அஹ்லுல்பைத் Headline Animator

Thursday, September 15, 2011

வெளிநாட்டு நன்கொடை பேரீத்தம் பழங்களும் நாமும்??

வெளிநாட்டு நன்கொடை பேரீத்தம் பழங்களும் நாமும்??


ரமழான் மாதம் எம்மை விட்டும் விடை பெற்று விட்டது.

ரமளானுக்கு முந்திய ஒரு நாளில் எங்கள் பகுதி ஜும்மாஹ் பள்ளிவாசலில் எங்கள் ஊர் தனவந்தர்கள் ஒன்று கூடி ஒரு பிரச்சினைக்கு முடிவு கட்டுவதற்காக ஒன்று திரண்டிருந்தார்கள்.

என்ன பிரச்சினை என்று மூக்கை நுழைத்துப் பார்த்ததில், நன்கொடையாக வந்திருக்கின்ற பேரீத்தம் பழங்களை ஊர் ஜமாத்தினர் மத்தியில் எவ்வாறு பங்கிடுவது எனபது சம்பந்தமாக அவர்கள் கூட்டம் கூடி இருந்தார்கள்.

சில இளமையான இளைஞர்கள் மிக உற்சாகமாக பேரீத்தம் பழங்களை பங்கு வைப்பதில் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

பணக்கார தனவந்தர்கள், ஜமாஅத் இளைஞர்கள், காய்ந்துபோன பேரீத்தம் பழங்கள் என பள்ளிவாசல் அல்லோலகல்லோலமானது.


முகம் தெரியாத இடத்தில் இருந்து வந்திருக்கின்ற பேரீத்தம் பழங்களுடன் எங்களது தனவந்தர்களும் இளைஞர்களும் கட்டிப் புரண்டதைக் காணும் பொழுது நெஞ்சு வலித்தது.

பெரு மூச்சு வந்தது.


இலவசமாக வந்த பேரீத்தம் பழங்களை சரிசமனாக பங்கு வைப்பதற்கு அவர்கள் காட்டிய அதே அக்கறையை நலிந்து போன எத்தனையோ தேவைகளில் யாரும் உதவ  மாட்டார்களா என்று ஏக்கத்துடன் காத்திருக்கும் சமூகத்தின் இன்னுமொரு பக்கம் செலுத்தி இருந்தால் நல்லதாக  இருந்திருக்குமே என்ற ஏக்கம் நெஞ்சில் நிறைந்தது.

ஒருவழியாக பேரீத்தம் பழங்களை பங்கு வைத்தாகி விட்டது.

பேரீத்தம் பழங்களை வீடுகளுக்கு கொண்டு சென்று ஒப்படைக்கும் பணி சந்தா சேகரிக்கும் ஊழியர்களிடம் ஒப்படைக்கப் பட்டது.

இலவசமாக வந்து சேர்ந்த பேரீத்தம் பழங்களை பங்கு வைத்ததில் ஒரு வீட்டுக்கு நானூறு அல்லது நானூற்றி ஐம்பது கிராம் வீதமான பங்கு கிடைத்தது.

உதாரணமாக, மாத்தளை மாவட்டத்துக்கு இம்முறை சுமார் மூவாயிரத்து எண்ணூறு கிலோ பேரீத்தம் பழங்கள் இலவசமாக கிடைத்தன.

அவை அனைத்தும் மாத்தளை மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்து பள்ளிவாசல்களுக்கும் அந்தந்த பள்ளி வாசல்களில் அங்கத்தவர்களாக இருக்கின்ற ஜமாத்தினரை அளவீடாக கணித்து பிரித்து அனுப்பி வைக்கப் பட்டன.

அல்லாஹ்வின் அருளினால் மாத்தளையில் இருக்கின்ற தனவந்தர்களில் ஒரு தனவந்தரினால் இந்த தொகையை சமாளிக்க கூடிய வசதி இருக்கிறது.

ஆனாலும், அந்த சக்தியை அவர்கள் உணர்ந்ததாக தெரியவில்லை.

உணர்ந்தவர்கள் உணராதவர்களுக்கு உணரவைக்க முயற்சிக்கவும் இல்லை.

மாத்தளையில் இருக்கின்ற தனவந்தர்கள் மாத்திரம் ஒன்று திரண்டால் முழு இலங்கையின் பேரீத்தம் பழ தேவையை மிக சுலபமாக தீர்த்து வைத்து விடுவார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை இது ஒரு செய்தி அல்ல.

மாத்தளையில் இலவசமாக அவர்களுக்கு கிடைத்த பங்குடன் அதனை விட சிறந்த பேரீத்தம் பழங்களை விலைக்கு வாங்கி பகிர்ந்திருக்கிறார்கள்.

எல்லா இடத்திலும் இதே மாதிரித்தான் நடந்திருக்கும்.

எங்களது தனவந்தர்களை வெளிநாடுகளில் இருந்து வருகின்ற இவ்வாறான இலவச பேரீத்தம் பழங்களை பகிர்ந்து அளிப்பதற்காக ஒன்று திரட்டுவதை விட்டும் நாம் தடுத்துவிட வேண்டும்.

அந்தப் பொறுப்பை அரசியல் வாதிகளிடம் ஒப்படைத்து விடுவோம்.

அதற்கு பிரதியீடாக எங்களது தனவந்தர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி எங்களது பணத்துக்கு பேரீத்தம் பழங்களை நாமே வாங்கி அவற்றை நமது மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் தலை நிமிர்ந்த ஒரு கலாசாரத்தை உருவாக்க நாம் முயல வேண்டும். 

இது இப்படி இருக்க-

நோன்பில் ஒரு மாலைப் பொழுதில் எங்களது வீட்டுக்கு அருகே இருக்கும் ஒருபெட்டிக் கடையில் நான் சில பொருட்கள் வாங்க காத்திருக்கும் பொழுது நோன்பு துறப்பதற்காக பேரீத்தம் பழம் வாங்குவதட்கு ஒரு சிறுவன் ஓடோடி வந்தான்.

இருபது ரூபாவை நீட்டி பேரீத்தம் பழம் கேட்டான்.

கடை உரிமையாளர் நூறு கிராம் பேரீத்தம் பழங்களை அவனுக்கு நிறுத்துக் கொடுத்தார்.

பேரீத்தம் பழங்களை விலை கொடுத்து வாங்கிய அவன் சிட்டாகப் பறந்தான்.

"ஒரு கிலோ பேரீத்தம் பழம் என்ன விலை?" நான் கேட்டேன்.

"இரு நூறு ரூபாய்" கடை உரிமையாளர் சொன்னார்.

"மிகவும் மலிவாக இருக்கிறதே?" இது நான்.

"உங்களுக்கு விடயம் தெரியாதா?" அவர் சிரித்தார்."நோன்பில் எப்பொழுதும் பேரீத்தம் பழம் மலிவுதான்."

உண்மைதான்.

இலவசமாக வழங்கப் படுகின்ற பேரீத்தம் பழங்கள் அரசியல் வாதிகளின் சாணக்கியத்தால் கொழும்பு சந்தைக்கு வருவதும் அதன் காரணமாக அது மலிந்து போவதும் உண்மைதான்.

ஆனால், அதில் ஒரு இரகசியம் இருக்கிறது.

அரசியல் வாதிகளின் வீடுகளிலும், பணக்கார வீடுகளிலும் இலவச பேரீத்தம் பழங்கள் நோன்பு துறக்க இருக்கும் பொழுது, ஏழைகள் யாருக்கும் கடன் படாமல் பணம் கொடுத்து பேரீத்தம் பழங்கள் வாங்கி இந்த அரசியல் வாதிகளை விடவும், பணக்காரர்களை விடவும் செல்வந்தர்களாக நோன்பு துறக்க அல்லாஹ் அனுமதித்து அந்த ஏழைகளை கௌரவித்து இருக்கிறான்.

அடுத்தமுறை நமது தனவந்தர்கள் இவ்வாறான இலவச பேரீத்தம் பழங்களை பங்கீடு செய்யும் தார்மீக பொறுப்பில் இருந்து விடுபட்டு , அந்த தனவந்தர்களின் பணத்துக்கு கொள்வனவு செய்யப் பட்ட பேரீத்தம் பழங்களை பங்கீடு செய்ய முன்வர வேண்டும்.

உலமாக்களினால் இத்தகைய மாற்றத்தை எங்களது சமூகத்தில் கொண்டு வர முடியும்.

அல்லாஹ்வின் உதவி அவ்வாறானவர்களுக்கு எப்பொழுதும் இருக்கிறது.

அவ்வாறு முன்வருகின்ற அனைவருக்கும் அல்லாஹ் துணை செய்வானாக. 


1 comment:

Dr.Anburaj said...

Very Good.Self-respect and self-reliance is your Aim.Catholic church is managing thousands of Schools, colleges ,Orphanages and etc service schems all over the world.Compared to them Muslims Jamat is doing nothing and Arab countries are...................? Can you guess where the shoe pinches ? Mohammed wanted to integrate all communities in the Arabian Pennisula into single country based on Islam.Pathetically Islam is incabapable of integrating Arab countries.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad