அஹ்லுல்பைத் Headline Animator

Wednesday, November 28, 2012

புதியதொரு விதி செய்வோம்....?


அல்லாஹ் மனித குலத்துக்கு அவனை அறிமுகப் படுத்துவதற்காக இவ்வுலகிற்கு அனுப்பிய அனைத்து தீர்க்கதரிசிகளும்,தூதர்களும் அநீதத்துக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள்.

இறைத் தூதர்கள் அனைவரும் நீதிக்காக,நியாயத்திற்காக,நேர்மைக்காக போராடியவர்கள்.

அவர்களின் செயல்களில் பிறந்த விளைவுகளில் தனி மனித சுதந்திரமும்,மனித உரிமையும் கௌரவமாக மதித்துப் பேணப் பட்டன.

அவர்கள் நல்லவர்களுக்கு நல்லவர்களாகவும்,திருந்த மறுக்கும் தீயவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் இருந்திருக்கிறார்கள்.

இறுதித் தூதர் முஹம்மது சல்லல்லாஹு அலை ஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்குப் பின்னர் இறைத் தூதர்கள் மனித குலத்துக்கு நேர் வழிக்காட்ட வரப்போவதில்லை.

நபிகளார் சுமந்த அந்த மா பெரும் பொறுப்பு முஸ்லிம்களிடம் ஒப்புவிக்கப் பட்டு விட்டது.

அதனைத்தான் நாம் நபிகளாரின் ஸுன்னா என்று கூறுகிறோம்.அதன் பிரகாரம் ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுக்கே முற்றிலும் கட்டுப் பட்டு நடக்க வேண்டியவனாகிறான்.

அந்த முஸ்லிம் நீதித் தவறாதவனாகவும்,நியாயத்துக்கு கட்டுப் பட்டவனாகவும்,நேர்மையாளனாகவும் வாழ வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறான்.

அந்த முஸ்லிமினால் யாருக்கும் ஒருபோதும் எந்த விதமான அநீதமும் இழைக்கப் பட மாட்டாது.

அவனது செயல்களின் விளைவுகளில் அநியாயம் இருக்கப் போவதில்லை.

ஒரு முஸ்லிம் ஒரு போதும் நேர்மை பிறழ்ந்து  நடக்கப் போவதில்லை.

அவன் அநியாயத்திற்கு ஆளான மக்களுக்கு ஆறுதலான ஆதரவாகவும்,ஆக்கிரமிப்பாளருக்கு எதிராகவும் ஏனைய இறைத் தூதர்களைப் போலவே எழுந்து நிற்க வேண்டியவனாகிறான்.

அதனால் அவன் தன்னிருப்பில் நல்லவர்களுக்கு நல்லவனாகவும்,திருந்த மறுக்கும் தீயவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் மாறி நிற்கின்றான்.

ஒரு நாட்டில் காவல் துறையும் நீதித் துறையும் செய்யும் செய்கைகளை ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுக்காக செய்ய வேண்டியவனாகிறான்.

வெறும் சடங்கு சம்பிரதாய வணக்க வழிபாடுகளுடன் தனதெல்லையை சுருக்கி பிரமாண்டமாக கட்டிக் காக்கப் படுகின்ற மஸ்ஜிதுகளை நாம் நீதி,நியாயம்,நேர்மை ஆகிய நல்லறங்களின் நல்ல விளைவுகளை செயற்படுத்துகின்ற புனித தளங்களாக மாற்றியமைப்போம்.

முஸ்லிம் என்ற பெயரில் இஸ்லாத்துக்கு முரணாக நீதி,நியாயம்,நேர்மைகளைத் துச்சமாக மதிக்கின்ற முஸ்லிம் மக்களைத் தட்டிக் கேட்கும்  நியாயத் தளங்களாக நாம் நமது மஸ்ஜிதுகளை புனரமைப்போம்.

உண்மை முஸ்லிமுக்கு இது ஒரு பொருட்டல்ல.

முஸ்லிம் என்ற பெயரில் அநீதம் செய்கின்ற,அநியாயத்துக்குத் துணை போகின்ற,நேர்மைத் தொலைத்த ஒருவருக்கு இது ஒரு போதும் சாத்தியமில்லை.

என்றாலும்,நமது குழந்தைகளின் சுபீட்சமான எதிர் காலம் இந்த மாறுதல்களை நம்மிடம் கடுமையாக வேண்டி நிற்கின்ற யதார்த்தத்தை நாம் புரிந்துக் கொள்வோமாக.

நமது மஸ்ஜிதுகள் இத்தகைய மாறுதல்களுக்கு தன்னை தயார் செய்துக் கொள்ளத் தவறும் பட்சத்தில் நமது சமூகத்தின் இருப்பின் இருப்பு கீழே இருக்கும் துண்டுப் பிரசுரம் சொல்லும் செய்திகளின் சாரம்சமாகவே இருந்துக் கொண்டிருக்கும் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.சிங்களவர்களே!

பன்னிரெண்டாவது கலவரத்துக்கு ஒன்றிணையுங்கள்!

பௌத்த போதனைகளுக்கும்,சிங்கள இனத்தவர்களுக்கும் எதிர் கொண்டிருக்கும் சவால்களை உணராமல் சிங்கள பௌத்தர்கள் நித்திரையில் ஆழ்ந்திருக்கும் காரணத்தினால் சிங்கள் இனத்தின் அழிவு துவங்கிவிட்டது.

அடிப்படைவாத முஸ்லிம்களினால் கிழக்கிலங்கையில் அமைந்திருக்கின்ற நமது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த புராதன சின்னங்கள் தொடராக அழிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

அத்துடன் அது முடிவுறாது, இலங்கை முழுவதும் அத்தகைய செய்கைகள் பரவத் துவங்கியும் விட்டது.அது மட்டுமன்றி எமது வியாபாரத் தளங்களும் இன்று மாற்றினத்தவர்களினால் சூறையாடப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

கிறிஸ்தவ மிசனரிகளும் மனிதாபிமான செயல்கள் என்ற பெயரில் தமது பிரச்சார நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறார்கள்.

இந்த உண்மைகளை சிங்கள இனத்தவர்களுக்கு புரிய வைக்கவேண்டிய கடமையின் காரணமாக எதிர்வரும் 30 ஆம் திகதி மா பெரும் கூட்டமொன்றை நடாத்த உத்தேசித்துள்ளோம்.

இணையங்களிலும்,தொலை பேசிகளிலும் நமதினத்தின் விடுதலைக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் உணர்வு கொண்ட மக்களை ஓரிடத்தில் இணைத்து எதிர்கால செயல் திட்டங்களை வகுத்து ஒன்று பட்டு செயல் படுவோம்.

நம்மினத்தைக் காக்க..........நம் நாட்டைக் காக்க.........நம் பௌத்த மதத்தைக் காக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம்............

6 comments:

Dr.Anburaj said...

Please publish translation of the bit notice.otherwise your article is incomplete. Moreover it is chidish to think Muslims alone should bear the burden நபிகளார் சுமந்த அந்த மா பெரும் பொறுப்பு முஸ்லிம்களிடம் ஒப்புவிக்கப் பட்டு விட்டது.ஒரு நாட்டில் காவல் துறையும் நீதித் துறையும் செய்யும் செய்கைகளை ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுக்காக செய்ய வேண்டியவனாகிறான்.As pointed out earlier, Muslims are a mixture of various mental inclinations.How can they be entrusted with such a noble responsibility. Any one who imitates Arab culture is called a Muslims, nothing more than that. How would you distinguish Mumins from Muslims ? Who is competent to do that ? நபிகளார் சுமந்த அந்த மா பெரும் பொறுப்பு முஸ்லிம்களிடம் ஒப்புவிக்கப் பட்டு விட்டது.It also says other religious people are incabapable of living a life dear to God. Swami Vivekanada says : Every religion has produced men and women of most exalted character. Your article is highly absurd rubbish and idiotic.

Jaffna Muslim Base said...

Good effort. Thanks for this publish.

Regards
Abu Sayyaf

அஹ்லுல்பைத் said...

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீன்டும் மரத்தில் ஏறி அங்கே தொங்கிய உடலை வெட்டி வீழ்த்தினான்.

பின்னர் அதனை சுமந்துக் கொண்டு மயானத்தை நோக்கி நடக்கையில் அதனுள்ளிருந்த வேதாளம் எள்ளி நகைத்தது.

அது மன்னனை நோக்கி "மன்னா.......உன்னைப் பார்க்கும் பொழுது பாவமாக இருக்கிறது.உனது முயற்சியைப் பாராட்டுகிறேன்.மயானம் செல்லும் வரையில் நான் உனக்கொரு கதை சொல்கிறேன் கேள்......"என்றபடி ஒரு கதை சொல்ல ஆரம்பித்தது.........

நண்பர் அன்புராஜிடம் ஒரு கேள்வி.........

இதில் நீங்கள் யார்? விக்கிரமாதித்தனா? வேதாளமா? உங்களது அயரா முயற்சிக்கு........தொடரான கேள்விகளுக்கு......ஆர்வமான தேடல்களுக்கு வாழ்த்துக்கள்...!

உங்களது புரிதலுக்கு இன்னுமொரு வாழ்த்து!

"பிரபஞ்சத்தின் சொந்தக்காரனான இறைவனை அறிமுகப் படுத்துகின்ற மா பெரும் பொறுப்பு நாம் யதார்த்தத்தில் காண்கின்ற முஸ்லிம்களின் பொறுப்பில் விடப்பட்டிருக்கிறதா?இது எவ்வகையில் சாத்தியம்?"

உங்கள் கேள்வி நியாயமானது. அதற்கான பதிலை எங்கள் இஸ்லாமிய அறிஞர்களிடம் ஒப்படைத்து விடுவோம்.

ஏனெனில்,இன்று காலை இந்தப் பதிவை இலங்கையில் இருக்கும் ஜமாத்தே இஸ்லாமியின் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர்,இலங்கை இஹ்வானுள் முஸ்லிமீனின் ஆரம்பகால நிர்மாண கர்த்தா உஸ்தாத் மன்சூர்,இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பிரதித் தலைவரும் ஜாமியாஹ் நளீமியாவின் சிரேஷ்ட விரிவுரையாளரும் உதவிப் பணிப்பாளருமான அஷ் சேய்க் அகார் முகம்மத், ஜாமியா நளீமியாஹ் மாணவர் ஒன்றியம் ஆகியோரது மேலான கவனத்தையும் கருத்தையும் பணிவுடன் நாடி அவர்களது 'பேஸ் புக்' தளத்துக்கு இணைப்பை சேர்த்துள்ளோம்.

இலங்கையின் இஸ்லாமிய உயர் பீடங்களில் இருக்கும் இந்த அறிஞர்கள் நண்பர் அன்புராஜுக்கு பதில் சொல்வார்கள் என்று கருதுகிறோம்.

Dr.Anburaj said...

Please entrust all questions raised by me in the Ahulbaitamil to the Arabian religious Scholars of Sri Lanka.Let them answer those volly of questions, which you are unable to answer.May be you are not a scholar of Arab religion.

Dr.Anburaj said...

........ஆகியோரது மேலான கவனத்தையும் கருத்தையும் பணிவுடன் நாடி அவர்களது 'பேஸ் புக்' தளத்துக்கு இணைப்பை சேர்த்துள்ளோம்.
இலங்கையின் இஸ்லாமிய உயர் பீடங்களில் இருக்கும் இந்த அறிஞர்கள் நண்பர் அன்புராஜுக்கு பதில் சொல்வார்கள் என்று கருதுகிறோம். Nobody can answer such an absurd question.Arab countries are burning, Except Southi Arabia, all Arab countries are deeply immersed in corruption,social injustice and anarchy. Peoples are being killed by Military Force, and common people are revolting against Government - tyrant, corrupt and unjust rulers.Bukhari:V1B11N626 “The Prophet said, “burn all those who had not left their houses for the prayer, burning them alive inside their homes.What a noble attitude had Mr.Mohammed had ? His followers are self-appointed Police men and Judges of the world. . Mr.Abdul Razaak How it is possible for you to write such absurd statement ? How naive childish are you,

Dr.Anburaj said...

source:- www.free faith international
Unhappy Muslims

The Muslims are not happy!
They’re not happy in Gaza.
They’re not happy in Egypt.
They’re not happy in Libya.
They’re not happy in Morocco.
They’re not happy in Iran.
They’re not happy in Iraq.
They’re not happy in Syria
They’re not happy in Southi Arabia
They’re not happy in Islamic Bangaladesh
They’re not happy in Yemen.
They’re not happy in Afghanistan.
They’re not happy in Pakistan.
They’re not happy in Syria.
They’re not happy in Lebanon.

So, where are they happy?

They’re happy in Australia.
They’re happy in England.
They’re happy in France.
They’re happy in Italy.
They’re happy in Germany.
They’re happy in Sweden.
They’re happy in the USA.
They’re happy in Norway.
They’re happy in SriLanka
They’re happy in India
They’re-Palestinians- happy in Israel
They’re happy in every country that is not Muslim.
And who do they blame?
Not Islam.
Not their leadership.
Not themselves.
THEY BLAME THE COUNTRIES THEY ARE HAPPY IN!
AND THEY WANT TO CHANGE THEM TO BE LIKE THE COUNTRY THEY CAME FROM
WHERE THEY are UNHAPPY.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad