அஹ்லுல்பைத் Headline Animator

Friday, September 27, 2013

(5) தவறாகப் புரிந்துக் கொள்ளப் பட்ட இமாம்.......!!உலமாக்கள் உணர மறுக்கும் உண்மைகள்.....????


(5) தவறாகப் புரிந்துக் கொள்ளப் பட்ட இமாம்.......!!உலமாக்கள் உணர மறுக்கும் உண்மைகள்.....???? 
அத்தியாயம் ஐந்து நபிக் குடும்பத்துக்கு எதிராக கர்பலாவில் இருந்து பகிரங்கமாக துவக்கப் பட்ட இத்தகைய கொடூரமான செயல்களின் செயல் விளைவுகள் உலக முஸ்லிம்களை நபிக் குடும்பத்துக்கு தமது பூரணமான ஆதரவை வழங்கும் நிலைக்கு ஆளாக்கியது.

இவ்வாறான ஆதரவின் முழுமையான பங்கினை உலகின் பல பாகங்களுக்கும் அகதிகளாக சென்றிருந்த அப்பாஸியகுடும்பத்தினர் மிகவும் சூட்சுமமாக  தமக்கேற்றவாறு மாற்றியமைத்துக் கொண்டனர்.

ஏனெனில்,நபிக் குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்களாக இருந்த அப்பாஸிய சந்ததியினரின் தலைமையை மக்கள் எவ்வித எதிர்ப்புமின்றி அங்கீகரித்தனர்.

அவர்களும் நயவஞ்சகத் தனமாக அபூதாலிபின் குடும்பத்துக்கே ஆட்சி அதிகாரம் செல்ல வேண்டும்....அதற்காகத்தான் நாம் போராடுகிறோம்  என்று வாதாடி மக்களின் பூரண ஆதரவை பெற்று எழுச்சி கண்டு வந்தனர்.

இறுதியில் அப்பாசியர்களின் சூட்சுமமான சதியின் மூலம் பனு உமையாக்கள் ஆட்சியில் இருந்து தூக்கியெறியப் படுகிறார்கள்.

அபூதாலிபின் மக்களுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்குவோம் என்று சொல்லி புரட்சியில் வெற்றி பெற்ற அப்பாசியர்கள் நபிக் குடும்பத்தை அலட்சியப் படுத்தி விட்டு ஆட்சியை பலவந்தமாக அபகரித்துக் கொள்கிறார்கள்.

Friday, September 20, 2013

04- தவறாகப் புரிந்துக் கொள்ளப் பட்ட இமாம்........!!! உலமாக்கள் உணர மறுக்கும் உண்மைகள்???- (4)அத்தியாயம் நான்கு....கர்பலா கொலைக் களத்தில் இமாம் ஹுசைன் ஸலாமுன் அலைஹி அவர்களும் அவர்களது குடுபத்தவர்கள் அனைவரும் கொடூரமாக படு கொலை செய்யப் பட்டதன் பின்னர் உமையாக்களின் அராஜகங்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் மக்கள் அவர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து புரட்சி செய்யத் துவங்குகிறார்கள்.

இதில் நபிக் குடும்பத்தவர்கள் உமையாக்களினால் நேரடியாக பாதிக்கப் பட்டிருந்தக் காரணத்தினால் மக்களின் பேராதரவு நபிக் குடும்பத்தின் அங்கத்தவர்கள் மீதிருந்தது உண்மையே.

இமாம் ஹுசைன் ஸலாமுன் அலைஹி அவர்களது மகன் இமாம் ஜைனுல் ஆப்தீன் ஸலாமுன் அலைஹி அவர்களுக்கு இரண்டு புதல்வர்கள்.

Saturday, September 14, 2013

ஒற்றுமையே பலம் !!!

முஸ்லிம் சமூகம் உணரத் தவறிய உண்மை?
Tuesday, September 10, 2013

(03) தவறாகப் புரிந்துக் கொள்ளப் பட்ட இமாம்.............??? உலமாக்கள் உணர மறுக்கும் உண்மைகள்!!!. -03


அத்தியாயம் மூன்றுசில வரலாற்றாசிரியர்கள் தமது வரலாற்று நூல்களிலே இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி எழுபது மனைவியரைத் திருமணம் செய்து அவர்களை விவாகரத்து செய்தார் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இன்னும் சிலர் தமது வரலாற்றுக் குறிப்பில் அவர் தொண்ணூறு மனைவியரைத் திருமணம் செய்து அவர்களை விவாக விடுதலை செய்தார் என்று குறிப்பிடுகின்றனர்.

இன்னம் சிலர் தமது பதிவுகளில் இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி அவர்களது மனைவியர் தொகையை முன்னூறு என்றும் குறிப்பிடுகின்றனர்.

இக்கதைகளின் பிரகாரம் இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி பெண்களைத் திருமணம் செய்வார் பின்னர் விவாகரத்து செய்வார்.....திருமணம் செய்வார் மீண்டும் விவாகரத்து செய்வார்.திரும்பவும் திருமணம் செய்வார் மீண்டும் விவாகரத்து செய்வார் என்கின்ற தொனி ஒலிக்கிறது.

Thursday, September 5, 2013

தவறாகப் புரிந்துக் கொள்ளப் பட்ட இமாம்.............??? உலமாக்கள் உணர மறுக்கும் உண்மைகள்!!!. -02

தவறாகப் புரிந்துக் கொள்ளப் பட்ட இமாம்.............??? உலமாக்கள் உணர மறுக்கும் உண்மைகள்!!!. -02

அத்தியாயம் இரண்டு........

இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி அவர்களது பிறப்பு சம்பந்தமாக பதிவாகி இருக்கும் இந்த ஹதீஸைக் கொஞ்சம் ஆழமாகக் கவனியுங்கள்.

இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி பிறந்த செய்தி நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு எடுத்து சொல்லப் படுகிறது.

அவர்கள் குதூகலத்துடன் அன்னை பாத்திமா ஸலாமுன் அலைஹா உடைய வீட்டுக்கு விரைந்து வருகிறார்.

வீட்டிலே குழந்தைப் பிறந்தவுடன் அங்கிருந்தவர்கள் அமீருல் மூமினீன் இமாம் அலி ஸலாமுன் அலைஹி அவர்களிடம் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப் போகிறீர்கள் என்று கேட்டார்கள்.

அதற்கு இமாம் அலி ஸலாமுன் அலைஹி அவர்கள் கூறிய பதில் வித்தியாசமானது.நாம் கூர்ந்து கவனிக்கத் தக்கது.

Tuesday, September 3, 2013

தவறாகப் புரிந்துக் கொள்ளப் பட்ட இமாம்.............??? உலமாக்கள் உணர மறுக்கும் உண்மைகள்!!!.

தவறாகப் புரிந்துக் கொள்ளப் பட்ட இமாம்.............??? உலமாக்கள் உணர மறுக்கும் உண்மைகள்!!!.

அத்தியாயம் ஒன்று...

சில தினங்களுக்கு முன்னர் என்னுடைய அலுவலகத்துக்கு உடுகொடை என்ற ஊரிலே இருக்கின்ற மிகவும் பழமையும் பிரபல்யமுமான 'மதரசா'வின் பணிப்பாளர் தரத்திலிருக்கும் இரண்டு உலமாக்கள் வருகை தந்தார்கள்.

பளீரென்ற வெள்ளை ஜுப்பா அணிந்திருந்த அவர்கள் மிகவும் வசீகரமாகத் தோற்றம் கொண்டிருந்தார்கள்.

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad