிம்கள் உணர மறுக்கும் உண்மைகள்!?இஸ்லாமிய பிரசாகர்களினால் ஒரு பிரசித்தமான ஹதீஸ் முன்னுதாரணத்திற்காக அடிக்கடி சொல்லப்படுவதுண்டு.

நீங்களும் அந்த ஹதீஸை அறிந்திருப்பீர்கள்.

தனது மகனை நபி சல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வசல்லம் அவர்களிடம் அழைத்து வந்த தாயொருவர் "யா ரசூலுல்லாஹ்.......எனது மகன் அதிகமாக அடிக்கடி இனிப்பு சாப்பிடும் பழக்கம் கொண்டவர்.அவருக்கு அதிகமாக இனிப்பு சாப்பிட வேண்டாம் என்று அறிவுரை சொல்லுங்கள்" என்று வேண்டி நின்றார்.

Tuesday, March 5, 2013

BODU BALA SENA அமைப்புடன் கௌரவ அசாத்சாலி கலந்துக் கொண்ட வெற்றிகரமான கலந்துரையாடல் .................

BODU BALA SENA அமைப்புடன் கௌரவ அசாத்சாலி கலந்துக் கொண்ட வெற்றிகரமான கலந்துரையாடல் .................http://youtu.be/up7BMkPluZwhttp://youtu.be/1AZczvg6wdwhttp://youtu.be/XiWfBtpwTiM


http://youtu.be/aR6m4TVEHLE

Wednesday, February 27, 2013

இலங்கை முஸ்லிம்களின் தொலைந்துப் போன தலைமைத்துவம்..................


நம்மை வழிநடாத்தும் தலைமைத்துவம் எங்கிருக்கிறது........

தெரிந்தால் சொல்லித் தாருங்கள்!


http://youtu.be/-Q23B8gPQpc

Friday, February 22, 2013

சவூதி சிறையில் மரண தண்டனைக்கு காத்திருக்கும் ஹம்ஸா அலி........

சவூதி சிறையில் மரண தண்டனைக்கு காத்திருக்கும் ஹம்ஸா கஸ்கர் அலி........

http://youtu.be/_I2Yhi-UC08

அல் குர் ஆன் ஆதாரத்தை முன்வைத்து இளம் கவிஞன் ஹம்ஸா கஸ்கர் அலிக்கு மரண தண்டனையை பரிந்துரைக்கும் சப்பரை சவூதி முல்லா முப்தி.........

ஹம்ஸா அலியின் தலையை வாளின் வீச்சுக்கு கொண்டு நிறுத்திய  வார்த்தை இதுதான் ..

"அல்லாஹ் மறுமையில் சவூதி அராபியப் பெண்களை நரகத்துக்கு அனுப்பி வேதனை செய்யப் போவதில்லை. ஏனெனில்,ஒருவரை இரண்டுமுறை அல்லாஹ் நரகத்தில் தண்டிப்பதில்லை."

Thursday, February 21, 2013

முஸ்லிம் சமூகத்தின் விமோசனத்துக்கு வித்திட்டு தீர்ப்பளிக்கப் பட்ட 'ஹலால்' விவகாரம்...........ACJU புரிந்துக் கொள்ளத் தவறிய உண்மைகள்.........?


இன்றைய தமிழ் Mirror அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஹலால் தரச் சான்றிதழ் சம்பந்தமான  முடிவை இவ்வாறு வெளியிட்டிருந்தது......

//.....பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவுடனான சந்திப்பினை அடுத்து ஹலால் சான்றிதழ் பொறிக்கப் பட்ட பொருட்களை முஸ்லிம்களுக்கு மாத்திரமே வழங்குவது என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தீர்மானித்துள்ளது.//

jaffna muslim இணையம் அதனை இப்படி சொல்லியது.

// ........இங்கு உலமா சபையின் செயலாளர் எம்.எம்.ஏ .முபாரக் கருத்து வெளியிடுகையில் 

//....இதற்கமைய அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தனது ஹலால் சான்றிதழை பெறும்  வர்த்தக நிறுவனங்கள் தமது ஹலால் உற்பத்திப் பொருட்களை முஸ்லிம்களுக்கு மாத்திரம் வழங்கும் வகையில் ஒரு பொறிமுறையை வகுக்க ஆவண செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்வது என முடிவு செய்யப் பட்டுள்ளது என்றார்.....//

இற்றைக்கு ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஹுதைபியா இணக்கப் பாட்டை முன்வைத்து தனது செயல்களுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டிருந்த ACJU வினர் திடீரென அந்த ஹுதைபியா சொல்லிக் கொடுத்த பாடத்தை மறந்து போன நிலையை இந்த ஊடக செய்திகள் நிரூபிக்கின்றன.

Tuesday, February 19, 2013

பாகிஸ்தானில் என்ன நடக்கிறது....?


தகவல்: அன்புராஜ்.


பெக்ரெயின் நாட்டிலும் ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் கலவரம் ஆரம்பித்து விட்டது.

பாக்கிஸ்தானில் நிலைமையைப் படிப்போமே!http://youtu.be/UxprkrL7RCw
http://youtu.be/fPRpgakV2CA
பாகிஸ்தானின் குவெட்டா நகரை ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் வரை, குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய மாட்டோம் என்று, ஷியா பிரிவு முஸ்லிம்கள் மறுத்துள்ளனர்.

Wednesday, February 13, 2013

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மௌனம் காப்பது ஏன்?

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மௌனம் காப்பது ஏன்?


http://youtu.be/JH13_zrZWf8

தவறான தீர்ப்பு கொள்வதற்கு காரணமான உலமாக்கள்.......

இஸ்லாத்தின் பெயரால் சிரியாவில் நடந்துக் கொண்டிருக்கும் கொடூரம்......
சிரியாவில் கொல்லப்பட்டவர்களின் தொகை 70,000 ஆக அதிகரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்பு..........

http://youtu.be/wdNWYTO7hqg
ரிசானாவின் நீதி தொலைத்த நீதி நெறிப்படுத்தியிருக்கும் சவூதி நீதி,........... ரிசானா நபீக்குக்கு  நன்றி!


சவூதி அரேபியாவில் தனது பாதுகாவலில் இருந்த மூன்று மாதக் குழந்தையை நஞ்சூட்டிக்  கொலை செய்தார் என்று குற்றம் சுமத்தப் பட்ட ஒரு இந்தோனேசிய பணிப்பெண் மரண தண்டனையை எதிர் நோக்கி தம்மாம் சிறையில் அடைக்கப் பட்டிருந்தார்.

ஆனால்,நேற்று முன்தினம் தம்மாம் நீதி மன்றம் குழந்தையின் மருத்துவ அறிக்கையைக் கருத்தில் கொண்டு அந்தப் பணிப்பெண் நிரபராதி என்று தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்திருக்கிறது.

Tuesday, February 12, 2013

இஸ்லாத்தின் பெயரால் மாலியில் தொடருகின்ற துயரங்கள்............

இஸ்லாத்தின் பெயரால் மாலியில் தொடருகின்ற துயரங்கள்............


Monday, February 11, 2013

பயங்கரவாதத்தால் பாதிக்கப் பட்டவர்கள் சொல்லட்டும்!!!!

பயங்கரவாதி யார்?............அமெரிக்க CIA ..........ஆப்கானிஸ்தானின் தலிபான்??      


பெஷாவாரில் அமெரிக்க ஆளில்லாத உளவூர்தி உளவு விமானம் சுட்டுத் தள்ளிய பொது மக்கள்?http://youtu.be/E2e0YjNxdkM

Saturday, February 9, 2013

இஸ்லாத்தின் எதிரிகளின் இலக்கில் இஸ்லாமிய ஷரியா சட்டம்........ஏன்?...எதற்கு?...எப்படி?.


இஸ்லாத்தின் எதிரிகளின் இலக்கில் இஸ்லாமிய ஷரியா சட்டம்........ஏன்?...எதற்கு?...எப்படி?

ஆக்கம்: ஜே .எஸ்.அப்துல் ரசாக்

செய்தி ஒன்று: திகதி-------09ஆம் திகதி புதன்கிழமை  ஜனவரி 2013.

தனது பாதுகாப்பில் இருந்த குழந்தைக்கு பால் பருக்கும் பொழுது புரையேறி மரணித்த குழந்தையின் மரணம் கொலை எனத் தீர்மானிக்கப் பட்டு சவூதி அரேபியாவில் இஸ்லாமிய ஷரியா சட்டப் பிரகாரம் மரண தண்டனை விதிக்கப் பட்டு இலங்கை மூதூரைச் சேர்ந்த பதினேழு வயது நிரம்பிய ரிசானா நபீக் சிரச்சேதம் செய்து கொலை செய்யப் பட்டார்.

இஸ்லாமிய ஷரியா சட்டப் பிரகாரம் இத் தண்டனை  சரியென்று ஒரு குழுவினரும் இல்லை என்று இன்னொரு குழுவினரும் வாதிடுகிறார்கள்.

இதில் எது சரி?

செய்தி இரண்டு:02 ஆம் திகதி சனிக்கிழமை பெப்ரவரி 2013.

தனது ஐந்து வயதுக் குழந்தையை பாலியல் வல்லுறவுக்குற்படுத்தி  சித்திரவதை செய்துக் கொலை செய்த தந்தைக்கு குழந்தையின் தாய்க்கு 'குருதிப் பணம் 'செலுத்துமாறு பணித்து சவூதி அரசு விடுதலை செய்திருக்கிறது.

இஸ்லாமிய ஷரியா சட்டப் பிரகாரம் சவூதி அரசு செய்த இச் செயல் சரியானது என்று ஒரு சாராரும் ...இல்லை......இல்லை.....இது தவறான தீர்ப்பு என்று ஒரு சாராரும் வாதிடுகிறார்கள்.

இதில் எது சரி?

இந்த இரண்டு குற்றங்களுக்கு விதித்த வித்தியாசமானத் தீர்ப்பில் இஸ்லாமிய ஷரியா நீதியை கேள்விக்குரிய  நிலையில் நடுச் சந்தியில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் துரோகத்தை சவூதியின் நீதிமன்றங்கள்  தீர்ப்பளித்த தீர்ப்புக்கள் செய்திருக்கின்றன.

சவூதி அரசின் அநீதமான நீதிக்கு ஆதரவாக  நியாயம் கற்பித்துக் கொண்டிருக்கின்ற இஸ்லாமிய அறிஞர்களின் செயல்களினால் இஸ்லாமிய ஷரியா இன்னும் களங்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது.

அவ்வாறான தவறான கருத்தியலைப் போதித்துக் கொண்டிருக்கின்ற அறிஞர்களின் கருத்துக்களால் கவரப் பட்ட புத்தி ஜீவிகளின் உயரிய ஆய்வுக்காக இந்தப் பதிவு பதிவேற்றம் செய்யப் படுகின்றது என்பதை தயை கூர்ந்து கருத்திற்கொள்ளவும் 

Thursday, February 7, 2013

என் கேள்விக்கு என்ன பதில்?.........கேட்பது நண்பர் முஹம்மத் அலி.........


அன்பு நண்பர் முஹம்மத் அலியின் கேள்வியொன்று இப்படி ஒலித்தது...........

Salaam Alaikum Brother,
I think your wrote this Article in " Vancha Pugazhchi Ani". I am not understand what you mean by இந்த இணைப்பில் ஈரானின் PRESS TV சவூதி அரசாங்கத்தின் மாற்றத்தின் நிஜமான பரிமாணத்தைப் புரிந்துக் கொள்ளாமல் அல்லது புரிந்துக் கொள்ளும் மன நிலையில் இல்லாமல் தவிப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. What is the changes happened in Saudi and Bahrain????????


சவூதி அராபியாவில் இஸ்லாமிய ஆட்சி முறையோ அல்லது இஸ்லாமிய ஷரியா சட்ட அமைப்போ கிஞ்சித்தும் இல்லை.

அதில் எமக்கு அணுவளவேனும் சந்தேகம் இல்லை.

இஸ்லாமிய வாழ்க்கை செயல் முறையை உலகுக்கு அறிமுகப் படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு ஐரோப்பிய முஸ்லிம்களுக்கும்,தமிழ் மொழி பேசுகின்ற முஸ்லிம்களுக்கும்,பாகிஸ்தானின் பஞ்சாபிய முஸ்லிம்களுக்கும் கடமையான தார்மீகப் பொறுப்பாக நாம் கருதுகிறோம்.

ஏனெனில்..........

Wednesday, February 6, 2013

நம்பிக்கைக் கீற்று........மாற்றத்தின் ஒலி .......இளவரசர் வலீத் இப்னு தலால் !


நம்பிக்கைக் கீற்று........மாற்றத்தின் ஒலி .......இளவரசர் வலீத் இப்னு தலால் !

கொஞ்சம் பொறுமையாக பின்வரும் இணைப்புக்களைக்  கவனியுங்கள்......அதன் பின்னர் மேலே உள்ள தலைப்பின் முழு வடிவம் உங்களுக்குப் புரிந்துப் போகும்.


http://youtu.be/LhkD9oSiQ2w


http://youtu.be/6LxRAweU7Fs

Sunday, February 3, 2013

படம் பார்க்காதவர்கள் படம் பார்த்து படம் பார்ப்பவர்களுக்கு பார்க்கக் கூடாத படம் என்று சொன்ன படம் .......விஸ்வரூபம்......விஸ்வரூபம் வெளி வருவதற்கு முன்னரேயே விஸ்வரூபம் எடுத்த பிரச்சினை முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் படம் விஸ்வரூபம் என்பதாகும்.

நாமறிந்த நமது ஊடகவியல் நண்பர்கள் சிலருக்கு விஸ்வரூபம் படத்தைப் போட்டுக் காண்பித்தார்கள் இலங்கை தணிக்கை சபையினர்.

அந்த நண்பர்களில் அநேகர் சினிமா தியேட்டருக்குச் சென்று சினிமா பார்க்காதவர்கள்.

இன்னும் சிலர் சினிமா கூடாது என்ற கருத்தில் இருப்பவர்கள்.

ஆக்ரோசமாக விஸ்வரூபம் எடுத்து விஸ்வரூபத்தை எதிர்க்கும் வஹ்ஹாபிய நிதியியல் பொறியில் சிக்கி தமது எஜமானர்களின் திருப்திக்கு ஜால்ரா அடிக்கும் திரு பி.ஜெய்னுலாப்தீன் அண்ணனின் தம்பிமாரோ இசையைக் கேட்பதுகூட 'ஹராம்' தவறு என்று வாதிடுபவர்கள்.

அவர்களின் இத்தகையப் போக்கு சாராய கடையில் சாராயம் குடிக்கும் ஒருவன் 'சுவையூட்டிக்கு' வைக்கப் பட்ட பன்றி இறைச்சியை 'ஹராம்'என்று சொன்னவனின் நிலையில் இருக்கின்றது என்று நண்பர் ரூமி சொல்வது நமக்குக் கேட்கிறது..

விஸ்வரூபம் திரைப் படத்தை இலவசமாக இலவச கேக் கூல் ட்ரிங்க்ஸ் களுடன் ரசித்துப் பார்த்த இவர்கள் இஸ்லாமிய முறைப்படி நமக்கு நாம் அந்தப் படத்தைப் பார்க்கக் கூடாது என்று தடை விதிக்கும் தகுதியை இழந்து நிற்கின்றார்கள்.

Friday, February 1, 2013

துபாயின் இரட்டை முகங்கள்...................................


நம்ரூதிய அடிமை சேவகம் இன்னும் தொடர்கின்றது..........அதற்கு சான்றுப் பகர்கின்ற இந்தப் பதிவுகள்  ஒரு சாட்சி மத்திய கிழக்கின் வசந்த பூமி என்று வர்ணிக்கப் படுகின்ற துபாயில் வேலை செய்கின்ற பணிப்பெண்கள் தங்களது எஜமானர்களின் சில்மிஷ லீலைகளினால் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள்........(தனது கணவனின் அத்துமீறல்களுக்கு அச்சத்துடன் அனுமதி அளிக்கின்ற எஜமானி அம்மாள் பயங்கரமான பொறாமை உணர்வுடன் வீட்டுப் பணிப்பெண்களுடன் நடந்துக் கொள்கின்றார்களாம்..........சில சமயம் நமது மகள் ரிசானா நபீக்குடன் அவள் வேலை செய்த வீட்டு எஜமானி தனது கணவனின் சில்மிஷ நடவடிக்கைகளினால் ரிசானாவைக் கொலை செய்யும் அளவுக்கு பொறாமை உணர்வுடன் இருந்திருப்பாளோ?........)

மத்திய கிழக்கு சிறைச்சாலைகளில் சிறை வைக்கப் பட்டிருக்கின்ற பெண் கைதிகளுடன் சிறைக் காவலர்கள் தகாத முறையில் நடந்துக் கொள்வார்களாம்.........(நமது மகள் ரிசானாவுக்கு அவ்வாறான கொடுமைகள் எதாவது நடந்திருந்து அவை சம்பந்தமான தகவல்கள் வெளியே கசிந்து விடும் என்கின்ற பயத்தில் அவளை மூடிய சிறைச்சாலையினுள்  அவசர அவசரமாக தலையைக்  கொய்து தமது இரகசியங்களை கசியாமல் பார்த்துக் கொண்டார்களோ?....)

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad