அஹ்லுல்பைத் Headline Animator

Monday, April 30, 2012

தம்புள்ளை மஸ்ஜித் விவகாரம்........ஆண்டிகள் அவித்த பாயாசம்....!!!!!



ஒரு ஊரிலே ஏழு ஆண்டிகள் பிச்சை எடுத்து தமது வாழ்க்கையை ஓட்டிக்  கொண்டிருந்தார்கள்.

அந்த ஏழு ஆண்டிகளும் இரவிலே ஒற்றுமையாக ஊர் சத்திரத்தில் ஒன்றாக இரவைக் களிப்பார்கள்.

படுக்கைக்கு போகு முன் தமது தொழிலை விருத்தி செய்யும் முறை பற்றி விலாவாரியாக விவாதிப்பார்கள்.

பின்னர், நிம்மதியாக தூங்குவார்கள்.

காலையில் தமது திட்டங்களை எல்லாம் மறந்து எழுந்து தொழிலுக்கு செல்வது போல பிச்சை எடுக்க அனைவரும் வெளியே பிரிந்து செல்வார்கள்.

இரவாகியவுடன் தாம் அன்று சம்பாதித்த பிச்சையுடன் சத்திரத்துக்கு திரும்புவார்கள்.

மீண்டும் விவாதிப்பார்கள் 

நிம்மதியாக படுத்து உறங்குவார்கள்.

அடுத்த நாள் தாம்  தீர்மானித்த திட்டங்களை அம்போ என்று மறந்து எழுந்து பிச்சை எடுக்கும் தொழிலுக்கு போவார்கள்.

இப்படியே நாள்கள் ஓடின.

ஒரு நாள் இரவு அந்த ஆண்டிகளில் ஒருவன் பாயாசம் சமைப்போம் என்று புதியதொரு திட்டத்தை முன் வைத்தான்.


அனைவரும் அவனது திட்டத்துக்கு தமது பூரண சம்மதத்தை தெரிவித்தனர்.

அவர்களது திட்டத்தின் படி ஒரு பெரிய பாத்திரம் கொண்டுவரப் பட்டது.

அதனை வைப்பதற்கு ஒரு அடுப்பும் தயாரிக்கப் பட்டது.

பாத்திரத்தை அடுப்பில் வைத்தார்கள்.

அந்தப் பாத்திரம் நிறைய நீரும் ஊற்றினார்கள்.

மங்கிய நிலவொளியில் பாத்திரத்தில்  கொதிக்கும் நீரும் அதன் அடியில் எரியும் நெருப்பும்  வசீகரமாக தெரிந்தது.

பத்திரத்தில் இருந்த நீர் கொதிக்கத் துவங்கியதும் தலைமைத்துவ ஆண்டி எழுந்தார்.

எரியும் அடுப்பின் அருகே அமர்ந்திருந்த ஏனைய நண்பர்களைப் பார்த்து "இதோ என் பங்கு...." என்று சொல்லியவாறு அவரது கோணிப் பையில் இருந்து அரிசியை எடுத்து அவரது கையை அந்தப் பாத்திரத்தினுள் போட்டு எடுத்தார்.

தலைவரைத் தொடர்ந்து ஏனையவர்களும் "இதோ என் பங்கு..."என்று சொல்லியவாறு தத் தமது பைகளில் இருந்து தமது பங்கு அரிசியை எடுத்து  தமது கைகளையும் பாத்திரத்தினுள் போட்டு எடுத்தனர்.

அதன் பின்னர் அனைவரும் பாயாசம் தயாராகும் வரை அந்த அடுப்பை சுற்றி அமர்ந்து காத்திருந்தனர்.

பாயாசம் கொதித்துக் கொண்டே இருந்தது.

சிறிது நேரத்தின் பின்னர் தலைவர் அடுப்பில் இருந்த பாயாசத்தை பங்கு போடத் தயாரானார்.

எல்லோரும் தத் தமது பிச்சைப் பாத்திரத்தை ஏந்திக் கொண்டு தலைவர் தரும் பாயாசத்துக்கு காத்திருந்தனர்.

தலைவரும் சிரிப்புடன் பாயாசத்தைப் பங்கு வைத்தார்.

பங்கு வைத்த பாயசத்தை குடிக்கும் பொழுது ஆண்டிகளுக்கு ஒரு உண்மை தெரிந்தது.

பாத்திரத்தில் பாயாசத்துக்குப் பதில் வெறும் சூடான நீர் மாத்திரமே இருந்தது.

அப்பொழுதுதான் அந்த ஆண்டிகளுக்கு தங்களில் ஒருவருமே பாயாசப் பாத்திரத்துக்கு பாயாசம் தயாரிக்க தேவையான அரிசியை போடவில்லை என்ற உண்மையும் புரிந்தது............

இந்தக் கதைக்கும் தம்புள்ளை மஸ்ஜித் விவகாரத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா?

எங்களது மனத்தில் உதித்த சில உண்மைகளை ஒப்பிட்டு சொல்கிறோம்.......ஹி...ஹி....ஹி........

தம்புள்ளையில் மஸ்ஜிதை இடிக்க வந்த கதையைக் கேட்டவுடன் நமது சமூகத்தின் இயக்கங்களின்   பிரதி நிதிகள் அனைவரும் வை.எம்.எம்.ஏயில் உணர்ச்சி பூர்வமாக ஒன்று திரண்டார்கள். -(ஆண்டிகள் சத்திரத்தில் ஒன்று கூடியது போல............ஹி...ஹி...ஹி.........)

ஆ...ஹோஒ....என்று சத்தமிட்டார்கள்.......(ஆண்டிகள் கூச்சலிடுவது போல   ஹி.....ஹி...ஹி.....)

வரும் வெள்ளிக் கிழமை ஜும்மாஹ் தொழுகைக்குப் பின்னர் தம்புள்ளையில்   ஜும்மாஹ் மஸ்ஜித் இடிக்க வந்த செய்கை போன்றதொரு செய்கை மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான தீர்வை முன் வைக்க வேண்டும் என்ற நோக்கில் மா பெரும் ஆர்ப் பாட்டம் ஒன்றுக்கு அரை கூவல் விடுத்தார்கள்(ஆண்டிகள் பாயாசம் சமைக்க முடிவெடுத்தது போல .....ஹி...ஹி...ஹி.....)

கூட்டத்தில் தீர்மானித்த விதமாக வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமும் செய்து முடித்தார்கள்....(ஆண்டிகள் அடுப்பில் பாயாசம் வைத்தது போல...ஹி...ஹி....ஹி....)

அடுப்பில் தீர்வு என்ற பாயாசம் இப்பொழுது தயாராகிக் கொண்டிருக்கிறது.

இப்பொழுது தீர்வு என்ற பாயாசத்துக்காக அனைவரும் பொறுமையுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அடுப்பில் இருக்கும் பாத்திரத்தில் 'தீர்வு' என்ற அரிசியை ஆண்டித் தலைவர்கள் போடாத கதையை இன்னும் கொஞ்ச நாள்களில் தெரிந்துப் போகும்.

எப்படி என்கிறீர்களா?

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தமது இருப்பைக் காத்துக் கொள்வதற்காக -புதிதாக முளைத்த இலங்கை ஜம்மியத்துல் உலமாவை என்ன செய்து அடக்கலாம் என்று தவித்துக் கொண்டிருக்கிறது.......ஹி...ஹி...ஹி......

புதிதாக முளைத்த இலங்கை ஜம்மியத்துல் உலமா கிணற்றில் விழுந்த கல்லைப் போல ......அப்படியே மயான அமைதியில் நடக்கும் நாடகங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கிறது.........ஹி....ஹி....ஹி......

தம்புள்ளை மஸ்ஜித் விவகாரம் பீரிட்டு வெடித்த வேகத்தில் உருவான முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு தொலைந்துப் போன தலைவர்களைத்  தேடிக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன...........ஹி...ஹி....ஹி............

சரி...........

என்னதான் நடந்தது.......?

என்ன நடக்கப் போகிறது.........?

முஸ்லிம்களின் இருப்புக்கு இலங்கையில் அபாய சங்கு ஊதியாகிவிட்டது.

ஆண்டித் தலைவர்கள் இஸ்லாமிய உணர்வுள்ள முஸ்லிம் வாலிபர்களை காட்டிக் கொடுக்கப் போகிறார்கள்.


அந்த அப்பாவி முஸ்லிம் வாலிபர்கள் அல் கைதா பயங்கரவாதிகள் என்ற பெயரில் காவு கொள்ளப் படப் போகிறார்கள்.

இந்தப் பயங்கரத்தில் இருந்து எப்படித் தப்புவது....?

சுலபம்!

எப்படி என்று இன்னொரு பதிவில் சொல்கிறோம்.

No comments:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad