அஹ்லுல்பைத் Headline Animator

Wednesday, June 20, 2012

சூரிய மண்டல கைதிகள்.........தூக்கம் கெடுக்கும் நிஜங்கள்..........???!!!!



வழக்கம் போல நண்பர் அன்புராஜின் ஒரு பின்னூட்டத்தின் கேள்வி அஹ்லுல்பைத் தளத்தின் இன்னொரு பதிவுக்கு களம் அமைத்தது.

நன்றி அன்புராஜ்.

அவரது கேள்வி இப்படி பதிந்தது.

It has become urgent to prove that the parents of Mr.Mohammed are pious.

I wonder why that question has assumed so much importance.

May be it is a internal matter of Islamic society.

Noble and otherwise parents begets good /evil sons and daughter.

History is full of evidance for th

"....................கௌரவமான உயரிய குடும்பத்து பெற்றோருக்கு இழி குணமுள்ள பிள்ளைகள் கிடைக்கிறார்கள்.அதே போல, தாழ்ந்தவர்கள் என்று ஒதுக்கி வைக்கப் படும் பெற்றோருக்கு உயரிய நன் நடத்தையுள்ள குழந்தைகள் கிடைக்கும் பாக்கியம் கிடைக்கிறது.வரலாறு இதற்கு சான்று பகர்கிறது.வரலாற்று நிஜங்கள் இப்படி இருக்க முஹம்மது சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களது பெற்றோர் உத்தமர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லையே......" என்கின்ற  கருத்தை உள் வாங்கிய நிலையில் அவரது பின்னூட்டம் அமைந்து இருந்தது.

நண்பர் அன்புராஜின் பதட்டமான கேள்வி ஒரு முஸ்லிம் இணைவைப்பாளராக ஒரு போதும் மாற மாட்டார் என்பது போலவும் இணைவைப்பாளர் ஒருவரின் குழந்தை அல்லது ஒரு இணை வைப்பாளர் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளும் முஸ்லிமாக மாறுவதற்கு வாய்ப்பில்லை  என்ற கருத்தை சொல்லாமல் சொல்லுவது போலவும் நாம் சொல்லும் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களது அருமைப் பெற்றோர் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காத முஸ்லிம்கள் என்ற கருத்து மயக்கமான இன்னுமொரு கருத்தை உள் வாங்கி
இருப்பது போல நமக்கு ஒரு பிரமையை ஏற்படுத்தியது.


உண்மைதான்.

நபி நூஹ் (அலை) அவர்களின் மகன் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளாமல்  இறை நிராகரிப்பாளராகவே இறுதி வரை இருந்து அப்பொழுது ஏற்பட்ட பயங்கரமான நீர்ப் பிரளயத்தில் மூழ்கி ஜல சமாதி கொண்டதாக அல் குர்ஆன் சாட்சி பகர்கிறது.

நபி லூத் (அலை) அவர்களின் மனைவியும் இறை நிராகரிப்பாளராகவே  இறுதிவரை இருந்ததாகவும் அல் குர்ஆன் சாட்சி சொல்கிறது.

அது மட்டுமன்றி, நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களது பெரிய தந்தை அபூ லஹப் இறைவனை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அது சொல்கிறது.

ஆதலால் குடும்ப பாராம்பரியம் ஒரு மனிதனை அவன் சார்ந்த நம்பிக்கை அல்லது கொள்கை அல்லது மதத்தின் பால் ஈர்க்கப் போவதில்லை என்பது தெளிவு.

ஆகவே நண்பர் அன்புராஜின் கேள்வி நியாயமானது.ஆழமானது.

அவரது அபாரமான கேள்விக்கு நமது பாராட்டுக்கள்.

அர்த்தமுள்ள  இந்தக் கேள்விக்கு அஹ்லுல்பைத் தளத்தின் பதில் என்ன?


பதிலுக்கு முன்னர் பதிலைப் புரிய வைக்கும் இன்னுமொரு உண்மையை முதலில் சொல்கிறோம்.

நம்முடைய நண்பர் ஒருவர் ஒரு முறை நண்பர்கள் சிலர் அமர்ந்திருந்த ஒரு சபையில் இப்படி சொன்னார்.

"உங்களுக்குத் தெரியுமா?........அல்லாஹ் மனிதனுக்கு அவன் விரும்புவதை தெரிவு செய்யும் தெரிவு சுதந்திரத்தை வழங்கி கௌரவப் படுத்தியிருக்கிறான்......"என்று வியப்புடன் சொன்னார்.

அதனைக் கேட்டவுடன்  நம்முடைய இன்னுமொரு நண்பர் "அப்படி இல்லையே..." என்றார்.

"மனிதனுக்கு அவன் நினைத்ததை செய்யும் சுதந்திரம் வழங்கப் படவில்லை என்று நீங்கள் சொல்கிறீர்களா?" இது முதலாமவர்.

"ஆம்....." இது இரண்டாமவர்.

"புரியவில்லையே.........அப்படியென்றால் மனிதனுக்கு அவனுக்கு விரும்பியதை தெரிவு செய்து கொள்ளும் செயல் சுதந்திரம் இருக்கிறதை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையா?"

இரண்டாவது நண்பர் சிரித்தார்.

புன்னகையுடன் தனது பாக்கெட்டில் இருந்த பேனாவை எடுத்து மேசையின் மீது வைத்தார்.

பின்னர் , அதே முறுவல் மாறாத நிலையில் முதலாவது நண்பரைப் பார்த்து "இதோ இந்தப் பேனாவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினையுங்கள்" என்றார்.

முதலாவது நண்பர் குழப்பத்துடன் "ஏன்?" என்றார்.

"நினையுங்களேன்..." என்ற இரண்டாவது நண்பர் "நினைத்தையிற்றா..?" என்றார்.

முதலாவது நண்பர் கொஞ்சம் தயக்கத்துடன்  "சரி...நினைத்து விட்டேன்" என்றார்.

"இப்பொழுது நீங்கள் இந்தப் பேனாவை எடுத்துக் கொள்ள நினைத்து விட்டீர்கள்....." என்ற நமது இரண்டாவது நண்பர் "இந்தப் பேனாவை எடுத்துக் கொள்ளும் செயல் சுதந்திரம் இப்பொழுது உங்களுக்கு இருக்கிறது.....இல்லையா?" என்றார்.

முதலாவது நண்பர் "ஆம்.." என்றார்.

"சரி....அப்படியென்றால் இந்தப் பேனாவை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று இரண்டாவது நண்பர் சொன்னார்.

அதனைக் கேட்ட நமது முதலாவது நண்பர் மேசையின் மீது இருந்த பேனாவை எடுத்துக் கொள்ள தனது கையை நீட்டினார்.

அவரது கை அந்தப் பேனாவை நெருங்கிய அடுத்த வினாடி இரண்டாவது  நண்பர் சட்டென்று அந்தப் பேனாவை உருவி எடுத்துக் கொண்டார்.

பேனாவை எடுக்க முயன்ற முதலாவது நண்பருக்கு அதனை எடுத்துக் கொள்ள முடியவில்லை.

"இப்பொழுது புரிந்ததா........நீங்கள் இந்தப் பேனாவை எடுத்துக் கொள்ள விரும்பினீர்கள்........அதனை எடுத்துக் கொள்ளும் சுதந்திரமும் உங்களுக்கு இருந்தது......ஆனால், அதனை எடுத்துக் கொள்ள உங்களால் முடிய வில்லை"

முதலாவது நண்பர் மெளனமாக இருந்தார்.

இரண்டாவது நண்பர் தொடர்ந்தார் "மனிதனின் ஆளுமைக்கு உட்படாத காலத்தை கவனித்துப் பாருங்கள். அல் குர்ஆனில் நிறைய சூராக்கள் மனிதன் நித்தமும் தோற்றுக் கொண்டிருக்கின்ற காலத்தின் முக்கியத்துவத்தை சொல்கின்றன.

"'அல் பலக்' அதிகாலை, 'அல் அசர்' காலம், 'அல் கத்ர்' கண்ணியமிக்க இரவு, 'அல் லுகா'முற் பகல்', 'அல் லைல்' இரவு', காலத்தின் சுழற்சிக்கு மிகத் தேவையான- 'அஷ் ஷம்ஸ்' சூரியன், அல் பஜ்ர்' விடியற்காலை 'அதி காலை தோன்றும் 'அத் தாரிக்' விடி வெள்ளி, காலத்துக்கு அவசியமான- 'அல் புரூஜ்' கிரகங்கள்,மீன்டும் ஒருமுறை- அத் தஹ்ர்' காலம், 'அல் கியாமா' மறுமை நாள்,வாரத்தை நினைவு படுத்தும்- 'அல் ஜும்மா' வெள்ளிக் கிழமை,'நாள்களை கணக்கிட- 'அல் கமர்' சந்திரன்,'இரவில் மட்டும் தோன்றும் - 'அன் நுஜும்' நட்சத்திரம், என்று காலங்கள் சம்பந்தமான சூராக்கள் அல் குரானில் நிறையவே உண்டு.

"இவைகள் மனிதனுக்கு காலத்தின் முன்னால் பலவீனமான முறையில் சரணடையும் அவனது வலிமையின் தளர்வுகளை பறைசாட்டுகின்றன.

"உலகம் படைக்கப்    பட்ட நாளில் இருந்து காலத்தின் கணக்குகள் ஆரம்பமாகின்றன.

"ஒவ்வொரு மனிதனுக்கும் வழங்கப்பட்ட அவனது ஜீவிய காலம் மிக பெறுமதியானது.

"வாழ்க்கையின் அடுத்த நகர்வை நோக்கி செல்லும் பரீட்சையில், அவனுக்கு வழங்கப் பட்ட காலத்தில் அவனுக்கு எதுவித அதிகாரமும் வழங்கப் பட வில்லை என்பதே வேதனையான நிஜம்.

"பாவம்.

"மனிதன் அதனைப் புரிந்துக் கொள்ளவில்லை.

"என்றாலும், செயல் சுதந்திரம் அவனுக்கு முற்றாக வழங்கப் பட்டிருப்பதாக அவன் தப்புக் கணக்குப் போட்டு தன்னையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறான்.

"அவன் நன்மை செய்யலாம். அல்லது தீமை செய்யலாம்.அல்லது ஒன்றுமே செய்யாமல் வெறுமனே இருக்கலாம்.

"அவன் செயல் பட்டாலும் அல்லது செயல் படாமல் இருந்தாலும் காலம் நகர்ந்துக் கொண்டே இருக்கும்

"எது எப்படி இருந்தாலும் இழந்து போன காலத்தை மட்டும் எந்த மனிதனாலும் மீளப் பெற முடியாது.

"உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களின்  மீதும் காலத்துக்கு ஒரு அதிகாரம் இருக்கிறது.

"அரசனானாலும், ஆண்டியானாலும் காலத்துக்கு மாறாக எதுவுமே செய்ய  முடியாது.

"கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

"காலத்தின் முதலாவது ஆளுமை பருவ  காலங்களில் தொடங்குகிறது.

"வெயில்  காலம், மழை காலம்,  வசந்த காலம், பனிக் காலம் என இந்த உலகில் காலம் செல்வாக்கு செலுத்துகிறது.

"குளிர் காலத்தின் குளிரில் இருந்து தப்பவும், வெயில் காலத்தில் அதன் வெம்மையில் இருந்து தப்பவும் நாம் படும் பிரயத்தனங்கள் பல.

"பகல் காலம் வந்தால் இருள் இல்லை. இருள் வந்தால் பகல் இல்லை.

"மனித வாழ்வில் கூட குழந்தை,இளைஞன், வாலிபன், முதியவன், வயோதிகன், தளர்ந்து போன கிழவன் என காலம்  நம்மில் செல்வாக்கு செலுத்துகிறது.

"மனிதனால் காலத்தின் கோலத்தால் நடை பெறுகின்ற இந்த மாறுதல்களை தடுத்துக் கொள்ள முடியாது.

"அதேபோல, தான் விரும்பிய ஒரு நிலையில் தொடர்ந்து நிலைத்து இருக்கவும் முடியாது.

"எனவே,  மனிதன் நல்ல பிள்ளையாக காலத்துக்கு இணங்கி நடக்க வேண்டுமே தவிர  அவனது இணக்கத்துக்கு காலத்தை அவனால் கட்டுப் படுத்த முடியாது.

"மனிதன் நினைத்த அனைத்தையும் செய்யும் செயல் சுதந்திரத்தை இறைவன் ஒருபோதும் மனிதனுக்கு வழங்க வில்லை என்பதே உண்மை."என்று சொல்லி விட்டு தொடர்ந்தார்."மனிதன் என்றும் இளமையாக இருக்கவே விரும்புகிறான்.ஆனால் அவன் விரும்பாமலேயே முதுமை அவனை வந்தடைகிறது.பருவ கால மாற்றங்கள் அவனது விருப்பத்துக்கு ஏற்ற முறையில் இல்லை.அவன் ஒரு பெண்ணை மணக்க விரும்புகிறான்.ஆனால் அவளோ இன்னொருவனை விரும்புகிறாள்.அவன் விரும்பாத நோய் அவனை வந்தடைகிறது.இயற்கையின் சீற்றத்துக்கு முன்னால் அவனால் எதுவுமே செய்ய முடியாது போகிறது.சூரியன் உதிப்பதும் மறைவதும் அவனது ஆளுமையில் இல்லை.மரணமும் வாழ்வும் அவனது அதிகாரத்தில் இல்லை.இந்த நிலையில் மனிதனுக்கு தெரிவு சுதந்திரம் வழங்கப் பட்டிருக்கிறது என்று எப்படி சொல்ல முடியும்...?"

சர்வ சாதாரணமாக கூறிய அவரது கூற்றில் இருந்த உண்மை நிஜத்தில் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது.

நாம் அனைவரும் ஆழ்ந்த மௌனத்தில் அமைதியாகி சிந்தனையில் மூழ்கி  விட்டோம்.

"நவீன மனிதன் சப்மரீனைக் கொண்டு ஆழ் கடலையும், செய்மதிகளைக் கொண்டு விண்ணையும் வெற்றிக் கொண்டு தனது ஆளுமையில் கொண்டு வந்ததின் பிறகு நீங்கள் இப்படி சொல்லுவது வித்தியாசமாக இருக்கிறதே...." என்று நமது நண்பர்களில் ஒருவர் அமைதியைக் குலைத்தார்.

நமது இரண்டாவது நண்பர் சிரித்தார்.

"நாம் இருப்பது சூரியக் குடும்பத்தில்.

"மில்க் வே' என்னும் பால் வீதி கலாக்ஸ்சியில் ஒரு ஓரத்தில் உள்ள மிகப் பெரிய நட்சத்திரம்தான் நமது சூரியன்.

"சூரியனைச் சுற்றி பூமி மணிக்கு 66,0000 மைல் வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது.சூரியன், பால் வீதியின் மையத்தை வைத்துச் சுற்றிக் கொண்டிருக்கிறது.

"பூமி சூரியனை சுற்றி வர ஒரு வருடம் எடுக்கிறது.சூரியன் பால் வீதியை ஒரு சுற்று சுற்றிவர இருபத்து இரண்டரைக் கோடி ஆண்டுகள் ஆகின்றன.

"ஆகாய வெளியில் இருக்கின்ற ஆகாச கங்கை என்னும் பால் வீதியை ஒரு சுற்று சுற்றி முடிக்க நூறாயிரம் ஒளி வருசங்கள் சூரியனுக்குத் தேவைப் படுகின்றன.

"அதாவது 5865696 க்குப் பிறகு பன்னிரண்டு பூச்சியங்கள் போட்டுப் பாருங்கள்.அத்தனை மைல் சுற்றி வருகிறது.

"சூரியன் ஒரு வினாடிக்கு 135 மைல் வேகத்தில் பயணம் செய்கிறது.இது சூரியன் என்கின்ற ஒரு நட்சத்திரத்தின் சரித்திரம்.

"இப்படிப் பல கோடிக் கணக்கான கலாக்ஸ்சிகள்....பல கோடிக் கணக்கான நட்சத்திரங்கள்.........

"ஒழுங்கின்மையில் ஒழுங்கைக் கண்டால் அதுவே உயிரின் அடையாளம் என்று சொல்கிறார்கள்.கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பாருங்கள் ................ஏரியாஸ்,பிசிஸ் கலக்சிகளின் இடைவெளியில் இருந்து மூன்று கோடி ஆண்டுகள் பயணம் செய்த ஒரு சிக்னல் ,இந்தியத் தேசத்தில் தமிழ்  நாட்டின் மூலையில் உள்ள ஒரு ரேடியோ டேலேக்ஸ்கொப்பில் விட்டு விட்டு கேட்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த சிக்னல் வேற்று கிரகத்தில் இருக்கின்ற இன்னொரு உயிரினத்தின் அடையாளம் என்றும் அந்த உயிருள்ள ஏதோ ஒன்று நம்முடன் தொடர்பு கொள்ள விரும்புவதாகவும் எண்ணிக் கொள்ளுங்கள்.அந்த உயிரினத்துடன் நாம் தொடர்பு கொள்ள விரும்பி பதிலுக்கு நாமும் ஒரு சிக்னலை அனுப்பிவைத்தோம் என்றும்  நினைத்துக் கொள்ளுங்கள்.அப்படியே அவர்களின் கேள்வி சிக்னலுக்கு நாம் அனுப்பிய பதில் சிக்னல் போய் சேர இன்னுமொரு மூன்று கோடி ஆண்டுகள் தேவைப் படும்.அதற்குள் இந்த மனித இனமே உயிருடன் இருக்குமா என்பதே சந்தேகம்..........பிரபஞ்சத்தை வெற்றிக் கொண்டிருப்பதாக எண்ணி நம்மையே நாம் ஏமாற்றிக் கொண்டிருக்கும் நமது அறிவியல் அறிவின் அளவின் அளவைப் புரிந்துக் கொள்ளுங்கள்.

"நாம் அனைவரும் விரும்பியோ விரும்பாமலோ இந்த பிரபஞ்ச வெளியில் இருக்கின்ற கோடிக் கணக்கான சூரிய மண்டலங்களின் ஒரு சாதாரண சூரிய மண்டலத்தின் ஒரு மூலையில் கைதிகளாக சிறைப் பட்டிருக்கும் உண்மையை நாம் இன்னும் புரிந்துக் கொள்ள வில்லை.

"சூரிய நட்சத்திரத்தின் ஆயுளுடன் நமது ஆயுளை கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள்...

"அந்த ஒப்பீட்டில் எங்களால் நமக்கு வழங்கப் பட்டிருக்கும் ஆயுள் காலம் வினாடிகளுக்கும் குறைவு என்பதைப் புரிந்துக் கொள்ள முடியும்.

"அத்தகைய அற்ப வாழ்வில் மனித சாதனைகளுக்கு எல்லை இல்லை.ஒவ்வொருவர் வாழ்விலும் மெலிதாக இழையோடி ஒவ்வொருவர் உள்ளத்திலும் படிந்துப் போன பாச உணர்வின்  அல்லது காதல் உணர்வின் அசாத்தியமான சாதனைகளைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

"அழகான காவியங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் பிறந்திருக்கும்.

"மெய் சிலிர்க்கும் தியாகங்கள் நிறைந்திருக்கும்.

"பிரமாண்டமான பிரபஞ்ச வெளிகளின் மத்தியில் பலவீனமான முறையில் அற்புதமான காவியங்கள் படைத்துக் கொண்டிருக்கும் நம்மை இறைவன் படைத்திருப்பது வீண் விளையாட்டுக்கு என்று எண்ணி விட்டீர்களா?"

நாம் அனைவரும் மௌனித்துப் போனோம்.

"அப்படியென்றால் மனிதனுக்கு வழங்கப் பட்டிருப்பதாக சொல்லப்படும் சுதந்திரம் என்ன?" நண்பர்களில் ஒருவர் கேட்டார்.


"நம்மைப் படைத்த இறைவனை உளமார ஏற்றுக் கொள்வது அல்லது மறுப்பது என்ற செயலில் மட்டும்தான் மனிதனுக்கு இறைவன் செயல் சுதந்திரத்தை வழங்கி இருக்கிறான்."  நண்பர் தொடர்ந்தார்."அந்த செயல் சுதந்திரத்தை தீர்மானிப்பதற்காக மனிதனுக்கு குறுகிய மட்டுப் படுத்தப் பட்ட வாழ்வொன்றை வழங்கியிருக்கிறான்.படைத்த இறைவனை விசுவாசித்து அவனை நமது வணக்கத்துக்குரியவனாக  ஏற்று அவன் விரும்பும் பிரகாரம் வாழ்வது..........அல்லது அவனை ஏற்றுக் கொள்ள மறுத்து நமது மனோ இச்சைகள் சொல்லும் பிரகாரம் வாழ்வது" என்ற நமது நண்பர் தொடர்ந்தார்

"தாயின் கருவறையில் நாம் சிறைப் பட்டிருந்த பத்து மாதம் நமது எழுபது அல்லது எண்பது வருட வாழ்வில் மிக அற்பமானது. அதே போல மரணத்தின் பின்னர் மறுமையை எதிர்பார்த்து மண்ணறையில் நாம் வாழப்போகும் நீண்ட வாழ்வுடன் ஒப்பிட்டால் நாம் நமது சூரிய மண்டலத்தில் சிறைப் பட்டு வாழ்ந்துக் கொண்டிருக்கும் இவ்வுலக வாழ்வு அற்பமானது.

"இத்தகைய அற்ப வாழ்வில் மனிதன்பதிலளிக்க வேண்டிய கேள்வி மிக இலகுவானது.

"மனிதனே.....நீ உன்னைப் படைத்த அல்லாஹ்வை ஏற்றுக் கொள்கிறாயா?

"விடையும் மிக இலகுவானது.அதனை சொல்வதற்கு மனிதனுக்கு பூரணமான செயல் சுதந்திரம் வழங்கப் பட்டிருக்கிறது.

"ஆம்.....அல்லது இல்லை!

"இதுதான் நாம் புரிந்துக் கொள்ள மறுக்கும் யதார்த்தம்.

"இந்த உண்மையை அல்லாஹ் புனித அல் குர்ஆனில் இப்படி தெளிவு படுத்துகிறான்.

"உங்களில் எவர் செயலால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன்,மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்;மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்;மிக மன்னிப்பவன்"[67:2]

"மனிதர்களையும் அவர்களது அதிகாரத்தில் இல்லாத இந்த பிரபஞ்சத்தையும் படைத்த அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளும் செயல் அல்லது மறுக்கும் செயலில்தான் மனிதன் நல்லவனா அல்லது கெட்டவனா என்று தீர்மானிக்கப் படுகிறது.

"இறைவனை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தில்தான் மனிதன் இயற்கையாகவே படைக்கப் பட்டிருக்கிறான்.

"இறைவனை ஏற்றுக் கொண்ட உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்கள் தூய்மையானவை .அழகான வரையறைகளுக்கு உட்பட்ட அத்தகைய எண்ணங்களின் செயல் விளைவுகள் மகத்தானவை.   

"அந்த ஆன்மாக்களின் செயல் விளைவுகள் தெய்வீக ஒளி வீசும் நிலையில் அழகாகவே பரிணமிக்கும்.

"இறைவனை மறுக்கின்ற உள்ளத்தில் கட்டுப்பாடுகளைத் தகர்த்த அகோரமான எண்ணங்கள் சுதந்திரம் என்ற பெயருடன் இதயங்களை அசுத்தப் படுத்தும்.

"அசிங்கமான எண்ணங்களின் செயல் விளைவுகள் அத்தகைய ஆன்மாக்களை சாத்தானிய சக்திகளுடன் ஒன்றிணைக்கும்.

நாம் அனைவரும் நமது நண்பர் சொல்லும் செய்தியில் பொதிந்திருக்கும் உண்மைகளைப் புரிந்துக் கொண்டு மெளனமாக அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தோம்.

நமது நண்பர் தொடர்ந்தார்."இறைவனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தில்தான் மனிதன் இயற்கையாகவே படைக்கப் பட்டிருக்கிறான் என்ற இரகசியத்தை நாம் புரிந்துக் கொள்ளவில்லை.

"அதனை புனித அல் குர்ஆன் இப்படி தெளிவு படுத்துகிறது:


"ஆகவே ,நீர் உம் முகத்தை (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக!எந்த மார்க்கத்தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்;அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை அதுவே நிலையான மார்க்கமாகும் ஆனால்,மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்" [30:30]


"அல் குர்ஆன் குறிப்பிடும் இயற்கை மார்க்கம் என்பதன் அர்த்தம் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளும் மன நிலையில்தான் அனைத்து மனிதர்களும் படைக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதாகும்.

"அல்லாஹ்வை - படைத்த இறைவனை - ஏற்றுக் கொள்ளும் மார்க்கமே தூய இஸ்லாம் மார்க்கமாகும்.மனிதர்கள் அனைவரையும் அல்லாஹ் இஸ்லாமியர்களாகவே படைக்கின்றான்.அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தில்தான் மனிதர்களை அல்லாஹ் படைத்திருப்பதாக இந்த அல் குர் ஆன் வசனத்தில் அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.அல்லாஹ்வின் இந்த படைப்பு முறையில் எதுவித மாற்றமும் இல்லை.அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளுவதுதான் நிலையான தூய மார்க்கமாகும்.


"இந்த இரகசியத்தை மனிதர்கள் புரிந்துக் கொள்வதில்லை.

"இந்த இயற்கை மார்க்கத்தின் பக்கம் தமது முகத்தைத் திருப்பி அதனை ஏற்றுக் கொண்டவர்கள் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்று அடுத்த மறை வசனம் இப்படிக் கூறுகிறது

"நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்;அவனிடம் பய பக்தியுடன் நடந்துக் கொள்ளுங்கள்;தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்;இன்னும் இணை வைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள்"[30:31] 

நபி நூஹ் (அலை) அவர்களின் மகனைப் போல.......நபி லூத் (அலை) அவர்களின் மனைவியைப் போல........நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்  அவர்களது பெரிய தந்தை அபூ லஹபைப் போல.....
தனது மனோ இச்சைகளுக்கு அடிமையாகி வழிக் கெட்டுப் பிரிந்துப்  போனவர்களையும்  அல் குர்ஆன் அடுத்த வசனத்தில் அழகாக சுட்டிக் காட்டுகிறது.

"எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாக பிரிந்து விட்டனரோ (அவர்களில் ஆகி விட வேண்டாம் .அவ்வாறு பிரிந்த)ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்"[30:32]

தனக்கு வழங்கப் பட்டிருக்கும் செயல் சுதந்திரத்தை தவறாக உபயோகித்துக் கொண்டு தமது  மனோ இச்சைக்கு அடிமையாகிய மக்கள் அல்லது தான் பிறந்து வளர்ந்த சூழலால் பாதிக்கப் பட்ட மக்கள் அல்லது தனது ஆசான்களாக கருதிய மத குருக்களின்  கருத்துக்களை உளப் பூர்வமாக நம்பி அதனால் தனது மனோபாவங்களை உருவகித்து  அல்லாஹ்வின் இயற்கை மார்க்கத்தை விட்டும் -அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளும் மன நிலையை விட்டும்- தூரமாக்கப் படுகிறார்கள்.

"அதனை பின் வரும் நபி மொழியும் உறுதிப் படுத்துகிறது.

"எல்லா குழந்தைகளும் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளும் இயற்கை மார்க்கத்திலேயே பிறக்கிறார்கள்;அவர்களது தாய் தந்தையர்களே அவர்களை யூதர்களாகவோ ,கிறிஸ்தவர்களாகவோ,மஜூசிகளாகவோ மாற்றுகிறார்கள்."
ஆதாரம்: முஸ்லிம்,அபூ தாவூத், மிஸ்காத்.

நாம் யார்?.......எதற்காகப் படைக்கப் பட்டிருக்கிறோம்....?


முஸ்லிம் என்றால் முஸ்லிமாகவும்.......காபிர் -அல்லாஹ்வை நிராகரிப்பவர்கள் - என்றால் காபிராகவும் வாழ்ந்து மடிவதட்குத் தான் நாம் படைக்கப் பட்டிருக்கிறோமா

ஒரு குழந்தையின் வளர்ப்பில் அதன் பெற்றோரின் பங்களிப்பு இன்றியமையாததாகும்.அதனை யாரும் மறுப்பதற்கில்லை

பெற்றோர் தாம் விரும்பிய வழியில் அல்லது நிலையில் அந்தக் குழந்தையை வளர்க்கிறார்கள்.

நிஜம் இப்படியிருக்க அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் பெற்றோருக்கு கிடைக்கும் குழந்தை திடீரென ஒரு நாள் அல்லாஹ்வை ஏற்று உண்மை விசுவாசியாக மாறும் அதிசயத்தை நாம் காண்கிறோம்.

அதே போல, அல்லாஹ்வை ஏற்றிருக்கும் ஒரு விசுவாசியின் மகன் திடீரென அல்லாஹ்வை நிராகரிக்கும் நிலைமைக்கு மாறுகிறான்.

இது எப்படி சாத்தியமாகிறது என்பதுதான் நமது நண்பர் டாக்டர் அன்புராஜின் கேள்வி.

அவரது கேள்விக்கான விடையை இன்றைய நவீன உயிரியல் விஞ்ஞானம் இப்படி சொல்கிறது.

............ஒரு புரதத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ உருவாக்க உதவும் மரபுக் குறியீடுகளை கொண்டுள்ள ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலத்தின் (DNA ) எந்த ஒரு துணுக்கையும் குறிக்கும் அலகே மரபணுவாகும்.

இது  ஒரு உயிரினத்தின் பாராம்பரிய இயல்புகளை சந்ததிகளின் ஊடாக கடத்தவல்ல ஒரு மூலக் கூற்று அலகாகும்.

இனப் பெருக்கத்தின் பொழுது பெற்றோர்களிடமிருந்து சந்ததிகளுக்கு மரபணுக்கள் கடத்தப் படுகின்றன.

உடலுக்கும் உயிர் வாழவும் தேவையான அனைத்துப் புரதங்களையும் , மற்றும் தொழிட்பாடுடைய R .N .A .யையும்  தோற்றுவிக்க இந்த மரபணுக்கள் அவசியமாதலால் இவை உயிரினத்தின் இன்றியமையாத மூலக் கூறாகும்.
உடலின் உயிரணுக்களை ஆக்கவும்,அவற்றைத் தொடர்ந்து பேணவும் உடற்றொழிபாடுகளுக்கும் , உயிரினங்களின் இயல்புகள் சந்ததிகளுக்கு கடத்தப்படவும் இந்த மரபணுக்களே தேவையாகும்.

உடலில் நிகழும் ஆயிரக் கணக்கான உயிர் வேதியியல் செயல் முறைகளுக்கும் உயிரியல் இயல்புகளுக்கும் தேவையான தகவல்கள் இந்த மரபணுக்களிலேயே காணப் படுகிறது.அவை பார்தறியக் கூடிய அல்லது பார்த்தறிய முடியாத இயல்புகலாகவோ இருக்க முடியும்.

பாரம்பரியம் எனப் படுவது பெற்றோர்கள் அல்லது முன்னோர்களிடமிருந்து சந்ததிகளுக்கு இயல்புகள் கடத்தப் படும் செயல் முறையாகும்.

 சந்ததியின் உயிரணு அல்லது உயிரினம் உருவாகும் போதே , பெற்றோரின் உயிரணுவிலிருந்து இயல்புகளைப்  பெற்றுக் கொள்வது இந்த செயல் முறையினாலாகும்.இந்த பாரம்பரிய செயல் முறையின் போது இயற்கையாகவும்,சூழல் தாக்கத்தினாலும் உயிரினங்களில் வேறுபாடுகளும் தோன்றுவதனால் அவற்றில் புதிய இயல்புகள் உருவாகி புதிய இனங்களும் தோன்றும்.

சந்ததிகளினூடாக கடத்தப் படக் கூடிய பாரம்பரிய இயல்புகள் யாவும் 
D N A யில் இருக்கும் மரபணுக்களில் நியூ கிளியோடைட்டுக்கள்
 ( Nucleotide ) ஒழுங்கு படுத்தப் படும் வரிசை முறையில் தங்கியிருக்கும்.

D N A யானது ஒன்றுக் கொன்று எதிர்நிரப்பு இயல்புடைய இரு இழைகளால் ஆனது . இந்த இழைகள் ஒவ்வொன்றும் தனித் தனியே ஒரு புதிய துணை இழையை தோற்றுவிக்கும் தன்மையைக் கொண்டிருப்பதால் நகல் எடுக்கும் செயல் முறை மூலம் அவை சந்ததியூடாக இயல்புகளை பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து கடத்த உதவும்.

ஒரு உயிரினத்தின் தோற்றம் இயல்புகளை தீர்மானிப்பதில் மரபியல் மிக முக்கிய பங்கு வகித்த போதிலும் அந்த உயிரினத்தில் சூழல் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கொண்டே அந்த உயிரினத்தின் இறுதியான தோற்றம்,இயல்புகள் தீர்மானிக்கப் படுகின்றன......."

அல் குர்ஆனின் கருத்துப் பிரகாரம் மனிதன் இறைவனை ஏற்றுக் கொள்ளும் இயற்கை அமைப்பில் படைக்கப் பட்டாலும் அவன் வளருகின்ற சூழல் அவனில் தாக்கத்தை ஏற்படுத்தி ஒன்றில் அவனை இறைவனை ஏற்றுக் கொள்ளும் முஸ்லிமாக அல்லது இறைவனை நிராகரிக்கும் இறை நிராகரிப்பாளனாக மாற்றிவிடும் என்கின்ற உண்மையை நவீன அறிவியல் அறிவுகள் நமக்கு உணர்த்தி நிற்கின்றன.   

இந்த தகவுகளுடன் நபி நூஹ் (அலை) அவர்களின் மகன் அல்லது நபி லூத் (அலை) அவர்களின் மனைவி அல்லது நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பெரிய தந்தை அபூ லஹப் ஆகியோர் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளும் இயற்கை அமைப்பில் பிறந்திருந்தாலும் அவர்களை அவர்கள் அப்பொழுதிருந்த சூழல் அவர்களில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களது குண இயல்பை அல்லாஹ்வை நிராகரிக்கும் நிலைக்கு மாற்றியது. 

இதுதான் அல்லாஹ் நிர்ணயித்த இயற்கையின் நியதி. 

ஒரு காபிரின் குழந்தை முஸ்லிமாக மாறுவதும், ஒரு முஸ்லிமின் குழந்தை காபிராக மாறுவதும் அவர்களது சூழல் தாக்கத்தினால் என்கின்ற உண்மையை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

அதே போன்று நாம் வாழுகின்ற சூழல் ஒரு முஸ்லிமைக் காபிராக மாற்றி,ஒரு காபிரை முஸ்லிமாக மாற்றும் வலிமைக் கொண்டிருப்பதையும் நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.

மரணத்தின் பின்னர் மனிதன் எதிர்கொள்ளும் மண்ணறை வாழ்வின் வெற்றிக்கும் ,அதன் பின்னர் அவன் எதிர் கொள்ளும் மறுமை வாழ்வின் வெற்றிக்கும் இந்த உலகில் அவனுக்கு வழங்கப் பட்டிருக்கும் குறுகிய வாழ்வு ஒரு பரீட்சைக் களமாக இருக்கின்றது.

வாழ்க்கைப் பரீட்சையில் கேட்கப் படும் கேள்வியும் அதற்கான விடையும் சொல்லப் பட்டாகி விட்டது.
எல்லாம் சரி.
இனி,
வாழ்க்கைப் பற்றிய கேள்விக்கு நமது பதில் என்ன?

22 comments:

Dr.Anburaj said...

In short in the above article you have raised questions which I did not raise. In my opinion research into the cultural grade of Mr.Mohammed'S parents is absolutly unnecessary and waste of time and energy.That is alone.Generally we can assume they are good. There is no harm in the belief.Even if any incident is quoted,we need not worry about it.It no way affect the dignity of Mr.Mohammed.

Dr.Anburaj said...

If genes which one inherits from parents are resposible for the temperament of a Human being.If a man has some evil temperament by Birth, then what is the justification for the award of punishment in JUdgement Day ?.One is not fully responsible for one's deeds.If a individual behaves abnormally , it genes.ie Allah created that abnormality. Why condemn him to Hell. In Hinduism Every child is endowed with 3 different aptitutes.1.Satwa 2.Rajes 3.thama. Man's temperament is based on above gunas. In every individual one guna dominates the other Guna.That composition determines his ability and attitude.All human would become Brahmin one day, may be after passing through many births.The Hindu concept of life is better than Arabiab concept of life, which is highly shallow.Judgement Day is impossible

Dr.Anburaj said...

இந்த தகவுகளுடன் நபி நூஹ் (அலை) அவர்களின் மகன் அல்லது நபி லூத் (அலை) அவர்களின் மனைவி அல்லது நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பெரிய தந்தை அபூ லஹப் ஆகியோர் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளும் இயற்கை அமைப்பில் பிறந்திருந்தாலும் அவர்களை அவர்கள் அப்பொழுதிருந்த சூழல் அவர்களில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களது குண இயல்பை அல்லாஹ்வை நிராகரிக்கும் நிலைக்கு மாற்றியது.

இதுதான் அல்லாஹ் நிர்ணயித்த இயற்கையின் நியதி. ஒரு காபிரின் குழந்தை முஸ்லிமாக மாறுவதும், ஒரு முஸ்லிமின் குழந்தை காபிராக மாறுவதும் அவர்களது சூழல் தாக்கத்தினால் என்கின்ற உண்மையை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.அதே போன்று நாம் வாழுகின்ற சூழல் ஒரு முஸ்லிமைக் காபிராக மாற்றி,ஒரு காபிரை முஸ்லிமாக மாற்றும் வலிமைக் கொண்டிருப்பதையும் நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.I hardly understand the meanings of the words 1.Kafirs 2. Muslims . Many Islamic scholars says Kafir is synanimous with Non-Muslim. But you are using that two words with a meaning 1. Muslims -pious/Good 2. Kafir - sinner/uncivilised etc. Is non-muslims are uncivilised idiots/sinners ? I feel highly insulted.

அஹ்லுல்பைத் said...

அன்புராஜின் வருகைக்கும் உவந்தளித்த பின்னூட்டத்திற்கும் நன்றி.

காபிர் என்கின்ற அரபு வார்த்தைக்கு 'நிராகரிப்பவர்' என்று பொருள் வரும்.

ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை இஸ்லாத்தை மறுப்பவர் 'காபிர்'.

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத மற்று மத சகோதரருக்கு அவரது மதத்தை ஏற்றுக் கொள்ளாத முஸ்லிம் 'காபிர்'

காபிர் என்கின்ற வார்த்தையில் நீங்கள் குறிப்பிடும் அர்த்தங்கள் உள் வாங்கப் படவில்லை என்பதை தயவு செய்து கருத்தில் கொள்ளவும்.

(நண்பர் முகம்மத் அலியின் மௌனத்தின் காரணம் என்ன?)

அஹ்லுல்பைத் said...

//இதுதான் அல்லாஹ் நிர்ணயித்த இயற்கையின் நியதி. ஒரு காபிரின் குழந்தை முஸ்லிமாக மாறுவதும், ஒரு முஸ்லிமின் குழந்தை காபிராக மாறுவதும் அவர்களது சூழல் தாக்கத்தினால் என்கின்ற உண்மையை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.அதே போன்று நாம் வாழுகின்ற சூழல் ஒரு முஸ்லிமைக் காபிராக மாற்றி,ஒரு காபிரை முஸ்லிமாக மாற்றும் வலிமைக் கொண்டிருப்பதையும் நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டும்//

எமது பதிவில் இருந்த இந்தப் பந்தி நண்பர் அன்புராஜ் குறிப்பிடும் கருத்தை தன்னுள் கொண்டிருப்பது உண்மையே.

நமது கவனயீனத்துக்கு வருந்துகிறோம்.

எமது தவறை சுட்டிக் காட்டிய அன்புராஜுக்கு நன்றி.

அந்தப் பந்தியை கொஞ்சம் மாற்றி இப்படி படித்துப் பாருங்கள்.

நாம் சொல்ல வந்த விடயம் பளீரிடும்.

// இதுதான் அல்லாஹ் நிர்ணயித்த இயற்கையின் நியதி..

அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளாத ஒருவரின் குழந்தை அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு மாறுவதும் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டிருக்கும் ஒருவரின் குழந்தை அல்லாஹ்வை நிராகரிக்கும் நிலைக்கு மாறுவதும் அவர்களது சூழல் தாக்கத்தினால் என்கின்ற உண்மையை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்..

அதே போல நாம் வாழ்கின்ற சூழல் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டிருக்கும் ஒருவரை அல்லாஹ்வை நிராகரிக்கும் நிலைக்கும் அல்லாஹ்வை நிராகரித்திருக்கும் ஒருவரை அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கும் மாற்றும் வலிமைக் கொண்டிருப்பதை நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.//

Dr.Anburaj said...

old testament says " God hears the voice of the pious/righteous/Neethiman ". Can you distinguishe the meaning of the word Muslim, Kafir and Neethiman. The word Muslim is just a word/a address. A Muslim need not be a Mumin/a man of right conduct/Neethiman.A Muslim could be wicked.Similarly a Hindu,Buddhist,a christian etc.அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளாத ஒருவரின் குழந்தை அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு மாறுவதும் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டிருக்கும் ஒருவரின் குழந்தை அல்லாஹ்வை நிராகரிக்கும் நிலைக்கு மாறுவதும் அவர்களது சூழல் தாக்கத்தினால் என்கின்ற உண்மையை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்..Your idea is highly confusing. We Hindus/Christians are not atheists and devoid of cultural and moral conscience. Swami Vivekananda says " Every religion/sect/Caste has produced men and women of most exalted character. 1.Those who have accepted Allah 2.Those who have not accepted /rejected Allah -What is exactly your idea of the meaning of those phrases.Please substitute the word " NEETHIMAN ". AND EXPLAIN YOUR IDEA. You have a superstition that Islam / Arabian culture and Arabian way of religious practices alone is Good and recognised by God.Mohammed believed that those people who are on the top of the ladder of culture and right conduct are Muslims and are on the bottom are Kafir.I am fully conversant with Islamic Literature.Hindus should always be addressed as Hindus only. Kafir is a derogatory Arabian word.

Dr.Anburaj said...

The emotional aptitude of a child is dependent on
1. Genes which he inherits from parents 2.Atmosphere in which the child lives 3.previous Education.My house is beside a church. As my family is devoted to Sri Ramakrishna/Swami Vivekananda and Mother Sri Saratha Devi, in spite of tremendous efforts by My Christian relatives to convert us, we have remained firm and practicing Hindus .1.It may be We have inherited Genes which is amenable to religion.2.We had proper religous Education and practices. Today christians admire and respect me very much.In case of any difficulty, a christian's first choice would always be Anburaj. I think " Being religious is identical with right character. Islam is a Political movement of Arabians intended to win and dominate the world.
Non-Arabian Muslims must dissociate from such movements and refrain from supporting such movements.

Dr.Anburaj said...

Pro.Mohammed considered men and women of exalted characters as Muslims/Mumins/(Anthanar(Tamil) Brahmin(Sanskrit)) and otherwise people are kafirs.
It is highly absurd to translate the word Kafir as Non-Muslims.

Muhammad Ali said...

Salaam Alikum Brother. Just I watching Dr.Anbu Raj silently. May be he read more articles in other websites, But still he need to study more about Islam. When I was Hindu the same thinks happen to me, I raised more Questions in my self same like Dr.Al Hamdulillah Allah show right way to me.
Dear Dr. Don't be think you know everything. Just you copy and paste some articles from web pages and raising Questions. Please study more and more about Prophet and his family. Please don't believe whatever write in the name of Islam is from Islam. No most of the article written and published by israel and USA. Please Dr. I hope you will be learn more and come to right path. May Allah show the way which is He show to me. Allah know the Best

Dr.Anburaj said...

Genes and previous Education/environment is responsible for a man if he is a believer in God or athiest. Do not confuse believer in God, with the word Muslim, and athiest with Non-muslim .

Dr.Anburaj said...

Hello Mr.Muhammad Ali - thank you very much for your kind letter.I am sure You have read all my letters that I paste and write in the ahulubaith.
Do not take it into your heart." Please study more and more about Prophet and his family " -What you mean ? I have nothing to do with ISRAEL.It is absurd to quote Israel in this context.
I expect you to refute all accusations raised against Pro.Mohammed by Ali sina and Anwar sheik webs. Sure I am not happy about the accusations.Ahulabaith has promised me to clear all my doubts. I am waiting for that. Please go throughwww.alisina completly and answer all questions /accusations raised by him.

Dr.Anburaj said...

Don't be think you know everything. I am sure I know little.Some persons are eulogising Pro.Mohammed to sky height. But alisina does the opposite. I am at a dilemma. I cannot study all Arab Literatures to arrive at a conclusion.
I wrote to many, none came forward,But ahulabaith has came forward,has taken the challenge posed by Alisina and others. Let us be patient until he answers all the questions raised and incidence quoted by Alisina. It is a war between Ahulabaith and Alisina who was a Muslim by birth and turned to be a agnoistic by the absudities he found in Arabic religious Literature and personalities.

Please always bear in mind .Those who refuses to submit their opinions to the taste of free discussion, is more in love with their own opinion than with truth.

Dr.Anburaj said...

It is surprising to me Nobody except Mohamed ali wrote any comment about my letter. I request all the readers to register their opinion

Dr.Anburaj said...

நண்பர் அன்புராஜ் தனது நம்பிக்கையில் திருப்தி கொண்டு மறுமையை ஏற்றுக் கொள்ளாத இறை விசுவாசியாக தன்னை நினைத்து திருப்திக் கொண்டுள்ளார்.நண்பர் அன்புராஜ் போன்று தன்னிலையில் திருப்திக் கொண்டிருக்கும் மக்களைப் பற்றி அல் குர் ஆன் இப்படி பேசுகிறது.."முஃமின்களிலும், யூதர்களிலும், ஸாபிவூன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பயமுமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்."
நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்.So Ahlulbaithtamil says that I am a Kafir.Pakistan Army declared Bengali speaking Muslims and Hindus as Kafirs and subjected them to bloody cruel attack.Ahamdiya Muslims are delcared Kafirs.Now in Pakistan they are the target of Islamic terrorists. Islam is eagar to kill all Kafirs. Stamp Kafir and Kill him .that is Islam. I hate to be called as Kafir. In Thirumanthiram " Siva Siva enkilar theeviniyalar-wicked ". Muslims/Christians/Buddhists/Sikh do not chant Siva Manthiram. Are they uncilised fellows/wicked as per thirumanthiram ? No. It is a comparision between righteous and wicked. Kafir is synanimous with wickedness not with Non-muslims.

Dr.Anburaj said...

Qur’an 5:51—O you who believe! do not take the Jews and the Christians for friends; they are friends of each other; and whoever amongst you takes them for a friend, then surely he is one of them; surely Allah does not guide the unjust people.

Qur’an 9:30—And the Jews say: Uzair is the son of Allah; and the Christians say: The Messiah is the son of Allah; these are the words of their mouths; they imitate the saying of those who disbelieved before; may Allah destroy them; how they are turned away!

Qur’an 98:6—Those who reject (Truth), among the People of the Book and among the Polytheists, will be in Hell-Fire, to dwell therein. They are the worst of creatures.

Sahih Muslim 4366—Muhammad said: “I will expel the Jews and Christians from the Arabian Peninsula and will not leave any but Muslim.”

Al-Bukhari, Al-Adab al-Mufrad 1103—Muhammad said: “Do not give the People of the Book the greeting first. Force them to the narrowest part of the road.”


Needless to say, these teachings can hardly be considered peaceful or tolerant.
Is it true ?

Dr.Anburaj said...

"அல் குர்ஆன் குறிப்பிடும் இயற்கை மார்க்கம் என்பதன் அர்த்தம் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளும் மன நிலையில்தான் அனைத்து மனிதர்களும் படைக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதாகும்.It is wrong.If you take 100 children to a unoccupied island and allow them to live without external contact.teach them no religion . No children would believe in God and no one would offer prayer of any kind.They simply eat play and sleep.Religious sentiments needs awakening. Religion takes the shape of the culture of the land in which it growing.It is highly absurd to believe that Arabian religion and culture alone is approved by God.It is one of the non-sense and Superstition Arabnian antagonists are preaching the gullible

Dr.Anburaj said...

மர்வானின் மகள் அஸ்மா" வை கொலை செய்ய உமர் பி. அடிய்யாவின் பயணம்:

இந்தப்பெண் உமய்யா பி. ஜையத்தை சார்ந்தவள். அபு அபக் கொல்லப்பட்டதை குறித்து இந்தப்பெண் தன் வெறுப்பை வெளிப்படுத்தினாள். இந்தப் பெண் கதமா (யாஜித்) இனைத்தைச் சார்ந்த ஒரு மனிதனின் மனைவியாவார். (`Abdullah b. al-Harith b. al-Fudayl from his father said that she was married to a man of B. Khatma called Yazid b. Zayd). இஸ்லாமையும் அதை பின் பற்றுபவர்களையும் குறித்து இந்த பெண் அவதூறாக கீழ்கண்டவாறு சொன்னாள்:

நான் மாலிக், நபித் மற்றும் அல்‍ கஜ்ரஜை நிந்திக்கிறேன்.
முரத் அல்லது மதஜ்க்கு சம்மந்தப்படாத,
உங்களில் ஒருவராக இல்லாத அந்நியருக்கா நீங்கள் கீழ்படிகிறீர்கள்
நீர்த்த ஆகாரத்திற்காக பசியோடு காத்திருக்கிறவன் போல
உங்கள் தலைவரை கொன்றுவிட்ட பிறகு அவரிடமிருந்து நன்மையை நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?
அவரிடமிருந்து ஏதாவது சிறிது கிடைக்கும் என்று எதிர்பார்ப்பவர்களின் நம்பிக்கை அற்றுப்போக்கும் படியாக,
திடீரென்று அவரை தாக்கத்தக்க சுயமரியாதையுள்ள ஒரு மனிதனும் இல்லையா?
அந்த பெண் சொன்னதை நபி கேள்விப்பட்டவுடனே, "எனக்காக இந்த மர்வானின் மகளை யார் பூமியிலிருந்து நீக்கப்போகிறார்கள்?" என்று கேட்டார். அப்போது "உமர் பி. அதிய அல்கத்மி" என்பவர் நபியோடு இருந்ததால், நபி சொன்னதை கேட்டுக்கொண்டு இருந்தார், மற்றும் அன்று இரவே, அந்த பெண்ணின் வீட்டிற்குச் சொன்று, அவளை கொன்றுவிட்டார். மறுநாள் காலை அவர் நபியிடம் வந்து, அவர் என்ன செய்தார் என்றுச் சொன்னார். அதற்கு நபி "ஓ உமர், நீ இறைவனுக்கும் அவரது நபிக்கும் உதவி புரிந்தாய்!" என்றார். நான் அப்பெண்ணை கொன்றதால் ஏதாவது தீய விளைவுகளை நான் சந்திக்க வேண்டிவருமா? என்று உமர் நபியவர்களிடம் கேட்டார். அதற்கு நபி அவர்கள் "அவளைப் பற்றி யாரும் கவலைப்படமாட்டார்கள் " (Two goats won't butt their heads about her) என்றார். பிறகு உமர் தன் மக்களிடம் சென்றுவிட்டார். "அபு அஃபக்" என்பவரின் கொலைக்கு பிறகு, இன்னொரு பெண் மிகவும் தைரியமாக முகமதுவிற்கு எதிராக வெளிப்படையாக‌ பேசினாள். அப்பெண்ணின் பெயர் "மர்வானின் மகள் அஸ்மா" என்பதாகும். மறுபடியும் முகமது எப்படி தன்னை எதிர்த்தவர்களை சமாளித்தார் என்று நாம் பார்க்கலாம். முகமது " எனக்காக இந்த மர்வானின் மகளை யார் பூமியிலிருந்து நீக்கப்போகிறார்கள்?" என்று கேட்டார். "உமர் பி. அதிய அல்-கத்மி" என்பவர் அப்பெண்ணை அன்று இரவு கொன்று முகமதுவின் விருப்பத்தை நிறைவேற்றினார்.

Dr.Anburaj said...

இந்த நிகழ்ச்சிகளில் பல முக்கியமான விவரங்கள் அடங்கியிருக்கின்றன. இதில் முதன்மையானது முகமதுவின் குணத்தைப் (Character) பற்றியது. தன்னை எதிர்ப்பவர்களை தன் வழியிலிருந்து நீக்கிவிட, "கொலை" என்னும் ஆயுதத்தை பயன்படுத்தும் நபர்களைப் போல குணம் படைத்தவர் தான் முகமது. தன்னை எதிர்ப்பவர்கள் "அபு அஃபக்" போன்ற ஒரு வயதான முதியவராக இருந்தாலும் சரி, அல்லது "மர்வானின் மகள் அஸ்மாவாகிய" பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் இவரை எதிர்த்தால், முகமது அவர்களோடு இப்படித்தான் நடந்துக்கொள்வார். இப்படி முகமது செய்த பல எடுத்துக்காட்டுகளை சொல்லிக்கொண்டுப் போகலாம்[1], மற்றும் முகமது சில நேரங்களில் "கொடுமைப்படுத்துதல் - Torture" என்ற ஆயுதத்தையும் பயன்படுத்தியுள்ளார்[2]. இவைகளை கருத்தில் கொண்டு பார்ப்போமானால், மற்ற அரசர்கள் போல, தன் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள "கொலையையும், கொடுமைப்படுத்தி பயப்படுத்துவதையும்" முகமது பயன்படுத்தியுள்ளார் என்பது தெளிவாக புரியும். முகமது நாடுகளை வெற்றிக்கொண்டார் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை, மற்றும் அவர் சொல்கிறார்:

நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளும் படி நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். இஸ்லாமை தழுவுங்கள் அப்போது நீங்கள் பாதுகாப்பாக‌ இருப்பீர்கள். (Sahih Muslim, book 19, number 4380) [3]

முகமது இப்படியாக தான் ஆட்சியை அமைத்தும், மற்றவர்களுக்கு இப்படிப்பட்ட எடுத்துக்காட்டை கொடுத்து சென்று இருக்கும்போது, "முகமது ஒரு அமைதியின் சொரூபம் " என்று எப்படி முஸ்லீம்கள் சொல்கிறார்கள்? இரண்டாவதாக, இந்த நிகழ்ச்சிகள் இஸ்லாம் அரேபிய இன மக்களின் இடையில் எப்படி பரவியது என்பதை படம் பிடித்து காட்டுகிறது. இந்த நிகழ்ச்சிகள் மிகவும் தெளிவாகச் சொல்கிறது, இந்த இரண்டு கொலைகளுக்குப் பிறகு, "கத்மா இன மக்களின் இடையில் இஸ்லாம் மிகவும் சக்தி மிகுந்ததாக மாறியது". உணமையில், "மர்வான் மகளின் கொலை நடந்த அடுத்த நாளிலிருந்து, "கத்மா" இன மக்கள் இஸ்லாமின் சக்தியை கண்டதால், இஸ்லாமியர்களாக மாறினார்கள் ". "இஸ்லாமின் சக்தியாக (Power of Islam)" அவர்கள் கண்டது என்ன? அது தான் தன்னை எதிர்ப்பவர்களை "கொலை செய்யும் சக்தி". இந்த நிகழ்ச்சியைப் பொருத்தவரையில், இஸ்லாம் மற்றவர்களை பயப்படவைத்தும், கொடுமைப்படுத்தியும் பரவியது என்பது மிகவும் தெளிவாக புரிகிறது, இதற்கு முகமது தன் அங்கீகாரத்தையும் கொடுத்துள்ளார்.

Dr.Anburaj said...

"திய வான் கோ" இஸ்லாமுக்கு எதிராக வெளிப்படையாக பேசினார், அபு அஃபக் மற்றும் மர்வானின் மகள் அஸ்மா எப்படி கொலை செய்யப்பட்டார்களோ அதே போல இவரும் கொலை செய்யப்பட்டார். பெரும்பான்மையான முஸ்லீம்கள் "திய வான் கோவின்" கொலையை அங்கீகரிக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், இஸ்லாமை தோற்றுவித்தவரை நாம் காணும் போது, இப்படித்தான் அவர் தன்னை எதிர்த்தவர்களை தீர்த்துக்கட்டியிருக்கிறார் என்பதை கவனிக்கமுடியும். நாம் பின்பற்ற வேண்டிய "மாதிரி" இது அல்ல. யார் யாரெல்லாம் அவரை எதிர்க்கிறார்களோ அவர்களை எல்லாம் கொலை செய்வது, என்பது ஒரு பலவீனமான மனிதனின் அடையாளமாகும்.

Dr.Anburaj said...

கமதுவைப் பற்றி பெரும்பான்மையான மக்களுக்கு தெரிந்திருப்பது உண்மையின் ஒரு பாதி மட்டும் தான் என்பது மிகவும் கொடுமையானது, வருந்தப்படத் தக்கது. இஸ்லாமையும், முகமதுவையும் பற்றிச் சொல்லி இஸ்லாமை வளர்க்கும் அறிஞர்கள் நேர்மையானவர்களாக இருந்து, "முகமதுவின் உண்மையான வாழ்க்கையைப் பற்றியுள்ள எல்லா விவரங்களையும்" சொல்லவேண்டும். "முகமது ஒரு பின்பற்றத்தகுந்த எடுத்துக்காட்டாக இருக்கிறாரா இல்லையா" என்று நாங்கள் முடிவு செய்வதற்கு முன்பு, அவருடைய வாழ்க்கையைப் பற்றிய எல்லா விவரங்களையும் நாங்கள் அறிய விரும்புகிறோம்.

Dr.Anburaj said...

அன்புராஜின் வீட்டாரின் மத நம்பிக்கைகள் இருந்திருக்கின்ற காரணத்தால் நண்பர் அன்புராஜ் தனது நம்பிக்கையில் திருப்தி கொண்டு மறுமையை ஏற்றுக் கொள்ளாத இறை விசுவாசியாக தன்னை நினைத்து திருப்திக் கொண்டுள்ளார்.
நண்பர் அன்புராஜ் போன்று தன்னிலையில் திருப்திக் கொண்டிருக்கும் மக்களைப் பற்றி அல் குர் ஆன் இப்படி பேசுகிறது..


நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்.

[2:6] தமிழ்


அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான்;, இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது, மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு.

So it is clear you declare that I am a Kafir.All Hindus, Christians Buddhists - Buddha , Mahatma Gandhi, Vallalar, Thayumanavar,Thiruvalluvar etc..
are Kafir - an Arabian derogatory word . You have no remorse to say that.

Dr.Anburaj said...

www.newage islam - web Munir Sami: Look, the same thing is coming to the fore. The freedom of expression and freedom of religion are interlinked. We say whatever we like during our speeches in mosques here. Have you ever heard that the government of Canada has arrested an imam of a mosque? Similarly, we abuse Jews every day. In the verses of the Quran ‘fansurna ala qaumil kafireen’ is said constantly. Isn’t it? All our prayers end with ‘fansurna ala qaumil kafireen’ (Allah, give us victory over the infidels). Has anyone ever asked you what are you doing, brother? So on the one hand you are constantly using the freedom of expression and freedom of religion and as a result the number of mosques is increasing in Canada and in Europe. You are not looking at it from an ethical point of view. Aren’t they allowing you to build mosques under the freedom of religion? …
Munir Sami: Geopolitics has come into the play. It’s all hypocrisy and when you demand your right on the basis of hypocrisy the world will know that you are lying. The lie will appear on your forehead. Whoever says that there is no Shia-Sunni divide is the greatest liar and God’s curse is on him. They are shamelessly telling a lie every day. In Pakistan Shias are killed every day, Ahmadis are killed, Christians are killed. Why don’t they stand by their side? Go and do all this in front of the American consulate here and say, “O Americans, you continue to give aid to Pakistan and violence is unleashed against those sects. We request you to come and help us.’ But they do not do it and call it a Jewish conspiracy. They know that the American government can’t do anything about the freedom of expression even if it is filled with filth and vulgarity. But we do not go and protest because we do not want to in the first place. …
Munir Sami: I have a point. First if it is a hate (crime) in Canada, in entire Europe and in America, wherever these demonstrations are being held, all have hate crime laws. I advised someone that the world’s wealthiest Muslim country Saudi Arabia and other Muslim countries should collectively establish a Anti Hate Crime and Anti Islam hate crime Fund and put hundred million dollars in it and then file an ideal suit in Canada and in America. We will use the best lawyers in the US. The lawyers here are ever ready to accept money. Pay them $400-500 according to their demand. We shall file a case through them and pursue the case up to the Supreme Court. We will challenge it and see if it can be done or not. But nobody is coming forward. One question is being raised. Why is not all this demonstrations and violent protests being held in Saudi Arabia? It is happening in Pakistan but this time no noticeable demonstration is being held in Iran. You have seen that they are good at gathering millions on Fridays. But this time they did not do that. Why did not they do it in Saudi Arabia? Because the right to freedom of speech does not exist there in the first place.

Transcript and Translation from Urdu by: New Age Islam Edit Desk

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad