அஹ்லுல்பைத் Headline Animator

Monday, February 28, 2011

மறுமையில் மக்களின் தலைவர்...!


மறுமையில் மக்களின் தலைவர்...!

நபி (ஸல்) அவர்களின் பெற்றோரை நரகத்துக்கு அனுப்பிக் கொண்டு இருக்கும் அறிவியல் உலமாக்கள்  தங்களது வாதத்துக்கு ஆதாரமாக  முஸ்லிம் ஹதீத் கிரந்தத்தில் உள்ள இரண்டு ஹதீத்களை சுன்னத் வல் ஜமாத்தினர் முன் சமர்பிக்கிறார்கள். 

அப்படியென்றால் இந்த ஹதீதுக்கு அவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

முஸ்லிமில் பதிவாகியுள்ள இந்த ஹதீதை கவனியுங்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்;

"மறுமை நாளில் ஆதமின் மக்கள் அனைவருக்கும் தலைவன் நானே.

முதன் முதலில் மண்ணறை  பிளந்து எழுபவனும் நானே.

முதன் முதலில் பரிந்துரை செய்பவனும் நானே.

முதன் முதலில் பரிந்துரை ஏற்கப் படுபவனும் நானே."

ஹசரத் அபூ ஹுரைரா (ரலி)  இந்த ஹதீதை அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம்;  முஸ்லிம்  ஹதீத் கிரந்தம் பாகம் நான்கில் 4574 வது ஹதீத்)

மறுமை நாளில் மக்கள் அனைவரின் தலைவரும், முதன்மையாக ஏற்கப் படும் பரிந்துரை செய்பவரில் முதன்மையானவருமான ஒரு தலைவரின் பெற்றோர் அன்றைய தினம் நரகத்துக்கு இழுத்துச் சென்று எறியப் படுகிறார்களாம்.

மறுமையில் சுவனவாசிகளின் தலைவரின் தாயும், தந்தையும் நரகத்தில்......?

நம்பி ஏற்றுக் கொள்ள முயுமா?

சாதாரண பாமரன் கூட விளங்கிக் கொள்ளும் முறையில் அமைந்த இந்த ஹதீத் உங்களுக்கு தெளிவைக் கொடுக்கும் என்று நம்புகிறோம். 

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தை மட்டுமல்ல, நபி (ஸல்) அவர்களின் பெற்றோரும், அவரை போசித்து பரிபாலித்த அவரது பெரிய தந்தை அபு தாலிப் அவர்களும் , இன்னும் யார் யாரெல்லாம் நபி (ஸல்) அவர்களின் அன்புக்கும் அருளுக்கும் ஆகரிணிக்கப் படுகிறார்களோ  அவர்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரையில் சுவனம் செல்வார்கள் எனபது இந்த ஹதீதில்  இருந்து உங்களுக்கு விளங்கியிருக்கும்.

Sunday, February 27, 2011

அஹ்லுல் பைத்களுக்கு எதிரான அரசியலின் புது வடிவம். -அபூதர் கிப்பாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் ;

ஒருநாள் மதியவேளை நாம் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டு இருந்தோம்.

அப்பொழுது ஒரு வறியவர் வந்து எங்களிடம் உதவி கேட்டுக் கொண்டு இருந்தார்.

ஆனால் எவரும் அவருக்கு எதையும் கொடுக்க வில்லை.

அம்மனிதர் வானை நோக்கி கைகளை உயர்த்தி " இறைவா! நீயே சாட்சி.நபியின் பள்ளிவாசலில் ஒருவரும் எனக்கு எதையும் தரவில்லை" என முறையிட்டார். 

அப்பொழுது தொழுகையில் 'ருகூவில்' இருந்த  அலி (ரலி) அவர்கள் அம்மனிதரை நோக்கி விரலை நீட்டினார்.

அந்த விரலில் இருந்த மோதிரத்தை கழற்றி எடுத்துக் கொண்டு அம் மனிதர் அகன்றார்.

இதனை அவதானித்துக் கொண்டு இருந்த நபி (ஸல்) அவர்கள் விண்ணை நோக்கி தலை உயர்த்தி பின் வருமாறு மொழிந்தார்கள்

Thursday, February 24, 2011

"நரகத்தில் நபிகளாரின் பெற்றோர்....உமையாக்களுக்கு உதவுகின்ற உலமாக்கள்.....????


"நரகத்தில் நபிகளாரின் பெற்றோர்....உமையாக்களுக்கு உதவுகின்ற நிகழ் கால உலமாக்கள்.....????

இலங்கையில் உள்ள ஜாமியா நளீமியாவின் மூத்த விரிவுரையாளர்கள் நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் நரகவாதிகள் என்கிற ரீதியிலான பிரசங்கங்களை பகிரங்கமாக செய்து வருகிறார்கள்.

இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அஸ் செய்க ரிஸ்வி முப்தி அவர்களும் இதே கருத்தை பலமுறை ஜும்மா மேடைகளில் சொல்லி இருக்கிறார்.

நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் நரகத்தில் வேதனை செய்யப் படுகிறார்கள் என்ற தவறான கருத்துக்கள் இதன் காரணமாக எம்மிடையே வலுவடைய வாய்ப்பு இருக்கிறது.

இந்த தவறான கருத்தினது உருவாக்கத்தையும், அத்தகைய கருத்துக்களின் பொய்மையையும் ஆய்வு செய்யும் நோக்கில் இந்தக் கட்டுரை எழுதப் படுகிறது.  

Friday, February 18, 2011

வெள்ளிக் கிழமை அன்று நபி (ஸல்) மீது ஸலவாத்து சொல்லுவதின் சிறப்பு


உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும்.  அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள்.  
அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது.  அந்நாளில் ஸீர் ஊதுதல் நிகழும்.  அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும்.  
எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள்.  உங்களது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  
அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்?  நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே! என்று நபித்தோழர்கள் கேட்ட போது, 
”நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான்” என்று பதிலளித்தார்கள். 
அறிவிப்பவர் : அவ்ஸ் பின் அவ்ஸ்,   நூல் : அபூதாவூத் 883

Thursday, February 17, 2011

"அறிவியல் விபச்சாரர்கள்""அறிவியல் விபச்சாரர்கள்"

பேருவளையில்   தரீக்காக்களின் செல்வாக்கு அதிகம்.

அதனால் அங்குள்ள   மக்களில் பெரும்பாலோர் 'சுன்னத் வல் ஜமாத்தினர்.'  

சுன்னத் வல் ஜமாத்தினர் என்றாலே அவர்கள் நபி (ஸல்) அவர்களுடனும், அவர்களது குடும்பத்தவர்களுடனும் அதீத அன்பு கொண்டவர்கள் எனபது நாம் அறிந்ததே.

'வஹ்ஹாபிகளின்' பண உதவியில் 'ஜாமியா நளீமியா'  பேருவளையில் உருவாக்கப் பட்டதே இந்த 'தரீக்காக்'களின் செல்வாக்கை அங்கு சிதைத்து விடுவதற்கே என்ற நம்பிக்கையில் தவறு எதுவும் இல்லை.

பாவம் 'நளீமிய்யாவின்' ஏழை புத்திசாலி மாணவர்கள்.' 

Wednesday, February 16, 2011

"ஹிஜ்ரா' ' கலண்டரில்' மாற்றங்கள் செய்த ஹசரத் உமர் (ரலி) அவர்கள்."


"ஹிஜ்ரா' ' கலண்டரில்' மாற்றங்கள் செய்த ஹசரத் உமர் (ரலி) அவர்கள்."


"திட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கு இல்லாத நிலையில் இருக்க வில்லையா ?"

கலப்பான இந்திரியத் துளியில் இருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம்.- அவனை நாம் சோதிப்பதற்காக , அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்"

நிச்சயமாக நாம் அவனுக்கு வழியை காண்பித்தோம்.நன்றி உள்ளவனாக இருக்கின்றான். அல்லது நன்றி அற்றவனாக இருக்கின்றான்"
(அல் குரான் 76   :   1  முதல் -   3  வரையான ஆயாத்துகள்)             

இது ரபியுல் அவ்வல் மாதம்.

இந்த மாதத்தில் எமது சுன்னத் வல் ஜமாஅத் முஸ்லிம்களிடையே ஒரு போட்டா போட்டி நடைபெறும்.

சிலர் நபி பிறந்த தினத்துக்கு விழா எடுப்பார்கள்.

இன்னும் சிலர் அப்படி விழா எடுப்பதை கடுமையாக விமர்சிப்பார்கள்.அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்களில் ஒன்று 'இந்த மாதம் இதே தினம் தான் நபி (ஸல்) அவர்கள் இந்த உலகை விட்டும் மறைந்தார்கள்.ஆகவே , இப்படி விழா எடுப்பது அவரது மறைவை நாம் கொண்டாடுவது போல இருக்கும்' என்று சொல்வார்கள்.

Tuesday, February 15, 2011

இமாம்கள்' தவறே செய்ய மாட்டார்களாம்?இமாம் அல்லது தலைவர் எனும் பதவி குறிப்பிட்டதொரு சமுகத்தில், சமுக தலைமையை ஏற்பவருக்கு வழங்கப் படுகிறது.

இஸ்லாம் மனித குலத்தை நேர்வழிப் படுத்த வந்த ஒரு மார்க்கமாகும்.

நபிமார்களின் காலத்தில் அக்கால நபிமார்கள் மனிதர்களின் தலைவர்களாக இருந்து இருக்கிறார்கள்.

இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் மறைவிற்குபப் பின்னர் உம்மமத்தை வழிநடாத்தும் பொறுப்பு அல்லாஹ்வாலும் அவனது துதராலும் நியமிக்கப் பட்ட  'இமாம்க'ளிடம் ஒப்புவிக்கப்படுகிறது.

அத்தகை இமாம்களுக்கு முற்றிலும் கட்டுப் பட்டு நடக்குமாறு அல் குரான் எம்மை வேண்டி நிற்கிறது.

"நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு  கீழ் படியுங்கள்; இன்னும் தூதருக்கும்,உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ் படியுங்கள்............. "
(அல் குரான் 4 : 59  )  

Sunday, February 13, 2011

படிகள் படிப்பினைகள்- ஒன்று

Baby Giraffe


படிகள் படிப்பினைகள்-   ஒன்று.
இரவு 'டிஸ்கவரி' சேனலில் ஒரு காட்சி.

ஒட்டக சிவிங்க்யைப் பற்றிய ஒரு விவரணசித்திரம்.

தாய் ஒட்டகசிவிங்கி  நின்றபடியே ஒரு குட்டியை ஈன்றது.

அதனது குட்டி தாயின் வயிறு என்ற பாதுகாப்பில் இருந்து தரையில் தடாலென வீழ்ந்தது.

அது மிகவும் கஷ்டப்பட்டு தரையில் அமர்ந்த காட்சி பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது.

அதனது தாய் செய்த முதல் வேலையைப் பார்த்த  போது அதிர்ச்சியாக இருந்தது.

கஷ்டப்பட்டு தரையில் அமர்ந்த   குட்டியின் பின்னால் வந்த  அதனது தாய் தனது குட்டியை  எட்டி உதைத்தது.

உடனே அந்த குட்டி எழுந்தது. நிற்க முடியாமல் வெல வெல என நடுங்கியது.என்றாலும் அதனது கால்கள் வலிமை இல்லாத காரணத்தால் தடுமாறி மீன்டும் அமர்ந்தது.

அதனது தாய் மீன்டும் தனது குட்டியின்  பின்னால் வந்து ஒரு உதை கொடுத்தது.

தடுமாறி எழுந்த குட்டி வெலவெலத்தபடி மீன்டும் அமர்ந்தது.

தாய் உதைப்பதும்  குட்டி எழுந்து நிற்க முடியாமல் அமர்வதும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

Saturday, February 12, 2011

" முஸ்லிம் உம்மத்தின் காலத்தின் தலைமைத்துவம் - இமாம் மஹ்தி (அலை) "

Click to enlarge" முஸ்லிம் உம்மத்தின்  காலத்தின் தலைமைத்துவம் -   இமாம் மஹ்தி (அலை) "

இமாம் மஹ்தி (அலை) அவர்களின் பிறப்பு பற்றி எங்களது இமாம்களின் பதிவுகள் சிலவற்றை சுருக்கமாக கவனிப்போம்.
அபு அல் பலாஹ் ஹன்பலி என்பவர் ஹன்பலி மத்ஹபின் இமாம்களில் ஒருவர்.

அவரது 'ஷதாரத் அல் தஹாபிலும்' , 'தஹாபி இன் அல் இப்ர பி கபர் மின் காபரிலும்'  பதிந்துள்ள பதிவு இவ்வாறு ஒலிக்கிறது.

"அலவி ஹுசைனில் இருந்து இமாம் ஜாபர் சாதிக்கும்    இமாம் ஜாபர் சாதிக்கின் மகன் மூஸா காசிமும் அவரது மகன் அலி ரிதாவும் அவரது மகன் ஜவேதும் அவரது மகன் அலி ஹாதியும் அவரது மகன் ஹசன் அஷ்கரியும்  அவரது மகன் முஹம்மத் ஹசன் அஸ்கரியுமாவார்.

அஹ்லுல் பைத்தின் ஆதரவாளர்கள் இவரை கலாப் ஸாலிஹ் ,ஹுஜ்ஜத், மஹ்தி, முந்தஜார் (எதிர்பார்க்கப் படுபவர்), ஷாஹிப் அல் ஷமான் (நிகழ காலத்தின் இமாம்) என்றெல்லாம் அழைக்கிறார்கள்.- என்று பதிந்துள்ளார்கள்.

Thursday, February 10, 2011

"அல்லாஹ்வின் எதிரிகளும் , நம்ரூதின் நண்பர்களும் "


"அல்லாஹ்வின் எதிரிகளும்  , நம்ரூதின் நண்பர்களும் "

உலகத்தில் முதன் முதல் ஜனநாயக முறையை அறிமுகப் படுத்தியது யார் என்று பார்த்தால் அந்தப் பெருமை பண்டைய   பபிலோனிய அல்லது மெசெபோதோமியன் நாகரிகத்தையே சாரும்.

அன்றைய காலத்தில் பரம்பரை பாராம்பரியத்தை  கொண்ட ஒருவர் அரசனாக இருப்பார். அதற்கு கோத்திரம் ஒரு காரணமாக இருந்தாலும், ஆளுமையும் ஏனையோரை அடக்கி ஆளும் தன்மையும் அதற்குப் பிரதான காரணியாக இருக்கும்.

அந்த அரசனைச் சுற்றிலும் உயர் கோத்திரத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் ஆட்சி செய்யும் முறைகளில் அரசனை வழி நடாத்திக் கொண்டு இருப்பார்கள்.

முக்கியமான சட்டஅமுலாக்கல்களை   இந்தஉயர்கோத்திரத்தை  சேர்ந்தவர்களே
தீர்மானிப்பார்கள்.

வாக்குப் பதிவின் மூலம் அந்த சட்ட திட்டங்கள் தீர்மானிக்கப்படும்.

இதன் மூலம் உலகில் முதன் முதலில் வாக்களித்து , அதன் மூலம் திட்டங்களை முடிவு செய்வது என்கிற ஜனநாயக முறை மேசெபோதோமியன் நாகரிகத்தில் இருந்தே தோற்றம் பெற்றது என  கூற முடியும்.

உயர் கோத்திரத்திலும் வாக்களிக்கும் தகுதி குறைந்தது ஒரு இலட்சம் அடிமைகளுக்கு சொந்தக்காரனாக இருக்கும் உரிமையாளனுக்கே வழங்கப்பட்டது.

சாதாரணமாகவே அந்த உயர் கோத்திரத்தை சேர்ந்தவர்கள் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான அடிமைகளுக்கு உரிமையாளனாக அக்காலத்தில் இருந்து இருக்கிறார்கள்.

Wednesday, February 9, 2011

எங்களது இமாம் இப்ராஹீம் (அலை) உடைய நிஜமான போராட்டம் என்ன?
எங்களது இமாம் இப்ராஹீம் (அலை) உடைய நிஜமான போராட்டம் என்ன?
எங்கள் தளத்துக்கு விஜயம் செய்த எமது நண்பர் ஒருவர் தொலைபேசியில் எம்மை தொடர்பு கொண்டார்.

"இப்ராஹீம் (அலை) பற்றி புதிதாக சொல்லி இருக்கிறீர்களே?" என்றார்.

"நாம் புதிதாக ஒன்றும் சொல்லவில்லையே? "என்றோம்.

"சிலை வணக்கத்துக்கு எதிரான அவரது போராட்டத்தை 'அடிமை விடுதலை' என்று மட்டுப் படுத்தி இருக்கிறீர்களே?" என்றார்.

Sunday, February 6, 2011

"நபிகளார் முன் அறிவித்த "தஜ்ஜாலின் தலைமைத்துவ" வரலாறு"
"நபிகளார் முன் அறிவித்த "தஜ்ஜாலின் தலைமைத்துவ"   வரலாறு"

நபி (ஸல்) அவர்களின் முதலாவதும் இறுதியுமான ஹஜ்ஜதுல் விதாவில் சுமார் ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் மக்கள் கலந்துக் கொண்டதாக வரலாற்றில் பதிவாகி உள்ளது.

மக்காவில் நபி (ஸல்) அவர்கள்  பட்ட இன்னல்களுக்கு மதீனாவில் முடிவு கண்டாகி விட்டது.

இஸ்லாமிய பேரரசும் உருவாகி விட்டது.

கலிமா, தொழுகை, நோன்பு, ஸகாத் உள்ளிட்ட அனைத்து சட்ட திட்டங்களும் வகுத்து, அவற்றை எப்படி நடைமுறைப் படுத்த வேண்டும் என்றும் செய்து காட்டியுமாகிவிட்டது.

இனி ஒன்றே ஒன்றுதான் பாக்கி.

எப்படி ஹஜ் கடமையை செய்வது?

Friday, February 4, 2011

"லாரன்ஸ் ஒப் அராபியாவின் சம கால ஏஜெண்டுகள் -"லாரன்ஸ் ஒப் அராபியாவின் சம கால ஏஜெண்டுகள் -
ஓர் ஆய்வு களம்.--   முதலில் இந்த ஆய்வு பிறந்த கதை.

நாம் இலங்கையில் மிகப் பிரபலமான இஸ்லாமிய மார்க்க அறிஞரும், இஹ்வானுள் முஸ்லிமின் ஆரம்ப கர்த்தாவுமான உஸ்தாத் மன்சூரையும், அவர் கல்வி கற்றுக் கொடுத்த ஜமியாஹ் நளீமிய்யாவின் மாணவர்களையும் ஒரு ஆரோக்யமான ஆய்வுக்கு அழைத்து இருந்ததை இந்த தளத்துக்கு அடிக்கடி தடம் பதித்த எமது   மதிபிற்குரிய உலகளாவிய  வாசகர்கள் அறிந்து இருப்பீர்கள்.

Wednesday, February 2, 2011

"நளீமிய்யாவின் இளம் உலமாக்களுக்கு பொருத்தமான ஒரு ஆய்வு தளம்.""நளீமிய்யாவின்  இளம்  உலமாக்களுக்கு பொருத்தமான ஒரு ஆய்வு தளம்."
முதலாவது ஆய்வு தளம்.

அண்மையில் இனைய தளம் ஒன்றில் உஸ்தாத் மன்சூர் அவர்களின் பகிரங்க பேச்சொன்றை காணும் வாய்ப்புக் கிட்டியது.- அல்ஹம்துலில்லாஹ்.

அவரது உரையாடலில் ஒரு கட்டத்தில் "அஹ்ளுல்பைத்களைப்' பற்றிக் குறிப்பிடும் சூறா அஹ்ஜாபின் 33  :  33   வது ஆயத்துக்கு மிகவும் தப்பான விதத்தில் அர்த்தம் சொன்னதை எம்மால் ஜீரணிக்க முடியவில்லை.

அவரது உரையாடல் நெடுகிலும் "அஹ்ளுல்பைத்களுக்கு" ஆதரவான- அதே சமயம் உண்மையான நேர் வழியைத்  தேடி ஆய்வு செய்கின்ற பட்சத்தில் நேரிய பாதையை தெளிவு படுத்துகின்ற ஆய்வுக்குரிய   அனைத்து ஆதாரங்களையும் "சர்ச்சைக்கு உரிய ஆதாரங்கள்" என்கிற தோரணையில் பேசியதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

அவர் பேசிய அனைத்து விடயங்களும் எமது ஆய்வுக்கு உட்படுத்தப் படவேண்டிய கட்டாயத்தில் இருப்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.

Tuesday, February 1, 2011

"அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு சார்பான சாட்சியாளனாக இருப்பதற்கு மறுத்த நபி (ஸல்) அவர்கள்."
இமாம் மாலிக் (ரஹ்) உடைய 'அல் முவத்தாவில்' பின் வரும் ஹதீத் பதிவாகி இருக்கிறது.

நபி(ஸல்) அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜான ஹஜ்ஜதுல் விதாவின் பின்னர்,தங்களது மறைவிற்கு சில நாள்களுக்கு முன்னர் உஹத் மலை அடிவாரத்துக்கு சென்றார்கள்.

அங்கே உஹத் ஷஹீத்களுக்காக பிரார்த்தித்த பிறகு, அவார்களைப் பற்றி கூறும் பொழுது  "நான் உங்களுக்கு சார்பான சாட்சியாளனாக இருக்கிறேன்" என்றார்கள்.

அப்பொழுது அவ்விடத்தில் இருந்த அபூபக்கர் (ரலி) அவர்கள் இதனைக் கேட்டவுடன்"அல்லாஹ்வின் தூதரே! நாங்களும் அந்த ஷஹீதுகளின் சகோதரர்களிலும் உள்ளவர்கள் தானே?, அவர்களைப் போன்று நாங்களும் முஸ்லிம்கள் தானே?, அவர்களைப் போன்று நாங்களும் உஹதில் யுத்தம் புரிந்தவர்கள் தானே? எங்களுக்கும் நீங்கள் சாட்சியாக இருக்க மாட்டீர்கள?" என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்.

"நபி (ஸல்) அவர்களைப் போல வாழ்ந்து மறுமை நாளில் வெற்றிப் பெற விரும்பும் ஒருவர் எப்படி வாழ்வது" -"என்னைப் போன்று வாழ்ந்து என் வழியிலேயே மரணிக்க விரும்பும் ஒருவருக்கு"

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: "என்னைப் போன்று வாழ்ந்து என் வழியிலேயே மரணித்து மறுமையில்  சுவனத்தை அடைய விரும்பும் ஒருவர் அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய செய்தி யாதெனில், அத்தகைய ஒருவர் அலியை ஏற்று அவரை ஆதரிப்பவராக இருந்து அஹ்லுல் பைத்களான எனது குடும்பத்தவர்களை எனக்குப் பின்னால் பற்றிப் பிடித்துக் கொள்ளவும்.

" அஹ்லுல் பைத்தினர் எனது குடும்பத்தினராவர். அவர்கள் என்னில் இருந்தும் உள்ளவர்களாவர். எனக்கு இருக்கும் அதே அறிவும், இறைவனைப் பற்றிய விளக்கமும் தெளிவும் அவர்களுக்கும் வழங்கப் பட்டுள்ளது.

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad