அஹ்லுல்பைத் Headline Animator

Sunday, March 18, 2012

இறைவனைத் தேடும் அன்புராஜ்.........இஸ்லாத்தைக் குழப்பும் அஷ் சேய்க் அகார் (நளீமி)BA ......இருவரில் இறுதி வெற்றி யாருக்கு ???!!!டாக்டர் அன்பு ராஜ் அஹ்லுல்பைத் தளத்துக்கு நன்கு பரிச்சயமானவர்.

மௌலவி அகார் (நளீமி)BA  நளீமியாவின் பிரதிப் பணிப்பாளர் , பிரச்சாரப் பீரங்கி தற்கால இஸ்லாமிய அறிஞர்களில் இலங்கையை பிரபலமாக பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு இஸ்லாமிய அறிஞர்.

மௌலவி அகார் (நளீமி)BA  நளீமியாவின் பிரதிப் பணிப்பாளர்
லண்டனுக்கும், சுவிசுக்கும் .....பணம் படைத்தவர்கள் நிறைந்திருக்கும் இடங்களுக்கு கால்சீட் வைத்து இஸ்லாமிய பிரசாரத்துக்குப் பறந்து ...பறந்துக் கொண்டிருக்கும் ஒரு நவீன பிரச்சார நாயகன்.

அல்லாஹ்வின் ஆட்சியை உலகில் நிலை நிறுத்தப் போவதற்காக , ஸ்திரப் படுத்துவதற்காக இஸ்லாத்தின் வெள்ளைகார எதிரிகளின் மண்ணிலேயே அவர்களின் அனுமதியுடன் அல்லது அவர்களின் பூரண ஆதரவுடன் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்யும் விரிவு பட்ட ஒரு விரிவுரையாளர்.

என்றாலும், கருப்பர்கள்  நிறைந்த வரண்டு போன சூடானுக்கோ, பசியினால் மெலிந்து போன சோமாலியாவிற்கோ அவர் அல்லது அவர் போன்றோர்  இஸ்லாமிய பிரச்சாரத்துக்குப் போனதாக அறியக் கிடைக்கவில்லை.

அன்பு ராஜ் VS அகார் .........

இல்லை...இல்லை....அது எவ்வகையிலும் சாத்தியம் இல்லை.

ஒருவர் தன்னைப் படைத்த இறைவனைப் பற்றிய உண்மைகளையும் மரணத்தின் பின்னால் இருக்கின்ற நித்திய வாழ்வின் இரகசியங்களையும் தேடுபவர்.

மற்றவர் இஸ்லாத்தில் மிகவும் ஆளுமையான புலமைப் பெற்று இஸ்லாத்தை நன்கு கற்றறிந்து இஸ்லாத்தை அறியாத மக்களுக்கு அதன் உண்மையான சத்தியங்களை மிகவும் சூசகமாக  மறைப்பவர்.

நாம் இவ்வாறு துணிச்சலுடன் கூற அல்லது முடிவுக்கு வர என்ன காரணம் தெரியுமா?


அல் குர் ஆனுக்கு முரண் படுகின்ற ஹதீஸ்களை பொறுக்கியெடுத்த
அலிஸீனா அல்லது அத்தகைய ஹதீஸ்களை தமது பக்க நியாயத்துக்கு ஆதாரமாக எடுத்துக் கொள்கின்ற நமது தற்கால இஸ்லாமிய அறிஞர்கள் போன்ற அறிஞர்கள் அல் குர் ஆனுக்கு முரண் படுகின்ற அவற்றின் கருத்துக்களை மக்கள் மயப் படுத்தி மக்களைக் குழப்புகின்றனர்.

நமது நண்பர் டாக்டர் அன்புராஜினால் அலிஸீனா பதிவேற்றியிருந்த பதிவுகளை ஆதாரமாக கொண்டு நமக்கு அனுப்பப்பட்ட அனைத்து பின்னூட்டங்களும் அதில் அவர் ஆதாரமாக காட்டிய ஹதீஸ் அறிவிப்புகளும் முற்றுமுழுதாக அல் குர்ஆனின்   போதனைகளுக்கு முரண்படுகின்றன.

அதன் காரணமாகத்தான் நாம் அவற்றை துணிகரமாக பதிவேற்றினோம்.

நாம் அவ்வாறு பதிவேற்றிய பின்னூட்டங்களை அஹ்லுல்பைத் தளத்தின்   பதிவில் இருந்து அகற்றி விடுமாறு நண்பர் அன்பு ராஜ் அன்புடன் எம்மை கேட்டிருந்தார்.

அவரது உயர்ந்த குணத்துக்கு வாழ்த்துக்கள்.

நன்றி.

அவ்வாறான அவரது பணிவான வேண்டுதலில் நாம் அவரது மகான்மியத்தை உணர்கிறோம்.

உண்மைகளை உணர்ந்தவுடன் உடனடியாக அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் அவரது உள்ளம் இருப்பதில் இறைவனைத் தேடும் பயணத்தில் பண்பட்ட அவரது இறந்த காலம் தெரிகிறது.

அல் குர் ஆனுடன் இறைவன் பற்றிய ஆய்விலும், மனிதனின் மரணத்தின் பின்னர் இருக்கும் நித்திய வாழ்வு பற்றிய ஆய்விலும் நிகழ் காலத்தில் அவர் இருக்கிறார்.

உண்மைகளை உணர்ந்ததன் பின்னரும் அவற்றை பிடிவாதத்துடன் மறுத்து உமையா அறிஞர்களின் இஸ்லாத்தில் இருக்கும் எங்களது நிகழகால  இஸ்லாமிய மார்க்க அறிஞர்களை விடவும் அவர் சிறந்தவர்.

இதனால், அவரது எதிர்காலம் இறைவனின் அருளால் ஒளியுடையதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

இறைவனைப் பற்றியும் அவனது இறுதி வேதத்தை மனித சமூகத்துக்கு எடுத்துச் சொன்ன அவனது இறைத்தூதர் பற்றியும் இறைவனின் எதிரிகள் மக்கள் மயப் படுத்தியிருந்த கருத்துக்களை தனது பின்னூட்டங்கள் மூலம் நண்பர் அன்பு ராஜ் நமது கவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறார்.

அத்தகைய தவறான கருத்துக்களின் தவறுகளை பிரித்தறியும் அறிவில் இறைவனின் எதிரிகளின் சுய ரூபத்தை நம்மால் துகிலுரிக்க முடியும் என்று நம்புகிறோம்.

ஆகவே, நண்பர் அன்புராஜின் அலிஸீனா சார்ந்த பின்னூட்டங்கள் எங்களது தளத்தில் தொடர்ந்து பதிவில் இருப்பது அவசியம் என்று நினைக்கிறோம். 

நண்பர் டாக்டர் அன்புராஜ் எமது வேண்டுகோளில் புதைந்திருக்கும் உண்மையைப் புரிந்து அதற்கு பெரு மனதுடன் அனுமதி அளிப்பார் என்றும் நம்புகிறோம்.

இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் அவை ஒவ்வொன்றையும் வெவ்வேறாக துகிலுரித்துக் காட்டவும் உத்தேசித்துள்ளோம்.

அராபிய ஏகாதிபத்திய அநியாயக்காரர்கள் உலகத்து மக்களை மட்டுமல்ல,     உலக மக்களுக்கு நேர் வழி காட்ட வந்த இஸ்லாத்தையும் சிதைத்து விட்டுத் தான் சென்றிருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.           

அல் குர் ஆனுக்கு முரண் படுகின்ற எந்தவொரு ஹதீஸ் அறிவிப்பும் அல் குர் ஆனுக்கு விளக்கமாக ஏற்றுக் கொள்ளப் பட முடியாது என்று இஸ்லாமிய பெரும் பிரிவுகளில் இரண்டான ஷியா சுன்னி அறிஞர்கள் கருத்து வேறு பாடுகளின்றி ஒருமித்து ஏற்று உடன் பட்டிருக்கிறார்கள்.

எனவே, அல் குர் ஆன் சொல்லும் போதனைகளுக்கு முரண் படும் அவற்றைக் கண்டு நாம் நம்மைக் குழப்பிக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

தம் அப்பழுக்கற்ற தன்மைக் காரணமாக நிலையற்ற உலக வாழ்வின் அற்ப இன்பங்களில் மூழ்கிக் கிடப்பதுதான் நலம் என்று கருதாதோர் இந்த உலகத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களைப் பொறுத்தவரை உலக வாழ்வில் உண்டாகும் சுக துக்கங்கள் இலாப நட்டங்கள் அனைத்தும் வெறும் மாயையே அன்றி வேறில்லை.

வாழ்க்கைப்   பயணத்தில் தமக்கு முன் வந்துப் போனவர்களின், சுக போகங்களில் மூழ்கிக் கிடந்து மறைந்தவர்களின் நினைவு எப்பொழுதும் கண் முன் தோன்றி இவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டேயிருக்கும்.

இத்தகைய மனத் தூய்மைக் கொண்டோர் நித்திய உலகின் பால் ஈர்க்கப் படுகின்றனர்.

இவர்களின் பார்வையில் மாறுகின்ற இவ்வுலகின் பல்வேறு தோற்றங்கள்  சுயாதீனமான  யதார்த்தங்களாகவன்றி வானுலகின் குறியீடுகளாகவும் எச்சரிக்கைகளாகவும் தெரிகின்றன.  

இக்கட்டத்திலேயே இத்தகைய மனிதர்கள் மண்ணிலும் விண்ணிலும் அடையாளங்கள் மூலமாக மனிதர்களின் ஆன்மாவினுள்ளும் அவர்கள் இறைவனது மாட்சிமையின் எல்லை இல்லா மகத்துவத்தின் பேரொளியை ஆன்மீகக் காட்சியாகக் காண்கின்றனர்.

விளைவு?

சிருஷ்டியின் இரகசியக் குறியீடுகளை புரிந்துக் கொள்வதற்கான ஆதங்கமும் ஆசையும் அவர்களின் இதயங்களை முழுமையாகப் பற்றிக் கொள்கிறது.

அதனால், சுயநலப் பற்று எனும் ஒடுங்கிய ,இருண்ட, வற்றிப் போன கிணற்றினுள் சிறைப் பட்டிருப்பதட்குப் பதிலாக அவர்கள் நித்திய உலகின் எல்லையற்ற பெரு வெளியில் இறகு விரித்து ஆன்மீக உலகின் உச்சி நோக்கி மேலே...மேலே..மேலே....உயர்ந்து செல்கின்றனர்.

அத்தகைய ஆன்மீகவாதிகளின் செவிகளில் சிலை வணக்கத்தை இறைவன் தடை செய்துள்ளான் என்ற செய்தி கேட்கும் பொழுது, வெளிப்படையாகத் தெரியும் அதன் கருத்தான சிலைகளின் முன்னால் மனிதன் மண்டியடக் கூடாது என்று சாதாரண மனிதனின் மனத்தில் உதிக்கும் எண்ணத்தை மீறிய நிலையில், இறைவனுக்கு அப்பாற்பட்ட எதற்கும் மனிதன் கீழ்ப் படியக் கூடாது என்பதே இக்கட்டளையின் அர்த்தம் என்று இவர்கள் புரிந்துக் கொள்கின்றனர்.

அது மட்டுமன்றி, இறைவன் அல்லாத எதன் மீதும் நம்பிக்கை வைப்பதோ , அதனை அஞ்சுவதோ கூடாது என்றும் அவர்கள் புரிந்துக் கொள்கின்றனர்.

இதற்கும் அப்பால் சுயநலப் பசிகளின் தேவைகளுக்கு அவர்கள் அடிமையாகி விடக் கூடாது என்றும் இன்னும் அப்பால் இறைவனுக்கு அப்பால் பட்ட எதிலுமே நாட்டம் செல்லக் கூடாது என்று புரிந்துணர்வு ஏற்படுகிறது.

இதே போன்று நாம் தொழ வேண்டுமென அல் குர் ஆனிலிருந்து அறியும் பொழுது இதன் வெளிப்படையான அர்த்தம் தொழுகையின் குறிப் பிட்ட செயல் முறைகளை நிறை வேற்றுவது என்றிருந்த போதிலும், இதயங்களாலும் ஆன்மாக்களாலும் இறைவனுக்கு அடிபணிய வேண்டும் என்றும் உள்ளர்த்தத்தின்   மூலம் இவர்கள் அறிந்துக் கொள்கின்றனர். இதற்கும்   அப்பால் இறைவன் முன்னால் தாம் எத்தகைய சக்தியுமற்ற அற்பப்பதர்கள் எனவும் தம்மை முற்றாக மறந்து இறைவனை மட்டுமே தியானிக்க வேண்டுமெனவும் அவர்கள் அறிந்துக் கொள்வர்.

சிலை வணக்கம், தொழுகை என்ற இந்த இரண்டிலும் உள்ளர்த்தம் காணப் படுவது கட்டளையின் புறவய வெளிப் பாட்டின் காரணமாகவோ சம்பந்தப் பட்ட விலக்கலின் காரணமாகவோ அல்ல என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

பிரபஞ்ச முறைமை குறித்து சிந்தனை செய்யும் ஒருவருக்கு , தனது மனோ இச்சைகளை   விடவும் பிரபஞ்ச யதார்த்தத்தின் தரிசனத்தை விரும்பும் ஒருவருக்கு, பிறர் நலத்தை தன்னலமாகக் கொண்டு மெய்ப் பொருளை நேசிக்கும் ஒருவருக்கு, வாழ்வியலின் நிலையற்ற தன்மையின் யதார்த்தத்தைப் புரிந்துக் கொண்டு இறைவனை நேசிக்கும் ஒருவருக்கு இவ்விளக்கத்தை அடைவது தவிர்க்க முடியாததாகும்.

அல்லாஹ் அருளிய புனிதத் திருமறை சகல இஸ்லாமிய சிந்தனை வடிவங்களுக்கும் ஆதார மூலமாகும்.

இஸ்லாத்தின் மத ஆதாரங்கள் அனைத்துக்கும் உறுதியையும் அதிகாரத்தையும் வழங்குவது புனித அல் குர்ஆனேயாகும்.

அல் குர்ஆன் மனிதர்களுக்கு சவால் விடுத்து அதன் திரு வசனங்களைப் பற்றிசிந்தனை செய்து அவற்றில் தாராம்மியமோ, முரண் பாடுகளோ இல்லை என்பதை அவதானிக்குமாறு கூறுகிறது.

முடியுமானால், அதைப் போல அதற்கு   ஈடாக இன்னொரு மத நூலை தயாரித்துக் காட்டுமாறு அரை கூவல் விடுக்கிறது.

திருக் குர் ஆன் அனைவராலும் புரிந்துக் கொள்ளப் பட முடியாததாக இருக்குமானால் இத்தகைய உறுதிக் கூறலுக்கு இடம் இருக்க முடியாது.

திருக் குர்ஆன் அனைவராலும் புரிந்துக் கொள்ளப் படக்  கூடியது என்ற கருத்தின் பொருள் வடிவம் நபி (ஸல்) அவர்களினதும் அன்னாரது பரிசுத்தக் குடும்பத்தவர்களினதும் மத அதிகாரம் பற்றிய உறுதிப் பாட்டுக்கு எதிரானது அல்ல என்பதையும் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

நபி சல்லல்லாஹு   அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் குடும்பத்தவர்களின் மத அதிகாரங்களைக் கையில் எடுத்துக் கொண்ட இஸ்லாத்தின் எதிரிகள் எம்மை திசை திருப்பி விட்டது இந்த இடத்தில் தான்.

இஸ்லாமிய மத அறிவியல்கள் அனைத்தும் அல் குர் ஆனின்  உள்ளடக்கத்தின் விரிவாக்கங்களாகவே உள்ளன.

இத்தகைய விரிவாக்கங்களின் அறிவை நாம் நபி சல்லல்லாஹு   அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களிடம் இருந்தும் அன்னார் நமக்கு இனம் காட்டிய அன்னாரது பரிசுத்த குடும்பத்தவர்களிடம்   இருந்து மட்டுமே பெற வேண்டும்.

ஆனால், தம்மை இஸ்லாமிய அறிஞர்கள் என்று கூறிக் கொள்ளும் பெரும்பாலான அறிஞர்கள் இந்த விதி முறையைக் கைக் கொள்வதில்லை.

ஷரீயத் சட்டங்களும் விதிகளும் அடங்கிய இஸ்லாமிய அறிவியலின் பகுதி சம்பந்தமாய் அல் குர் ஆனில் பொதுவான அடிப்படைகள் மட்டுமே காணப் படுகின்றன.

இத்தகைய அடிப்படைகள் பற்றிய விரிவான விளக்கமும், தெளிவும் திரு நபி சல்லல்லாஹு   அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களதும் அன்னாரது குடும்பத்தினரதும் பாரம்பரியங்களை அறிவதன் மூலமே பெறப் படமுடியும்.

அல் குர் ஆனின் மறு பகுதியான சித்தாந்தம், அற நெறிகள்,ஒழுக்க  விழுமியங்கள் சம்பந்தப் பட்ட அறிவைப் பொருத்தமட்டில் அவற்றின் உள்ளடக்கமும் விவரங்களும் அனைவராலும் விளங்கிக் கொள்ளக் கூடியவை என்றாலும், அவற்றின் முழு அர்த்தத்தையும் புரிந்துக் கொள்ளல் எனபது நபிக் குடும்பத்தவர்களின் முறையை ஏற்றுக் கொள்வதிலேயே தங்கி உள்ளது.

திருமறை வசனங்கள் ஒவ்வொன்றும் பழக்க வழக்கங்கள் மூலமாக நமக்கு பரிச்சயமான கருத்துக்களின் மூலமாகவன்றி மற்றைய மறை வசனங்கள் மூலமாகவே விளக்கப் படவும் அர்த்தப் படவும் வேண்டும்.

அல் குர் ஆன் மூலம் அல் குர் ஆனை விளக்குவதே நபிக் குடும்பத்தினரால் கற்பிக்கப் பட்ட ஒரே அல் குர்ஆன் விளக்க முறை என்பது சம்பந்தமாக நபிக் குடும்பத்தினரினதும், நபி சல்லல்லாஹு   அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைப் பின்பற்றிய சிறந்த தோழர்களினதும், ஹதீஸ்களை கற்றறிந்த எவரும் மறுத்துரைக்க மாட்டார்.

நேற்று முன்தினம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையில் நளீமியாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ் சேய்க் அகார் அவர்களின் பிரசங்கம் ஒன்றைக் கேட்கும் வாய்ப்புக் கிட்டியது.

அதில் அவர் இரண்டாம் கலீபாவின் ஆட்சிக் காலத்தில் நடந்ததாகக் கூறும் ஒரு கதையை தனது உரைக்கு முன்னுதாரணமாக மேற்கோள் காட்டி உரையாற்றினார்.

அவரது உரையின் தலைப்பு இறைவனின் விதி - கலா கத்ர் - சம்பந்தப் பட்டதாக இருந்தது.

இரண்டாம் கலீபாவின் காலத்தில் திருட்டுக் குற்றச் சாட்டுக்கு ஆளான ஒரு குற்றவாளி தீர்ப்புக்காக கலீபாவின் முன்னால் கொண்டு வரப் பட்டானாம்.

கலீபா அந்தத் திருடனிடம் "எதற்காக திருடினாய்..?" என்று கேட்டாராம்.

அதற்கு அந்தத் திருடன்"அல்லாஹ் நாடினான்.  நான் திருடினேன்..." என்று தான் செய்த தனது தவறுக்கு அல்லாஹ்வின் நாட்டம் மேல் பழியைப் போட்டானாம்.

அவனது அலட்சியமான பதிலைக் கேட்ட கலீபாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்ததாம்.

உடனே அவர் அந்தத் திருடனுக்கு அவன் அல்லாஹ்வின் மேல் பழியைப் போட்டதற்காக முப்பது கசையடியும் திருடியதற்கு தண்டனையாக அவனது கையை துண்டிக்குமாரும் தீர்ப்பளித்தாராம்.

அஷ் சேய்க் அகார் தன் பக்க நியாயத்துக்கு அல்லது தனது உரையின் மெரு கூட்டலுக்கு எடுத்தாழ்ந்த இந்தக் கதையில் பொதிந்திருக்கும் அபத்தங்கள் புரிகிறதா?

பார்த்த பார்வைக்கு இதில் ஒன்றுமே இல்லாதது போல தெரிந்தாலும், இந்தக் கதை சுமந்துள்ள கருத்துக்கள் புனித இஸ்லாத்து முரணானவை.

முதல் முரண்பாடு- ஒரு நீதிபதிக்கு கோபம் கொண்டு தீர்ப்பளிக்கும் உரிமை இஸ்லாத்தில் இல்லை.

கோபம் கொள்வது சைத்தானின் குணம்.

துரதிர்ஷ்டவசமாக நமது கலீபாவிடம் அது இருந்திருக்கிறது.

இரண்டாவது முரண்பாடு- இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அல் குர்ஆனின்   அடிப்படையின் மூலம் ஒரு தண்டனை ஊர்ஜிதம் செய்யப் பட்டு சட்டவாக்கம் ஆகி விட்டதன் பின்னர் அதனை கூட்டிக் குறைக்க யாருக்கும் எதுவித அதிகாரமும் இல்லை.

திருடியவனின் கையைத் துண்டிக்குமாறு அல் குர்ஆன் நமக்கு கட்டளையிடுகிறது.


"திருடனும்,திருடியும் - அவ்விருவரும் சம்பாதித்ததற்கு கூலியாக அல்லாஹ்விடமிருந்துள்ள   தண்டனையாக அவர்களின் கரங்களைத் துண்டித்து விடுங்கள்;அல்லாஹ் மிகைத்தோனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கிறான்."  
(அல் குர் ஆன்: 5 : 38 )


அதன் படி திருடுவதில் உள்ள சமூக பயங்கரம் மக்களுக்கு புலப் படுத்தப் படுகிறது.

திருட்டுக் குற்றத்தினால் திருடன் அல்லது திருடி பெற்றுக் கொள்ளும் தண்டனையும் தெளிவு படுத்தப் படுகிறது.

இனி, திருடுவதற்கு திருடியவர்களின் கையைத் துண்டிக்குமாறு அல் குர் ஆன் பனித்திருக்க இரண்டாம் கலீபாவுக்கு முப்பது கசையடிகளை மேலதிகமாக அந்தத் திருடனுக்கு வழங்குமாறு அதிகாரம் அளித்தது யார்?

அவன் தான் செய்த காரியம் அல்லாஹ்வின் நாட்டம் என்று சொன்னது   அல்லது அவ்வாறு கருதியதுதான் காரணமா?

கசையடி வாங்கிக் கட்டிக் கொள்ளும் அளவுக்கு அது அவ்வளவு பாரதூரமான கருத்து இல்லையே?

அப்படி என்றால் அவன் கலீபாவை மதிக்காமல் அவமதித்து நடந்திருப்பான்.அவனது அலட்சியப் படுத்தல் நமது கலீபாவைக் கோபப்  படுத்தியிருக்கலாம் என்று அப்பாவித் தனமாக யாராவது சொன்னால் அதில் நியாயம் இருப்பது போல தெரிகிறது.

திருட்டு என்றால் என்ன?

தனக்கு உரிமை இல்லாத , பிறருக்கு உரிமை உள்ள யாதாகிலும் ஒன்றை அவருக்குத் தெரியாமல் எடுத்துக் கொள்வதுதான் திருட்டு என்று சொல்கிறார்கள்.

அப்படியென்றால்,  நபி குடும்பத்துக்கு சொந்தமான பதக் காணியை இஸ்லாத்தின் பெயரால் பலாத்காரமாக அபகரித்து பறித்து எடுத்தது......அவசியம் இல்லாமல் அந்நிய நாடுகளின் மேல் இஸ்லாத்தின் பெயரால் போர் தொடுத்து அராபிய ஏகாதிபத்தியத்தை அவர்கள் மீது திணித்தது .......இஸ்லாத்தின் பெயரால் அல் குர் ஆணுக்கு விளக்கம் சொல்லும் அஹ்ளுல்பைத்களின் மத உரிமையைப் பறித்து எடுத்தது.........இஸ்லாத்தின் பெயராலேயே முஸ்லிம் கணவர் மார்களைக் கொலை செய்து அவர்களின் அழகிய மனைவியரை அபகரித்துக் கொண்டது...........இஸ்லாத்தின் பெயரால் ஆக்கிரமிக்கப் பட்ட நாடுகளில் இருந்த பெண்களை களவாடிக் கொண்டு சென்றது என்று ...என்று...என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

இவ்வாறான ஒப்பு நோக்கில், இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி நமது இஸ்லாமிய நாயகர்களின் கைகள் மட்டுமல்.....தலைகளையும் அல்லவா துண்டித்திருக்க வேண்டும் என்று யாராகிலும் நம்மிடம் திருப்பிக்  கேட்டால் நாம் சங்கடத்துடன் அப்பாவித் தனமாக "ஆம்" என்றுதான் பதில் சொல்லவேண்டியிருக்கும்.

வேறு வழி?

இஸ்லாத்தின் பெயரால் நமது நாயகர்களின் கபடத்தனமான தவறுகளின் விளைவுகளில் தோன்றும் இவ்வாறான சிக்கல்களில் இருந்து இலாகவமாக தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்குத்தான் அல் குர்ஆனுக்குரிய விளக்கத்தை நபிக் குடும்பத்தார்களிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கு பதிலாக அவர்களே  அதற்கான விளக்கங்களை சொல்லத் தொடங்கி விட்டார்கள்.

விளைவு?

நபி சல்லல்லாஹு   அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைக்  கண்ணால் கண்டதை மாத்திரம் தகுதியாகக் கொண்டு எல்லோரும் அல் குர் ஆனுக்கு விளக்கம் சொல்லத் தொடங்கினார்கள்.

இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அந்த விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய ஷரியா   சட்டங்களையும் வகுத்தார்கள்.

ஏகாதிபத்திய அநியாய ஆட்சியாளர்களுக்கு துணை போன இஸ்லாமிய அடிவருடி அறிஞர்களைக் கொண்டு அவற்றை மக்கள்மயப் படுத்தினார்கள்.

மக்களுக்கு அவற்றை ஏற்றுக் கொள்ளுமாறு அக்கால ஆட்சியாளர்கள் நிர்ப்பந்திக்கவும் செய்தார்கள்.

அதன் பின்னர் ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் பேர் ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் விளக்கங்கள் சொல்ல ................

தடி எடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரர்களானார்கள்.

அவர்களின் வேட்டைக்கு புனித இஸ்லாம் இலக்காகிப் போனது.

ஸிஹாஹுஸ் ஷித்தாக்களில்   -நம்பகமான அறிவிப்புகள் என்று எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் படும் ஹதீஸ் கிரந்தங்களில் திருட்டுக் குற்றத்துக்கு திருடியவர்களின் கரத்தை நபி சல்லல்லாஹு   அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் துண்டித்து தண்டனை அளித்திருப்பதாக அநேக பதிவுகள் பதியப் பட்டிருக்கின்றன.

இவை நாம் மேலே எடுத்து சொன்ன அல் குர் ஆன் வசனத்தின் விளக்கங்களாகவும் எடுத்து நியாயப் படுத்தப் பட்டிருக்கின்றன்.

திருடியவர்களின் கரத்தை துண்டிக்குமாறு நபி சல்லல்லாஹு   அலைஹி வஆலிஹி வசல்லம் சொல்லி செய்து காட்டியாக பதியப் பட்டிருக்கும் இவ்வாறான அனைத்து பதிவுகளும் அல் குர் ஆன் சொல்லும் போதனைக்கு முரணானவைகளாகும்.

நமது கூற்றுக்கு ஆதாரமாக நபி சல்லல்லாஹு   அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பேரர் ஒருவர் -அஹ்லுல் பைத்களின் இமாம்களில் ஒருவர் அல் குர் ஆனின் அந்த வசனத்துக்கு சொன்ன சரியான விளக்கத்தை உங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.

இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் பிரகாரம் திருடியவர்களின் கரங்களை தரித்து விடுவதற்கு அனுமதி அளிக்கும் அந்த அல் குர் ஆன் வசனம் இதுதான்.


"திருடனும்,திருடியும் - அவ்விருவரும் சம்பாதித்ததற்கு கூலியாக அல்லாஹ்விடமிருந்துள்ள   தண்டனையாக அவர்களின் கரங்களைத் துண்டித்து விடுங்கள்;அல்லாஹ் மிகைத்தோனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கிறான்."  
(அல் குர் ஆன்: 5 : 38 )

பாக்தாதின் பிரதம நீதிபதிகளில் ஒருவரின் பெயர் இப்னு அபூ தாவூத்.


இவர் அப்பாசியக் கலீபாக்கள் மாமூன், முஹ்தசிம், வாசிக், முதவக்கில் ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் பிரதம நீதிபதியாக கடமையாற்றியவர்.

அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவர் சர்காள் இந்த சம்பவத்தை அறிவிக்கிறார்.

ஒரு நாள் நான் எனது நண்பர் நீதியரசர் அபூ தாவூத் கலீபா முஹ்தசிமின் சபையில் இருந்து மிகவும் சோகமாக , ஆழ்ந்த யோசனையுடன் திரும்பி வருவதை அவதானித்தேன்.

அவரது அயர்வான காட்சி எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

நான் காரணம் என்னவென்று விசாரித்தேன்.

அதற்கு அவர் "இருபது வருடங்களுக்கு முன்பே நான் இறந்திருக்கக் கூடாதா என்று இன்றைய தினம் நான் ஏங்கினேன்"என்றார்.

"ஏன்..அப்படி?" என்று நான் வினவினேன்.

"இன்று கலீபாவிடம் நபி சல்லல்லாஹு   அலைஹி வ லிஹி வசல்லம் அவர்களின் பேரர் முஹம்மத் இப்னு அலி வந்திருந்தார்." என்றார்.

"நான் "அதனால் என்ன?" என்று அவரிடம் கேட்டேன்.

அவர் சொன்னர்"இன்றைய தினம் என்னிடம் ஒரு வழக்கு வந்தது.அந்த வழக்கில் ஒரு திருடன் தான் திருடியதை ஒப்புக் கொண்டிருந்தான்.அவனுக்குரிய தண்டனையை வழங்குமாறு கலீபா   என்னைப் பணித்தார்.

"எங்களுடைய சபையில் நிறைய மார்க்க அறிஞர்கள் இருந்தார்கள்.நாம் அந்த திருடனுக்குரிய தண்டனையைப் பற்றி கலந்தாலோசித்தோம்.

"அந்தத் திருடனின் கையை எந்த அளவில் துண்டிப்பது என்பது பற்றிய விடயத்தில் எனக்கும் எங்களது இஸ்லாமிய அறிஞர்களுக்குமிடையே கருத்து முரண்பாடு தோன்றியது.

"விரல்கள் உட்பட மணிக்கட்டு வரையுள்ள பகுதியை துண்டிக்க வேண்டும் என்று நான் கூறினேன்.

"என்னுடைய முடிவுக்கு என்ன ஆதாரம் என்று கலீபா என்னிடம் கேட்டார்.

"அதற்கு நான் "கை என்பது விரல் நுனி தொடக்கம் மணிக்கட்டு வரையான பகுதியைக் குறிக்கும். ஏனெனில்,  தயம்மம்மின் வசனங்களும் அந்த அளவையே குறிப்பிடுகின்றன " என்றேன்.

"அப்பொழுது அங்கே இருந்த அறிஞர்களில் ஒரு சாரார் எனது இக்கருத்துடன் உடன்பட்டனர்.

"வேறு சிலரோ என்னுடன் முரண் பட்ட நிலையில் "கை என்பது முழங்கையுடன் சேர்ந்த பகுதியைக் குறிக்கும்.ஏனெனில், வுழு சம்பந்தப் பட்ட வசனத்தில் உங்கள் கைகளை முழங்கை வரைக் கழுவுங்கள் என்று   சொல்லப் பட்டிருக்கிறது" என்று கூறி முழங்கையுடன் அந்தத் திருடனின் கையைத் துண்டிக்க வேண்டும் என்றனர்.

"முரண்பட்ட இரண்டு கருத்து வேறுபாட்டின் காரணமாக சபை சலசலத்தது.

"அந்த சபையில் இருந்த நபி சல்லல்லாஹு   அலைஹி வ லிஹி வசல்லம் அவர்களின் பேரர் முஹம்மத் இப்னு அலி மெளனமாக இவைகளை அவதானித்துக் கொண்டிருந்தார்.

"அல் குர் ஆன் போதனையின் அடிப்படையில் வகுக்கப் பட்ட ஒரு சட்டம் சம்பந்தமாக இஸ்லாமிய அறிஞர்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாட்டு நிலைமை கலீபாவை சங்கடப் படுத்தி இருப்பது புரிந்தது.

"இஸ்லாமிய சரீயா சட்டம் சம்பந்தமான ஒரு தீர்ப்பில் இஸ்லாமிய அறிஞர்களிடையே எழுந்த முரண்பாடும் அதன் காரணமாக தோன்றியிருக்கும் அமைதிக் குலைந்த சூழலும் அவ்வளவு ஆரோக்கியமானதாக அவருக்கு தோன்றியிருக்காது போலும்.

"உடனே அவர் அந்த அவையில் இருந்த நபி சல்லல்லாஹு   அலைஹி வ லிஹி வசல்லம் அவர்களின் பேரர் முஹம்மத் இப்னு அலியைப் பார்த்தார்.

"புனித அல் குர் ஆனின் போதனைகளுக்கு முரண்படாத விளக்கத்தினை   பெற்றுக் கொள்ளக் கூடியவராக அந்த சபையில் அவர் இருந்தார்.

"அமளிப் பட்ட சபையை அமைதிப் படுத்திய கலீபா நபி பேரர் முஹம்மத் இப்னு அலியிடம் இந்த சிக்கலான விடயத்திற்கு தீர்ப்பை வேண்டி நின்றார்.

"இங்கே இருக்கும் இஸ்லாமிய அறிஞர்கள் இதற்கு விளக்கம் சொல்லிவிட்டார்களே......"என்ற முஹம்மத் இப்னு அலி "நான் என்ன சொல்ல இருக்கிறது......" என்று நழுவி விட பார்த்தார்கள்.

"அல்லாஹ்வின் பெயரால் இந்த சிக்கலான பிரச்சினைக்கு நீங்கள்தான் தீர்ப்பு சொல்ல வேண்டும்." என்று கலீபா அவரை வற்புறுத்தி வேண்டினார்.

"அதற்கு முஹம்மத் இப்னு அலி "நீங்கள் அல்லாஹ்வை முன்னிறுத்தி கேட்டதினால் நான் இதற்கு தீர்ப்பு சொல்கிறேன்" என்று கூறிவிட்டு இந்த அறிஞர்கள் அனைவரும் நபிகளாரின் போதனைக்கு மாறு செய்து விட்டார்கள்.திருட்டு குற்றத்திற்கு தண்டனையாக மனிதனது விரல்களில் ஒன்றை அல்லது விரல் நுனியினைத்தான் துண்டிக்கவேண்டும்.முழங்க கையையோ அல்லது மணிக் கட்டையோ அல்ல." என்றார்கள்.

"எங்களுக்கெல்லாம் அதிர்ச்சியாக இருந்தது.

"அவரின் தீர்ப்பைக் கேட்டதும் அமளிப் பட்டுக் கொண்டிருந்த சபையும் அமைதியடைந்து விட்டது.

"கலீபாவுக்கும் ஆச்சரியம்.அவர் இமாமிடம் அவரின் தீர்ப்புக்குரிய ஆதாரத்தைக் கேட்டார்.

"நாங்கள் ஆவலுடன் அவர் கூறப் போகும் ஆதாரத்தைக் கேட்க ஆவலாக இருந்தோம்.

"அந்த அமைதியான சபையில் இமாமின் குரல் கணீரென்று ஒலித்தது.

"இமாம் தொடர்ந்தார்."நபி சல்லல்லாஹு   அலைஹி   வஆலிஹி வசல்லம் கூறினார்கள் ஏழு உறுப்புகள் மீது ஸுஜூது அமைய வேண்டும்.அவையாவன;முகம்,இரு கைகள், முழங்கால்கள், இரண்டு கால்கள் ஆகியனவாகும்.அவனின் கை முழுமையாகவோ , அல்லது முழங்கை வரைக்குமோ வெட்டப் படுமானால் ஸுஜூது செய்வதற்கு உறுப்பு ஒன்று இல்லாமல் போய் விடும்." என்று சொல்லிவிட்டு "ஸுஜூது செய்யும் தளங்கள் அனைத்தும்  அல்லாஹ்வுக்கே உரியன.அவைகளில் அல்லாஹ்வோடு வேறு யாரையும் வணங்காதீர்கள்" என்ற அல் குர் ஆன் வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்(அல் குர் ஆன்: 72 : 18 )

"அதாவது இவ்வேழு உறுப்புகளும் சுஜூதுக்கு உரியவைகளாகும்.அல்லாஹ்வை வணங்க மனிதனுக்கு அவசியப் படும் அவைகள் அல்லாஹ்வுக்குரியவைகளாகும்.அல்லாஹ்வுக்குரியத்தை வெட்டக் கூடாது என்பது இதன் அர்த்தமாகும்.

"இமாமின் தீர்ப்பை கலீபா சரி கண்டார்.

"அதன் பின்னர் திருடனின் கை விரல்களை மட்டும் துண்டிக்குமாறு கலீபா கட்டளையிட்டார்."

இவ்வாறு கூறிய இப்னு அபூ தாவூத் "இவ்விடயம் என்னை மிகவும் பாதித்து விட்டது.மறுமை நாள் உண்டாகி விட்டது போல நான் உணர்கிறேன்.இவ்வாறான ஒரு தீர்ப்பை கண்ணால் காண்பதற்காகத் தான் என்னை இவ்வளவு நாள் இறைவன் உயிரோடு வைத்தானோ என்ற எண்ணம் தோன்றுவதை என்னால் தடுக்க முடியாதுள்ளது." என்று கூறினாராம்.

நபி சல்லல்லாஹு   அலைஹி வஆலிஹி வசல்லம்  அவர்களின் குடும்பத்தினர் அல் குர் ஆனுக்கு அல் குர் ஆனில் இருந்தே விளக்கம் சொன்ன அழகும் அந்த விளக்கத்தில் நிர்ணயிக்கப் படும் இஸ்லாமிய ஷரியா சட்டத்தில் காக்கப் படும் மனித உரிமைகளும் எவ்வளவு அற்புதமாக வெளிப்படுகிறது.

நண்பர் அன்புராஜ்........உங்கள் கையில் இருக்கும் அல் குர் ஆன் மொழி பெயர்ப்பைக் கொஞ்சம் புரட்டிப் பாருங்கள்.

அதில் நாம் குறிப்பிட்ட அல் குர் ஆன் வசனம் மொழி சிதைவு செய்யப் பட்டு  "அன்றியும் நிச்சயமாக பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன.எனவே, அல்லாஹ்வுடன் வேறு எவரையும் நீங்கள் பிராத்திக்காதீர்கள்"   என்று அர்த்தம் கற்பிக்கப் பட்டிருக்கும்.

மனிதனது முகம், அவனது இரு கைகள், அவனது முழங்கால்கள், அவனது இரு கால்கள் என்பன சாஷ்டாங்கம் செய்து வணங்குவதற்கு மனிதனுக்கு தேவைப் படும் அவயவங்களாகும்.

துரதிர்ஷ்ட  வசமாக நாம் அந்த அவயங்களைக் கொண்டு மனிதனால் செய்யப் பட்ட சிலைகளை வணங்குகிறோம்.அல்லது அதனை செய்த மனிதர்களை வணங்குகிறோம்.

மனிதனது ஸுஜூது செய்யும் தளங்களை நபி சல்லல்லாஹு   அலைஹி   வஆலிஹி வசல்லம் இன்னதென்று நமக்கு போதித்து இருக்க நமது இஸ்லாமிய அறிஞர்கள் அந்தத் தளங்களை தொழும் பூமியின் தளங்களுடன்  மட்டிட்டுக் கொண்டதன் விளைவு எவ்வாறு இஸ்லாமிய சரியா சட்டத்தைக் குழப்பியது என்று இப்பொழுது புரிந்திருக்கும்.

இந்தத் தவறான ஷரியா சட்டத்தின் பிரகாரம் எத்தனை பேர்கள் இன்று தமது கைகளை இழந்திருப்பார்கள்?

துரதிர்ஷ்ட வசமாக இன்று நாம் பின்பற்றிக் கொண்டிருக்கும் இஸ்லாத்தில் அல் குர் ஆனுக்கு விளக்கமாக அராபிய ஏகாதிபத்திய சர்வாதிகாரிகளின் அடிவருடி அறிஞர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறோம்.

அத்தகைய உலகாயுத இச்சைகளுக்கு பலியான சப்பரை அறிஞர்களின் விளக்கத்தால் அநேகர் இஸ்லாத்தை விட்டும் வழித் தவறிப் போய் இருக்கிறார்கள்.

இதன் காரணமாக அல் குர் ஆனுக்கு விளக்கமாக அல் குர்ஆன் சொல்லும் கருத்துக்களை நாம் புரிந்துக் கொள்ளவில்லை.

அல் குர் ஆனுக்கு விளக்கமாக நாம் நபி சல்லல்லாஹு   அலைஹி வ லிஹி வசல்லம்  அவர்களின் வழி முறையையோ அன்னாரின் பரிசுத்த  குடும்பத்தாரின்  விளக்கங்களையோ ஏற்றுக் கொள்ளவும் இல்லை.

அதற்கு மாற்றமாக அல் குர் ஆனுக்கு முரண் படுகின்ற நபி தோழர்களின் பெயரால் நபிகளார் அறிவித்ததாக அறிவிக்கப் படும் ஹதீஸ்களை ஏற்று குழம்பிப் போய் விட்டோம்.

இன்னொரு பதிவில் அந்த முரண் பாடுகளை விளக்குகிறோம்.

7 comments:

Dr.Anburaj said...

I have heard Mr.மௌலவி அகார் (நளீமி)BA in Tamilian TV- last month. It is strange that you hold supreme the descedents of Pro.Mohammed.It is highly fallacious.We have seen pious parents beget beast like sons and daughter and vice versa. So to interprete Koran one must have a pious heart and a unbiased temperament and to believe that the posterity alone are competent to interpret Koran is wrong.I understand you hold Mr.Ali second to Prophet Mohammed."திருடனும்,திருடியும் - அவ்விருவரும் சம்பாதித்ததற்கு கூலியாக அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் துண்டித்து விடுங்கள்;அல்லாஹ் மிகைத்தோனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கிறான்."
(அல் குர் ஆன்: 5 : 38 )Karangal is totally different from fingers.In the heart of the heart
everybody is eager to moderate Quran.So multitude of interpretation.The endless war could never be halted.You can throw away all Arab items and embrace your Mother religion and be Hindu -without Idolatry.It is easily possible.

Dr.Anburaj said...

From the Web Islam watch-
Can this pleasure of sexual molestation be the real reason for Allah's absolute obsession with the virginity of young women? Can it be that Allah, Himself loves to fondle the virgins, since we read in the Quran that He has an abundant supply of virgin houris for His followers of Islam? Here are a few samples of verses from the holy Qur'an to demonstrate Allah's total fascination with the virginity of women.

044.051 As to the Righteous (they will be) in a position of Security,

044.052 Among Gardens and Springs;

044.053 Dressed in fine silk and in rich brocade, they will face each other;

044.054 So; and We shall join them to fair women with beautiful, big, and lustrous eyes.

055.056 In them will be (Maidens), chaste, restraining their glances, whom no man or Jinn before them has touched;-

055.057 Then which of the favours of your Lord will ye deny?-

055.058 Like unto Rubies and coral.

055.072 Companions restrained (as to their glances), in (goodly) pavilions;-

055.073 Then which of the favours of your Lord will ye deny?-

055.074 Whom no man or Jinn before them has touched;-

055.075 Then which of the favours of your Lord will ye deny?-

056.035: We have created (their Companions) of special creation.

056.036 And made them virgin - pure (and undefiled), -

056.037 Beloved (by nature), equal in age,-

056.038 For the Companions of the Right Hand.

078.031 Verily for the Righteous there will be a fulfilment of (the heart's) desires;

078.032 Gardens enclosed, and grapevines;

078.033 And voluptuous women of equal age;

078.034 And a cup full (to the brim).

Now you know why one must marry a virgin and a very young woman, for that matter. Yes, it is for fun and pleasure, similar to the enjoyment that Allah enjoys and has reserved for the 'true' believers in His paradise. Koran is a Book of Arab Origin.It is out of date.

peace said...

Who ever you are, you are blind. Who ever this Dr.Anburaj, he is also blind. So, it seems the blind is leading the blind....and we all know where it will lead both.

Most certainly, You must be very handsomely being rewarded by some shia regime to carry out this malicious propaganda about islam.

அஹ்லுல்பைத் said...

PEACE பெயரில் பின்னூட்டமிட்ட நண்பரின் வருகைக்கும் யூகித்தளித்த கருத்துரைக்கும் நன்றி.

டாக்டர் நண்பர் அன்புராஜ் எம்முடைய இணைய நண்பர்........அவரும் முதலில் உங்களைப் போலவே எம்முடன் தொடர்புக் கொண்டார்.

இஸ்லாத்துக்கு முரணான கருத்துக் குவியல்களுடன் எம்முடன் தொடர்புக் கொண்ட அவர் யார்? ....அவரது உள் நோக்கம் என்ன ? என்பன போன்ற பல வினாக்கள் உங்களைப் போலவே நமக்கும் நமது நண்பர்களுக்கும் முதலில் எழுந்தது உண்மைதான்.

ஒரு முஸ்லிம் .........அஹ்ளுல்பைத்களை நேசிக்கின்ற ஒரு முஸ்லிம் என்ற வகையில் எம்மால் அவரையும், அவரது தவறான கருத்துக்களையும் அலட்சியப் படுத்த முடியாது என்று உணர்கிறோம்.

அவர் யாராக இருந்தாலும் இஸ்லாம் சம்பந்தமாக அவர் முன் வைத்த தவறான கருத்துக்கள் இணைய இணைப்புக்களில் இதோ இந்த நிமிடம் பலரால் வாசிக்கப் பட்டுக் கொண்டிருப்பது சத்தியம்.

உங்களால் கூட அவற்றைப் பார்க்கமுடியும்.

அவற்றிற்கு உங்களது பதில் என்ன?

நாம் அவ்வாறான தவறான கருத்துக்களுக்கு எம்மால் முடிந்த அளவில் பதில்களைத் தேடி பதிவேற்றிக்கொண்டிருக்கிறோம்.

அது டாக்டர் அன்புராஜுக்குத் தெரியும்.

இறைவனின் நேசத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு அஹ்ளுல்பைத்களுடன் நேசம் கொண்ட எங்களது பயணத்தில் அல்லாஹ்வின் உதவி நமக்கு நேரடியாகக் கிடைப்பதால்........... எங்களின் அனைத்துப் பொறுப்புக்களையும் வல்ல அல்லாஹ்வே ஏற்றிருப்பதால் ....தினமும் தங்கு தடையற்ற அவனது உதவிகளை நாம் நேரடியாக அனுபவித்துக் கொண்டிருப்பதால் ஈரான் ஷியா கூட்டத்தின் அங்கீகாரம் அல்லது அது போன்ற இன்னுமொரு கூட்டத்தின் அங்கீகாரம் நமக்கு அவசியம் இல்லை.

இறைவனின் நேசத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு அஹ்ளுல்பைத்களுடன் நேசம் கொண்ட எங்களது பயணத்தில் அல்லாஹ்வின் உதவி நமக்கு நேரடியாகக் கிடைப்பதால்........... எங்களின் அனைத்துப் பொறுப்புக்களையும் வல்ல அல்லாஹ்வே ஏற்றிருப்பதால் ....தினமும் தங்கு தடையற்ற அவனது உதவிகளை நாம் நேரடியாக அனுபவித்துக் கொண்டிருப்பதால் ஈரான் ஷியா கூட்டத்தின் அங்கீகாரம் அல்லது அது போன்ற இன்னுமொரு கூட்டத்தின் அங்கீகாரம் நமக்கு அவசியம் இல்லை.

ஒன்றை மட்டும் புரிந்துக் கொள்ளுங்கள்..........

இம்மையில் எங்களது தலைவர்களாக நாம் ஏற்றிருக்கும் அஹ்ளுல்பைத்கள்தான் மறுமையில் உங்களதும், எங்களதும் தலைவர்கள்.

இம்மையில் அஹ்ளுல்பைத்களின் தலைமையை ஏற்க மறுக்கும் அனைத்து முஸ்லிம் அறிஞர்களும்....அவர்களது அடிவருடிகளும் எம்மைப் பொறுத்தவரை வெறும் பூஜ்யம்............இல்லை.......இல்லை..........உலகத்திலேயே மிக பலவீனமான வீடு கட்டி ஒய்யாரமாக வீற்றிருக்கும் சிலந்தி வலையும் அந்த பரிதாபமான சிலந்தியும் போலத் தான்.

எங்களது பதில் உங்களை நோவித்திருந்தால், எங்களை மன்னித்து விடுங்கள்.

கோபம் கொள்ளாது எங்களுடன் தொடர்ந்தும் தொடர்பில் இருங்கள்.

மீண்டும் சந்திக்கும்வரை.......

Dr.Anburaj said...

Thank you very much for your kind letter to Mr.Peace.I am sure you not writing to get any favour from any Man/society etc. But God only. Muslims are so fanatically attached to Mohamed.So they detest any comment about Mohammed.Whatever Mohammed did,it is OK.Such is the belief.This belief has been causing tremendous damage to Muslim community.

அஹ்லுல்பைத் said...

இணைய நண்பர் Dr.அன்புராஜின் வருகைக்கும், மனம் திறந்து பதிவிட்ட பின்னூட்டத்திற்கும் நன்றி.

உங்களை எங்களது நண்பராக தேர்ந்து தந்த அல்லாஹ்வுக்கு எங்களது உள்ளம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.-அல்ஹம்து லில்லாஹ்.

எங்களைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி.

இறைவனின் உதவி இன்றி அது சாத்தியம் இல்லை.

நண்பர் PEACE வெகு விரைவில் உண்மைகளைத் தெரிந்தும் புரிந்தும் கொள்வார்.

அன்றைய தினம் அவர் எங்கள் இருவரினதும் நெருங்கிய நண்பராக இருப்பார் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.

டாக்டர் அன்புராஜ்..........உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா?

மக்களில் பெரும்பாலோர் வெறும் யூகங்களைத்தான் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

"பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலானோரை நீர் பின் பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழிக் கெடுத்து விடுவார்கள்.(ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின் பற்றுகிறார்கள்.இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள்"

(அல் குர்ஆன்: 6 : 116 )

நண்பர் அன்புராஜின் கேள்விகளுக்கு விடை தேடிக் கொண்டிருக்கிறோம்.

விரைவில் அந்த விடைகளுடன் சந்திக்கிறோம்.

Dr.Anburaj said...

Why allah/Mohammed is so deeply obsessed with the condition of Vagina of women ? Why this frequent reference to virginity ? who is speaking those lines ? Allah or Arabian Mohammed ?.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad